http://valaikkulmazhai.wordpress.com/ வலையில் படித்து ரஸித்த
ஹைகூ கவிதைகள்
***************************
சூறைக் காற்றில் அலையும் கிளையின்
நுனியைத் துரத்தும்
பட்டாம் பூச்சி
******************************
ரேடியோ பாட்டு. . .
தலையாட்டும் தாத்தா. . .
நின்று விடுமோ . . . .?
*****************************
பழனி படிக்கட்டு சடை தாடி சாமியார்
காசு வேண்டி விரித்த பேப்பரில்
சவர பிளேடு விளம்பரம் !
*********************************************
காற்றில் அசையும்
நெற்கதிர் உச்சியில்
பயத்துடன்
கம்பளிப் பூச்சி !
************************
சர்க்கஸ் வலையின் ஆட்ட்த்தில்
கீழே விழுந்தது
சிலந்தி !
************************
