மன அமைதி பெற..

மன அமைதி பெற..
- காயத்ரி.
**************************
நாம் அனைவரும் மிகவும் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் நம்முள்ளே தோன்றும் எண்ணங்களும், அதன் விளைவாக ஏற்படும் முரண்பாடுகளே.

நம் மனதிற்கு அமைதியளிப்பதன் மூலமாகவே மன அழுத்தத்தைப் போக்க முடியும். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது அமைதியைக் கடைபிடித்தல் நன்று.

நம்முள்ளே தோன்றும் எண்ணங்களை நிறுத்த முடியாது. அவ்வாறு தோன்றும் எண்ணங்களுடன் போரிடுவதை விடுத்து, மூ‎ன்றாம் நிலையில் இருந்து ஏற்படும் எண்ணங்களைக் கவனித்தல் வேண்டும். இதற்கு ஓஷோ அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

பற்றற்ற நிலை

எந்தவிதமான வேலையும் செய்யாமல் ஒரு நாளில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். உங்களுள் எழும் எண்ணங்களில் பங்குபெறாமல், இருவர் பேசும் உரையாடலைக் கேட்பது போல இருங்கள். உங்களுள் ஏற்படும் எண்ணங்களை தவிர்க்காமல், எதிர்க்காமல் உங்கள் எண்ணங்கள் வெளிப்பட முழு சுதந்திரம் அளியுங்கள்.

மனோவேகம்

பல காலங்களாக உங்கள் உள்ளத்தில் சேர்ந்துள்ள அனைத்து விதமான எண்ணங்களும் இதன் மூலமாக வெளிப்படும் வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற எண்ணங்களை வெளியேற்ற உங்கள் மனதிற்கு நீங்கள் சுதந்திரம் அளித்திருக்க மாட்டீர்கள். இது நம் எல்லோரிடமும் காணப்படுகின்ற இயல்பான ஒரு குணம். அவ்வாறான சுதந்திரத்தை உங்கள் எண்ணங்களுக்கு அளிக்கும் போது, அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து அவை வெளிப்படும்.

அமைதியாக உட்கார்ந்து அவைகளைக் கவனியுங்கள். அவ்வாறு வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.

எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் தனித்திருக்கும் போது உங்களுள் ஏற்படும் எண்ணங்களை உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்லிப் பழகுங்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் எண்ணங்கள் மேல் உங்களுக்கிருக்கும் பயம் மற்றும் அவநம்பிக்கை நீங்கும். மேலும் எண்ணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளப் பழகுவீர்கள். எண்ணங்களை நடுநிலையிலிருந்து உணர முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறலாம்.
*******************

நன்றி; http://www.nilacharal.com/ocms/log/10060803.asp

மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு

மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு

அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை அடையும்போது செய்கிறீர்களா?

‘ஐயய்ய.. இதையெல்லாம் பத்திப் பேசுவாங்களா?’ என்று நினைக்கிறீர்கள். ‘இந்த மனோபாவம்தான் முதல் தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘எல்லாம் ஹார்மோன் பண்ணுகிற வேலை’’ என்கிறார் ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.

‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு வருவதும், டீன் ஏஜும் கல்யாணமும் குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஆனால், காலம்காலமாக, ‘இது அசிங்கம். இதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்றே போதிக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாம் இழப்பது எத்தனை அதிகம்?’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் தமிழிசை.

‘‘இதுவும் ஒரு பருவம்தான். இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது. டென்ஷனற்ற, நிம்மதியான மெனோபாஸ்தான் இந்த வயதில் இருக்கிற எல்லாப் பெண்களின் தேவை’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன். ‘‘வலிகளை கவனிக்கிறீர்களா?’’ என்று கேட்கிறார் எலும்பு சிறப்பு நிபுணர் சௌந்தரபாண்டியன். ‘‘இதயமும் முக்கியமானது. மறந்துடாதீங்க’’ என்று எச்சரிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் ஆஷா குருமூர்த்தி. ‘‘கேன்சருக்கான சிறப்பு கவனமும் தேவை’’ என்கிறார் கேன்சர் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. ‘‘உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?’’ என்று கேட்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.

‘‘தாம்பத்திய வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்’’ என்று வழிநடத்துகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.. இத்தனை பேரின் துணையுடன் இந்த சிறப்புப் புத்தகமே இருக்க, உங்களுக்கு நிம்மதிக்கா குறைச்சல்? வாருங்கள்.. வாழ்க்கையைச் சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

ஹார்மோன் குறைஞ்சு போச்சு!

‘‘‘இனி எல்லாம் சுகமே’ என்று மெனோபாஸை சந்தோஷமாக வரவேற்பார்கள் சிலர். ‘அடடா.. நம்மளோட இளமை ஓடிப் போயிடுச்சே’ என்று வருந்துவார்கள் பலர். வருந்தும் படியான விஷயமில்லை இது’’ என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.

ஓவரி எனப்படும் சினைப் பையில் முட்டை உற்பத்தி நிற்கும் பருவமான மெனோபாஸ், பொதுவாக 45 வயதுக்குமேல்52 வயதுக்குள் ஏற்படும்.

ஓவரியின் செயல்பாட்டுத் திறன் சுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும் குறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை. அவ்வளவுதானே தவிர, ‘போச்சுடா.. இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவுதான் போல’ என்று பயப்படுமளவுக்கு ஒன்றுமேயில்லை.

வெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸ§க்குக் கூடுதல் கவனம் தருவார்கள். அதிலும் ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி‘ எனப்படுகிற ஹெச்.ஆர்.டி|க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து தத்தெடுப்பதுதான் ஹெச்.ஆர்.டி.!

‘இது எதற்கு என்றால், ஹார்மோன் களின் உற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப் பிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு தோன்றுவ தைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும். சிலருக்கு ஒரு நாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறை கூட இது போல ஏற்படலாம்.

சிலர் சாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த ஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. அது கேன்சர் போன்ற மிகப் பெரிய பிரச்னைகளில் கொண்டுபோய் விடக்கூடும். ஜாக்கிரதை.

ஹாட் ஃப்ளஷ் ஏற்பட்டதும் உடனடியாக காற்றோட்டமான இடத்துக்குச் செல்லுங்கள். மெல்லிய பருத்தி ஆடைகளையே அணியுங்கள். காற்றோட்டமில்லாத இடத்தில் குளிக்கும்போது, மசாலாப் பொருட்களைச் சேர்க்கும்போது என்று ஹாட் ஃப்ளஷ் எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் ஒரே மாதிரியான சூழலில்தான் இது வருகிறது. சிகிச்சை மூலம் இதைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முன்பே கண்டறிந்து தவிர்க்க முடியாது.

டென்ஷன்.. டென்ஷன்..

ஆனந்தியின் நாற்பத்தெட் டாவது பிறந்தநாள் முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. ஒருநாள் காலை பெரும் எரிச்சலும் குழப்பமுமாய் விடிந்தது ஆனந்திக்கு.

‘‘அம்மா.. ப்ரஷ் எங்கேனு தெரியல. கொஞ்சம் தேடிக்குடேன்’’ என்றான் நரேன். வழக்கமாக அவன் கேட்பதுதான். இவள் தேடித் தருவதுதான். ஆனாலும், அன்று ஏனோ அநியாயத்துக்கு எரிச்சல் வந்தது ஆனந்திக்கு. ‘‘வயசு என்னாகுது? இன்னும் ப்ரஷ்ஷை நான்தான் தேடித் தரணுமா? ஒனக்கா தேடிக்கத் துப்பில்ல? ஒன் பொண்டாட்டி மகாராணி என்ன செய்றா? அவள்ட்ட கேளு’’ என்று எகிற, நரேனின் மனைவியும் அங்கு வர…

நிலைமை என்னவாகியிருக்கும் என்பதைவிளக்கவும் வேண்டுமா?

மெனோபாஸால்தான் இந்தப் பிரச்னை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். விளக்கமாகப் பார்ப்போம்.

பெரிமெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் என்று மூன்று நிலைகள் இதில் உண்டு.

பெரிமெனோபாஸ்

நாற்பத்தெட்டு வயதில் மெனோபாஸ் ஆகப்போகிறதெனில், நாற்பத்தைந்து வயதிலேயே அதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிடும். இதுதான் பெரிமெனோபாஸ். சிடுசிடுவென்று விழுவது, அல்ப காரியங்களுக்கு எல்லாம் மூட் அவுட் ஆவது, ஹாட் ஃப்ளஷ், மூட்டு வலி, கைகால் உளைச்சல் இவையெல்லாமேதான் இதன் அறிகுறிகள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உடல் குழம்ப ஆரம்பிக்கும். வயதுக்கு வந்த புதிதில், என்னென்ன அறிகுறிகள் இருந்தனவோ அவையெல்லாம் இப்போது மீண்டும் ‘உள்ளேன் அம்மா..’ என்று தலை காட்டும். சரியாக இருபத்தெட்டு நாட்களில் வந்துகொண்டிருந்த மாத விடாய் சில மாதங்கள் கழித்தெல்லாம் திடீரென்று வந்து டென்ஷன் பண்ணுவது, மிக அதிகமான ரத்தப் போக்கு, ஸ்பாட்டிங் எனப்படுகிற திட்டுத் திட்டாகப் படுவது என்று எல்லாம் நடக்கும். காரணம் என்ன தெரியுமா? வயதுக்கு வந்த காலத்தில் திடீரென்று அதிகரித்த ஹார்மோன்களால் உடல் குழம்பிப் போய் தடுமாறி, சில காலம் கழித்து நார்மலானது இல்லையா? அதேபோலத்தான் இப்போதும் ஹார்மோன் குறைவதால் உடல் குழம்பிப் போகும். அதே நேரம், மேலே குறிப்பிட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் தகுந்த நிவாரணமுண்டு.

(ஒழுங்கற்ற மாதவிலக்கும் திட்டுத்திட்டாகப் படிவதும் சகஜம்தான் என்றாலும், இவை கேன்சருக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனம் தேவை.)

இந்த இடைப்பட்ட காலம் ஒவ்வொரு வரையும் படுத்துகிற பாடு இருக்கிறதே.. அது இந்தஅளவு என்றில்லை.

முதலாவது மனரீதி யான பிரச்னைகள். ‘ஓஹோ.. இனி நான் அவ்வளவுதான் போல’ என்கிற தன்னிரக்கம் எழுபது சதவிகிதத்தினருக்கு ஏற்படும். வேலையிலிருந்து ஓய்வுபெறுகிற ஒரு ஆண், ‘நாளையிலருந்து நான் இந்த ஆபீஸ§க்கு வரமாட்டேன்ல..’ என்கிற ஒரு கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போவதற்கு இதை ஒப்பிடலாம். சிலர், ரொம்பவே பயந்து போவார்கள். ‘இனி நான் தாம்பத்திய வாழ்க்கைக்கே லாயக்கில்லை. எதற்குமே உபயோகமில்லாதவள். முன்னைப்போல் அழகாக இருக்க முடியாது. வயதாகத் துவங்கி விட்டது. தோலெல்லாம் சுருங்கும். யாரும் மதிக்க மாட்டார்கள்’ என்றெல்லாம் பல எண்ணங்கள் மனதைப் பாடாய்ப் படுத்தும்.

ஏற்கெனவே இதுமாதிரி இருக்கும்போது உடல் வேறு பல அசௌகரியங் களைச் சுமந்துவந்து நோகடிக்கும். இரண்டும் கலந்த இந்த நேரத்தில்தான் முக்கால்வாசி வீடுகளில் மகனுக்குக் கல்யாணம் செய்துவைப்பார்கள். ஏற்கெனவே, ‘நாம எதுக்கும் உபயோகமில்ல போல’ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை உறுதி செய்வதுபோல, புதிதாக வருகிற மருமகள் பல விஷயங்களையும் கையில் எடுப்பாள்.

இந்த நேரத்தில் அந்தத் தாய்க்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும் ஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் புகுந்த வீடு போகிற மகளிடம் தாய், ‘எங்கியாவது வெளியில போனா, உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ’ என்பார். காரணம் இதுதான். ‘நான் உபயோகமில்லாதவள் போல’ என்ற எண்ணம் மாறி, ‘பரவால்லியே.. மருமக நம்மள மதிக்கிறாளே..’ என்கிற சந்தோஷம் ஏற்படும் அந்தத் தாய்க்கு.

‘‘இதற்கு என்னிடம் வந்த ஒரு நோயாளியே உதாரணம்…ÕÕ என்கிறார் டாக்டர். தமிழிசை.

‘‘ஒரு அம்மா, பெரிமெனோபாஸ் நிலையில் என்னிடம் வந்தார். அவருக்கு அதோடுகூட, பிபி, சர்க்கரை, கொழுப்பு, கைவலி என்று ஏகப் பட்ட பிரச்னைகள். ‘அது முடியல.. இது முடியல’ என்று சொல்பவர், திடீரென்று ÔÔஆனாக் கூட டாக்டர்.. சில நேரம்தான் இதெல்லாம். மத்தபடி சமாளிச்சிடுவேன். என் மருமக தங்கம் டாக்டர். என்னை ராஜாத்தி மாதிரி கவனிச்சுக்கிறா!Õ’ என்றார்.

உண்மையில் அவருக்கிருந்த பிரச்னைகள் எக்கச்சக்கம். மருமகளின் அன்பான பேச்சும் கவனிப்பும் மட்டுமே அந்த அம்மாவின் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது’’ என்கிறார் தமிழிசை.

மெனோபாஸ்

இது, மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோன காலகட்டம். இப்போது, பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவத்தின் சுரப்புக் குறையும். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஆகும். சிலருக்கு வெள்ளைப் படுதல் இருக்கும். அரிக்கும்.

இவையெல்லாவற்றுக்குமே தீர்வுண்டு. திரவத்தின் சுரப்புக் குறைவதால்தான் இந்தப் பிரச்னைகள். இதற்கு என்று க்ரீம்கள், ஜெல்கள் கிடைக்கின்றன. இன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும் சரிசெய்ய முடியும். மெனோபாஸ§க்குப் பிறகு ஏற்படுகிற வெள்ளைப்படுதல் அபாயகரமானது. இதையும் உடனே கவனித்தால் குணமாக்கிவிடலாம்.

போஸ்ட் மெனோபாஸ்

இது ஒருவகையில் நிம்மதியான காலகட்டம். ஆரம்பத்தில் கவலைப்பட்டவர்கள்கூட, ‘அப்பாடா.. இத்தனை வருஷ அவஸ்தை இனி இல்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இந்த நிலையில் ஒரு விஷயத்தில் கவனம் தேவை.

முற்றிலுமாக மாதவிலக்கு நின்றபிறகு, ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து ரத்தப்போக்கு இருந்தாலோ, சின்னதாகத் திட்டுக்கள் இருந்தாலோ, அது ஆரோக்கிய சீர்கேட்டுக்கான (கேன்சராகவும் இருக்கலாம்!) அலாரம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அடி இறங்குதலும் இந்தச் சமயத்தில் பலருக்கு ஏற்படும். கர்ப்பப்பை லூஸாகி இறங்கிவிடும். சிலருக்குப் பெண்ணுறுப்பு வழியே வெளியே வரைகூட வந்துவிடும். இப்படி ஆகிவிட்டால், சர்ஜரி செய்து பையை வெளியே எடுப்பதுதான் தீர்வு.

ஆரம்ப கட்டம் எனில், வளையம் போடுவது போன்ற சிகிச்சைகள் உண்டு. சிறுநீர் கழிக்கும்போது விட்டுவிட்டுக் கழிப்பது இதற்குச் சிறந்த சிகிச்சை.

அக்கறை காட்டுங்களேன்..

அவர் சினிமாத் துறையில் மிகவும் பிரபலமான புள்ளி. அவர் மனைவியை பண்புக்கும், பணிவுக்கும் உதாரணமாகச் சொல்வார்கள். அந்தத் தம்பதியின் அந்நியோன்னியம் அவ்வளவு பிரபலம். எங்கு சென்றாலும் எத்தனை நேரமானாலும் வீட்டுக்கு வந்து மனைவி கையால் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நல்ல தம்பதி என்ற வார்த்தைக்கு அர்த்தமாக விளங்கிய அவர்களின் வாழ்க்கையில் அந்த அம்மாவின் நாற்பத்தைந்தாவது வயதில் ஒரு வில்லி உள்ளே நுழைந்தாள், மெனோபாஸ் வடிவத்தில்.

மெனோபாஸின் எதிரொலிப்பான எரிச்சல், கோபம், ஆங்காரம்.. அதெல்லாம் அந்த அம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை சாதுவாகவே அவரைப் பார்த்துப் பழக்கப்பட்ட அத்தனை பேரும், எதற்கெடுத்தாலும் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டை ரணகளப்படுத்திய அவரின் புதிய முகத்தைக் கண்டு மிரண்டனர்.

‘அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு’ என்று எல்லோருமே விலகினார்கள். அதிலும் பாசமான கணவன் என்று புகழப்பட்ட அவரது கணவரும் அவரை விட்டு விலகியதுதான் கொடுமை.

இந்த மாறுபட்ட நடவடிக்கைகள் வெறும் ஆறேழு மாதங்களில் மறைந்துவிட்டது. ஆனால், அதற்குள் அந்தப் பெண்மணியின் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து, இவர்களது சந்தோஷ சாம்ராஜ்யமே குப்புறக் கவிழ்ந்து, பிறரது கேலிக்கு உள்ளானதுதான் சோகம்.

‘‘குடும்பத்தினரின் அக்கறை கொஞ்சம் அதிகமாக அப்போது அந்தப் பெண்மணியின்மீது விழுந்திருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்குமா?! மெனோபாஸில் காலெடுத்து வைக்கப்போகும் நிலையிலுள்ள பெண்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன்.

‘‘இப்படிப்பட்டவர்களைக் குடும்பத்தோடுதான் வரச்சொல்கிறோம். எங்களது முதல் கவுன்சிலிங் குடும்பத்தாருக்குத்தான்’’ என்கிறவர், இந்த நேரத்தில் மனதில் ஏற்படும் புதுவித உணர்வுகள், மாற்றங்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகள் பற்றியும் விவரிக் கிறார்.

‘‘மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்பதைவிடவும் குழப்பங்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.. எவ்வளவு தெளிவான ஆட்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடும் காலகட்டம் அது. பெரும்பாலான பெண்கள், அந்த நிலையை அடையும்வரை அதனைப் பற்றித் தெளிவாக ஏதும் தெரியாமல் இருக்கின்றனர். அதுதான் முதல் பிரச்னையே. முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

யாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல சோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த வேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு படபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.

இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் அவர்கள் மனதில் உள்ள பயம்தான். பெண்கள் உடல் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்.

ஒரு கதை சொல்வார்கள். ஒரு அம்மாவுக்குக் கை நடுங்கிக்கொண்டே இருந்ததாம். எத்தனையோ மருத்துவர்களிடம் அழைத்துப் போயும் குணமாக்க முடியவில்லை. கடைசியாக ஒரு டாக்டரிடம் போனபோது அவர், ‘வயசாகுதில்லையா.. அப்படித்தான் இருக்கும்’ என்றாராம். உடனே சட்டென்று கை நடுக்கம் காணாமல் போய்விட்டதாம்!

அப்படித்தான்.. மாதவிலக்கை ‘இன்னும் இளமையாக இருக்கிறோம்’ என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்கிறவர்களை மெனோபாஸ் பயமுறுத்துகிறது. தோற்றத்தில் உடனே முதுமை வந்து ஒட்டிக்கொள்ளுமோ.. அழகு குறைந்து விடுமோ.. கணவர் விலகிடுவாரோ.. இனி தாம்பத்திய வாழ்க்கைக்கு நாம் லாயக்கில்லையோ.. போன்ற பயங்கள் சூழ்ந்துகொள்கின்றன (உண்மையில் இவையெல்லாமே தேவையற்ற பயம்தான்!).

அந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளும் திருமணம், மேல்படிப்பு என்று பெற் றோரைப் பிரிந்திருப்பார்கள். வெளிஉலகத்தோடு அதிக தொடர்பு இல்லாத, பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபாடு இல்லாத, சதா குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இந்த வெறுமையை அவ்வளவு சுலபத்தில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.

தவிர, கணவருக்கும் வீட்டில் இருக்கும் வயதான பெரியவர் களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும். இல்லத்தரசி என்ற முறையில் அதை கவனித்தாக வேண்டிய பொறுப்பும் இவர்களுடையதாகத்தான் இருக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படும். எல்லாமே பெரிய அளவில் செலவு வைக்கும் சமாச்சாரங்கள். அதைச் சரிக்கட்ட வேண்டிய கடமையும் அழுத்தும். ஆக, உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்காததோடு, கூடுதல் பொறுப்புகளும் சேர மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தங்களுடைய பிரச்னைகளைக் குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள முடியாமலே போய்விடுகிறது.

இவை தாண்டி கணவரின் அனுசரணை இருந்தாலே மெனோபாஸைச் சுலபமாக எதிர்கொள்ளலாம். ‘அனுசரணையான கணவர் அமையப் பெறாதவர்கள், கணவனை இழந்த, திருமணமாகாத, விவாகரத்தான பெண்கள், தாமதமாகக் குழந்தை பெற்றதால் டீன்|ஏஜ் பிள்ளைகளைக் கொண்ட அம்மாக்கள் ஆகியோர் இதுபோன்ற மன உளைச்சலுக்கு மிக மிக அதிக அளவில் ஆளாகின்றனர்’ என்கிறது உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம்.

நம் ஊரில், பிரச்னையோடேயே வாழ்வதுதான் அம்மாக்கள் செய்கிற பெரிய தவறு. மன உளைச்சலை போக்க மாத்திரைகள் உள்ளன. மருத்துவரின் அனுமதியோடு எடுத்துக்கொள்ளலாம். மெடிடேஷனும் அதிகாலை நடைப்பயிற்சியும் சுலபமான நிவாரணிகள்.

மெனோபாஸில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தீர்வுள்ள பிரச்னைகள்தான். அதற்குப் பிறகான வாழ்க்கை நிம்மதியானது. மாதாந்திரத் தொல்லை இல்லை. கோயில், விசேஷங்களுக்கு நிம்மதியாகப் போய் வரலாம். குழந்தை உண்டாகுமோ என்ற பயமின்றி தைரியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மீண்டும் வளர்ந்த குழந்தையாக வாழ்வை அனுபவிக்கலாம்.

இயற்கை தந்த வரம்!

ஆயிரம் திரை கண்டு இன்றும் சளைக்காமல் நடிப்புலகில் ஓடிக்கொண்டிருக்கும் மனோரமா வுக்கு வயது அறுபதுக்கும் மேல். உடலையும் மனதையும் துவளச்செய்யும் மெனோபாஸ் பருவத்தைத் தான் கடந்துவந்த விதத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார் ஆச்சி.

‘‘பத்து வயசா இருக்கும்போதே மெனோபாஸ்னா என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். அந்தளவுக்கு என் கண்ணு முன்னால கஷ்டப்பட்டாங்க எங்கம்மா. அம்மாக்கு எந்நேரமும் அனல்ல குளிச்சு முறுக்குச் சுடற வேலை. வேலை பாத்துட்டிருக்கும்போதே திடுதிப்புனு காலோட தீட்டுப் போகும். அவங்க கட்டியிருக்கற 18 முழம் புடவை மொத்தமா நனஞ்சு தொப்பலாயிடும். ஒரு நாளைக்கு நாலஞ்சு புடவை மாத்துவாங்க. நான்தான் தொவைப்பேன்.

அம்மா படற வேதனையைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலிக்கும். அம்மா கஷ்டப்பட்டாத்தான் எங்க வயித்துக்கு சோறு. ஆனா, ‘சேர்ந்தாப்பல அரை மணி நேரம் உக்கார முடியாதபடிக்கு கைகாலெல்லாம் விட்டுப் போகுதும்மா’னு அழுதுட்டே போய் படுத்துடுவாங்க. ஒரு வருஷம் வரைக்கும் இந்த அவஸ்தை தொடர்ந்துச்சு. அம்மாவுக்கு நான், எனக்கு அம்மா, வேற துணை இல்லேங்கறதால தன் உடம்புக்கு என்னங்கறதை எங்கிட்ட விளக்கமாச் சொன்னாங்க. அப்பலேர்ந்தே என் அடி மனசுல இந்த வயச நெனச்சு சன்னமா ஒரு பயம் ஒட்டிக்கிட்டே இருந்துச்சு.

நாற்பத்தஞ்சாவது வயசுல அந்தக் கட்டம் எனக்கு வந்துச்சு. இந்த விஷயத்துல ‘அம்மா மாதிரிதான் பொண்ணுக் கும்’னு பலபேர் சொன்னதால பயம் கூடிடுச்சு. மகமாயி தயவால எனக்கு அவ்வளவு சோதனை வரலை.

அந்த ரெண்டு வருஷமும் அடிக்கடி மூளையே குழம்பிப் போற மாதிரி ஆகிடும். திடீர்னு உடம்பு முழுக்க அனலடிக்கும். குப்புனு வேர்க்கும். அதை வெளில காட்டிக்காம, காத்தாட உக்காந்து உடம்பு பழைய நிலைமைக்கு வந்ததும் வேலையைப் பார்ப்பேன். இப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்ததால தன்னால சரியாகிடும்னு நானே என்னை சமாதானப்படுத்திக்கு வேன்.

எப்போ வரும்னு தெரியாம, திடீர் திடீர்னு விலக்காகும் பாருங்க. அதுலதான் ரொம்பவும் அவஸ்தைப்பட்டுட்டேன். அப்படித்தான் ‘வருவான் வடிவேலன்’ படத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனப்போ விலக்காயிட்டேன். எல்லாரும் காத்திருக்காங்க. நான் தயங்கினா பல பேர் பொழப்பு கெட்டுடும். கடைசியா ஆத்தாமேல பாரத்தைப் போட்டுட்டு, ‘இது பொம்பள பொறப்புக்கு நீ ஏற்படுத்தின நியதி.. இதுல என் தப்பு ஒண்ணுமில்லை. தாயேÕனு கண்ணீரோட வேண்டிக்கிட்டு பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சு நடிச்சேன். அந்த ஒரு நாள் முழுக்கப் பச்சைத் தண்ணி பல்லுல படாம பார்த்துக் கிட்டேன். அதுதான் ஆத்தாக்கு என்னால செய்யமுடிஞ்சது.

இத்தனை அவஸ்தைப்பட்டதனாலயோ என்னமோ அப்புறமா அந்த மாதாந்தரத் தொல்லையிலிருந்து கிடைச்ச.. விடுதலை, பிரசவ வேதனையை மறக்கடிச்சு குழந்தை முகம் பாக்கிற மாதிரி அத்தனை சுகமா இருக்கு. ஒருவேளை.. இளமை போய்டுச்சேனு சங்கடப்படக்கூடாதுனுதான் இயற்கை இத்தனை கஷ்டங்களைத் தருதோ, என்னவோ..” என்கிறார் கவித்துவமாக.

இன்னும் நான்இளமைதான்ÕÕ

சிரித்த முகம் எழுத்தாளர் அனுராதா ரமணனுக்கு. வரும் ஜூனில் ஐம்பத்தேழு வயதைத் தாண்டுகிற அனுராதா, தான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார்.

‘‘அப்போ எனக்கு முப்பத்தேழு வயசு. எழுத்தாளரா ரொம்பப் புகழோட இருந்த நேரம். மீட்டிங், விழானு எங்கேயாவது போய்ட்டே இருப்பேன். அப்போதான் அந்தப் பிரச்னை ஆரம்பிச்சது. பதினஞ்சு நாள், இருபது நாளுக்கு ஒருமுறை விலக்காகிடுவேன். உடம்பே கரைஞ்சுபோற மாதிரி ரொம்பக் கஷ்டப்பட்டேன்.

டாக்டர்ட்ட போனப்போ ஸ்கேன் பண்ணிப் பாத்துட்டு, ‘யூட்ரஸ்ல சின்ன கட்டி இருக்கு. யூட்ரஸையே எடுக்கணும்’ னுட்டாங்க. எனக்கு சர்ஜரி பண்ணின டாக்டர் கனகவல்லி, ‘உனக்கு முப்பத்தேழு வயசுதானே ஆகுது. ஓவரிஸை எடுக்க வேணாம். அதைஎடுத்துட்டா, ரொமான்டிக்கான உணர்வுகள் செத்துப் போய்டும்’னு சொன்னாங்க. அதுக்கு எங்கம்மா, ‘அதனால என்ன டாக்டர்? அவ புருஷன்தான் உயிரோட இல்லையே’னு சொல்லவும் டாக்டர், ‘அப்படிச் சொல்லாதீங்கம்மா. உணர்வுகள் வேற. கல்யாணம், புருஷன்ங்கிறதெல்லாம் வேற. அதிலயும் அவ எழுதுறவ. ஒரு லவ்ஸ்டோரி எழுதணும்னாக்கூட இந்த உணர்வுகள் வேணும்’னு சொல்லிட்டாங்க. நல்லவேளையா, கால் உடைஞ்சு ஆஸ்டியோபொராஸிஸ் வந்து நான் கஷ்டப்பட்டப்போ, அந்த ஓவரீஸ்தான் என்னைக் காப்பாத்துச்சு. அதுலருந்து சுரக்குற ஹார்மோன்களால தான் என் உடம்புக்கு இன்னிக்கு வரைக்கும் கால்சியம் கிடைச்சிட்டிருக்கு.

யூட்ரஸ் எடுத்ததுக்கப்புறமா, நாற்பத்தோரு வயசுல எனக்கும் மெனோபாஸ் வந்தது. திடீர்னு தலைக்குள்ள என்னவோ கொதிக்கிற மாதிரி இருக்கும். சட் சட்னு கோபம் வரும். பிபி|தான் அதிகமாகிடுச்சு போலனு டாக்டர்ட்ட போனா, பிபி நார்மலா இருக்கும். அப்போதான், டாக்டர், ‘இது மெனோபாஸ். உங்க விஷயத்துல மாதவிலக்கு இருக்காதே தவிர, மத்த எல்லாக் குழப்பங்களும் இருக்கும்’னாங்க. இப்போ யோசிச்சுப் பாத்தா, ‘நான்தானா அப் படி எரிச்சல் பட்டேன்’னு ஆச்சரியமா இருக்கு. அது ஒருமாதிரி, ‘நம்மள நாமே இழந்துடற’ நிலைமை. மத்தவங்களுக்கு அந்த நேரத்துல ஆறுதல் சொல்ல, வீட்டுக்காரர் இருப்பாங்க. என் விஷயத்துல வீட்டுக்காரனும் நானே. வீட்டுக்காரியும் நானே. என்னை நானேதான் தேத்திக்கணும்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு புத்தி. எதுக்காகவும் ரொம்ப நேரம் அழவோ வருத்தப்படவோ மாட்டேன். கொஞ்ச நேரம் மனசு விட்டு அழுதிட்டு விட்டுடுவேன்.

அப்படிப்பட்ட நானே அந்த நேரத்துல ‘நானுறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்.. என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்’னு ஒரு சினிமா பாட்டுல வருமே அது மாதிரி, எனக்குனு யாருமே இல்லையேனு ரொம்பத் தவிச்சுப் போய்ட்டேன். அந்த நேரம் என் தங்கை என்கூடவே ஆறுதலா இருந்தா.

இப்போ பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நேத்து பெய்த மழையில ஒரு பையனும் பொண்ணும் வீட்டுக்குத் தெரியாம வந்திருக்குங்க போல.. ஸ்கூட்டர்ல நனைஞ்சுட்டு, என் வீட்டு வழியா போச்சுங்க. எனக்கு அதுங்கள பாக்க ஆசையா இருந்தது. என்னோட உணர்வுகள நல்லபடியா வெச்சிருக்கிற கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

என் உடலுக்குத்தான் வயசாச்சே தவிர, மனசு இன் னும் இளமைத்துள்ளலோட தான் இருக்கு’’

சந்தோஷத்தை மீட்க முடியும்..

வசுமதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஏன் தன் கணவரின் புத்தி இப்படிப் போனது? இத்தனை வருடங்களாகத் தன்னைத் தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர் திடீரென்று வேலைக்காரியிடம் போய் இப்படி நடந்து கொள்வார் என்பதை வசுமதி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. முதலில் வேலைக்காரியின் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால், கணவரிடம் கேட்டபோது அவர் அதை மறுக்காததும் வேலைக்காரியின் முகம் பார்க்கக் கூசியதும் உண்மையை டமாரம் அடித்தன. கூசிப் போனார் வசுமதி. நல்லவேளையாகத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்ட வேலைக்காரி, ‘இனிமே ஒன் சங்காத்தமே வாணாம்மா.. நாங்க வயித்துக்கு இல்லேன்னாலும் ஈனப் பொழப்புப் பொழக்கிறவங்க இல்லÕ என்று தூற்றி வாரிப் பேசியது மனதை என்னவோ செய்தது. ‘தன் கணவன் இப்படியா?Õ என்று குறுகிப் போய் இருந்தவளை மேலும் குறுக்கின கணவனின் வார்த்தைகள்.

‘‘வசு.. என்னை மன்னிச்சிடும்மா.. ஒரேடியா எல்லாத்தையும் சொல்லிடுறேன்’’ என்று ஆரம்பித்தபோதுகூட இப்படியான விஷயங்கள் அவர் வாயிலிருந்து வரும் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.

‘‘நான்.. ரெண்டு மூணு தடவ சிவப்பு விளக்குப் பகுதிக்குக்கூடப் போய்ட்டு வந்தேன் வசு..’’ என்று அவர் சொல்லி முடித்தபோது வசுமதிக்குத் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா என்கிற சந்தேகம் வந்தது. ஆத்திரம், அழுகை, கோபம் எல்லாம் முடிந்து யோசித்துப் பார்த்தபோது ‘இது சாதாரணமாக விடக்கூடிய விஷயமில்லை’ என்பது புரிந்தது.

‘‘உடனடியாக என்னிடம் வந்தார்கள்’’ என்று தொடங்கினார் டாக்டர் நாராயண ரெட்டி.

‘‘ ‘இவருக்கு கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர்’ என்றுதான் அந்த அம்மா கேட்டார்கள். ஆனால், கவுன்சிலிங் தேவைப்பட்டது அந்த அம்மாவுக்குத்தான். மெனோபாஸை அடைந்திருந்த அவருக்கு தாம்பத்திய உறவு பெரும் வலி தரும் விஷயமாக மாறிவிட்டது. காரணம்.. பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவம் சுரக்காமல் போனதுதான். பயத்தில் அந்த அம்மா தன் கணவரை நெருங்கவே விடவில்லை. அதன் விளைவுதான் இது. குறைந்தபட்சம் தன் கணவருடன் இந்தப் பிரச்னைகளை அவர் பகிர்ந்து கொண்டிருந் தால்கூட, அவருக்குப் புரிந்திருக்கும். இவர் காரணமே சொல்லாமல் நெருங்கவும் விடாமல் முரண்டு பிடிக்கவும் தான் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறார்.

தான் மாதவிலக்கு நிற்கிற நிலையில் இருப்பதைச் சொன் னால், எங்கே தன்னைக் கணவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்கிற பயம் தான் பகிர்ந்து கொள்ளாததற்குக் காரணம். பிறகு, அவர்கள் இருவருக்குமே கவுன்சிலிங் செய்து, ஹெச்.ஆர்.டி. (ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி) பற்றிச் சொல்லி, சிகிச்சையும் எடுத்த பிறகு இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்’’ என்றார்.

ÔÔஇந்தச் சமயத்தில் தாம்பத்தியம் தொடர்பான என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?ÕÕ என்று கேட்டோம்.

ÔÔமனரீதியான, உடல்ரீதியான என்று இரண்டு வித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, செக்ஸ் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். சிலருக்கு நார்மலாக இருந்த காலகட்டத்திலேயே செக்ஸ் மேல் பெரிய ஆர்வம் இருந்திருக்காது. அதற்கு அவருடைய கணவர்தான் முக்கியக் காரணம். ‘ஃபோர்ப்ளே’ எனப்படுகிற தாம்பத்தியத்துக்கு முந்தின விளையாட்டுக்கள் பற்றியெல்லாம் தெரியாமல் தாம்பத்திய சுகம் பற்றிய உணர்வே இல்லாமல் இத்தனை காலமும் அதை ஒரு சுமையாகவும் வலியாகவும் பயம் தரக்கூடிய நிகழ்வாகவுமே நினைத்தவர்கள் இப்போது மிகப் பெரிய விடுதலையை அடைந்து விட்டதாகவே நினைப்பார்கள். ‘இனி, கணவரிடம் சொல்வதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது’ என்று சந்தோஷப்படுவார்கள். இவர்கள் தாம்பத்தியத்தை மன ரீதியான சந்தோஷமாகவே உணரவே முடியாமல் போனவர்கள். இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து இனியும்கூட சந்தோஷத்தை உணரச் செய்ய முடியும்.

இன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல வருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தி யம் இருப்பதால் போரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். வருடம் ஒருமுறை வெளியூருக்குப் போவது, விதம்விதமான ஃபோர்ப்ளேயில் ஈடுபடுவது, உறவுக்கான பொசிஷன்களை மாற்றுவது போன்றவை இவர்களை கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில் வைத்திருக்கும்.

இனி, உடல்ரீதியான பிரச்னை களைப் பார்க்கலாம். முதலாவது, வெஜைனிஸ்மஸ்.

பெண்ணுறுப்பு வறண்டு போனதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று பயங்கர வலி இருந்திருக் கும் இவர்களுக்கு. இரண்டாவது முறை அப்படி வலித்து விடுமோ என்கிற பயத்தில் பெண்ணுறுப்பின் சதையைக் கையால் இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள் இவர்கள். இதனால், உறவு சாத்தியமற்றுப் போய் விடும். கை வலி, கால் வலி என்றால் மருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் முதலிலேயே மருத்துவரிடம் போயிருந்தால் மருந்து கொடுத்திருப்பார். சரியாகியிருக்கும்.

இரண்டாவது, ஆர்காஸ்மிக் டிஸ்ஃபங்ஷன் எனப்படுகிற பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஏற்படுவது. இவர்களுக்கு ஹெச்.ஆர்.டி. தர வேண்டும். கூடவே பெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ வேண்டும். சிலர், தாங்களாகவே விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவுவார்கள். இது ரொம்பத் தப்பு. ஏற்கனவே இருக்கிற பிரச்னை போதாதென்று புதிதாக இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தி விடும் இந்த சுய மருத்துவம்.

மூன்றாவது, உடல்நலமில்லாததால் ஏற்படுகிற ஈடுபாட்டின்மை. ஏற்கெனவே, உடல் வலி, மூட்டு வலி என்று சிரமப்படுகிறவர்களுக்கு மனதில் ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு, நினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்துக்கானதல்ல.சொல்லப் போனால், மெனோபாஸ§க்குப் பிறகுமுன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு. வாக் போவது,யோகா செய்வது, சரிவிகித உணவு சாப்பிடுவது, எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடலுக்கு முக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது இவற்றைத் தொடர்ந்து செய்தாலே கடைசி வரையிலும் இயல்பான சந்தோஷமான தாம்பத்தியம் எல்லாருக்குமே சாத்தியம்தான்ÕÕ என்றார் டாக்டர் நாராயணரெட்டி.

இதயத்துக்கு இதமானது எது?

‘‘‘இந்த உலகத்தில் அம்மாவின் இதயத்தை விட இனிமையானது எதுவுமே இல்லை’ என்பார்கள். அம்மாதான் மொத்தக் குடும்பத்தையும் பாதுகாப்பவர். அவருடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.

இந்த அம்மாக்கள்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்றால்.. பிள்ளைகள் அவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது. தன்னுடைய உடம்புக்கு ஏதேனும் வந்தால் வற்புறுத்தி, வலியுறுத்தி மிரட்டியாவது மருத்துவரிடம் அழைத்துப் போகும் அம்மாவை அதே முறையில் ரெகுலர் செக்கப்புகளுக்கு அழைத்துச் செல் வது ஒவ்வொரு பிள்ளையின் கடமை’’ என்கிறார் டாக்டர் ஆஷா குருமூர்த்தி.

‘‘மாதவிலக்கு ஏற்படும் காலகட்டங்களில் பெண் களாகிய நாம் கிட்டத்தட்ட எல்லாவிதமான இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுகிறோம். அந்த வகையில் மெனோபாஸ் சற்று சிக்கலான பருவம்தான்.

சரியாக, மெனோபாஸை அடைந்ததும் இதயநோய் ஏற்பட ஆணுக்கு இருக்கிற அதே அளவு ரிஸ்க்.. சமயத்தில் ஆணை விடவும் இரண்டு மடங்கு ரிஸ்க் நமக்கு இருக்கிறது. திடீரென்று ஹார்மோன்கள் சுரக்காமல் போவதுதான் இதன் காரணம்ÕÕ என்கிறார் டாக்டர் ஆஷா.

‘‘நம் உடலில் சுரக்கின்ற விசேஷ ஹார்மோன்கள்தான் நம்மை ஆணை விடவும் வலிமை மிக்கவர்களாக வைத்திருக்கின்றன. அவர்களை விடவும் வலி தாங்குகிறோம். வீடு, அலுவலகம் என்று இரண்டையும் அநாயாச மாகக் கையாளுகிறோம். ஆனால், இதிலும் ஒரு விநோதம் இருக்கிறது. இயற்கையாக இந்த ஹார்மோன்கள் சுரக்கும்போது அவை இதயநோயைத் தள்ளி வைக்கின்றன. செயற்கை யாக இவை தரப்படும்போது இவையே இதயநோயை வரவைக்கின்றன.

கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.கர்ப்பத் தடைக்கு,மாதவிலக்கைத் தள்ளிப்போடுவதற்கு என்று ஹார்மோன் மாத்திரை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

மாதவிலக்கு வரும் காலத்தில் இந்த விஷயங்களில் கவனம் தேவை. சும்மா எதற்கெடுத்தாலும் மாதவிலக்கைத் தள்ளிப்போட ஹார்மோன் மாத்திரை சாப்பிடக் கூடாது. அதேபோல, கர்ப்பத் தடைக்கும் மாத்திரை தவிர்த்து மற்ற வழிகளை முயற்சிக்கலாம்.

மெனோபாஸ் சமயத்தில்தான் முன்பு எடுத்த ஹார்மோன் மாத்திரைகளின் தாக்கம் தெரியும். அப்படியெனில், ‘மெனோபாஸ§க் குப் பிறகு, ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி’ எடுப்பதும் இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமா?’ என்றொரு கேள்வி உங்களுக்கு எழும்.

இல்லவே இல்லை. ஹெச். ஆர்.டி. இதய நோயைத் தள்ளிப் போடும்.

‘என்னங்க.. டாக்டர் குழப்புறீங்களே..’ என்கிறீர்களா? முன்பு எடுத்தது ஏற்கெனவே இருக்கிற ஹார் மோனுடன் கூடுதலாக. இப்போது எடுப்பது இல்லாத ஹார்மோனை ஈடுசெய்ய.
ஹார்மோன் இல்லாததால்தான் இதயநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஈடுசெய்வதால் அந்த வாய்ப்புக் குறைகிறது. வெளி நாட்டவர்கள் மெனோபாஸ் நிலையில் பதறியடித்துப் போய் ஹெச்.ஆர்.டி. சிகிச்சைக்கு ஓடுவது இளமைத் தோற்றம் தர மட்டுமல்ல. இதயநோயைத் துரத்தவும்தான்.

இதயநோயைத் துரத்த வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

தினம் தினம் கண்டிப்பாக 15 நிமிடமாவது நடக்க வேண்டும். வெளியில் போய் நடக்க சங்கடமெனில் வீட்டிலேயே ‘ட்ரெட் மில்’ வாங்கி வைத்து நடக்கலாம். சாப்பாட்டு முறையையே மாற்ற வேண்டும். ‘முன்னே சாப்பிட்ட அதே அளவுதான் இப்பவும் சாப்பிடுறேன். திடீர்னு ஏன் குண்டானேன்?Õ என்பார்கள் சிலர். முன்பு செரித்த அளவுக்கு இப்போது செரிப்பதில்லை என்பதுதான் காரணம்.

சுலபமாக செரிக்கக்கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்குப் போவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் மூழ்கடிக்கப்பட்டு, பொரித்தெடுக் கப்பட்ட ஐட்டங்களை மறக்க வேண்டும்.

அப்புறம்.. மிக முக்கியமானது டென்ஷனுக்கு பை சொல்ல வேண்டும். இந்தச் சமயத்தில் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிதாகக் கோபம் வரும். பிபி எகிறும். இதைக் கட்டுப்படுத்த, யோகா, மெடிட்டேஷன் செய்ய லாம். இவை மனதுக்கு அமைதி தருகின்றன. எக்கச்சக்கமாகத் துடிக்கிற இதயத்தை ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோப்பாÕ என்று கட்டுப்படுத்துகின்றன இவை.

‘சரி.. இதயத்தில் பிரச்னை ஏற்பட்டால்தான் என்ன? இப்போதெல்லாம் பைபாஸ் சர்ஜரி என்பது மிகச் சாதாரண விஷயமாகி விட்டதே’ என்கிறீர்களா?

அது ஆண்களுக்கு. இயல்பாகவே அவர்களுக்கு பைபாஸ் செய்யப்படுகிற ரத்த நாளம் பலமாக இருக்கிறது. பெண்களுக்கு இது ரொம்ப வீக். இதனால், பைபாஸ் ஆண்களுக்கு ரொம்பச் சாதாரணமாகி விட்டாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அது இன்னமும் சற்று சீரியஸ் ரகம்தான். வரும்முன் காப்பது எப்போதுமே நல்லது. அதிலும், பெண்களின் இதய விஷயத்தில் ரொம்ப ரொம்ப நல்லது’’ என்கிறார் டாக்டர் ஆஷா.

வரும்முன் காப்போம்!

‘‘மாதவிலக்கு முற்றிலும் நின்றுபோன பிறகு திடீரென்று ஒரு வருடம் கழித்து ரத்தப்போக்கு இருந்தால், அது கேன்சர் முற்றிய நிலையாக இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். அதனால்தான் மெனோபாஸ் நிலையில் சில பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம்’’ என்கிறார் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா.

மேமோக்ராஃபி, வெஜினல் அல்ட்ராசவுண்ட் எனப்படுகிற பிறப்புறுப்பில் ஸ்கேன் செய்வது, பாப்ஸ்மெர் டெஸ்ட்.. இந்த மூன்றும் அத்தியாவசியப் பரிசோதனைகள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேமோக்ராஃபி, மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்று பார்ப்பதற்கான பரிசோதனை. வருஷா வருஷம் ஒரே சென்டரில் இதைச் செய்ய வேண்டியதும் ஒவ்வொரு வருடத்துக்கான ரிசல்ட்டுகளையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

இது தவிர, மார்பகங்களில் கட்டி இருக்கிறதா என்று பார்க்கிற சுய பரிசோதனையையும் தவறாமல் மாதாமாதம் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது பரிசோதனை வெஜினல் அல்ட்ராசவுண்ட். இது எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

கர்ப்பப்பையின் உள்ளே இருக்கிற எண்டோமெட்ரியம்தான் மாதவிலக்காக வெளிப்படுகிறது. மெனோபாஸ§க்குப் பிறகு இந்த எண்டோமெட்ரியம் வளர்வதில்லை. மாதவிலக்கும் ஆவதில்லை. இது நார்மல்.

சிலருக்கு, மெனோபாஸ§க்குப் பிறகும் இந்த எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சி இருக்கும். ஆனால், மாதவிலக்கு ஏற்படாது. இப்படி வளர்ச்சியடைகிற எண்டோமெட்ரியம், எண்டோமெட்ரியல் கேன்சராக மாறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

இந்த வளர்ச்சியை டக்கென்று காட்டிக் கொடுத்து விடும் வெஜினல் அல்ட்ராசவுண்ட்.

இந்த வளர்ச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் எண்டோமெட்ரியத்திலிருந்து கொஞ்சம் வெட்டி எடுத்து பயாப்ஸிக்கு அனுப்புவார்கள்.. கேன்சராக இருக்குமோ என்று பார்க்க. கேன்சராக இல்லாவிட்டாலும்கூட, இதை அகற்றி விடுவதும் தொடர்ந்து சிகிச்சை எடுப்பதும் அவசிய மானது.

அடுத்தது பாப்ஸ்மெர் டெஸ்ட்.

இதில் பிரமாதமான விஷயம் என்ன தெரியுமா? கேன்சரை மிக மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதுதான். இதனால் கேன்சரை முற்றிலும் குணப்படுத்துவதும் சுலபம். முப்பதாவது வயதிலிருந்தே இந்த டெஸ்ட்டை செய்து பார்க்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இந்த மெனோபாஸ் நிலையிலாவது செய்வது மிக மிக அவசியம்.

இன்னொரு முக்கியமான விஷயம்.. ஹெச்.ஆர்.டி. எடுக்கிறவர்கள் கேன்சர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கேன்சர் வருவதற்கான சாத்தியம் உண்டு. அதற்காக, ஹெச்.ஆர்.டி. எடுக்கவே கூடாது என்று அர்த்தமில்லை. நம் ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஐம்பது வயதில் எடுக்கிற ஹெச்.ஆர்.டி. மாத்திரைகளை அடுத்த ஐந்து வருடங்களுக்கு டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிடுவார் கள். இதுதான் தவறு. ஆறு மாதங்களுக்கொருமுறை டாக்டரை சந்தித்து அவர் அனுமதியுடன் எடுத்தால் ஒரு பிரச்னையு மில்லை.

கூடாகும் எலும்பு!

மெனோபாஸ் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பெரிமெனோபாஸ் நிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக ‘ஆஸ்டியோபொராஸிஸ்’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘‘நமது உடலில் இரும்புபோல உறுதியாக இருக்கும் எலும்புகள் உறுதியிழந்து பேப்பர் சுருள் போல மாற ஆரம்பிப்பதுதான் ஆஸ்டியோபொராஸிஸ்’’ என்கிறார் டாக்டர். சௌந்தரபாண்டியன்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் அழுத்தமாகக் கையூன்றி எழுந்தாலே மணிக்கட்டு எலும்புகள் முறிந்துவிட வாய்ப்பு உண்டு. அவ்வளவு ஏன்? ஆட்டோவில் சென்றால் அதன் குலுக்கலிலேயே இடுப்பு எலும்பும் முதுகெலும்பும் முறிந்துவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆண்களுக்கும் வரும் என்றாலும் இது பெண்களைத்தான் அதிகமாகக் குறிவைத்துத் தாக்குகிறது. அதிலும் குறிப்பாக, மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட நால்வரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆஸ்டியோபொரோஸிஸ் பற்றி இங்கே விரிவாக விளக்குகிறார் டாக்டர் சௌந்தர பாண்டியன்.

‘‘நம் உடல் எலும்பு தேனடை மாதிரியான ஒரு அமைப்பில் இருக்கிறது. புரோட்டினால் ஆன தேனடை என்று சொல்லலாம். தேனீக்கள் தேனடையின் ஒவ்வொரு இடைவெளியிலும் தேனை சேகரித்து வைப்பதுபோல நம் உடம்பில் சேர்கிற மொத்த கால்சியமும் இந்த புரோட்டீன் தேனடையின் இடைவெளியில்தான் சேகரித்து வைக்கப்படுகிறது. அங்கு கால்சியம் சேர்ந்திருக்கும்போது எலும்பு உறுதியாக இருக்கும். அந்த கால்சியம் நம் உடம்பின் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கும்போது எலும்பில் இருக்கும் கால்சியம் மெதுமெதுவாகக் குறைந்து உள்ளே வெறும் கூடாக எலும்பு மாறிப் போகிறது.. அதனால்தான் சின்ன அதிர்வு என்றால்கூட அத்தனை பாதிப்பு.

இந்த ஆஸ்டியோபொரோஸிஸ் இளமையில் வருவதில்லை. காரணம், குழந்தை வளரும்போது அதன் எலும்பில் கால்சியம் அதிகமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது உடல் தேவைக்காக கால்சியம் ரத்தத்தில் கலந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் திரும்பவும் எலும்புகளை அடைந்து அதன் உறுதியை ஈடுகட்டிவிடும். முப்பத்தைந்து வயதிற்குப் பிறகுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன.

ஏனென்றால், அதன்பிறகுதான் நாம் உணவாக எடுத்துகொள்ளும் கால்சியத்தின் அளவு மெதுவாகக் குறைகிறது. இன்னொரு பக்கம் கால்சியத்தை எலும்பில் சேர்த்து வைக்க உதவும் ஹார்மோன்களின் சுரப்பும் குறைய ஆரம்பிக்கிறது. அதனால் இந்தப் பிரச்னை இன்னும் கொஞ்சம் பெரிதாகிறது. வயதானவர்கள் கூன் போட்டு நடப்பது இதனால்தான். முதுகுத்தண்டு எலும்புகள் வலுவிழந்து கொஞ்சம் கொஞ்ச மாக நுனியிலிருந்து நொறுங்கிக் கொண்டே வருகின்றன.

மெனோபாஸான பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக வரும். வயதாக ஆக இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். அதிலும் சில பெண்களுக்கு ஏற்கெனவே எலும்பு மென்மையாக இருக்கும். எலும்பு தன் எடையை இழக்கும்போது இன்னும் மென்மையாகி வலுவிழந்து விடும்.

அதற்காக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகம் என்று அர்த்தமல்ல. ஒல்லி எலும்பு உள்ளவர்கள், பார்க்க பருமனாகவும் இருக்கலாம். உடல் தோற்றத்தை வைத்து கணிக்க முடியாது. எக்ஸ்ரேயின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும்.

ஆஸ்டியோபொராஸிஸ் தாக்குதலுக்கு உள்ளாக சந்தர்ப்பம் இருக்கும் அடுத்த ரகத்தினர், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையுடன் ஓவரியையும் எடுத்த இளம் பெண்கள். பொதுவாக, கர்ப்பப்பை நீக்கும்போது ஓவரியை எடுக்க மாட்டார்கள். காரணம், ஓவரியிலிருந்து தான் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் இரண்டும் சுரக்கின்றன. ஓவரியை எடுப்பதன் மூலம் அந்த ஹார்மோன்களின் சுரப்பு தடுக்கப்படுகிறது.

இயல்பாகவே இந்த ஹார்மோன்கள் குறைவாகச் சுரக்கும் பெண்களும்கூட (மாதவிலக்கு மூன்று மாதம் ஆறுமாதம் என்று விட்டுவிட்டு வரும் பெண்கள்) இந்த நோயின் பிடிக்குச் சுலபமாக ஆளாகிறார்கள். பாட்டியோ, அம்மாவோ இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவில் தேவையான கால்சியம் சேர்க்காதவர்கள், வெயிலுக்கே முகம் காட்டாதவர்கள், சாதாரண உடற் பயிற்சிகூட இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு.

இந்த நோய் தாக்குவது பெரும்பாலும் மெனோபாஸ§க்கு பிறகுதான் என்பதால், எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த வயதில் எலும்புகள் திரும்ப ஒன்று சேர்வது கடினம். இளம் வயதில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருப்பவர்களைவிட, இவர்கள் இன்னும் சீக்கிரமே படுக்கையைவிட்டு எழுந்து நடமாட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், நோயின் தீவிரம் அதிகமாகும். எந்த அளவுக்கு உடல் ஆக்டிவாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஆஸ்டியோபொரோஸிஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

இதை வர விடாமல் தடுக்க, கால்சியம், புரோட்டீன் கலந்த உணவுகளைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். மெனோபாஸான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 1500 மி.லி கிராம் கால்சியம் தேவை.

விட்டமின் டி ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு தினமும் மாலை நேரத்தில் வெயில் உடம்பில் படுமாறு ஒரு வாக் போய் வாருங்கள்.

உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலும் எலும்பும் வலுவேறும். சைக்கிள் ஓட்டுவது, பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளை யாட்டுக்களும் எலும்பின் அடர்த்திக்கு உரம் சேர்க்கும். கால்சிடோனின் என்ற ஹார்மோன் எலும்பின் அடர்த்திக்கு உதவுகிறது. இது ஊசியாகவும் மூக்கினால் உறிஞ்சக்கூடிய வகையில் மருந்தாகவும் கிடைக்கிறது.

எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி ஆஸ்டியோபொரோஸிஸ் வந்தேவிட்டால், கால்சியம், புரோட்டீன் நிறைந்த சாப்பாடு, உடற்பயிற்சி, மாலை வெயில் என்று அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் என்ற சூழ்நிலையில் கால்சியம் மாத்திரைகளையும் விட்டமின் டி மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையோடு சாப்பிடலாம்.

இதுதவிர, ஈஸ்ட்ரோஜென் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியையும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவென்றே இருக்கிற சிறப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நோய் வருவதற்கு முன்பே கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்டால், முடியும். செலவு கம்மியான சுலபமான விஷயம் இது. எக்ஸ்ரே மூலம் எலும்பின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று எலும்பு நோய் சிகிச்சை நிபுணரால் ஓரளவு கண்டுபிடிக்க முடியும். அதில் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் டெக்ஸா (DEXA) எனப்படுகிற ஒருவகை சிறப்பு டெஸ்ட் செய்து தெரிந்து கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்டு, சி.டி.ஸ்கேன் போன்றவற்றாலும் இந்த நோயை கண்டுபிடிக்க முடியும். இந்தப் பரிசோதனை முறைகள் வலியோ பக்க விளைவுகளோ இல்லாதவை.எதிர்காலத்தில் ஆஸ்டியோ பொரோஸிஸ் தாக்கும் வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை துல்லியமாககணித்துச் சொல்பவை.

மெனோபாஸ§க்குப் பிறகு இவற்றை வருடம் ஒருமுறை செய்து வந்தால் ‘ஆஸ்டியோபொராஸிஸா அப்படினா?!’ என்று கேட்கலாம்..”

உணவே மருந்து!

கால்சியம் இல்லாததால் என்னென்ன பிரச்னைகள் என்று பார்த்தோம்.

‘‘சரியான உணவுப் பழக்கம் இருந்தாலே எந்தப் பிரச்னையும் வராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.

‘பெரிமெனோ பாஸ்’ சமயத்தில் இருந்தே தினமும் உணவில் 600 மில்லிலிட்டர் தயிர் சேர்த்து வர வேண்டும். பாலை விடவும் தயிரில்தான் அதிக கால்சியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலால் ஆன தயிர்தான் சேர்க்க வேண்டும். அல்லது, தயிரில் உள்ள கொழுப்பு, எலும்பின் மேல் எடையாகச் சேரத் தொடங்கி வேறு பிரச்னைகளில் கொண்டு போய் விட்டுவிடும். தயிருடன் பாலும் ஒருநாளுக்கு 300 மில்லி சேர்க்க வேண்டும். இதோடுகூட, சீஸ், பனீர், பால்கோவா, நெல்லிக்காய் போன்றவையும் சாப்பிடலாம்.

எள் நிறையச் சேர்க்கலாம். வெள்ளை, கறுப்பு இரண்டு எள்ளிலுமே கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. கறுப்பு, வெள்ளை எள் இரண்டையும் சம அளவு கலந்து பொடி செய்து தினமும் மதிய, இரவு உணவின்போது ஒரு டீஸ்பூன் சேர்த்து வந்தால் ஹார்மோன்களால் உடல் இழக்கிற சத்துக்களை இது ஈடு செய்யும்.

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, கொழுப்புச் சத்து இருக்கிறவர்களும் எள் சாப்பிடலாம். இதில் இருப்பது ஈ.எஸ்.ஏ. எனப்படுகிற எஸன்ஷியல் ஃபேட்டி ஆசிட்தான்.

பச்சைக் காய்கறிகளும் பழங்களும் எக்கச்சக்கம் சேர்க்க வேண்டும். அளவோடு சோயா சேர்க்கலாம். இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைவை ஈடுசெய்யும். கைக்குத்தல் அரிசி மற்றும் முழு கோதுமை மாவாலான உணவைச் சாப்பிடுங்கள்.

பூசணி,வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றின் விதைகளையும் உணவில் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ இருக்கிற டானிக்கு கள், மீன் சேர்க்க வேண்டும்.

வெற்றிலை, பாக்கு போடுவதின் மூலம் சுலபமாக கால்சியம் கிடைக்கும்.

அடுத்தது வாக்கிங்! தொண்ணூறு சதவிகித வியாதிகளை அண்டவே விடுவதில்லை வாக்கிங்! ‘நானெல்லாம் வீட்டிலேயே அங்கயும் இங்கயுமா நடந்துட்டேதான் இருக்கேன்..’ என்று சொல்கிறவரா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. ஒரு நாளுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் அடிகள் மிக வேகமாக நடப்பதுதான் சரியான பயிற்சி. இப்போது யோசியுங்கள்.. வீட்டுக்குள் நீங்கள் எத்தனை அடிகள் நடக்கிறீர்கள்? நடக்க ஆரம்பியுங்கள். சந்தோஷ மாக, அமைதியாக, சிரித்த முகத்துடன் மெனோபாஸை வரவேற்கும் உற்சாகத்தை அந்த நடையும் நீங்கள் சாப்பிடுகிற உணவும் தரும்.

தொகுப்பு: தயாமலர், ஜி.கோமளா
நன்றி அவள்விகடன்

http://www.tamilmozhi.com/ladies/articles/articles15.html

பெண்கள் எடை குறைய . . .

பெண்கள் எடை குறைய தாய்ப்பால் கொடுங்கள்
*****************************************

`பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி மாதிரி’ என்று சொல்வார்கள். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏராளமான சக்தி தேவைப்படுவதால், சத்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிடுவார்கள்.

கர்ப்ப கால உணவு முறையால், தாயின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதனால் குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான பெண்கள், உடல் எடை குறைப்பிற்காக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. `உடற்பயிற்சி எல்லாம் வேண்டாம், குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தாலே போதும்’, பெண்கள் எடை குறைந்து மெலிதாக மாறி விடுவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தாய்ப்பால் மூலம் தாயின் உடலிலுள்ள பெரும்பாலான சக்தி வெளியேறுவதே இதற்கு காரணம். முதல் 14 வாரங்களுக்கு குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் கணிசமான அளவு எடையை இழக்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் அளிக்காத பெண்களுக்கு இந்த எடை இழப்பு ஏற்படுவது இல்லை. எனவே எடை இழக்க, பெண்கள் தாய்ப்பால் அளிப்பது நல்லது.

தொகுப்பு:-
திருமதி.சங்கீதா
வழக்கறிஞர்

நன்றி;adhikaalai.com

ஆரோக்கியமாய் வாழ. . .

உடல் எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள்: -

1) உணவில் காய்கறி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்

2) எண்ணெயில் பொறித்த உணவுப் பண்டங்களை குறைத்தல் மற்றும் உணவில் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுதல்

3) காலை உணவினை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல்

4) தனக்கு தேவையான தினசரி கலோரி அளவையும், தினம் உண்ணும் உணவுகளின் கலோரி அளவுகளையும் தெரிந்து கொள்ளுதல்

5) நேரம் கடந்து உணவு அருந்துவதை தவிர்ப்பதுவும், நேரத்தில் தூங்குவதற்கு கற்றுக் கொள்ளுதலும்

6) தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள் (நம்மில் பெரும்பான்மையானவர்கள்) குறைந்தது ஒரு மணி நேரம் நடை பழகுதல் அல்லது உடற்பயிற்சி செய்தல்

 

டாக்டர் பதில்கள்

இரவு நேரங்களில் வியர்க்காமல் ஃப்ரீயாக படுக்க வேண்டி, உள் ஆடைகளை களைந்துவிட்டுப் படுப்பது பாதுகாப்பானதே. இதனால் பாதிப்புகள் ஏதும் நேராது. ஆனால், சிறிய மற்றும் மீடியம் அளவு மார்பகங்கள் இருந்தால் மட்டுமே இது சரி. மார்பகங்கள் பெரிதாக இருப்பவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது. சீக்கிரமே தளர்ந்துவிடும்.

 

நான் 22 வயதுப்பெண். என் முகத்திலும், கை கால்களிலும் அதிகப்படியான முடி வளர்ச்சி உள்ளது. நளினமான பெண் தன்மையோடு இருக்க நினைக்கும் எனக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கு சரியான தீர்வுதான் என்ன?

ஆர். ஷைலஜா, அம்பத்தூர்.

-

 

பெண்கள் நல மருத்துவரை அணுகி ஹார்மோன்ஸ் சரியாக சுரக்கிறதா அதாவது இரத்த நாள சுரப்பிகள் சரியாக சுரக்கிறதா, பாலிஸிஸ்க் ஓவரி சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள். சுரப்பிகள் தாறுமாறாக சுரப்பது இந்த முடிப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

 

நான் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகிறேன். வயது 25. இரவு நேரங்களிலும் பணிபுரிய வேண்டி வரும். அப்படிப்பட்ட சூழலில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் சிறு சிறு சூட்டுக் கொப்புளங்கள் போல் வருகிறது. லேடி டாக்டரிடம் கூட இதைக் காண்பித்து ஆலோசனை பெற தயக்கமாக உள்ளது. நான் என்ன செய்வது?

 

-வி.ஸ்ரீதேவி, கோவை.

 

நீங்கள் திருமணமானவரா? ஆகாதவரா? என்று குறிப்பிடவில்லை. உங்கள் பிரச்னைக்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக இருக்கலாம். திருமணமானவராக இருந்தால், உடலுறவு காரணமாக ஏற்படும் பால்வினை நோயின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். ஒருவேளை திருமணமாகாதவர் எனில், மாதவிடாயின்போது உபயோகப்படுத்தும் நாப்கின் அலர்ஜியாலும், அதிக நேரம் ஒரே நாப்கினை உபயோகப்படுத்துவதாலும்கூட இதுபோல் ஏற்படுவதுண்டு! உடனே பெண்கள் நல மருத்துவரை அணுகவும்.

 

எனக்கு 23 வயதாகிறது. மார்பக வளர்ச்சியின்போது, உள்சதைகள் கரைந்துதான் மார்பக வளர்ச்சி பெறும் என்கிறார்கள். ஆனால் எனது மார்பகம் ஒரு சிறிய கட்டி போலவே உள்ளது. இது வளராதா? எனக்கு மட்டும்தான் இப்படியா? அல்லது எல்லோருக்கும் இந்த வயதில் இப்படித்தான் இருக்குமா?

 

-எம்.நந்தினி, கோவை.

 

ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்குப் பின்பும் குழந்தை பேறின்போதும் மட்டும்தான் மார்பகம் தன் சைஸில் இருந்து மாறுபட்டு முழு வளர்ச்சி பெறும். தவிர, எல்லோருக்கும் ஒரே அளவாக மார்பகங்கள் இருக்காது. இது பெரிய பிரச்னையல்ல.

 

அப்படி நீங்கள் நினைத்தால் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுங்கள்.

 

நான் கல்லூரி மேற்படிப்பு படிக்கிறேன். சமீபத்தில்தான் திருமணம் ஆனது. ஆனால் படிப்பு முடியும்வரை குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. குழந்தையைத் தவிர்க்கும் ஸேஃபான உறவு நாட்கள் எவை?

 

-சென்னைப் பெண்.

 

ஸேஃபான நாட்கள் என்று எதுவுமே கிடையாது. ஸேஃபான நாட்கள் என்று நினைத்து சில நேரங்களில் தாம்பத்ய உறவு மேற்கொண்டால் ஓவிலேஷன் மாறி அதாவது கருமுட்டை உருவாகிவிடும். அதனால் மிகவும் ஸேஃப்டியாக இருக்க வேண்டுமென்றால் கருத்தடை மாத்திரைகளை உபயோகித்துக் கொள்ளலாம். இது பாதுகாப்பானதே.

 

எனக்கு 23 வயதாகிறது. சென்ற வருடம் திருமணமானது. இப்போது கர்ப்பமாக உள்ளேன். எனது மார்பகம் சிறியதாக உள்ளது. குழந்தை பிறந்தால் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரக்குமா என்று பயமாக உள்ளது.

 

- எம். ஹசீனா, ராணிப்பேட்டை.

 

மார்பகங்கள் சிறியதாக இருந்தால் தாய்ப்பால் சுரக்காது என்று அர்த்தமில்லை. நன்றாகவே சுரக்கும். இது குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை.

 

தொகுப்பு : அபி

http://www.kumudam.com/magazine/Snegiti/2008-09-01/pg16.php

நெஞ்சு எரிச்சல்

 

பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறைநெஞ்சு எரிச்சல்நோய்‘ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம்.

இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்குநெஞ்சு எரிச்சல் நோய்என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம்.

 

நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள்கள். உணவு செரிமானம் வாயிலிருந்தே துவங்கி விடும்.

வாயில் உள்ள உமிழ் நீர் மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும். அதேபோல் வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து, புரதச் சத்து ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின், இன்ட்ரின்சிக் ஃபேக்டர், மியூகஸ் ஆகியவை உள்ளன.

 

இதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்பு தூண்டுதலால் சுரப்பவை. நம் உடலில் மாவுச் சத்து குறையும் பொழுது, சர்க்கரையின் அளவு குறையும். இதைஹைப்போ கிளைசிமியா என்று சொல்லுவோம்.

இந்த நிலை ஏற்பட்டால்வேகஸ்என்ற நரம்பு தூண்டப்படும். இந்த நரம்புதான் வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை, உணவைப் பார்த்தல் ஆகிய செயல்பாடுகளும் இந்த நரம்பை தூண்டிவிடும். இதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பு உண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.

சாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையை உண்டாக்கினாலும், உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சு எரிச்சல் நோய் உள்ளவர்களுக்கு இந்த அமிலச் சுரப்பு அடிக்கடி ஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி விடும் நிலைகூட ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய எரிச்சல் என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி சுருக்கம் சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மாரடைப்பு என நினைத்து சிலர் அதற்கு மருத்துவம் செய்யும் நிலை ஏற்படும்.

 

ஆஸ்பிரின்மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும். ஆனால் இதே மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சு எரிச்சல் நோய் மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை, நெஞ்சு எரிச்சல்தான் என்று அசட்டையாக நினைத்து சரியான மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா அல்லது நெஞ்சு எரிச்சல் நோயா எனக் கண்டுபிடித்து மருத்துவம் செய்தல் அவசியம்.

 

நோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும். வயிய்றழற்சி போன்ற நோயுள்ளவர்களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின் உணவுக் குழயில் உள்ள சுருக்குத் தசைகள் சரியாக வேலை செய்யாததால் அமிலச் சுரப்பு மேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும் கீழ்நோக்கியே செல்லும். ஆனால் நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத் தசை செயல்பாடு குறைப்பாட்டால் அமிலச் சுரப்பு மேல் நோக்கிச் சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.

 

நோயின் அறிகுறிகள்: நெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படை அறிகுறியே நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்கு பின்புறம் நெஞ்சு கரிப்பாகத் தோன்றும் இந்நோய் நாளடைவில் எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின் அதிகளவில் எரிச்சல் ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு உண்டாகும். வயிறு முட்ட உணவு உண்டுவிட்டு, உடனே படுக்கைக்குச் சென்றால் எரிச்சல் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும். மசாலா கலந்த மாமிச உணவு, மது, பீடி, சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும். படுத்திருக்கும் நிலை, வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலை செய்வர்களுக்கு அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

 

உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம் உண்டாகும். அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சில சமயங்களில் தூங்கும் பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல் ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு எரிச்சலும் ஏற்படும்.

 

இந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால் வைத்திருந்து, அதை குடித்தால், எரிச்சல் குறையும். முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் விட்டால், நாளடைவில் உணவு நெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். தொண்டை அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் தொண்டை வரை பரவும். அதனால் கழுத்துப் பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு தோன்றும். உணவுக் குழலின் பகுதிகளில் புண்ணாகி சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

 

நோயறிதல்: நோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில் கண்டு பிடிக்கலாம். இதய நோயா இல்லையா என்பதை இதய மின் பதிவில் கண்டு பிடிக்கலாம். ‘உள்நோக்கிமுறையில் எளிதாக அறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி வழியாகப் பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு எரிச்சல் நோயுள்ளவர்களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும் நெஞ்சு சதைப் பகுதி அழுத்தப்படுவதால்) வயிற்றில் உள்ள பொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம் இருக்கும். சிலருக்கு உணவுக் குழாயில் உள்ள புண்களையும் உள்நோக்கி வழியே, தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம், அழற்சி ஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.

 

உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இந்நோயை கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவு வயிறு முட்ட உண்ணாமல் அளவோடு உண்ண வேண்டும். மசாலா, எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம். பீடி, சிகரெட், மது போன்றவை இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடு நிறுத்துவது நலம் பயக்கும்.

 

உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல் கொஞ்ச நேரம் நடத்தல் அல்லது அமர்ந்திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அமில அதிர்ப்பான்காளடைஜின்‘ ‘ஜெலுசில்போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும். நரம்புத் தூண்டுதலை குறைகின்றதன் மூலம் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன.

நேரத்திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப் பழக்கங்கள் உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனே உறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை இந்நோயிலிருந்து காக்க உதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம் செய்துகொள்ளாத நோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும். அவர்களுக்குக் கூட உள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில் உள்நோக்கி வழியாகக் செய்யும் இம்மருத்துவம் மிகவும் எளிமையானதாகும்.

 

நன்றி: உண்மை இருமாத இதழ்

thanks:rethanya.blogspot.com

—————————————————————————————————————————————–

Acne On Your Breasts!

Acne On Your Breasts!        

 

By: Sharon Supriya

 

 

 Does ugly blemishes scattered all over the chest make you feel mortified in front of the mirror? Do they prompt yo to wear clothes that are not trendy? Follow these tips to prevent breast acne. Also read about its causes and treatment to get healed for life.

 

Causes

1. Breast pimples are often the result of ingrown hairs on the chest. The hair on chest are often small and light colored, but when the pores get blocked, the hair follicle gets infected and results into bump or blemishes.

 

2. The most common cause of breast pimples is hormonal changes. It occurs especially in women associated with menstruation and pregnancy.

 

3. Certin drugs, including androgens and lithium cause acne. Experts suggest to switch to alternative drugs, if one develops acne after starting a drug for a treatment.

 

4. Excessive sweating and exposure to polluted air, dirt and grease are some of the other common causes of acne.

 

Prevent :

To prevent breast pimples, exfoliate your chest regularly with a gentle exfoliator. 

 

 

 Breast pimples are often the result of ingrown hairs on the chest.

 

Use a toner that you use on your face to close the pores on the affected area. Avoid wearing sports bras as they flatten the breasts so much that it’s impossible for moisture to evaporate. Wear bras that breathes and lifts your breasts.

 

As excessive sweating is one of the causes of breast pimples make sure to have a quick bath as soon as you can after getting sweaty, especially in hot summers. After a hot shower dry yourself thoroughly, to remove excess moisture. As the moisture collected can also cause acne to form.

 

Simple treatments

Mild cases of breast acne can quickly turn into more severe cases if they go untreated. Here are some simple home remedies that you can follow, however if the condition is worse, make sure to consult the doctor.

 

Use antibacterial soap as it helps prevent breast acne. It would be better to keep a bar of antibacterial soap only for the breast area.

 

Use acne pads, like Clearasil and Stridex pads. To prevent the skin from drying out too much use a pad that is made especially for sensitive skin. After a hot shower, rub a pad under each breast. Although it takes a long time to heal it is highly recommended for its safe measures and affordable cost.

 

Apply Aloe Vera gel. However avoid it if your skin is allergic.

 

Researchers state that ‘tea tree oil’, has exceptional healing powers due to its anti-bacterial, anti-fungal and anti-septic actions. Apply it before going to bed or a n hour before having bath for fast results. The add on to this healing oil is that, it can be used without irritating or drying the skin.

 

Wash the affected area with a cleanser that contains ingredients like, Lavender Essential Oil, Arctium Lappa, Bulbine Frutescence and tea tree oil.

After bath, apply organic coconut oil mixed with turmeric. Do this before going to bed.

 

Some of the home remedies like orange peels, turmeric, fresh garlic, tomato slices and juice of raw papaya can be applied directly around the areas of pimples.

**************************************************************

 

Courtesy: http://living.oneindia.in/beauty/breast-care/breast-acne-pimples-treatment.html

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் ஆரஞ்சு

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் ஆரஞ்சு!

- சரவணன்

 

மூட்டு வலியை போக்கி, மூட்டு எலும்புகள் தேய்வதைத் தடுக்கும் வல்லமை ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது.

 

இதைதான் தொன்று தொட்ட காலத்தில் இருந்து தமிழகத்திலுள்ள மூலிகை மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்களே? என்று வினவுவதும் சரிதான்.

 

ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு ஒன்றின் மூலமாக, ஆரஞ்சு பழத்தின் மகிமையை உறுதி செய்துள்ளனர்.

 

வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மூட்டு வலியும் வராது, மூட்டு எலும்புகளும் தேயாது என்பது அந்த ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

 

நாளொன்றுக்கு 200 மில்லி கிராம் அளவு கொண்ட வைட்டமின்சி வேண்டும் என்று பரிந்துரைக்கும் மருத்துவர்கள், தினமும் ஓர் ஆரஞ்சு பழத்தை உட்கொண்டாலே போதும்.அதில், தேவையான அளவு வைட்டமின்சி நிறைந்துள்ளது என்கின்றனர்.

 

இந்த ஆய்வு, 50 வயதினைக் கடந்த 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களின் உணவு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

(மூலம் -  வெப்துனியா)

நன்றி; in.tamil.yahoo.com

பல் மருத்துவம்

பல் மருத்துவம்- டாக்டர் பதில்கள்

  Dr தாயப்பன்

 

 

என் வயது 26. பற்கள் நிஜமாகவே வெள்ளை நிறமாகத்தான் இருக்குமா? ஏனென்றால் என் பற்கள் சிறிது பழுப்பு நிறமாக உள்ளன?

 

- பரிமளா, கொரட்டூர்.

 

ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு  நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்.

 

பால் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? நிரந்தரப் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக உள்ளது?

 

- தினேஷ், மவுண்ட்ரோடு.

 

கீழ் முன்வெட்டுப் பற்கள் – 6 மாதம் முதல் 15 மாதம் வரை

 

பக்கவாட்டு வெட்டுப்பற்கள் – 9 மாதம் முதல் 15 மாதம் வரை

 

கீழ்த்தாடை முதல் அரைக்கும் பற்கள் – 12 மாத அளவில்

 

கீழ்த்தாடை இரண்டாம் அரைக்கும் பற்கள் -20 மாத அளவில்

 

கீழ்த்தாடை அரைக்கும் பற்கள் – 16 மாத அளவில்

 

நிரந்தரப் பற்கள்

 

மைய வெட்டுப்பல் – 6-7 வயதில்

 

பக்க வெட்டுப்பல் – 7-8 வயதில்

 

கோரைப் பற்கள் – 9-10 வயதில்

 

முதல் முன் கடைவாய்ப் பற்கள் – 10-12 வயதில்

 

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் – 11-12 வயதில்

 

முதல் கடைவாய்ப் பற்கள் – 6-7 வயதில்

 

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் – 11-13 வயதில்

 

மூன்றாம் கடைவாய்ப் பற்கள் – 17-18 வயதில் இந்தப் பற்கள் சுமார் ஓரிரு ஆண்டுகள் தாமதமாக முளைக்கலாம்.

 

என் பற்களின் மேல் காரை காரையாகப் படிந்திருக்கிறது. ஏன்?

 

லிவிங்ஸ்டன், அண்ணாநகர்.

 

உமிழ் நீரில் உள்ள ஜீலீ 7 ன் அளவு குறையுமானால் அதிலுள்ள கால்சிய உப்புச்சத்து பற்கள், மேல் படிந்து காரையாக மாறிவிடும். இது ஆரம்பத்தில் படிமமாக்கப்பட்டு, கடினமாகும். ஈறு உள்ள இடத்தில் தங்குவதால் ஈறினை உறுத்தி வலியை ஏற்படுத்தும். இந்தக் காரை மஞ்சளாகவும் கருப்பாகவும் இளநீலமாகவும் இருக்கும். இது பற்களின் மேல் படிவதால் பயோரியா வியாதி ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல, பற்களை சரியாகச்  சுத்தம் செய்யாதவர்களின் பற்களிலும் கரை படியும்!

 

பற்கள் எடுத்த பிறகு உடனே எதை எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்?

 

- ஆனந்தி பாபு, அண்ணாமலைபுரம்.

 

பற்கள் எடுத்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சினை சுமார் ஒரு மணி நேரம் கழித்து நீக்கிவிட வேண்டும்.

 

நாக்கையோ, விரலையோ பயன்படுத்தி பல் எடுத்த இடத்தை நோண்டக் கூடாது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் ஐஸ்கட்டி வைப்பதை தடுக்க வேண்டும்.

 

பற்கள் எடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பின், வெந்நீரில் சிறிது சமையல் உப்புக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். தொடர்ந்து இரத்தக் கசிவு இருக்குமேயானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

 

 

 

Courtesy:

 

 http://www.kumudam.com/magazine/Snegiti/2008-08-16/pg13.php

  

கண் மருத்துவம்

கண் மருத்துவம்-டாக்டர் பதில்கள்

Dr சித்தார்த்தன்.

 

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?

 

- கவிதா சேகர், காரைக்குடி.

1)  வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.

 

2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.

 

3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.

 

4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.

 

5) கண் கட்டி அடிக்கடி வருவது.

 

6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். 

 

மாறுகண்ணை சரி செய்ய முடியுமா? எனது சித்தி பெண்ணுக்கு மாறுகண் உள்ளது? அவள் வயது 22.

 

- .வேதவல்லி, பெங்களூரு.

 

கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.. வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

 

கண்களில் பூ விழுவது என்றால் என்ன?

 

- லில்லி, அம்பத்தூர்.

 

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

 

கண்களுக்கு வைட்டமின் `சிறந்தது என்கிறார்கள். எந்தெந்த உணவுகளில் வைட்டமின் `அதிகமாக உள்ளது?

 

- காயத்ரி கோபாலகிருஷ்ணன், டால்மியாபுரம்.

 

முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.

 

மூக்குக் கண்ணாடியை எப்படி செலக்ட் செய்ய வேண்டும்?

 

சங்கர், போரூர்.

 

கண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும், லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப் பிடித்திருப்பவையாகவும், மூக்கில் படியும் பகுதிபிரேமுடன் நன்கு பொருந்தியவையாகவும் இருக்க வேண்டும். காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், மூக்குக் கண்ணாடியும் ஒன்று வைத்திருப்பது நல்லது.

 

கண்களைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?

 

- லதா, மந்தைவெளி.

 

இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

 

எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கவே கூடாது.

 

கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் கெடுத்துவிடும். காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

 

தொகுப்பு : தி. அனு

 

Courtesy:

 

 http://www.kumudam.com/magazine/Snegiti/2008-08-16/pg13.php

 

 

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers