–
ஒலி கொடுக்கும் பகலவனும்
மின்சாரமும் ஒன்றுதான்
ஒன்று இயற்கை
மற்றொன்று செயற்கை
–
தாயை பழித்தாலும்
தண்ணீரை பழிக்காதே
பழமொழி
சம்சாரத்தைக் காப்பது போல்
மின்சாரத்தைக் காப்பாற்று
இது புதுமொழி
–
அறிவியல் என்பதே
மின்சாரம்தான்
மின்சாரம் இல்லாத
அறிவியலே
இல்லை…
–
சிக்கனம் என்பது
பணத்தில் மட்டுமல்ல
தண்ணீரிலும், மின்சாரத்திலும்
கூடத்தான்
–
இரவில் ஒரு விளக்கை மட்டுமே
பயன்படுத்துங்கள்
எல்லோரும் ஒரே அறையில்
ஒரே மின் விசிறியில்
அமரலாம், படிக்கலாம், பேசலாம்
–
வாஷிங் மெஷினை மறந்து
கையால் துவைப்பது
கைகளுக்கும் நல்லது
மின் சேமிப்பிற்கும் நல்லது
–
எதற்கெடுத்தாலும்
மிக்ஸியும், கிரைண்டரும் வேண்டாமே
அம்மியையும், ஆட்டு உரலையும்
பயன்படுத்தலாமே
சுவையும் கூடும்
மின்சாரமும் சேமிப்பாகும்
–
நீ உன்னைக் கட்டுப்படுத்த வில்லையேன்றால்
இயற்கை உன்னைக் கட்டுப்படுத்தும்
–
===============================
>பணகுடி ஈ.எஸ்.என்.முருகன்
நன்றி: கிளப்ஸ் டுடே – டிசம்பர் 2012
மின்சாரம் – கவிதை
திசெம்பர் 18, 2012 இல் 10:15 முப (கவிதை)
Ganesan V said,
நவம்பர் 11, 2020 இல் 6:25 பிப
ஒளி
கொடுக்கும் பகலவன்
ஒலி
அல்ல