தமிழா….தமிழா ! கவிதை

// <![CDATA[// // <![CDATA[//

*  நெஞ்சு கொதிக்குதடா…
விந்தையை எண்ணிச் சிரிக்குதடா…

*  தமிழே, தாயென முழங்கிடுவர்…
தமிழ் அரசன் நானென முரசொலிப்பர்…
தமிழ் என் மூச்சென முட்டிடுவர்…
தமிழனை மட்டும் மறந்திருப்பர்!

*  தமிழுக்கென் முழு வாழ்வென்பர்…
தமிழ் வாழவும் உயிர் விடுவோமென்பர்…
தமிழின ரத்தம் கொதிக்குதென்பர்…
தலைநகரத்தில் இந்தியில் பேசிடுவர்!

*  தமிழுக்காய் என் உழைப்பென்பர்…
தமிழ்ப் போர் தொடுக்க அழைத்திடுவர்…
தமிழ் உரைக்கா நா இனி எதற்கென்பர்…
தம் பிள்ளையை கான்வென்ட்டில் சேர்த்திருப்பர்!

*  தமிழ் மானம் காக்க மோதிடுவர்…
தமிழினத்திற்காக வாதிடுவர்…
தமிழ்ப் பேரரசன் இனி அவரென்பர்…
இல்லத்தில் தெலுங்கு பேசிடுவர்!

*  இத்தனை வசனங்கள்…
எத்தனை ஆண்டுகள்…
இன்னுமிங்கே பார்த்திருப்பீர்…
தமிழ் மானம், வீரம், ஈரம்…
என்போரைக் கண்டால், கேட்டால்…
இப்போதேனும்… புரிந்திடுவீர்!
=================================
— ச.பிரசன்னா,  சென்னை.

நன்றி: வாரமலர்(தினமலர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: