jokes-psychiatrist

This psychiatrist walks into his waiting room and sees two men. One is hanging upside down from the ceiling. The other is sawing an imaginary piece of wood. The doctor approaches the man who is sawing and asks him what he is doing.

‘I’m sawing wood,’ the man replies.

‘And what’s your friend doing?’ the doctor asks.

‘Oh, he thinks he’s a light bulb.’

‘Well, don’t you think you should tell him to get down? The blood is rushing to his head.’

‘What, and work in the dark?’

***********

by : sandyboy1
Thanks:http://jokes.123india.com/

சிரி > ஜோக் >

முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?

எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.

*********

இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”

“எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்”

“அது என்ன 1500 ரூபா ஐட்டம்?”

ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.

***********

ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்

பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அ‌ந்த கஷடத்துல எ‌ன் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.

****************

டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.

************

ஞாபக மறதி

கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.

மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே

************

Thanks: சிரி > ஜோக் >tamil,webdunia.com

Joke

A lady walked into a drug store and told the pharmacist she needed some cyanide.

The pharmacist asked, “Why in the world do you need cyanide?”

The lady then explained she needed it to poison her husband.

The pharmacist’s eyes got big and he said, “Lord have mercy, I can’t give you cyanide to kill your husband!

That’s against the law! I’ll lose my license…
They’ll throw both of us in jail and all kinds of bad things will happen!
Absolutely not! You can NOT have any cyanide!”

Then the lady reached into her purse and pulled out a

picture of her husband having dinner in a restaurant with pharmacist’s wife.

The pharmacist looked at the picture and replied,

“Well, … You didn’t tell me you had a prescription”.

six o’clock?

Helen and Amanda were discussing their busy schedules.

Helen said, “Amanda, I must ask you something.
Every day I feel incredibly run down and tired. And yet, I
see you looking as fresh as a rose. I have to know:
what’s your secret?”
“My secret? Every morning, without fail, I wake up at
six o’clock sharp.”

“You wake up at six o’clock?”

“Yes, and then I look at the clock, see what time it is,
and go back to sleep for another four hours.”


Thanks
smilejokes.blogspot.com

ஏன்டா அடித்தாள் இரண்டாவது முறை?

இந்தப் பதிவு நகைச்சுவைக்காகவே எழுதப்பெற்றுள்ளது.நகைச்சுவையைத்
தவிர வேறு எந்த நோக்கமுமில்லை. அதை மனதில் கொள்ளவும்.
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள்
பதிவை விட்டு வெளியேறி விடலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பிச்சுமணி அப்பாவி. வெகுளி. பரோபகாரி. யாரும் கூப்பிடாமலேயே
ஓடிப்போய் உதவி செய்வான்.

துறு துறுவென்று இருப்பான்.எப்போது என்ன செய்வான் என்று தெரியாது.
அதனால் பலமுறை சிக்கலில் மாட்டியிருக்கிறான்

அன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் அழைத்தான் என்று, தான் வேலை
செய்யும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டான்.

உள்ளூர் கோவிலில் நடக்கும் விழாவிற்குப் போவதாகச் சொல்லி விட்டுப்போனான்

அவனுக்கு விடுப்பைக் கொடுத்த அதிகாரி அன்று மாலை அவனை
எதேச்சையாகச் சந்தித்தபோது அதிர்சிக்கு உள்ளாகிவிட்டார்.

பிச்சுமணியின் கன்னம் இரண்டும் எங்கோ அடிவாங்கியதில் சிவந்து போனது
மட்டுமில்லாமல் நன்றாக வீங்கிப்போயும் இருந்தது. அதோடு கண்களும்
சற்றுக் கறுப்படித்துக் கலங்கியிருந்தது

அவரைப் பார்த்தவுடன் பிச்சுமணிக்கும் அதிர்ச்சிதான். எட்டி நடக்கப்
பார்த்தான். அவனுடைய மேலதிகாரி பிடித்துக் கொண்டு விட்டார்

“டேய் பிச்சுமணி என்னடா ஆச்சு உனக்கு? ஏண்டா கன்னங்கள்
வீங்கியிருக்கிறது?”

“அது பெரிய கதை சார்! கேட்டால் வருத்தப்படுவீர்கள்!”

“வருத்தத்தைவிடு. நடந்ததைச் சொல்லு.”

“கோவில் வளாகத்தில வாட்டசாட்டமான பொம்பிளை ஒருத்தி என்னை
அடிச்சிட்டா சார். பொறி கலங்கிற மாதிரி ஓங்கிக் கன்னத்தில அறைஞ்
சிட்டாசார்!”

“எதுக்கிடா அறைஞ்சா?”

“சாமியாரு சொற்பொழிவு பண்ணினாரு. எல்லோரும் உக்காந்து கேட்டுக்
கிட்டிருந்தோம். அவரு தீடிர்ன்னு எல்லோரும் எழுந்து நின்னு இந்தப்
பாட்டை எங்கூட சேர்ந்து பாடுங்கன்னாரு, சரின்னு எல்லோரும் எழுந்து
நின்னு பாட ஆரம்பிச்சோம், அப்பத்தான் அது நடந்திரிச்சு சார்.
எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டிருந்தவ படார்ன்னு திரும்பி, பொடார்ன்னு
அறைஞ்சிட்டா சார்!”

“அறைஞ்சது சரிடா, எதுக்குடா அறைஞ்சா?”

” எழுந்து நின்னபோது சேலை, அவளோட பின்பக்க இடுவல்ல (crack)
சிக்கி பார்க்க அசிங்கமா இருந்திச்சு. பக்கத்துல நின்ன பயலுக எல்லாம்
அதையே பார்க்க ஆரம்பிசானுங்க. அய்யோ பாவம்னு அதைச் சரி
பண்ணிவிட்டேன் சார். அதனால் வந்ததுதான் இந்த வினை!”

“சரி பண்ணினியா – எப்படி?”

“வெளியே இழுத்துவிட்டேன் சார். அதை அவ தப்பா புரிஞ்சுக்கிட்டு
அடிச்சிட்டா சார்!”

“சரி, அந்தக் கன்னமும் வீங்கி இருக்கே, அது எதனாலடா?”

“அதுவும் அவளால தான் சார்!”

“அடப்பாவி, அவளாலையா? இரண்டாவது முறை எதுக்காகடா அடித்தாள்?”

“நாம் இழுத்துவிட்டது அவளுக்குப் பிடிக்கல போல, முன்பிருந்தது போலவே
இருக்கட்டும்னு நெனச்சு சேலையைப் பழையபடி சொருகிவிட்டேன் சார்!”

“அடக் கிறுக்கா! உன் அப்பாவித்தனமான குறும்புக்கு அளவேயில்லையா?”

+++++++++++++++++++++++++++++++++++++
இப்போது சொல்லுங்கள். பிச்சுமணி இரண்டாவதாகச் செய்தது தவறா?
தவறில்லையா? :-) )))
வாழ்க வளமுடன்!

SP.VR.SUBBIAH
Thanks:http:devakottai.blogspsot.com

கோகுலின் நகைச்சுவை

உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சரி, உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே, அது ஏன் சார் ?

வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம், அதான் குத்திக்காட்டுறான்.

******

தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?

ஏன் இப்ப என்னாச்சு ?

கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.

******

கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா, தங்கச்சிப் பாப்பா வேண்டாமாடா கண்ணா?

எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்

******

என் பையன் மத்தப் பசங்களை மாதிரி ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி பாட்டெல்லாம் பாட மாட்டான், வெறும் பக்திப் பாட்டுதான் பாடுவான்.

ஆப்படியா ?

ஆமாம் ஆண்டாளு என் ஆண்டாளு .. .. திருப்பதி எழுமலை வெங்கடேசா., யப்பா யப்பா ஐயப்பா இந்த மாதிரிதான் பாடுவான்.

******

எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?

அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.

******

“இது நல்லாயில்லைங்க.”

“என்னங்க நல்லாயில்ல?”

“உங்க நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டியதுதான் அதுக்காக எல்லோருக்கும் ஸ்வீட்டுக்குப் பதிலா நாய் பிஸ்கட் கொடுக்கறது அவ்வளவு நல்லா இல்லை”

******

இது பயங்கரமான திகில் படமா, எப்படிச் சொல்றே ?

‘விக்’ முடிகூட சிலுத்துக்குதே.

******

இன்றைய மெகா ஜோக்:

ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.

தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.

அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

ப்ரியத்துடன்,
கோகுல்

–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Thanks:Piravakam@googlegroups.com

கோகுலின் நகைச்சுவை

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. ..

எப்படி ?

கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க .. .

******

எதுக்கு அந்த நடிகை அந்தப் பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க .. .. ?

அவங்களுக்கு உடம்பு சரியில்லைங்கற நியூஸை தொழில் பக்கத்துல வெளியிட்டாங்களாம்

******

ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே-னு சொன்னா முதல் பெண். அதுக்கு ரெண்டாவது பெண் என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்-னா முதல் பெண்ணுக்கு செம ஆச்சரியம் அப்படி என்னதான் பண்ணினே ?-னு கேட்டா.

ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்னு சொன்னா ரெண்டாவது பெண்.

முதல் பெண் புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு?-னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்

******

ஒரு வக்கீலிடம் நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா?-னு கேட்டான் ஒருத்தன்.

நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன?-னு கேட்டார் வக்கீல்.

******

நர்ஸ் : டாக்டர், எதுக்கும் இவருக்கு தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?

டாக்டர் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?

******

எங்க ஊர்ல பெரிய பெரிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்திருக்கிறாங்க.

எங்க ஊர்ல குழந்தைங்கதான் பிறக்கும்.

*******

பெண்ணின் அப்பா : பெண்ணைப் பிடிக்கலேன்னா, இப்பவே சொல்லிடுங்க.

மாப்பிள்ளை வீட்டார் : ஏன் அவசரப்படறீங்க?

பெண்ணின் அப்பா : தரகர், அடுத்த பார்ட்டியோட வெளியில காத்துக்கிட்டு இருக்கார்.

******

நடிகர் : என்னது, இந்த சீன்ல, நூறு அடி உயரத்திலிருந்து, நீச்சல் குளத்தில் குதிக்கணுமா? எனக்கு நீச்சல் தெரியாதே!

டைரக்டர் : பயப்படாதீங்க, அதுல ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை!

******

இதுதாங்க இன்னிக்கு மெகா ஜோக்:

நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.

டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..

நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?


ப்ரியத்துடன்,
கோகுல்

–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Thanks:
Piravakam@googlegroups.com

சிரிக்க மட்டுமே!.

படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?”

“சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.”

*************

ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
“என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!” என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: “அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

வந்தவர்: “ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

tHANKS:DEVAKOTTAI.BLOGSPOT.COM

கோகுலின் நகைச்சுவை

காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?

காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!

******

ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது…!

சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!

ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு…!

******

ராமு : இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்’னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?

சோமு : வேறென்ன…! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!

******

சோமு : உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா?

ராமு : நான் கொக்குப் பாக்கு, ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட போட்டு இருக்கேன்,
இந்த வாலாபாக்கு மட்டும் போட்டதில்லைப்பா….

******

நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?

அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.

******

ராமு : ஏம்பா நான் அனுப்பிச்ச மெயில் கிடைச்சுதா?

சோமு : இல்லை கிடைக்கலையே!

ராமு : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!

******

ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ அழவே இல்லையே?

ஒண்ணும் பிரயோஜனம் இல்லீங்க. எங்கப்பாவுக்குக் காதே கேக்காதுங்க.

******

இன்றைய மெகா ஜோக்:

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!

******


ப்ரியத்துடன்,
கோகுல்
Thanks:Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!

கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!

ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள்
காண்பது. நகைச்சுவையாக மட்டுமே பார்ப்பவர்கள் தொடரவும். மற்றவர்கள்
வெளியேறிவிடலாம்

(ஆக்கம் என்னுடையதல்ல! மின்னஞ்சலில் வந்தது.
எழுதிய அன்பர் பெயர் தெரியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க!)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில்
சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை
தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது
‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான்
நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.
அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்
இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை
நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத்
துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின்
கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல்
கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ
முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில்
இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…
வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து
ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து
விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.
கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப
சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற
அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று
மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த
பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர்
கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய
முன்னாள் காதலன்.
************

வாழ்க வளமுடன்!

SP.VR.SUBBIAH
Thanks:devakottai.blogspot.com

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers