அக்டோபர் 29, 2008 இல் 9:57 மு.பகல் (கவிதை)
Tags: கவிதை
எங்கே என் காதலி?
நிலவுப் பெண்ணை
காணப் போகும்
கணத்தை எண்ணி
வெட்கத்தில் சிவந்த
வானம் சிறிதே
எனைச் சிந்திக்க வைக்கிறது.
ஏன் கிடைக்கவில்லை எனக்கொருத்தி?
நான் எழுதும் காதல்
வரிகளின் தீவிரத்தைத்
தாங்கவல்ல பெண்
பிறக்கவில்லையா?
அல்ல எனது வரிகள்
எவளுக்கும் ஏற்றதில்லையா?
இதோ
என்னைப் பற்றிக்
கூறுகிறேன் கேளுங்கள்…
மணிக்கொரு முறை
காதலியை அழகென்று
நான் கூறமாட்டேன்
நீ இல்லாது எனக்கு
வாழ்வில்லை என்று
வழக்காட மாட்டேன்
என் வெற்றிக்கும் தோல்விக்கும்
என்றும் நீயே காரணமென
கூறி எனது 23 வருட
வெற்றி தோல்விகளை
பொய்யாக்க மாட்டேன்
என் பெற்றோரை விட
அவள் முக்கியமென்று
அவளிடமோ, இல்லை
அவளை விட எனது
பெற்றோரகள் முக்கியமென
வீட்டிலோ சொல்ல மாட்டேன்
கணத்திற்கொருமுறை நான் உன்னை
காதலிக்கிறேன் என்று உண்மையை
காற்றோடு கலக்க மாட்டேன்
காதலிக்கிறேன் என்று கூறி விட்டு
பின்னர் புரிந்து கொள்ளத்
துணியும் தைரியமும் எனக்கில்லை,
புரிந்து கொண்ட பெண்ணிடம்தான்
எனது காதலைக் கூறுவேன்.
மேலே சொன்ன சாதாரண
உணர்வுகளை விட
உன்னதமான இடம் என்
உள்ளத்தில் அவளுக்குண்டு
இதற்கெல்லாம் தகுதியானவளை
இன்றல்லா விட்டாலும்
என்றாவது எனக்கு
அறிமுகப் படுத்து.
**************************************
Thanks:cuteanju.blogspot.com
1 மறுமொழி
அக்டோபர் 29, 2008 இல் 9:38 மு.பகல் (கவிதை)
Tags: கவிதை
விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
சரணங்கள்
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு) 1
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு) 2
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு) 3
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 23, 2008 இல் 12:40 பிற்பகல் (கவிதை)
Tags: கவிதை
முன்னேறு!
- பாரதிதாசன்
சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்
பேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!
ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில்
ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.
அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற
அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?
கொண்டு விட்டோ ம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
கொழித்து விட்டோ ம் என்றிங்கே கூறுவார்கள்.
பண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,மு
கம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச்
சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை!
சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!
**********
Thanks:tamil.webdunia.com
1 மறுமொழி
அக்டோபர் 22, 2008 இல் 8:09 மு.பகல் (கவிதை)
Tags: Add new tag, கவிதை
** விதைகள் **
கைகட்டிய சேவகனாய்
பவ்யமாய் உள்நுழைந்தது
பனி விலக்கிய ஒரு மதியப்பொழுது
விலகலின் திசை நேரெதிரென
அறியப்பட்டிருக்கவில்லை அப்போது
இரை விழுங்கி சுருண்டிருக்கும்
சர்ப்பமதின் செரித்தல் நிகழ்வென
மெதுவாய் நடந்தேறியது
வன்மத்தின் வாக்குவாதம்
தென்றலின் தீண்டலை மறுத்துரைத்து
உஷ்ணக்காற்றாய் முகம் கிழித்தது
முள் தடித்த சொற்கள்
எங்கோ பெய்யும் மழையின் மண்வாசனையிலும்
அறுந்து விழும் நூலாம்படையிலும்
கருக்கொண்டுவிடும் இன்னமும்
விஷச்செடியின் வீரியவிதைகளென
- சகாராதென்றல்
நன்றி : உயிரோசை
சுட்டி : http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=378
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Thanks:Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 21, 2008 இல் 12:03 பிற்பகல் (கவிதை)
Tags: கவிதை
ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!
********************
கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் – முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா – முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]
இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா – முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]
சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ – முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]
இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா – முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]
***************
Posted by VSK
Thanks:http://aaththigam.blogspot.com/
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 21, 2008 இல் 9:12 மு.பகல் (கவிதை)
Tags: கவிதை
நரன் கவிதைகள்
நரன்
1.அவன் சிலநேரம்
காற்றில்
அப்படியும்
இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள்
உதிர்கின்றன.
*****
2.எதிர்பார்த்தல்
எதுவுமின்றி
நூறாண்டுக்குப் பின்வருபவர்களுக்கும்
உபயோகமாய்
வாழத் தீர்மானித்தேன் .
நூறாண்டுக்கும் முன்
யாரோ
புதைத்து வைத்த
ஒயின் பீப்பாயை
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கும் போது .
*****
3.பச்சைநிற வயற்பரப்பிலிருந்து
பச்சைநிறத் துண்டு வயற்பரப்புகள்
ஆகாசம் நோக்கிப் பறக்கின்றன
வசந்த காலத்தின்
ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .
*****
4.கொஞ்சம் அரிசியையும்
கட்டுச் சுள்ளியையும்
கொடுத்து உதவினான் .
திரும்ப ஒரு புன்னகையை
வழங்கினேன் அவனுக்கு .
அது மட்டும் தான்
அது மட்டும் தான்
அளிக்க முடிந்தது என்னால்
அப்போதைக்கு .
*****
5..ஆறு மாதத்திற்குப் பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் …..
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ …..
என் தியானம்
எப்படிக் கழியும் அமைதியுடன் .
*****
6.வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை
மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்துக் கொண்டிருக்காதே .
அதனதன் இயல்பிலிருக்கின்றன
பூக்கள் .
*****
7.வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .
மரங்கள் அவற்றை
தன் அருகிலிருக்கும் துணைமரங்களுக்கு
கைமாற்றி விட்டுக் கொண்டிருந்தன .
*****
8.தொடர்ந்து
இயற்கையை அவதானித்துக்
கொண்டிருந்தேன்….
………தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம் கையளித்துவிட்டு
செல்கிறேன் .
மரங்களும்
தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .
*****
9.என்னோடு
இந்த தியானவிரிப்பின்
மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .
கண்களை மூடி
தியானிக்கத் துவங்கினேன்
தியானம் இப்போது
மூலையிலிருந்து
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல் .
*****
10.தியானத்திற்குப்பின்
மூன்று துறவிகளும்
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
குளித்து முடித்து வெவ்வேறு
கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .
முதல் துறவி சொன்னார் .
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
இரண்டாம் துறவி ……..
நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.
மூன்றாம் துறவி ………..
நான் குளித்த கிணற்றில்
27தவளைகளும் ,
நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டன.
*****************
Thanks:http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=377
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 21, 2008 இல் 6:05 மு.பகல் (கவிதை)
Tags: Add new tag, கவிதை
சமனில்லாக் கால்கள்
வசீகர பூமியின்
நிழற்சாலையில்
முன்னகர்ந்துக்கொண்டிருக்கின்றன
கால்கள்
நெரிசலில் முட்டியும்
பினைந்தும்
விரட்டியும்
தாவியும்
விந்தியும்
வேகம் கூட்டியும்
தளர்ந்தும்
தனித்து விலகிய
ரகசியகண்களிரண்டு
சமனில்லாத என் கால்கள்
நின்ற இடத்தில் நிற்பதையும்
சமயங்களில்
எடுத்து வைக்கும் அடிகள் கூட
பின்னகர்ந்துக்கொண்டிருப்பதையும்
வினோதமாகப்பார்த்துச்செல்கிறது
*********
நன்றி : உயிரோசை
–
http://nathiyalai.wordpress.com/
–~–~———~–~—-~——
Piravakam@googlegroups.com
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 21, 2008 இல் 5:45 மு.பகல் (கவிதை)
Tags: கவிதை
உன்னோடு இருந்திருப்பேன்…
சுகம் தரும் உலகம் தான்,
பல நண்பர்கள் என்னோடு,
விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;
இருந்தென்ன பயன்
உன் சுட்டு விரல் தீண்டலின்றி?
தாயே உன் கணினியாய் நானிருந்திருந்தால்
உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….
**********
கல்லா மனிதன் மனம்?
ஏதோ நினைவுடன்
தனியே நடக்கையில்
ஓரு கல்லில் கண்டேன்,
ஒற்றை இதழுடன் மஞசள் மலர்
குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்
யார் ஒப்பிட்டது
மனிதர் மனத்தைக் கல்லோடு………
**********
நண்பா நீ என் வேர்!!
இன்ப நொடிகளில்
கனவுக் காலங்களில்,
வெற்றித் தருணங்களில்
உன் நினைவுகள் வருவதே இல்லை
ஆனால் தோல்வியின் துயரத்தில்
மனம் விரிசல் காண்கையில்
வாழ்க்கை உலர்ந்து கிடக்கையில்
பற்றற்று மரமாகிப் போகையில்-தான்
உணர்ந்து கொள்கிறேன்
என் வேர் நீயென்று…
*************
- மலர்விழி
Thanks:http://www.nilacharal.com/ocms/log/05260805.asp
1 மறுமொழி
அக்டோபர் 20, 2008 இல் 2:35 பிற்பகல் (கவிதை)
Tags: கவிதை
மழைக்குறிப்புகள்
>
> வீட்டு முற்றத்தில்
> தேங்கிய மழைநீரில்
> விளையாட
> கத்திக்கப்பல் செய்து தாவென
> நச்சரிக்கிறாள் மது
> பழசின் அதிர்வுகள் உறுத்த
> வேண்டுமட்டும் செய்துதருகிறேன்
> தெறித்த மழையின்துளிக்கு
> மூழ்கிய கப்பலின் சோகம் அழுத்த
> வீரிட்டு அழுகிறாள்
> தேற்ற வழியின்றி தவிக்குமென் நினைவுகளில்
> உடைகிறது ஒரு
> சிறு குமிழி
************
> – சகாராதென்றல்
Thanks:Piravakam@googlegroups.com
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 20, 2008 இல் 2:27 பிற்பகல் (கவிதை)
Tags: கவிதை
எந்த ஆரூடங்களாலும்
ஊகிக்கவே முடியாத
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு
காலத்தை நீ கொண்டிருக்கிறாய்
இதிகாசத்திலிருந்து நீ வாழ்ந்துவரும்
புராதனக் குடியிலிருப்பிலின்னும்
பூதங்களின் ஆட்சி தொடர்வதை – நீ
சொல்லிச் சொல்லியழுத வேளை
எதைக் கொண்டும் அணைக்கமுடியாத
சினக் கனலொன்று என்னுள்
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று
உனது விரல்கள் வடிக்கும்
உக்கிர ஓவியங்களைப்
பார்த்து,ரசித்து – உன்னை
உச்சத்தில் வைத்திடக் காலம்
பலபேரைக் கொண்டிருக்கையில்
எந்தச் சத்தியங்கள்
சகதிக்குள் புதைந்தனவோ…
எந்த வீரப்பிரதாபங்கள்
வெட்டவெளியிலலைந்தனவோ…
எந்த சுபவேளை கீதங்கள்
ஒப்பாரிகளாக மாறினவோ…
எந்தப் பிசாசுகள் உன்னில்
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ…
அத்தனையும் இன்னுமேன்
உன் நினைவுக்குள் இடறவேண்டும்
உன் விழி துடைக்க – பிற
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து
ஒற்றை இறகாவது நீளும்
உன்னை உறங்கச் செய்யும்
மந்திர வித்தையொன்றைக்
காற்றும் ஒருநாள் ஏகும்
நம்பு
அன்றைய தினமதில்
பூதங்களும் அவற்றின் அடிமைகளும்
பேரதிர்ச்சியில் பார்த்துநிற்க
சவால்களனைத்தையும் விழுங்கி
உன் மேனி சிலிர்த்து
ஆதிகாலந்தொட்டு வரும்
அத்தனை காயங்களையும்
ஒரு கணத்தில் உதறுவாய்
வீழும் வலியனைத்தும் படபடத்துச்
செத்துமடியும் – பிசாசுகளின்
எல்லை தாண்டிப் பறந்த உன்னை
நண்பர்களின் உலகம்
கைகோர்த்து வரவேற்கும்
அப்பிரகாச நாளில்
என்னை மறந்திடுவாயா சினேகிதி?
*********
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Thanks:Piravakam@googlegroups.com>
கருத்துத் தெரிவிக்கவும்