ஞாலம் வலம் வரத் துணிந்தவனே…


தோகை விரித்துக் களிநடம் புரியும்
கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும்
மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும்
மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும்
அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,
ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை
சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை
ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன்
உன்னை ஒரு பாதி சேவலாக்கி
தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை வாகனமாக்கி
மயில்வாகனன் ஆனான்.

முருகன் என்றால் அழகன் என்பர்
அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும் அழகு மயிலாய் நின்றாய்.. .

முருகனை அன்றொருநாள் அப்பாவியா
எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது.
பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை
நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா
பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி
அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .

————————————–
>Balasubramaniam G.M
சுப்புத்தாத்தா வலையில் படித்து ரசித்தது

.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: