விடுகதை

விடுகதைக்கு விடை சொல்லுங்க‌‌ள் 

விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் கிவிட்டதா? இதோ ந்துவிட்டது

உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு விடைகளைத் தெரிந்து

கொள்ளு‌‌ங்கள்.

 

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

 

2. தலை மட்டும் கொண் சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

 

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

 

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

 

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

 

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

நீங்கள் யோசித்திருந்த விடைகள் ரிதானா ன்பதை சோதித்துக் கொள்ளு‌‌ங்கள்.

 

1. தீக்குச்சி

 

2. தபால் தலை

 

3. கடல் அலை

 

4. சாமரம்

 

5. வெங்காயம்

 

6. செல்பேசி

 

நன்றி; http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/stories/0809/05/1080905014_2.ht

விடுகதைகள்

1.        முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள்.  அது  என்ன?

வெண்டிக்காய்

2.        வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?

நிழல்

3.        ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

கடிதம்

4.        பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

மிளகாய்

5.        இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?

கண்ணீர்

6.        கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?

காற்று

7.        தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?

பென்சில்

8.        சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

பூமி

9.        வெள்ளை மாளிகையில்  மஞ்சள் புதையல், அது என்ன?

முட்டை

10.     கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?

பாம்பு

11.     அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?

கடல்நீர்

12.     முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?

பலாப்பழம்

13.     உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?

தீக்குச்சி         

 

 

http://www.yarl.com/kids/?q=taxonomy/term/6