–
உலகழியும் ஊழிக்காலம் வந்த பொழுது பிரம்மன்
அமுத கலசத்தையும் உலக உயிர்களை உருவாக்கும்
கருவிகளையும் பாதுகாக்கும் பொருட்டு அவற்றை
ஒரு மண் கலசத்தில் இட்டு அதனை மேரு மலையில்
பாதுகாப்பாக வைத்தார்.
பிரளய கால மழை இடைவிடாது பெய்ய பிரம்மன்
பாதுகாத்து வைத்த அக்கலசம் வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டது. தெற்கு நோக்கிப் பயணித்த அக்கலசம்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கியது.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமானாம்
சிவன், அம்பினால் அக்கலசத்தை உடைத்தார்.
உடனே கலசத்திலிருந்த அமிழ்தம் வெளியேறிப் பாய்ந்த
இரண்டு குளங்கள் உருவாயின. இவ்விரண்டு குளங்களில்
ஒன்று மகாமகக் குளம், மற்றொன்று பொற்றாமரைக்
குளமாகும்.
உடைந்த கலசத்தின் பாகங்களும், மீதியிருந்த அமிழ்தமும்
இணைந்து கும்பேஸ்வரராக உருமாறியது. உடைந்த கலசம்
இருந்த பகுதியே கும்பகோணம் என்றும் குடந்தை என்றும்
இன்று அழைக்கப்படுகின்றது.
இத்தகு சிறப்பு வாய்ந்த கும்பகோணத்தில்தான்
சாரங்கபாணி கோவில் அமைந்துள்ளது.
——————————————
http://www.appusami.com
மறுமொழியொன்றை இடுங்கள்