விலைவாசி என்பது மினி-ஸ்கர்ட் மாதிரி. ரொம்பவும்
மேலே போவது ஆபத்து !
நடுத்தரவயது;
ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் போது டெலிபோன் மணி
அடித்தால் ,அது நமக்காக இருக்காது என்று நினைத்ததுக் கொள்வது.
நாற்பது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல. மூட்டு வலி, பார்வை மங்கல், சொன்ன விஷயத்தையே மூன்று முறை சொன்னவர்ளிடமே சொல்லுகிற
பழக்கம் எல்லாமே !
உலகிலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன் ஆதாம்தான்-
அவனுக்கு மாமியார் கிடையாது !
புத்திசாலி திருடன், திருமணமானவனின் பர்ஸைத்
திருட மாட்டான்.
சட்டம் தெரிந்த வக்கீலைப் பிடிப்பதே விட நீதிபதியைத் தெரிந்த
வக்கீலைப்பிடிப்பதே புத்திசாலித்தனம் !
எல்லா மனிதர்களும் முட்டாள்கள் அல்ல.சில பேர்
பிரம்மசாரிகள் !
பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்; ‘’எங்கள் கடையிலிருந்து
வெளியே செல்லும அழகிய பெண்ணைப் பார்த்து கண்ணடிக்காதீர்கள்.
ஒரு வேளை அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம் !
நன்றி (குமுதம்-2-5-91)
மறுமொழியொன்றை இடுங்கள்