கமலுக்கும் ரஜினிக்கும். . .

கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்

சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அரசியல் ரீதியாகப் பலமுறை மோதிக் கொண்டிருக்கிறார்கள். மேடைகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார்கள். வெளியே தெரியாத அளவு சினிமாவினாலும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அது ரசிகர்களையும் பிடித்துக் கொண்டு இன்றைக்கும் இருக்கிறதென்றாலும் முன்போல் இல்லை.

இவர்களுக்குப் பின் ரஜினி-கமல் ரசிகர்களிடையேயும் போட்டி உண்டு. மோதல் உண்டு. அந்த அளவுக்கு போட்டியும், மோதலும் ரஜினி-கமலிடம் இல்லை. நல்ல நட்புண்டு. உள்மனதில் இருவரும் என்ன நினைக்கிறர்கள் என்பது நமக்குத் தெரியாது.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் பார்க்க ரஜினிக்காக கமல் பிரத்யேக காட்சியொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இருவருமே அவரவர் நடித்த படத்தை ஒருவருக்கொருவர் போட்டுக் காட்டுவது வழக்கம். இது சிவாஜி-எம்.ஜி.ஆரிடம் கூட இருந்ததில்லை. ‘அபூர்வ ராகங்கள்’ முதல் ரஜினி-கமல் இருவரும் சுமார் 16 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய சாதனைதான்.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் பார்த்து முடிந்த பின் வெளியே வந்த ரஜினி ஆர்வத்தோடு கமலைத் தேடியிருக்கிறார். கமல் முன்னதாகவே வீட்டுக்குப் போயிருந்தார். அதனால் மறுநாள் காலையில் மாலையோடு கமல் வீட்டுக்குச் சென்ற ரஜினி, அதை அவருக்கு அணிவித்து மகிழ்ந்து, ”அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் நடித்ததைப் போல் இந்தியாவிலேயே யாரும் நடிக்க முடியாது” என்றும் கூறிப் பாராட்டியிருக்கிறார்.

“கமல் நல்லதொரு நடிகர். நடிப்பில் அவரோடு என்னை ஒப்பிட முடியாது. ஒப்பிடக் கூடாது. சினிமாவிற்காக அவர் மெனக்கெடுகின்ற அளவு என்னால் முடியாது” என்று பலமுறை ரஜினி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

தாயில்லாமல் நானில்லை

கமல்-ரஜினி இருவரும் ஒரு சமயம் “இனி நாங்கள் சேர்ந்து நடிக்க மாட்டோம்” என்று கலந்து பேசி முடிவெடுத்து அறிவித்தார்கள். இந்த அறிவிப்புக்குப் பின்பும் தேவர் பிலிம்சின் ‘தாயில்லாமல் நானில்லை’யில் இருவரும் இணைந்து நடித்தார்கள். எப்படி?

உடல் நலமின்றி சிகிச்சைக்காக விஜயா நர்சிங் ஹோமில் இருந்த ரஜினிக்கு, அருகிலுள்ள வாகினி ஸ்டூடியோவில் கமல் கதாநாயகனாக நடிக்கும் ‘தாயில்லாமல் நானில்லை’ படப்பிடிப்பு நடக்கிறது என்ற தகவல் தெரிய வந்தது. அதனால் அவருக்கு திடீரென்று ஒரு ஆசை முளைத்தது. கமலுடன் மீண்டும் ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று காரை எடுத்துக் கொண்டு நேராக தேவர் பிலிம்ஸ் அலுவலகம் வந்தவர், அங்கு டைரக்டர் தியாகராஜனைச் சந்தித்து “கமலுடன் ‘தாயில்லாமல் நானில்?’யில் சேர்ந்து நடிக்கணுமே. சான்ஸ் தருவீர்களா?” என்று கெஞ்சலான பாவனையில் உரிமையோடு கேட்டார்.

“ரஜினிக்கு இல்லாமலா” என்று உடனே தியாகராஜன் சம்மதித்தார். அதற்கு நன்றி கூறிய ரஜினி, “எதற்கும் கமலையும் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன், ஏனென்றால் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது” என்றவர் படப்பிடிப்பின் போது கமலை செட்டில் சந்தித்தார்.

“உன்னோட இந்தப் படத்திலே நடிக்கணும்னு ஆசை. என்ன சொல்றே?” ரஜினி.

“இது என்னப்பா கேள்வி. நீ இஷ்டப்படறே நடியேன். வேணாம்னா சொல்லப் போறேன்” இது கமல்.

“அதுக்கு இல்லே. நாம போட்டிருக்கிற ஒப்பந்தம்….” என்று ரஜினி நினைவுப்படுத்த, அதற்கு கமல் சொன்ன பதில் இது.

“கொஞ்ச காலத்துக்கு இனி சேர்ந்து நடிக்கறதில்லே. அதுவும் முக்கிய பாத்திரத்திலே (Running Characters) அப்படீன்னுதான்னே பேசினோம். இதுலே நான் ஹீரோ. நீ வரப்போறதோ இரண்டு சீன்தான். அதுக்குப் போய்….. வந்தியா பேசாம நடி. என்ன!”

கமலின் இந்த சம்மதத்திற்குப் பின் ‘தாயில்லாமல் நானில்லை’யின் ரஜினி கவுரவ வேடத்தில் ஒரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்தார்.

“நீ என் படத்தில் சான்ஸ் கேட்டு வலுவில் நடித்திருக்கிறாய். நான் மட்டும் உன்னை சும்மா விடுவேனா….! இதே தேவர் பிலிம்ஸின் அடுத்த படத்தில் (அன்னை ஓர் ஆலயம்) கவுரவ நடிகராக உன்னோடு நடிக்க சான்ஸ் தரணும்’ என்று ரஜினியை கமல் கேட்டுக் கொள்ள, அவரும் ‘சரி’யென்று தலையாட்டியதாக ஒரு தகவல் உண்டு.

‘தாயில்லாமல் நானில்லை’ படத்தில் இளவரசி ஸ்ரீதேவியை நாடகக் கலைஞன் கமல் காதலிக்கிறார். அதை ஸ்ரீதேவியின் தந்தை எதிர்க்க அதற்காக கமலை அடிக்கச் சொல்லி ரவுடி ரஜினியை ஏவி விடுகிறார். ரஜினி கமலோடு மோத, ஸ்ரீதேவி நடுவில் குறுக்கிட்டு தன் காதலைப் பற்றிச் சொல்கிறார். ரஜினி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இருவரையும் வாழ்த்திவிட்டுச் செல்கிறார். இந்தக் காட்சியில் ரஜினி-கமல் இருவரும் கடுமையாக மோதி நடிக்கையில் தியேட்டர்களில் பெரும் பரபரப்பு இருந்தது. இருவரும் உண்மையாகவே மோதிக் கொண்டார்கள் என்று ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள்.

‘ஷோலே’ படத்தினை பாலாஜி தமிழில் எடுக்க விரும்பி, சஞ்சீவ் குமார், அமிதாப்பச்சன், தர்மேந்திரா ஆகியோரது வேடங்களில் சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரை நடிக்கச் செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. ரஜினி-கமல் இருவரும் போட்டுக் கொண்ட ஒப்பந்தமும் காரணங்களில் ஒன்றாக இருந்தது.

இது போல் ரஜினி, கமலை இணைத்த பல சம்பவங்கள் உண்டு. அது பற்றி கமல்ஹாசனே சொல்கிறார்.

“கமலுக்கும் ரஜினிக்கும் ஆகாது. ஒருவரையொருவர் விழுங்கப் பார்க்கிறார்கள் என்று எங்களது எதிரிகள் சிலரும், எங்களுக்குள் கோள் மூட்டி விடப் பார்க்கும் சிலர் இருந்தாலும், எங்களது நட்பு எங்கள் சினிமா அந்தஸ்தையும் மீறி நிற்பதாகும். அந்த உயரத்திற்கு வந்து எங்களை, எங்கள் நட்பை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி எங்கள் நட்பும் வளர்ந்தது. ‘அவர்கள்’ படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், “தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே, கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன” என்று கேட்டேன். ரஜினி அமைதியாக என்னிடம், “கமல், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு ‘ஸ்டைல்’ நடிப்புத்தான் சரி” என்றார். இப்படி அவரது பதில் எதுவும் நேரிடையாகத்தான் வரும். ‘சுற்றி வளைத்து’ என்பதே அவரிடம் கிடையாது.

‘அவர்கள்’ படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் ‘அவர்கள்’ நடிப்பைச் சுட்டிக் காட்டி மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். தான் சுற்றுவது போதாதென்று என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாள் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்குவேன். “அட, சும்மா வாங்க, சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்” என்று அழைத்து செல்வார்.

சுற்றிவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்ப நள்ளிரவு 2.00 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் இரவில் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவேன். அவர் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3.00 மணிக்கும், 4.00 மணிக்கும் வருவார். மறுநாள் காலை 7.00-க்கெல்லாம் படப்பிடிப்புக்குத் தயாராக வேண்டும் என்ற கவலையே இருக்காது.

மறுநாள் காலையில் முந்தய இரவு விழித்திருந்த அசதியும் ரஜினியிடம் தெரியாது. பாலச்சந்தர் சார் இரவு 9.00 மணிக்கு தூங்கி, காலை 5.00 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாரென்றால் காட்சியைத் தயார் செய்ய அரை மணி நேரமாகும். இந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவதில்லை. சிங்கப்பூரிலுள்ள பூங்கா, சாலைப் பகுதிகளில் சிமெண்ட் சாய்மானங்கள் இருக்கும். நான் ஒரு பக்கம் ரஜினி வேறொரு பக்கம் இருக்க சாத்தியப்படாது. டைரக்டர் அழைக்கும்போது எழுந்து ஓட வேண்டுமே. அதற்காக ஓரே இடத்தில் இருவரும் ஒருவரது தோள்மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம். ஓரே காரில் பயணம் செய்யும்போதும் விமான நிலையத்திலும்…. என்று கிடைத்த இடங்களில் இப்படித் தூங்கித்தான் ஓய்வெடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை! (இதை ‘படையப்பா’ வெற்றி விழாவிலும் கமல் சொன்னார்)

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றபோதுதான், இனி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது தயாரிப்பாளர்கள் எங்கள் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவதை எண்ணிப் பார்த்தோம். தனித்தனியாக படம் செய்தால் அதைவிட அதிகமாகவே சம்பளம் பெற முடியும் என்று உணர்ந்தோம். அதனால் சேர்ந்து நடிப்பதற்கு தற்காலிகமாக முடிவு சொல்வது என்று சோபா ஒன்றில் அமர்ந்து பேசி இப்படித் தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் சரியாகவே இருந்தது. இருவரும் சேர்ந்து நடிப்பது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கிறது. ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.

எங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. வலிமை இருக்கிறது. எங்கள் சினிமா அந்தஸ்து உச்சத்தில் இருக்கும்போது இருவரும் இணைந்து நடிப்போம். அதற்குள் எங்களுக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது.

ரஜினி, கமலுக்கு அப்புறம் ரஜினியைவிட, கமலை விட மிஞ்சி நிற்க தமிழகத்திலேயே நடிகர்கள் வருவார்கள். நாங்கள் வயதானபின் அவர்கள் போட்டி போடட்டும் அதற்குள் நாங்கள் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

திருமண விருந்து

ரஜினி திருமணம் செய்து கொண்டதற்காக தயாரிப்பாளர் பாலாஜி அவருக்கு ஒரு விருந்து கொடுத்தார். விருந்தில் நானும் கலந்து கொண்டேன். அதில் எங்களுக்குள் கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும்.

ரஜினியின் பெருந்தன்மை

இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன். என்னைப் பார்க்க ரஜினி வேகமாக வந்து கொண்டிருந்தார். வந்த வேகத்தைப் பார்த்து தகராறு செய்வதற்குத்தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். சரி, வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாகப் பிடித்தார். அடுத்த விளைவுக்கு நான் தயாரானபோது, “ஸாரி…. நேத்து நடந்ததை மறந்துடுங்க…” என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது. அவரது பெருந்தன்மை என்னைச் சுட்டது.

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக் கொண்டிருந்தவர்களிடம் “கமலிடம் மன்னிப்பு கேட்கப் போனபோது பகையுணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன். பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்!” என்று கூறியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டபோது நாம் முந்திக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நொந்து கொண்டேன்.

போட்டி

சினிமாவைப் பொறுத்தவரை நாங்கள் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம் நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அவர் அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக வெடித்து சிதறுவார். அதைப் பார்த்து அதைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் முயலுவேன். எங்கள் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை.

நான் முதன் முதலாகத் தயாரித்த ‘ராஜபார்வை’யைப் பற்றி பலரும் ‘ஆகா’ ‘ஓகோ’வென்று பாராட்டி விமர்சிக்கையில், ரஜினி மட்டும் ‘சரியில்லை’ என்றார். காரணம் கேட்டேன். “டெக்னிகலா பெரிசா பண்ணியிருக்கீங்க. அதனால் என்ன பிரயோஜனம்?” என்றார்.

ரஜினியின் பெரிய படமொன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு எனக்குப் பிடிக்காததை அவரிடம் சொன்னேன். ஒருவரையொருவர் இப்படி விமர்சிப்பதிலும் நாங்கள் பின் வாங்கியதில்லை. அது மட்டுமின்றி எங்கள் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்க பயந்ததில்லை. அந்த தைரியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மனப்பாங்கு எம்.ஜி.ஆர். சிவாஜியிடம் கூட இருந்திருக்க முடியாது. ஏன் வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காண முடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.

ஒரு சமயம் ரஜினியிடமுள்ள பழக்கமொன்றைச் சுட்டிக் காட்டி நிறுத்திக் கொள்ளும்படி சொன்னேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு “பொறுத்துப் பாருங்கள்” என்றவர் சில நாட்களிலேயே அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதுதான் ரஜினி.”

“முன்பொரு சமயம், அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ரஜினிக்கு வந்தபோது என்னிடமும் அது பற்றி அபிப்பிராயம் கேட்டார். வேண்டாம் என்று கூறி, சில விளக்கங்களும் சொன்னேன். ரஜினி அதை ஏற்றுக் கொண்டு “எனது பிற நலம்விரும்பிகளும் இதைத்தான் சொல்கிறார்கள்” என்று கூறினார். அத்தோடு அரசியலில் ஈடுபடும் எண்ணத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார். ‘அரசியலில் ஈடுபடாததே எங்கள் இருவருக்கும் பெரிய ஆரோக்கியமான சொத்தாக’க் கருதுகிறேன். அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு ரஜினியின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும் அவர் எச்சரிக்கையோடு அதன் விளைவுகளை எதிர் கொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

‘நாயகன்’ படம் பார்த்துவிட்டு நடிகனுக்கு நடிகன் என்று பாராட்டினார் ரஜினி. ‘புன்னகை மன்னன்’ 100-வது நாள் விழாவில் நான் அப்படத்தில் ஏற்றிருந்த சாப்ளின் செல்லப்பா வேடத்தை, ‘இது போல் எந்த நடிகராலும் செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டார்.

‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில், மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன். அந்தப் படம் பெரிய அளவு வெற்றி பெறாததில் எனக்கும் வருத்தமுண்டு. கலைஞர்களை வெற்றிகள்தான் பெரிய அளவில் உற்சாகப்படுத்த முடியும் என்று நம்புபவன் நான்.” என்கிறார் கமல்.

‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று பாட்ஷாவில் ரஜினி பேசிய வசனம் எதிரொலிக்காத தமிழர் வீடே இல்லை எனலாம். சின்னஞ்சிறு மழலைகளுக்கு இது போன்ற ரஜினி பேசிய வசனங்கள், அவர்களது வார்த்தை உச்சரிப்பை மெருகுப்படுத்துவதாக உள்ளது. அவர்கள் தமிழ்ப் பேசக் கற்றுக் கொள்வதற்கு ரஜினியின் படங்கள் நேரடியாக உதவுகின்றன என்பது நடைமுறை உண்மை.

நிஜத்தில் ரஜினி ஒரு தடவை சொன்னால் அதை அந்த சமயத்திலேயே புரிந்துக் கொள்ள வேண்டும். நிஜமாகவே புரியவில்லையென்றால் ரஜினி இன்னொரு முறை சொல்லத் தயங்கமாட்டார். ஆனால் புரிந்து கொள்ள மறுப்பவர்களை ரஜினி சும்மா விடமாட்டார், அல்லது ஒதுக்கித் தள்ளிவிடுவார்.

************
Thanks:http://www.rajinifans.com/detailview.php?title=845

சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
>
> நடித்த திரைப்படங்கள்
>
> படையப்பா (1999) …. படையப்பாவின் தந்தை வேடம்
> மன்னவரு சின்னவரு (1999)
> பூப்பறிக்க வருகிறோம் (1999)
> என் ஆசை ராசாவே (1998)
> ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
> கோபுர தீபம் (1997)
> ஒன்ஸ் மோர் (1997)
> பசும்பொன் (1995)
> எங்கிருந்தோ வந்தான் (1995)
> பாரம்பரியம் (1993)
> சின்ன மருமகள் (1992)
> நாங்கள் (1992)
> முதல் குரல் (1992)
> க்னோக் அவுட் (1992)
> தேவர் மகன் (1992) …. பெரிய தேவராக
> ஞானப் பறவை (1991)
> காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
> புதிய வானம் (1988)
> என் தமிழ் என் மக்கள் (1988)
> அன்புள்ள அப்பா (1987)
> வீரபாண்டியன் (1987)
> தாம்பத்தியம் (1987)
> கிருஷ்ணன் வந்தான் (1987)
> குடும்பம் ஒரு கோயில் (1987)
> முத்துக்கள் மூன்று (1987)
> ராஜ மரியாதை (1987)
> ஜல்லிக்கட்டு (1987)
> விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
> தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
> சாதனை (1986)
> மண்ணுக்குள் வைரம் (1986)
> லக்ஸ்மி வந்தாச்சு (1986)
> ஆனந்தக் கண்ணீர் (1986)
> விடுதலை (1986)
> மருமகள் (1986)
> முதல் மரியாதை(1985) …. மலைச்சாமி வேடம்
> படிக்காதவன் (1985)
> ராஜ ரிஷி (1985)
> பந்தம் (1985)
> நீதியின் நிழல் (1985)
> படிக்காத பண்ணையார் (1985)
> நாம் இருவர் (1985)
> நேர்மை (1985)
> இரு மேதைகள் (1984)
> வாழ்க்கை (1984)
> வம்ச விளக்கு (1984)
> சரித்திர நாயகன் (1984)
> சிரஞ்சீவி (1984)
> எழுதாத சட்டங்கள் (1984)
> தராசு (1984)
> திருப்பம் (1984)
> சிம்ம சொப்பனம் (1984)
> தாவனிக் கனவுகள் (1983)
> உருவங்கள் மாறலாம் (1983)
> சுமங்கலி (1983)
> சந்திப்பு (1983)
> உண்மைகள் (1983)
> மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
> நீதிபதி (1983)
> வெள்ளை ரோஜா (1983)
> காஷ்மிர் காதலி (1983)
> வசந்தத்தில் ஒரு நாள் (1982)
> வா கண்ணா வா (1982)
> தியாகி (1982)
> துணை (1982)
> தீர்ப்பு (1982)
> சங்கிலி (1982)
> பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
> ஊரும் உறவும் (1982)
> ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
> நெஞ்சங்கள் (1982)
> ஹிட்லர் உமாநாத் (1982)
> கருடா சௌக்கியமா (1982)
> லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
> கீழ்வானம் சிவக்கும் (1981)
> கல்தூன் (1981)
> அமரகாவியம் (1981)
> சத்ய சுந்தரம் (1981)
> ரிஷி மூலம் (1980)
> இரத்த பாசம் (1980)
> விஷ்வரூபம் (1980)
> எமனுக்கு எமன் (1980)
> தர்ம ராஜா (1980)
> மோகனப் புன்னகை (1980)
> மாடி வீட்டு ஏழை (1980)
> நான் வாழ வைப்பேன் (1979) …… ரவி வேடம்
> வெற்றிக்கு ஒருவன் (1979)
> திரிசூலம் (1979)
> பட்டாகத்தி பைரவன் (1979)
> நல்லதொரு குடும்பம் (1979)
> நான் வாழவைப்பேன் (1979)
> கவரி மான் (1979)
> இமயம் (1979)
> வாழ்க்கை அலைகள் (1978)
> என்னைப் போல் ஒருவன் (1978)
> ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
> ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
> பைலட் பிரேம்நாத் (1978)
> தியாகம் (1978)
> புண்ணிய பூமி (1978)
> அந்தமான் காதலி (1977)
> சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
> அண்ணன் ஒரு கோயில் (1977)
> தீபம் (1977)
> இளைய தலைமுறை (1977)
> நாம் பிறந்த மண் (1977)
> அவன் ஒரு சரித்திரம் (1976)
> உத்தமன் (1976)
> உனக்காக நான் (1976)
> சத்தியம் (1976)
> ரோஜாவின் ராஜா (1976)
> கிரகப் பிரவேசம் (1976)
>
> டாக்டர் சிவா (1975) ….. டாக்டர் சிவா வேடம்
> அன்பே ஆருயிரே (1975)
> அவன் தான் மனிதன் (1975)
> தங்கப்பதக்கம் (1974)
> அன்பைத்தேடி (1974)
> என் மகன் (1974)
> தீர்க்க சுமங்கலி (1974)
> பக்த துகாரம் (தெலுங்கு) (1973) …. சிவாஜி
> கௌரவம் (1973)
> ராஜபாட் ரங்கதுரை
> இராஜராஜசோழன் 1973)
> பாரத விலாஸ் 1973)
> பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
> ஞான ஒளி (1972) …. அந்தொனி வேடம்
> வசந்த மாளிகை (1972)
> நீதி (1972)
> சவாலே சமாளி (1971)
> மூன்று தெய்வங்கள் (1971)
> சுமதி என் சுந்தரி (1971)
> பாபு (1971)
> குலமா குணமா (1971)
> தங்கைக்காக (1971)
> இரு துருவம் (1971)
> வியட்னாம் வீடு (1970) …. பத்மநாப ஜயர் வேடம்
> விளையாட்டுப் பிள்ளை (1970)
> எங்கள் தங்கம் (1970)
> எங்க மாமா (1970)
> பாதுகாப்பு (1970)
> காவல் தெய்வம் (1969)
> தெய்வ மகன் (1969)
> சிவந்த மண் (1969)
> தங்கச் சுரங்கம் (1969)
> குருதட்சனை (1969)
> தில்லானா மோகனாம்பாள் (1968) …. சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
> உயர்ந்த மனிதன் (1968)
> கௌரி (1968)
> எங்க ஊரு ராஜா (1968)
> திருமால் பெருமை (1968)
> கலாட்டா கல்யாணம் (1968)
> என் தம்பி (1968)
> இரு மலர்கள் (1967)
> கந்தன் கருணை (1967) …. வீரபாகு வேடம்
> தங்கை (1967) …. மதன் வேடம்
> திருவருட்செல்வர்(1967)
> மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) …. சுந்தரம் பிள்ளை
> மகாகவி காளிதாஸ் (1966)
> செல்வம் (1966)
> திருவிளையாடல் (1965) …. சிவனின் அவதாரங்களாக
> சாந்தி (1965)
> பழனி (1965)
> அன்புக்கரங்கள் (1965)
> புதிய பறவை (1964)
> கை கொடுத்த தெய்வம் (1964)
> நவராத்திரி (1964)
> ராமதாசு (தெலுங்கு) (1964)
> பச்சை விளக்கு (1964)
> இருவர் உள்ளம் (1963) …. செல்வம் வேடம்
> கர்ணன் (1963) …. கர்ணன் வேடம்
> பார் மகளே பார் (1963)
> ரத்த திலகம் (1963) …. குமார் வேடம்
> அறிவாளி (1963)
> குலமகள் ராதை (1963)
> குங்குமம் (1963)
> அன்னை இல்லம் (1963)
> பலே பாண்டியா (1962)
> பார்த்தால் பசி தீரும் (1962)
> பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
> ஆலயமணி (1962)
> நிச்சய தாம்பூலம் (1962)
> படித்தால் மட்டும் போதுமா (1962)
> வடிவுக்கு வளைகாப்பு (1962)

> கப்பலோட்டிய தமிழன் (1961) …. வ.உ …
>
> read more »

http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

ஹவாய் தீவில் எந்திரனின் 2-ம் பாடல்!

ஹவாய் தீவில் எந்திரனின் 2-ம் பாடல்!

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாடல், ஹவாய் தீவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது, ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து இடம்பெறும் டூயட் பாடல்.

இம்மாதம் 8-ம் தேதி மச்சுபிச்சுவில் எந்திரன் படப்பிடிப்பைத் தொடங்கிய ஷங்கர், முதல் பாடலை மச்சுபிச்சுவிலும், அமேசான் அடர்ந்த காடுகளிலும் படம்பிடித்து வருகிறார்.

அடுத்த மாதத்திற்குள் மூன்று பாடல்களை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார், ஷங்கர்.

ரஜினியின் அறிமுகப் பாடல், ஹாலிவுட் ஸ்டூடியோவில் முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் தயாராகவுள்ளது.

இதுவரை மூன்று பாடல்களின் டியூன்களை அளித்துள்ளார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

(மூலம் – வெப்துனியா

ஷாமிலியும் ஹீரோயின் ஆகிறார்!

ஷாலினி தங்கை ஷாமிலியும் ஹீரோயின் ஆகிறார்!    

 

ஷாமிலி   |   ஷாலினிஅஜீத் நடிகை ஷாலினியின் தங்கையும் அஜீத்தின் மைத்துனியுமான  ஷாமிலி ஹீரோயினாக விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 

ஷாமிலிக்கு அறிமுகம் தேவையில்லை. படமெடுத்து ஆடும் பாம்புக்கு முன்னாள், அண்ணே அண்ணேநாகராஜன்னேஎனப் பாட்டுப்பாடி அசத்தியவர்!.

 

அக்கா ஷாலினியைப் போலவே இவரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கத்தில் அஞ்சலி படத்தில் மனநலம் பாதித்த குழந்தையாக அறிமுகமாக அனைவர் மனதையும் கரைத்தவர்.

 

தொடர்ந்து மலையாளம், தமிழில் சில படங்களில் நடித்தார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் தபு, ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

 

அவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த ஏராளமான டைரக்டர்கள் முயன்றனர். ஆனால் ஆரம்பத்தில் மறுத்துவிட்டார் ஷாலினியின் அப்பா.

 

இப்போது தெலுங்கில் புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க ஷாமிலியிடம் பேசியுள்ளனர்.

 

இந்தப் படத்தின் தொடக்க விழா சமீபத்தில்தான் நடந்தது. அப்போது கதாநாயகி யாரென்பதைக் கூறாமல் சஸ்பென்ஸ் வைத்துவிட்டனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

 

அதற்குள் ஷாமிலியின் சம்மதத்தைப் பெற்றுவிட முயன்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு ஓரளவு வெற்றி கிடைத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

 

நன்றி;

http://thatstamil.oneindia.in/

சின்னத் திரையில் நமீதா

 பெரிய திரையில் பலரையும் பிரமிக்க வைத்த நமீதா, சின்னத் திரைக்கும் வந்துவிட்டார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சிக்கு அவர் நடுவராக அமர்த்தப்பட்டுள்ளார். நமீதாவுக்கு முன் அந்த நிகழ்ச்சிக்கு சிம்ரன் நடுவராக இருந்தார்.

 

வார இறுதியில் வெளியாகும் இந்த நிகழ்ச்சியை நடன இயக்குநர் கலா, தயாரித்து இயக்குகிறார். பல்வேறு குழுவினரின் நடனங்களைப் பார்த்துவிட்டு, அவற்றிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியது நடுவர் நமீதாவின் பொறுப்பு.

 

சின்னத் திரை நிகழ்ச்சி ஒன்றில் நமீதா பங்கேற்பது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் நமீதா, தன் நடன அனுபவங்களையும் நடன ஆற்றலையும் பகிர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி நமீதா பேசுகையில், “இதுவரை இரண்டு எபிசோடுகளைப் படமாக்கி இருக்கிறார்கள். நிகழ்ச்சி மிக சுவாரசியமாகப் போகிறது. பங்கேற்கும் நடனக் கலைஞர்கள் மிகவும் திறமைசாலிகள்; கடினமாக உழைத்து ஆடுகிறார்கள். கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் ஆகியோருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்றார்.

 

இந்த நிகழ்ச்சிக்காக நமீதாவுக்கு மிகப் பெரிய தொகை ஒன்றைப் பேசியுள்ளார்கள் எனக் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். 

source:http://tamil.sify.com

 

 

கமலுக்கும் நாயகி நயன்தாரா !

 

மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜோலிடம் தேதிகள் கேட்டிருந்த கமல், இப்போது அந்த எண்ணத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, நயனிடம் தேதிகள் கேட்டுள்ளாராம்.

மர்மயோகியில் நடிக்கப்போவதாக மூன்று நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. காஜோல், ராணி முகர்ஜி மற்றும் பத்மப்ரியாதான் அந்த மூவரும். இவர்களில் முதல் இருவரும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால் பத்மப்ரியா மட்டும், இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகவும், கமல்ஹாசனே போனில் தன்னிடம் பேசியதாகவும் கூறி வருகிறார்.

இந்நிலையில், இன்றைக்கு தென்மாநில மொழிப் படங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நாயகியான நயன்தாராவிடம் மர்மயோகி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குமாறு உலகநாயகன் கேட்டுக் கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது அஜீத், விக்ரம், கார்த்தி, தனுஷ்… என பெரிய ஹீரோக்களின் படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா, இன்னமும் தன் பதிலைச் சொல்லவில்லையாம். எனினும் ஏகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், கமலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் அவருக்கு சிரம்மிருக்காது என மர்மயோகி வட்டாரம் தெரிவிக்கிறது.

ரஜினியுடன் இதுவரை 3 படங்களில் நடித்துவிட்ட நயன்தாரா, கமல்ஹாசனுடன் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அந்தக் குறை இந்தப் படத்தில் தீர்ந்துவிடும் எனப் புல்லரிக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.

அப்ப, நயன் இனி உலக நாயகி?!

courtesy:http://thatstamil.oneindia.in/movies/heroines/2008/07/29-nayan-in-marmayogi.html

என்னை வச்சிக்கடா… இல்ல கட்டிக்கடா

என்னை வச்சிக்கடாஇல்ல கட்டிக்கடா

-

 

படித்தால் புல்லரிக்கும் இந்த வைர வரிகள் இடம்பெறும் படத்துக்கு வைத்திருக்கும் பெயர், தமிழகம்!

 

 ஆம், தமிழகமேதான்! மாதா மூவிமேக்கர்ஸ் சார்பில் .ஜி.அருள், பி.சந்திரசேகர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். கே.சுரேஷ்குமார் என்பவர் இயக்கம். படம் குறி்த்த இந்த தகவல் வெளியாகும் நேரம், பாதி படம் முடிந்துவிட்டது.

 

 

 

இதுவரை என்னென்ன எடுத்தர்கள் என்ற பட்டியல் வேஸ்ட். எத்தனைப் பாடல்கள் எடுத்தார்கள் என்பது டேஸ்ட். படத்தின் நாயகன் ரிஷி (ரிச்சர்ட்) நாயகி அர்ச்சனாவுடன் ஆடிப்பாடும் பாடலொன்று படமாகக்ப்பட்டுள்ளது. பாடல், ‘ஆடிப்பாடும் அரபிக்குதிரைஎன்றே தொடங்குகிறது.

 

 

 

வில்லன்களுடன் லக்ஷா போட்டிருக்கும் கெட்ட ஆட்டத்தை ஊட்டி, கொடைக்கானல் என குளிர்ப்பிரதேசமாகப் பார்த்து படம் பிடித்துள்ளார்கள். அந்தளவுக்கு, பாடல் ரொம்ம்ம்ப்ப ஹாட் சாம்பிளுக்கு ஒரு வரி….

 

என்னை வச்சிக்கடா…

 

இல்ல கட்டிக்கடா.. .

 

Source: http://tamil.cinesouth.com/masala/hotnews/new/26072008-4.shtml

 

டப்பிங் பேசுகிறார் ந. . .

சென்னை ஜுலை-24.(டிஎன்எஸ்) எல்லா நடிகைகளும் அழகுதான். ஆனால் அந்த அழகு பெரும்பாலும் குரலில் இருக்காது. இதனாலேயே பெரும்பாலான டப்பிங் கலைஞர்களும் வாழ்ந்துவருகிறார்கள். அழகுப் புயல் நமீதாவுக்குக் குரலும் அழகு. ஆனால் தமிழ்தான் தகராறு. இந்த ஒரு காரணத்தாலேயே டப்பிங் பேசாமல் இருந்தார் நமீ.

அது மட்டுமல்ல, டப்பிங் பேசத் தனி சம்பளம் கிடைக்கப் போவதில்லை. அதற்காக ஒதுக்கும் ஐந்து நாட்களில் வேறொரு படத்தில் நடித்தால் லட்சங்களை அள்ளலாம். இந்தக் கணக்கிலும் அவர் டப்பிங் பேசவே முயற்சி செய்யாமல் இருந்தார். தற்போது நமீதா நடித்துவரும் (உண்மையிலேயே நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருக்காங்க) இந்திர விழா படத்தில் இவரே டப்பிங் பேசவிருக்கிறாராம்.

இதுவரைக்கும் என்னை கவர்ச்சிக்காகவே பயன்படுத்திகிட்ட தமிழ் சினிமாவில், என்னை நடிப்புக்காகப் பயன்படுத்திகிட்ட இயக்குனர் கே. ராஜேஷ்வர். அவரே கேட்கும்போது முடியாதுன்னு சொல்வேனா, கஷ்டப்பட்டாவது பேசிடுவேன் என்கிறார் நமீ.

நமீதாவின் குரலும் ரசிகர்களைச் சுண்டி இழுக்குமா என்பது இந்திர விழா வந்தால் தெரிந்துவிடும். (டிஎன்எஸ்)

Courtesy:chennaionline.com

குமுதம் சினிமா ஸ்பெஷல். . .

 

தயாராகி வரும் சத்யம் படத்தில் விஷாலுடன் ஜோடி போட்டுள்ள நயன்தாரா அதில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியிருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்த கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து விஜய் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். வில்லு படத்தில் விஜயுடன் நடித்து வரும் நயன்தாரா அதில் குடும்ப பாங்கான கேரக்டர் ஏற்றிருக்கிறார். இந்த நிலையில் சத்யம் படத்தில் நயன்தாராவின் கவர்ச்சியை ரசிக்கும் ரசிகர்கள் பின்னர் வில்லுவின் குடும்ப பாங்கான கேரக்டரை ரசிப்பார்களா? என யோசித்த விஜய் இது குறித்து வில்லுவின் இயக்குனர் பிரபுதேவாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். எனவே வில்லுவில் நயன்தாராவின் கேரக்டரில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. (அப்போவில்லுவில் ஜொள்ளு மேட்டர் கண்டிப்பா உண்டு)

 

* மன அழுத்தம், டென்ஷன் அதிகமாகி விட்டால் நீச்சல் அடிப்பேன். காலாற வாக்கிங் போவேன். மனதுக்கு பிடித்த புத்தகங்களை வாசிப்பேன். விருப்பம் போல டான்ஸ் ஆடுவேன். இவைதான் எனது டென்ஷனை போக்கும் மந்திரங்கள் என்று சொல்கிறார் ஸ்ரேயா. பொழுது போக்கு விஷயங்களில் கவனம் செலுத்தினால் மனஅழுத்தம் பஞ்சாய் பறந்து விடும் என்கிறார் ஸ்ரேயா. (ஆமா...இத்தனை விஷயங்களுக்கும் எப்படி நேரம் ஒதுக்கறீங்க மேடம்?)

 

* அரசியல் கட்சிகளில் நடிகைகள் சேருவது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் கவர்ச்சி நடிகை பாபிலோனாவுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டதாம். அனேகமாக அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சேவை செய்யலாம் என்கிறார்கள். அதற்கான முயற்சிகளில் அம்மணி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (பின்னேஎக்குத்தப்பா எம்.பி ஆயிட்டா ரேட்டு கோடிகளில் எகிறும்ல)

 

* தனக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் வந்து விட்ட மகிழ்ச்சியாலோ என்னவோ. நமீதாவின் உடல் பெருத்து விட்டது. எகிறிப்போன எடையைக் குறைக்க நமீதா படாதபாடு பட்டு வருகிறார். யோகா, ஜாக்கிங் பயிற்சிகளை தினமும் மேற்கொண்டு உடலை கசக்கிப் பிழிந்து வருகிறாராம். (உடையை குறைக்கிறதிலும் சரி. எடையை குறைக்கிறதிலும் சரி. நீங்க ரொம்பவே சின்சியர்தான் நமீ)

 

* நடிகர்நடிகையர் கூடிப்பேசிக்கொள்வது சகஜம்தான். அதில் பல விஷயங்களை பரிமாறிக்கொள்வார்கள். அந்த வகையில் நாயகிகள்  ரீமாசென், த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் இப்போது அடிக்கடி கூடிப்பேசிக்கொள்கிறார்களாம். இதில் சினிமா மேட்டர் மட்டுமின்றி இளமை துள்ளும் பல விஷயங்களும் விரிவாக அலசப்படுகிறதாம். (சிம்பு- நயன்தாரா- விஷால் மேட்டர் பற்றியெல்லாம் பேசியிருப்பாங்களோ?)

 

* தசாவதாரத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்து என்ன பயன்? ஒரு டூயட் கீயட் உண்டா? என நட்பு வட்டாரங்கள் கண்ணீர் விடாத குறையாக புலம்பி வருவதால் அசின் அப்செட் ஆகி உள்ளாராம். எனவே அடுத்து உருவாக்க இருக்கும் மர்மயோகியிலாவது தனக்கு டூயட் பாடும் வாய்ப்புத் தர வேண்டும் என கமலுக்கு தூது விட்டு வருகிறாராம். (வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும். கீப் இட் அப்)

 

 

http://www.kumudam.com/dotcom/cinebits/index.php?type=cinebits&pag=2 

 

 

 

 

 

கோலிவுட்டில் ரம்பாவின் இரண்டாம் சுற்று

திரையுலகம், திரைச்செய்திகள்

Image

“தொடையழகி” என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட முன்னாள் கனவுக்கன்னி ரம்பா( ஞாபகமிருக்கா?) இப்போது மறுபடியும் தமிழ்ச்சினிமாவில் இரண்டாம் சுற்றுக்கு ரெடியாகி விட்டார். ஆடி மாதத்தை முன்னிட்டு ஜூலை 14 அன்று பூஜைப்போடப்பட்ட பத்து படங்களுள் ஒன்று “விடியும் வரை காத்திரு”. இப்படத்தில் பிரகாஷ்ராஜிற்கு ஜோடியாக ரம்பா நடிக்கிறார். வியாஸ் இயக்க பல்லவி தயாரிக்கிறார்.

 

சண்டை இல்லாத ஆஷன் த்ரில்லர் விடியும் வரை காத்திரு. ஹீரோயினுக்கு முக்கியமான கதாபாத்திரமாம்.அதனால் ரம்பா மகா குஷியாகி விட்டார். இதனால் சென்னையில் ஒரு அபார்மெண்டை வாடகைக்கு எடுத்து ,ஒரு புது ஆல்பம் ரெடி செய்து கோடம்பாக்கத்தில் உலா விட்டிருக்கிறார். இப்போது கலைஞர் டிவியில் “மானாட மயிலாட” ரியாலிடி ஷோவில் நீதிபதியாக சின்னத்திரையில் தலைக்காட்டி வருகிறார்.

 

உங்களின் இரண்டாம் சுற்று வெற்றியடைய வாழத்துக்கள் !

source:www.adhikaalai.com

  

« பழைய வரவுகள்