புலவி நுணுக்கம்

132. புலவிநுணுக்கம் -  திருக்குறள்           

                                            

1. பெண்இயலார் எல்லோரும் கண்ணின் பொது உண்பர்

நண்ணேன் பரத்த நின் மார்பு.

 

2. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ்க என்பாக்கு அறிந்து.

 

3. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று. 

 

4. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

 

5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண்டனள்

 

6. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்

 

7. வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்

யார் உள்ளித் தும்மினீர் என்று.

 

8. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.

 

9. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்

இந்நீரர் ஆகுதிர் என்று. 

 

 

10. நினைத்துஇருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யார்உள்ளி நோக்கினீர் என்று.

 

  திருக்குறள்தொகுப்பு

 

நன்றி;http://www.lakshmansruthi.com/

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers