கிறுக்கு சிந்தனைகள்


பித்தனின் பித்தளை மொழிகள்


அனாவசியமாக மற்றவர்களுடன் பேசக்கூடாது
என்கிறார்கள். சரி, அவசியமானதை மற்றவர்களுடன்
பேசிவிட்டு, அனாவசியமானதை எனக்கு நானே
பேசிக்கொண்டால், ‘மென்ட்டல்’ என்கிறார்கள்

==============================

மந்திரி பதவியில் இருக்கம்போது, போலீஸ் ஜீப்
முன்னால் போகிறது பாதுகாப்பிற்காக.!
ஆட்சி மாறி, மந்திரி பதவி போனதும், போலீஸ்
ஜீப் பின்னால் துரத்துகிறது கைது செய்ய!

=
==============================

அறுசுவை என்பது ஆறுசுவை.
அறுவடை என்பது ஆறு வடை அல்ல.

============================

அவர் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர்.
முன்பு செருப்பு விற்றுக் கொண்டிருந்தார்.
இப்போது தொப்பி விற்கிறார்.

===========================

தன்னை வளர்த்தவன் தண்ணீரில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மீன்
துக்கம் தாங்காமல் மீன் தொட்டி தண்ணீரை
விட்டு வெளியே குதித்து தற்கொலை செய்து
கொண்டது

============================

தமிழ்நாட்டில் ஏழைகளை விட மில்லியனர்ஸ்
தான் அதிகம். டாஸ்மாக் கடை வாசலில்
‘180 மில்லி’ யனர்ஸ் எத்தனையெத்தனை
பேர்!

===============================
ஆர்.சி.சம்பத்
நன்றி: குமுதம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: