கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
கல்யான தேன் நிலா
************
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே – நான்
அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
அன்று ஒரு நாள் ஆனந்தத் திரு நாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே.. நீ
பார்த்தாயே வெண்ணிலவே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே – நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே .. நீ
சாட்சியடி வெண்ணிலவே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
********************
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞசம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிரு பிள்ளை
தாங்காதம்மா நெஞசம் நீயும் சொன்ன சொல்லை
பொந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
புஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாஙகாத மேகம் ஏது பெண்ணே
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
***************
Thanks:TamilnaduTalk.com