காற்று வெளியிடைக் கண்ணம்மா

காற்று வெளியிடைக் கண்ணம்மாநின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும்நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும்பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்எனை
வேற்று நினைவின்றித் தேற்றியேஇங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(
காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலேஎன்றன்

வாயினிலே அமு தூறுதேகண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம்கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலேஉயிர்த்
தீயினிலே வளர் சோதியேஎன்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(
காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்

 

2 பின்னூட்டங்கள்

 1. ஓகஸ்ட் 8, 2008 இல் 5:02 முப

  //காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
  காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
  ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
  ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து//

  பாரதியின் வரிகளில் காதல் கொஞ்சி மகிழ்கிறது

 2. stalinrex said,

  ஏப்ரல் 6, 2017 இல் 1:42 பிப

  காற்று வெளியிடைக் கண்ணம்மா
  ………………………………………………………………
  பாரதியின் காதல் எத்தன்மையது? காற்றின் இடைவெளி (மூச்சு விடும் பொழுது) நேரத்தில் கூட உன்னை மறப்பதில்லை என்கிறான். எப்படி உடல் மூச்சு விட மறப்பதில்லையோ அதுபோல் பாரதி கண்ணம்மாவை நினைக்காத பொழுதுகள் இல்லை என்பதாம்.
  [11:07 AM, 4/6/2017] Stalin Rex: காற்றின் இடைவெளி (மூச்சு விடும் நேரம்) எப்படி சிறியதோ அதுபோல் இடை கொண்ட கண்ணம்மா என்பது.
  [11:08 AM, 4/6/2017] Stalin Rex: அவ்வுளவுதான்…….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: