–
பிள்ளைகள் பல பெற்ற பெண்ணை
மக்களைப் பெற்ற மகராசியென்றார்!
மகராசி என்றால் வளம் பெற்றவளே
பல குழந்தை பெற்றால் வளமேது!
–
குழந்தை பெறும் இயந்திரமாய் பெண்
தாயும் சேயும் நோயோடு சமூகத்தில்
சிறுகுடும்ப நெறியைத்தான் பரப்ப
பெரும்பாடு பட்டு வெற்றி காண்பர்
–
ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணுமென
இரண்டு பெற்றால் இனிமை என்றார்
ஆனால் மக்கள் பெருக்கம் குறையவில்லை
ஒன்று பெற்றால் ஒளிமயமென்றார் உறுதியாய்
–
இத்தனை சொல்லி இத்தனை செய்தும்
இன்னும் குறையவில்லை மக்கள் பெருக்கம்
சாதி மதத்தின் பெயர் சொல்லிங்கு
பிள்ளைப்பேற்றை கூட்டுகின்றார்
–
நாடும் வீடும் நலமுறவே
நாட்டோரே நன்கு சிந்திக்க வேண்டும்
சிறு குடும்ப நெறியினையே
நித்தமும் பேணிக் கடைப்பிடிக்க வேண்டும்
–
குறைவாகப் பிள்ளைகளைப் பெற வேண்டும்
நிறைந்த கல்வி தர வேண்டும்
கல்வியால் உயர்ந்து நாட்டையே
வல்லரசாக்க முயல வேண்டும்
–
————————————-
-ச.கிறிஸ்துஞான வள்ளுவன்
கவிதை உறவு – 7/2015
சிறு குடும்ப நெறி பேணுவோம்!
ஜூலை 13, 2015 இல் 10:55 முப (kavithai)
Tags: kavithai
மறுமொழியொன்றை இடுங்கள்