ஆஸ்திரேலிய தம்பதியரைக் காப்பாற்றிய முயல்

ஆஸ்திரேலிய தம்பதியரைக் காப்பாற்றிய முயல்

சிட்னி
வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு முயல், பேராபத்திலிருந்து அந்த வீட்டின் உரிமையாளரைக் காப்பாற்றியிருக்கிறது.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் நடந்தது.
கணவனும் மனைவியும் தங்கள் வீட்டு படுக்கை அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
எதிர்பாராத விதமாக பக்கத்து அறையில் தீ பற்றியதால் வீடு முழுவதும் புகை சூழ்ந்தது.
புகை வாசனையை நுகர்ந்த அந்த வீட்டு முயல் உடனடியாக, அந்த ஆஸ்திரேலியர்கள் தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை சுரண்டியது.
சத்தம் கேட்டு எழுந்த அந்த வீட்டின் உரிமையாளர் வெளியில் வந்து பார்த்தபோது பக்கத்து அறையில் தீப்பற்றிக் கொண்டதைப் பார்த்தார்.
உடனடியாக அவர் தீயணைப்பாளர்களை அழைத்தார். நான்கு தீயணைப்பாளர்கள் வந்து அத்தீயை அணைத்தனர்.
பெரிய ஆபத்திலிருந்து அந்தத் தம்பதியரை அந்த முயல் காப்பாற்றியது என்று தீயணைப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார். ஏஎப்பி

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers