கவி காளமேகம் – நகைச்சுவை பாடல்

நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்கு
உணவு அருந்துவதற்காக காளமேகபுலவர் ஒரு தடவை சென்றிருந்தார்.
நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை.

பசியின் உச்சத்துக்குப் போன பின்னரே உணவு வந்தது .உண்ட பின்
காளமேகம் கவிதை பாடினார்
.
“கத்துக்கடல் நாகைக்
காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
அரிசி வரும் – குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.”

பாடலைக் கேட்ட பின்னர்தான் உரிமையாளருக்கு, வந்திருப்பது
காளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கே
தனது சத்திரத்திற்கு அவப்பெயர் வந்து விடுமோ என்று பயந்த
காத்தான், காளமேகத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

காளமேகம் நிலைமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தை
இவ்வாறு சொல்லிக் கொண்டார்.

”காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில்
உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை
மூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு
அந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை
அன்னம், வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்.”

———————————————————————————-

Advertisements

1 பின்னூட்டம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: