சில ஊர்களின் (முந்தைய) பெயர்கள

சில ஊர்களின் முழுமையான(முந்தைய) பெயர்கள

——————————————————————————–

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது

குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது

எருமையூர் என்ப*தே மைசூர் என்று அழைக்கப்ப*டுகிறது

வென்க*ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்
__________________
பதிந்தவர்;Jaisapmm
Thanks:indusladies.com

ரஷ்யப் பிரதமர் புட்டின்

புலியிடம் சிக்கி உயிருக்கு போராடிய ஊடகவியலாளரை காப்பாற்றிய ரஷ்யப் பிரதமர் புட்டின்

ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் தற்போது பிரதமராக பதவி வகிப்பவருமான விளாடிமிர் புட்டின், ஊடகவியலாளர் ஒருவரின் உயிரை காட்டுப் புலி ஒன்றிடமிருந்து வீரசாகசமாக காப்பாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வேட்டையாடச் செல்வதை பொழுது போக்காகக் கொண்ட விளாடிமிர் புட்டின், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உதவியாளர்களுடன் உஸுறிஸ்கி காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அச்சமயம் காட்டுப் புலிகள் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக அங்கு வந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் புலியிடம் சிக்கி உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்ட விளாடிமிர் புட்டின், படுவேகமாக செயற்பட்டு தன்னிடம் தயாராக இருந்த மயக்க ஊசியை புலியின் உடலில் எய்து அதனை மயக்கமுறச் செய்து ஊடகவியாளரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

அவரது இந்த வீரசாகசம் குறித்து ரஷ்ய ஊடகங்கள் மாறி மாறி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் அதேமயம், மிருகவேட்டைக்காக புட்டின் காட்டுக்கு சென்றமை குறித்து மிருகவதைக்கு எதிரான குழுக்களின் கடும் கண்டனத்தை அவர் எதிர்கொள்ளநேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது

நன்றி;http://mrishan.blogspot.com

உறைந்த கரு முட்டை மூலம் பிறந்தது குழந்தை!

 உறைந்த கரு முட்டை மூலம் பிறந்தது குழந்தை! 

 

 

உறைய வைத்த கரு முட்டை மூலமாக, சென்னையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு குழந்தை நேற்று பிறந்துள்ளது.

 

இம்முறையில் குழந்தை பிறந்திருப்பது, இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை என்பது சிறப்புக்குரியது.

 

இந்தச் சாதனையை புரிந்திருப்பவர்கள், சென்னையிலுள்ள ஜி.ஜி. மருத்துவமனையின் மருத்துவர்கள்.

 

இதுகுறித்து அம்மருத்துவமனையின் மருத்துவரும், இப்புதிய முறையைக் கையாண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகித்தவருமான பிரியா செல்வராஜ் கூறுகையில், “உறைய வைத்த கரு முட்டை மூலமாக, 28 வயதுப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை வாயிலாக 2.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது,” என்றார்.

 

இம்முறை குறித்து அவர் விவரிக்கையில், கருவக பாதிப்பு உள்ள பெண்களின் கரு முட்டையை மைனஸ் 196 டிகிரி வெப்ப நிலையில் சேமித்து வைத்து, தேவைப்படும்போது கணவனின் உயிர் அணுவுடன் சேர்த்து கருவை உண்டாக்க முடியும்.

 

பின்னர், அந்தக் கருவை பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தி, குழந்தைப் பேற்றை அளிக்க முடியும். கரு முட்டையில் பாதிப்பு, இரண்டு முறை கருக்கலைப்பான 28 வயது பெண்ணுக்கு இந்த உறைய வைத்த கரு முட்டை முறையில் குழந்தைப் பேறு அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

 

(மூலம்வெப்துனியா)

நன்றி; http://in.tamil.yahoo.com/

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers