குழந்தை பாட்டு -அ,ஆ. . .

குழந்தை பாட்டு –
அ,ஆ….
************

அம்மாவை போன்ற
அழகுத் தமிழை
அன்புடன் பேச
ஆர்வமுடன் பயின்றேன்.

இயன்ற பொழுதெல்லாம்
இனிக்கின்ற தமிழாலே
ஈகைத் தமிழ் நிலைக்க
ஈர்ப்புடன் நவின்றேன்.

உவ்வகையுடனே
உலகமெங்கும் பரவ
ஊறு நேரா வகையில்
ஊக்கமுடன் உழைத்தேன்.

எரு இட்ட நிலையில்
என்று வளரும் என்று
ஏக்கம் கொண்ட மனது
ஏங்கியது நினைத்து.

ஐயங்கள் இன்றி
ஐயா உமை நாடி
ஒன்றுடன் ஒன்றிணைத்து
ஒப்புவித்தேன் அத்தனையும்,
ஓங்காரமாய் ஒலிக்கும்
ஓயாத தமிழை.

ஔவையும் மொழிந்ததை
ஔஷ(ச)தமாய் ஏற்று
எஃகு போன்ற உறுதியுடன்
அஃதே நலமென்று
ஆசையுடன் மொழிந்தேன்.

*********************
பதிந்தவர்;Badrinarayanan. A
http://www.composetamil.com/tamil/content.aspx?typeid=2&contentid=824

Advertisements

1 பின்னூட்டம்

  1. ஜூலை 11, 2012 இல் 8:04 பிப

    http://www.composetamil.com இணையதளம் செயலற்றுப் போனதால், எம் கவிதைகளை இழந்து துடித்துக் கொண்டிருந்தேன். தங்கள் வலைதளத்தில் எம் குழந்தை பாட்டு கவிதையை மறுபதிவு இட்டுருப்பதைக் கண்ட எம் கண்களில் ஆனந்த நீருற்று. மிக்க மகிழ்ச்சி எம் கவிதையை மறுபதிவு இட்டதற்கு.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: