வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்

 

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது?

 

(வாழ்வே)

 

யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ

ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

 

(வாழ்வே)

 

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்

கருவோடு வந்தது தெருவோடு போவது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

 

(வாழ்வே)

 கவிஞர் வாலிபாடல்

source:http://www.tamilnation.org/literature/lyricwriters/vaali.htm#

 

——————————————————————————————————————–

நீ ஒரு காதல் சங்கீதம்

 

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

 

(நீ ஒரு)

 

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்

இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

 

(நீ ஒரு)

 

பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?

தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?

கடற்கரைக் காற்றே

கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு

மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே

தினமும் பயணம் தொடரட்டுமே

 

(நீ ஒரு)

 கவிஞர் வாலிபாடல்

source:http://www.tamilnation.org/literature/lyricwriters/vaali.htm#

 

கொஞ்ச நேரம் கொஞ்சி பேச . . .

MOVIE : CHANDRAMUKI

MUSIC : VIDYASAGAR

SINGERS : ASHA BOSHLE & MADHU BALAKRISHNAN

source:dhool.com

————————————————————————————————————————————–

 

 

 

கொஞ்ச நேரம் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா

இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சும் நீளாதா

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா

 

கண்ணில் ஓரழகு கையில் நூறழகு உன்னால் பூமி அழகே

உன்னில் நானழகு என்னில் நீயழகு நம்மால் யாவுமழகே

கண்ணதாசன் பாடல் வரி போல கொண்ட காதல் வாழும் நிலையாக

கம்பன் பாடி போன தமிழ் போல எந்த நாளும் வேகம் நலமாக

வழி நீயாக வயல் நானாக வெள்ளாமை நீ..

 

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா

 

கொக்கி போடும் விழி கொத்தி போகும் இதழ் நித்தம் கோலமிடுமா

மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகிற உன்னை போல வருமா

வெளி வேசம் போட தெரியாமல் எனதாசை கூட தடுமாறும்

பல கோடி பேரின் அபிமானம் உனக்காக ஏங்கும் எதிர்காலம்

னீ என்னோடு நான் உன்னோடு மெய் தானே இது.. .. .. ..

 

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா

இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சும் நீளாதா

 

 

 

 

 

 

இசைத்தமிழ். . .

“இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சதனை – நீ
இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை?

(இசைத்)

வசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி
மணவாளனே உனது வீட்டினிலே – வெற்றி..
ஒருவனுக்கோ?…மதுரைத் தமிழனுக்கோ?…

(இசைத்)

சிவலிங்கம் சாட்சி சொன்ன
கதையும் பொய்யோ? – மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?…
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?

(இசைத்)

தாய்க்கொரு பழிநேர்ந்தால்
மகற்கில்லையோ? – அன்னைத்
தமிழுக்கும் பழிநேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா – உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கனறி எனக்கில்லை!”

(இசைத்)

படம் – திருவிளையாடல் – வருடம் 1965

courtesy: devakottai.blogspot.com

எத்தனை பேர் உனக்கு நடராஜா

“எத்தனை பேர் உனக்கு நடராஜா
என்ன வயது சொல்வாய் யுவராஜா!….

முத்துத் தமிழ் மதுரை சோமேசா – கங்கை
முத்தமிடும் காசி விசுவேசா
கத்துங் கடல் நாகை சொக்கேசா – இங்கே
காண்பவை யாவும் நீ சர்வேசா

(எத்தனை)

மதுரையிலே உன் மனைவி மீனாட்சி – காசிக்
கரையினில் உன் மனைவி விசாலாட்சி
உன்னுடன் அவள் நடத்தும் அரசாட்சி – இந்த
உலகத்தில் எனக்குக் கண்காட்சி!…

(எத்தனை)

வித்துக் குள்ளே முளைத்த சிவலிங்கம் – உன்னை
விரும்பி நின்றார்க்கு இல்லை ஒரு பங்கம்
சத்திய சபையேறும் ஞானமன்றம் – உன்னைத்
தழுவிக் கொண்டே வருவேன் நீலகண்டம்!…”

(எத்தனை)

படம் -திருநீலகண்டர் – 1972

நடராஜா, யுவராஜா,சோமேசா,விசுவேசா,சொக்கேசா
சர்வேசா என்று தில்லைக்கூத்தனின் பல
திருப்பெயர்களைச் சொல்லி, தான் காண்பது யாவும்
நீதான் என்று முடித்திருப்பதுதான் இப்பாடலின் சிறப்பு

 

courtesy:devakottai.blogspot.com

கண்களிரண்டால். . .

கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய்
போதாதென சின்னசிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்களிரண்டால்)

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

(கண்களிரண்டால்)

பிறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய்
போதாதென சின்னசிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

P.S. You can download this song from the URL

http://tamilmusica.net/index.php?l=12&p=2008/Subramaniyapuram/Kangal%20Irandal.mp3

Source:
http://racingthirst.blogspot.com/2008/07/blog-post.html