1. மண்ணுக்குள்ளே கிடப்பான். மங்களகரமானவன்.
அவன் யார்?
–
2. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும். இவன் யார்?
–
3. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது. அது எது?
–
4. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க
முடியவில்லை. அது என்ன?
–
5. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
–
6. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். என்ன அது?
–
7. குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டறான். யார் அவன்?
–
8. எங்க அக்கா சிவப்பு… குளித்தால் கருப்பு. யார் அவள்?
–
9. கடல் நீரில் வளர்ந்து நல்ல நீரில் மடிவது என்ன?
–
10. இரவு வீட்டிற்கு வருவான். இரவு முழுவதும் இருப்பான்.
காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவான்.
அவன் யார்?
–
=================================================
=
விடைகள்
–
1. மஞ்சள்
2. தேள்
3. செருப்பு
4. மழைத்துளி
5. பென்சில்
6. வெண்டைக்காய்
7. கரண்டி
8. அடுப்புக்கரி
9. உப்பு
10. நிலா
எங்க அக்கா சிவப்பு… குளித்தால் கருப்பு – விடுகதைகள்
நவம்பர் 5, 2014 இல் 11:02 முப (Uncategorized)
Tags: விடுகதைகள்
மறுமொழியொன்றை இடுங்கள்