23 முறை கேட்ட கேள்வி!

23 முறை கேட்ட கேள்வி!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

**************
Thanks:http://musawir.ipcblogger.com/?cat=35

கூடையும் சிறுவனும்!

கூடையும் சிறுவனும்!

வயதான விவசாயி ஒருவர் தன் சிறு வயது பேரனுடன் ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படுக்கை அறையில் அமர்ந்து குர்ஆனை ஓதுவது இவரின் அன்றாட வழக்கமாக இருந்து வந்தது. மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தும் தனது தாத்தாவைப் போன்றே தானும் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட அவரின் பேரன் அவரது ஒவ்வொரு செய்கையையும் கவனித்து அவற்றை தானும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

ஒருநாள் பேரன் தாத்தாவைப் பார்த்து, “தாத்தா! உங்களைப் போன்றே நானும் குர்ஆனைப் படிக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அதுமட்டுமன்றி குர்ஆனை மூடிவைத்ததும் படித்த கொஞ்சமும் மறந்தும் போய் விடுகிறது. எதுவுமே விளங்காமல் குர்ஆனைப் படிப்பதனால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்துவிடப்போகிறது?” என்று கேட்டான்.

சமைத்துக்கொண்டிருந்த தாத்தா, கூடையில் எஞ்சியிருந்த அடுப்புக்கரியை அடுப்பினுள் தள்ளி விட்டுக் கொண்டு பேரனிடம் திரும்பி காலியான கூடையை அவன் கையில் கொடுத்து, “இந்த கரிக்கூடையில் ஆற்றுத்தண்ணீரை நிறைத்துக் கொண்டு வா!” என்றார். பேரனும் அவ்வாறே ஆற்றிற்குச் சென்று தண்ணீரை கூடையில் நிறைத்து வீடு திரும்பினான். ஆனால் ஆற்றங்கரையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்வதற்குள் கூடையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் முழுவதும் சிறிது சிறிதாக ஒழுகி கூடை காலியாகி விட்டிருந்தது. வருத்தமுடன் வீட்டினுள் நுழைந்து காலிக்கூடையைக் தாத்தாவிடம் காண்பித்தான். அவன் மனதின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட தாத்தா சிரித்துக் கொண்டே, “சரி பரவாயில்லை! இம்முறை விரைவாக வீட்டிற்கு வந்து விடு!” என்று கூறி மறுபடியும் தண்ணீர் கொண்டு வர ஆற்றுக்கு அனுப்பினார்.

இம்முறை தண்ணீரை கூடையில் நிரப்பி விரைவாக பேரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எனினும் கூடை முன்பு போலவே காலியாகிவிட, “இக்கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமே இல்லை தாத்தா!” என்று மூச்சிரைக்க கூறிக் கொண்டே தண்ணீர் கொண்டுவர கூடைக்குப் பதிலாக வீட்டிலுள்ள மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுக்க முயன்றான். அப்போது அவனை தடுத்த தாத்தா, “எனக்குப் பெரிய பாத்திரத்தில் நீர் தேவையில்லை. இந்தச் சிறு கூடையில் தான் வேண்டும். நீ கடுமையாக முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறேன்!” என்று அவனைப் பார்த்து கூறினார்.

சிறு துளைகள் உடைய அக்கூடையில் ஆற்றிலிருந்து வீடுவரை தண்ணீரை ஒழுகாமல் தன்னால் கொண்டு வரமுடியாது என்று நன்றாகத் தெரிந்தும், தாத்தாவிற்கு தன் கடுமையான முயற்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்ற ரோஷம் கொப்பளிக்க மறுபடி ஆற்றுக்கு ஓடினான் சிறுவன். ஆனால் பாவம் மறுபடியும் தோல்வியுடனே வீடு திரும்பினான்.

“தாத்தா! நான் மிகக் கடுமையாக முயற்சி செய்தும் பயன் ஏதுமில்லை என்பதை பார்த்தீர்களா?” என்று அவரிடம் கூடையைக் காட்டினான்.

“உனது இம்முயற்சி பலன் தரவில்லை என்றா நினைக்கிறாய்? கூடையை நன்றாகப் பார்!” என்றார் தாத்தா.

தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்த பேரன் முதல் முறையாக கூடையினுள் பார்வையை செலுத்தினான். அப்பொழுது தான் தாத்தாவிடமிருந்து வாங்கிய கூடைக்கும் தற்போது கையில் இருக்கும் கூடைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான்.

ஆம்! அடுப்புக்கரியினால் அழுக்கேறியிருந்த அக்கூடை இப்போது உள்ளும் புறமும் தூய்மையாகி பளிச்சென்றிருந்தது.

அன்புடன் தன் பேரனை வாரி அணைத்துக் கொண்ட தாத்தா சொன்னார், “ஒருவர் தொடர்ந்து குர்ஆனை ஓதும் பொழுதும் இதுவே நிகழ்கிறது. குர்ஆன் ஓதும் போது அதன் பொருளறிந்து ஓதி அதன்படி செயல் படுவது சிறந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் பொருளறியாமல் அதை ஓதினாலும் அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். நம்மை படைத்த இறைவனின் வார்த்தை இது என்ற எண்ணத்தில் ஒருவர் ஓதும் பொழுது ஓதுபவருக்கு அது புரியாமல் போனாலும், ஓதுவது அனைத்துமே அவரின் நினைவில் நிற்காமல் போய் இந்தக் கூடைநீர் போல் வழிந்தோடி விட்டாலும் ஓதுபவரின் உள்ளம் இறையச்சத்தால் பரிசுத்தம் அடைகிறது. அவரின் வாழ்வில் தெளிவு பிறக்கிறது. இதுவே மனிதனைப் படைத்த இறைவன் புரியும் அற்புதமாகும்!” என்று கூறினார்.

இதனைக் கேட்ட சிறுவன் மகிழ்ச்சியுடன், “மிக்க நன்றி தாத்தா. இனி நானும் உங்களை போல் தினமும் அதிகாலையில் முதல் வேலையாக திருக்குர்ஆனை ஓதுவதை வழக்கமாக கொள்வேன்” என்று கூறினான்.
****************

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

http://musawir.ipcblogger.com/?cat=35

ஜென் கதை ஒன்று…

அருமையான ஜென் கதை ஒன்று…

புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை மக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும் சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.
பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”
புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப் பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”

“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…
“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”
“ம்…”
“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”

“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.
திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”
“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”
“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என ஆனந்தப்படுவேன்.”

“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”
“ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,

“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும் ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும் நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.

எந்தச் சூழலையும் ஆனந்தமாக அணுகக் கற்றுக் கொண்டால், எந்த சூழலையும் ஆனந்தமயமாக்கிட முடியும். இல்லாவிட்டால் ஆனந்தமயமான சூழல்கள் வாய்த்தால்கூட, அதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

********************
—–நன்றி—குமுதம்,தினமலர்
Sathiish777.blogspot.com

தடாலடி பீர்பால்

தடாலடி பீர்பால்

மன்னர் அக்பரும் பீர்பாலும் நகர்வலத்தில் இருந்தனர்.
அப்போது எதிரில் ஒருவன் ஒரு ஒட்டகத்தை ஓட்டிச்சென்று கொண்டிருந்தான். உடனே அக்பர்,’’பீர்பால். . . அந்த ஒட்டகத்தின் கழுத்து,முதுகு எல்லாம் கோணலாக,அசிங்கமாக இருக்கிறதே, அதற்கு காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

சில மாதங்களுக்கு முன் பீர்பாலின் அறிவுத் திறமையை பாராட்டி ஒரு கிராமத்தையே பரிசாகத் தருவதாக அக்பர்
சொல்லியிருந்தார். ஆனால், சொன்னதுபோல் தராமல் ஞாபக
மறதியுடன் இருந்தார். அது இப்போது பீர்பாலுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ‘’மன்னா.. . போன பிறவியில் யாருக்காவது கிராமத்தை பரிசாகத்தருவதாக கூறி பின்னர்
மறந்த யாரோதான் இப்படி அவலட்சணமாக பிறந்திருக்க வேண்டும்’’ என்றார்.

பீர்பால் ஏன் அப்படி கூறுகிறார் என்பது அக்பருக்கு புரிந்துவிட்டது. உடனே தான் சொன்னபடி பரிசை கொடுக்க ஏற்பாடு செய்தார்.

Learn to Forgive and Forget

A kindergarten teacher has decided to let her class play a game. The teacher told each child in the class to bring along a plastic bag containing a few potatoes.

Each potato will be given a name of a person that the child hates, so the number of potatoes that a child will put in his/her plastic bag will depend on the number of people he/she hates.

So when the day came, every child brought some potatoes with the name of the people he/she hated. Some had 2 potatoes; some 3 while some up to 5 potatoes. The teacher then told the children to carry with them the potatoes in the plastic bag wherever they go (even to the toilet) for 1 week.

Days after days passed by, and the children started to complain due to the unpleasant smell let out by the rotten potatoes. Besides, those having 5 potatoes also had to carry heavier bags.

After 1 week, the children were relieved because the game had finally ended. The teacher asked: “How did you feel while carrying the potatoes with you for 1 week?”

The children let out their frustrations and started complaining of the trouble that they had to go through having to carry the heavy and smelly potatoes wherever they go.

Then the teacher told them the hidden meaning behind the game. The teacher said: “This is exactly the situation when you carry your hatred for somebody inside your heart. The stench of hatred will contaminate your heart and you will carry it with you wherever you go. If you cannot tolerate the smell of rotten potatoes for just 1 week, can you imagine what is it like to have the stench of hatred in your heart for your lifetime?”

**********Moral of the Hatred (Human Vices) story:Throw away any hatred for anyone from your heart so that you will not carry sins for a lifetime. Forgiving others is the best attitude to take.
“Learn to Forgive and
Forget।”

****************
Thanks:rajaniyer.blogspot.com

The obstacle in Our Path.

The obstacle in Our Path.

In ancient times, a King had a boulder placed on a roadway.Then he hid himself and watched to see if anyone would remove the huge rock. Some of the king’s wealthiest merchants and courtiers came by and simply walked around it.

Many loudly blamed the King for not keeping the roads clear, but none did anything about getting the stone out of the way.Then a peasant came along carrying a load of vegetables.Upon approaching the boulder, the peasant laid down his burden and tried to move the stone to the side of the road. After much pushing and straining, he finally succeeded.

After the peasant picked up his load of vegetables, he noticed a purse lying in the road where the boulder had been. The purse contained many gold coins and a note from the King indicating that the gold was for the person who removed the boulder from the roadway.

The peasant learned what many of us never understand! Every obstacle presents an opportunity to improve our condition.

Touching life story…..

Touching life story…..

A young man was getting ready to graduate college. For many months he had admired a beautiful sports car in a dealer’s showroom, and knowing his father could well afford it, he told him that was all he wanted. As Graduation Day approached, the young man awaited signs that his father had purchased the car.

Finally, on the morning of his graduation his father called him into his private study. His father told him how proud he was to have such a fine son, and told him how much he loved him. He handed his son a beautiful wrapped gift box.

Curious, but somewhat disappointed the young man opened the box and found a lovely, leather-bound Bible. Angrily, he raised his voice at his father and said, “With all your money you give me a Bible?” and stormed out of the house, leaving the holy book.

Many years passed and the young man was very successful in business. He had a beautiful home and wonderful family, but realized his father was very old, and thought perhaps he should go to him. He had not seen him since that graduation day.

Before he could make arrangements, he received a telegram telling him his father had passed away, and willed all of his possessions to his son. He needed to come home immediately and take care of the things. When he arrived at his father’s house, sudden sadness and regret filled his heart.

He began to search his father’s important papers and saw the still new Bible, just as he had left it years ago. With tears, he opened the Bible and began to turn the pages. As he read those words, a car key dropped from an envelope taped behind the Bible. It had a tag with the dealer’s name, the same dealer who had the sports car he had desired. On the tag was the date of his graduation, and the words…PAID IN FULL.

How many times do we miss God’s blessings because they are not packaged as we expected?

*************************
Thanks:rajaniyer.blogspot.com

Mother in law story

Mother in law story

***************************
A long time ago in China, a girl named Li-Li got married & went to live with her husband and mother-in-law.

In a very short time, Li-Li found that she couldn’t get along with her mother-in-law at all.Their personalities were very different, and Li-Li was angered by many of her mother-in-law’s habits. In addition, she criticized Li-Li constantly.

Days passed, and weeks passed. Li-Li and her mother-in-law never stopped arguing and fighting.But what made the situation even worse was that, according to ancient Chinese tradition, Li-Li had to bow to her mother-in-law and obey her every wish. All the anger and unhappiness in the house was causing Li-Li’s poor husband the great distress.

Finally, Li-Li could not stand her mother-in-! law’s bad temper and dictatorship any longer, and she decided to do something about it! Li-Li went to see her father’s good friend, Mr. Huang, who sold herbs.She told him the situation and asked if he would give her some poison so that she could solve the problem once and for all.Mr. Huang thought for awhile, and finally said, “Li-Li, I will help you solve your problem, but you must listen to me and obey what I tell you.”Li-Li said, “Yes, Mr. Huang, I will do whatever you tell me to do.

“Mr. Huang went into the back room, and returned in a few minutes with a package of herbs. He told Li-Li, “You can’t use a quick-acting poison to get rid of your mother-in-law, because that would cause people to become suspicious Therefore, I have given you a number of herbs that will slowly build up poison in her body.

Every other day prepare some delicious meal and put a little of these herbs in her serving.Now, in order to make sure that nobody suspect you, when she dies, you must be very careful to act very friendly towards her. “Don’t argue with her, obey her every wish, and treat her like a queen.” Li-Li was so happy.She thanked Mr. Huang and hurried home to start her plot of murdering her mother-in-law.
Weeks went by, and months went by, and every other day, Li-Li served the specially treated food to her mother-in-law.

She remembered what Mr. Huang had said about avoiding suspicion, so she controlled her temper!r, obeyed her mother-in-law, and treated her like her own mother.After six months had passed, the whole household had changed.

Li-Li had practiced controlling her temper so much that she found that she almost never got mad or upset. She hadn’t had an argument with her mother-in-law in six months because she now seemed much kinder and easier to get along with.The mother-in-law’s attitude toward Li-Li changed, and she began to love Li-Li like her own daughter. She kept telling friends and relatives that Li-Li was the best daughter-in- law one could ever find. Li-Li and her mother-in-law were now treating each other like a real mother and daughter.Li-Li’s husband was very happy to see what was happening.

One day, Li-Li came to see Mr. Huang and asked for his help again She said, “Dear Mr. Huang, please help me to keep the poison from killing my mother-in-law. She’s changed into such a nice woman, and I love her like my own mother. I do not want her to die because of the poison I gave her.

“Mr. Huang smiled and nodded his head. “Li-Li, there’s nothing to worry about. I never gave you any poison. The herbs I gave you were vitamins to improve her health. The only poison was in your mind and your attitude toward her, but that has been all washed away by the love which you gave to her.”

**************************
Thanks:funnyclick.blogspot.com

அறிவு கொளுத்தும் ஒரு கதை

- அறிவு கொளுத்தும் ஒரு கதை
பெர்னான்டோ சோரென்டினோ (அர்ஜென்டீன எழுத்தாளர்
************************************

இவன் ஒரு நேர்மையான பிச்சைக்காரன். ஒரு நாள் இவன் ஆடம்பரமான குடியிருப்பு ஒன்றின் கதவை தட்டினான், வீட்டு சமையல்காரன் வெளியே வந்து “உனக்கு என்னவேண்டும் எனது அருமையான மனிதனே?” என்றான்.

“கடவுளின் அன்பிற்காக நீங்கள் ஒரு சிறிய கொடை புரியவேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.

“இரு இதனை நான் எஜமானி அம்மாவிடம் தெரிவிக்கிறேன்” -என்றான் அந்த சமையற்காரன்.

சமையற்காரன் வீட்டு எஜமானியிடம் இந்த விஷயத்தை தெரிவித்தான். அவள் கூறினாள்- ” ஜெரிமையா, அந்த நல்ல மனிதனுக்கு, ஒரு ரொட்டித் துண்டம் கொடு, முடிந்தால் நேற்றைய ரொட்டித் துண்டாயிருந்தால் நல்லது” என்றாள். அவள் ஒரு கஞ்சப்பிசினாரி.

தனது எஜமானியம்மாவுடன் ரகசிய காதல் புரிந்து வரும் சமையற்கார ஜெரிமையா, பாறை போல இறுகிப் போன ஒரு ரொட்டித் துண்டத்தை பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்”- பிச்சைக்காரன் வாழ்த்தினான்.

சமையற்காரன் அந்த வீட்டின் மிகப்பெரிய கருவாலி மரக் கதவை சாத்தினான். பிச்சைக்காரனும் கைகளில் ஏந்திய ரொட்டித் துண்டுடன், தான் பகல்களையும், இரவுகளையும் கழிக்கும் காலியிடத்திற்கு வந்து, ரொட்டியை சாப்பிட ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். ஒரு கடினமான பொருளை கடித்த அவன் தனது பற்களில் ஒன்று உடைந்து சிதறியதை உணர்ந்தான்.

உடைந்த அந்த பல்லின் சிதறல்களிலிருந்து தங்கம், முத்துக்கள், வைரங்கள் பதித்த ஒரு மோதிரம் இருந்ததைக் கண்டு அதிசயித்தான்.

என்ன அதிர்ஷ்டம்! அவன் தனக்கு தானே கூறிக் கொண்டான், நான் இதனை விற்று நீண்ட நாட்களுக்கு தேவையான பணத்தை அடைவேன் என்று முணுமுணுத்தான்.

ஆனால் அவனது நேர்மை உடனடியாக வந்தது. “இல்லை”, இதனை உரியவரிடம் சேர்ப்பதுதான் முறை என்று கூறிக் கொண்டான்.

மோதிரத்தில் ஜே. எக்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. புத்தியற்றவன் என்று கூறுவதற்கும் இடம் இல்லாமல், சோம்பேரியாகவும் இராமல், பிச்சைக்காரன் ஒரு கடைக்குச் சென்று தொலைபேசி புத்தகத்தை வாங்கினான். அந்த ஊர் முழுவதும் உள்ள பெயர்களில் ஒரே ஒரு குடும்பத்தின் பெயர்தான் எக்ஸ் என்ற எழுத்தில் துவங்கியிருந்தது. ஸொஃபானியா குடும்பம்”.

தன்னுடைய நேர்மையை செயல்படுத்த முடிவதை நினைத்து குதூகலம் அடைந்த அவன், சொஃபானியா குடும்பம் வசிக்கும் வீட்டை நோக்கி நடையை கட்டினான். அது தனக்கு மோதிரம் உள்ள ரொட்டி கொடுத்த அந்த வீடுதான் இது என்றவுடன் மேலும் மகிழ்ச்சியடைந்தான். கதவைத் தட்டினான்.

ஜெரிமையா வந்து உனக்கு வேண்டும் மனிதனே? என்றான்.

“நீங்கள் சற்று முன் பெரிய மனது பண்ணி எனக்கு கொடுத்த ரொட்டியில் இந்த மோதிரம் இருந்தது” என்றான்.

இதனை நான் எஜமானியம்மாவிடம் காண்பித்து விட்டு வருகிறேன் என்று ஜெரிமையா மோதிரத்துடன் உள்ளே சென்றான்.

எஜமானியம்மாள் மோதிரத்தை கண்டவுடன் ” என்ன அதிர்ஷ்டம், கடந்த வாரம் நான் ரொட்டிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த போது தொலைந்த மோதிரம்”. ஜே.எக்ஸ் எனது இனிஷியல்தான். ஜோசர்மினா சொஃபானியா என்ற எனது பெயரின் இனிஷியல்தான் அது” என்றாள்.

சிறிது யோசித்த அவள் “ஜெரிமையா அந்த நல்ல மனிதனுக்கு, அதிக விலையில்லாத அளவில், வேண்டியவற்றை கொடு” என்றாள்.

பிச்சைக்காரனிடம் வந்த ஜெரிமையா, “உன்னுடைய இந்த நற்செயலுக்கு அன்பளிப்பாக நீ விரும்பியதைக் கேள்” என்றான்.

“என்னுடைய பசியைப் போக்கும் ஒரு ரொட்டித் துண்டம் போதும்” என்றான் பிச்சைக்காரன்.

தன்னுடைய எஜமானியம்மாவை இன்னமும் காதலித்து வந்த அவன் அவளை திரு‌ப்தி செய்வதற்காக, மீண்டும் பாறை போன்று இறுகிய ஒரு ரொட்டித் துண்டத்தை கொண்டு வந்து பிச்சைக்காரனிடம் அளித்தான்.

“கடவுள் உங்களை ஆசிவதிப்பார்”.

ஜெரிமையா அந்த கருவாலி மரக் கதவை அறைந்து சாத்தி விட்டுச் சென்றான். பிச்சைக்காரன் தனது கைகளில் உள்ள ரொட்டியுடன் தனது காலி இடத்திற்கு வந்து சேர்ந்தான். ஒரு மர நிழலில் அமர்ந்து ரொட்டியை சாப்பிடத் துவங்கினான், உடனேயே கடினமான பொருளை கடித்த அவனது மற்றொரு பல் உடைந்து சுக்கு நூறாகியதை உணர்ந்தான், அதே போல் உடைந்த பற் சிதறலில் மீண்டும் ஒரு தங்கம், வைரம் மற்றும் முத்துக்கள் பதித்த மோதிரம் இருந்தது.

இம்முறையும் ஜே.எக்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கபட்டிருந்ததை பார்த்தான். திரும்பவும் மோதிரத்தை ஜோசர்மினா சொஃபானியாவிடம் திருப்பிக் கொடுத்தான், வெகுமதியாக கடினமான பாறை போன்ற 3ஆவது ரொட்டித் துண்டத்தைப் பெற்றான். இதிலும் ஒரு மோதிரத்தைக் கண்டான், திரும்பவும் உரியவரிடம் கொண்டு சேர்த்தான், வெகுமதியாக கடினமான பாறை போன்ற ரொட்டித் துண்டு கிடைத்தது, அதில்…

அந்த அதிர்ஷ்டகரமான நாளிலிருந்து, அவனது மரணத்தின் துரதிர்ஷ்டமான நாள் வரை அந்த பிச்சைக் காரன் காசுப்பிரச்சனைகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அதாவது அவன் ஒவ்வொரு நாளும் ரொட்டியில் இருக்கும் மோதிரத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் அவ்வளவே.
***************************

நன்ற;http://natchathreyan.mywebdunia.com/2008/09/23/1222167240000.html

முன் யோசனை. . .

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்

*************************************

நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.

“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் …………………..

——————————————————————————–

நன்றி; tamil.ellamey.com

« பழைய வரவுகள்