டீன் ஏஜ் காதல் தற்கொலையில் முடிகிறது
Thivya N,
———————————————
காதல், தற்கொலை, தற்கொலைக்கு காரணங்கள், டீன் ஏஜ், டீன் ஏஜ் காதல்
வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான். என்ன நடக்குதோ தெரியல்ல அந்த வயதில் காதல் என்பது எல்லாரையும் தொடராவிட்டாலும் தொட்டு விட்டாவது போகிறது. அந்த காதலே வாழ்க்கையின் இறுதியையும் தீர்மானிக்கிறது,
டீன் ஏஜ் இல் வருகின்ற பெரும்பாலன காதல் கல்லறையிலேயே முடிகிறது. காதலிக்கும் போது இனம், மொழி, மதம் என்பது காதலுக்கு இல்லை என்று வியாக்கியானம் பேசும் சிலர் பெற்றோர்களின் எதிர்ப்பு வரும் போது மட்டும் பெட்டிப்பாம்பாக சோந்து போகிறார்கள்.
டீன் ஏஜ் பருவ காதல் தற்கொலை எனும் உயிர் கொல்லியாக பயன்படுகிறது. இதற்கு அதாவது தற்கொலைக்கு காரணம் ஒரு வகையில் அவர்களின் பெற்றோராகவே இருக்கலாம். காதலிக்கிறார்கள் என்றதும் ஊரயே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது, அவர்களை ஒரு கொலை காரர்கள் மாதிரி பார்ப்பது.
டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் காரணங்களாக “மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல்” என்பவற்றை ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க சில வழிகள்;
1. மகனோ-மகளோ காதலிப்பது தெரிந்தால் வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகப்பெரிய பிரளயத்தை ஏற் படுத்திவிட வேண்டாம்.
2. டீன்-ஏஜ் மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு- எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பெரியோர் புத்திமதி சொல்ல வேண்டும் என்கிற காரணத்துக்காக அக்கம்பக்கத்து வீடுகள், தூரத் தில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, மகனின் – மகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.
3. புத்திமதிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபு ணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம்.
4. அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத் துக் கூறி புரிய வைக்கலாம்.
5. காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம்.
6. பெற்றோரே நல்ல விஷயங்களைக் கூறி சிந்தனையைக் கிளறிவிட்டு பிள்ளைகளை இறுதி முடிவு எடுக்க வைக்கலாம்.
7. சில வீடுகளில் மூத்த சகோதர-சகோதரிகள் மணமாகாத நிலையில் இருப்பார்கள். எனவே குடும்பத்தில் அவர்களுக்கு உண்டான பொறுப்பு, கடமையைப் பற்றி எடுத்துக் கூறலாம்.
8. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும்.
9. மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது.
10. அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.
************
Thanks:http://glory.mywebdunia.com/2008/10/14/1223965800000.html