ஹரிலால் காந்தி: எ லைஃப்

ஹரிலால்

-சங்கர ராம சுப்ரம்ணியன் ஹரிலால் காந்தி எ லைஃப்

புத்தகம்: ஹரிலால் காந்தி: எ லைஃப்
ஆசிரியர்: சந்துலால் பாகுபய் தலால்
வெளியீடு: ஓர்யண்ட் லாங்மேன்

["ஹரிலால் காந்தி: எ லைஃப்" - எனும் நூல் காந்தியின் மூத்த மைந்தன் ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலாகும். குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் த்ரைதீப் ஷ்ருத் என்பவர், இவர் அரசியல் விஞ்ஞானி மற்றும் கலாச்சார வரலாற்றியலாளர் ஆவார், நாராயண தேசாய் எழுதிய காந்தி வாழ்க்கை வரலாற்று நூல் 4 தொகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவர் சபர்மதி ஆசிரமத்திலும் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.]

காந்தியின் மூத்த மைந்தன் ஹரிலால் இளம் வயதிலிருந்தே தனது தந்தையின் வாழ்க்கைத் தத்துவம் மற்றும் மதிப்பீடுகளில் அதிருப்தி கொண்டிருந்தார். காந்தி தனது மதிப்பீடுகளுக்காக ஹரிலாலையும் சகோதரர்களையும் நவீன கல்வியை கற்க விடாமல் விலக்கி வைத்தார் என நம்பினார். இப்படிச் செய்வதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிய தவறைச் செய்தார் என்றும் ஹரிலால் நம்பினார்.

அதனால் ஹரிலால் தனது இளமையிலிருந்தே காந்தியை பழிவாங்கத் தொடங்கித் தன் விருப்ப‌ப்படியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துச் சென்றார்.

ஹரிலால் மேற்கொண்ட பாதை அவரை சீரழித்தது, அவரைக் குறைப்படுத்தியது. காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, ஹரிலால், காந்தியுடன் சேர்ந்து பல அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைக்கும் சென்றுள்ளார். இதெல்லாவற்றையும் மீறித் தந்தையைப் புறக்கணிப்பதில் மூர்க்கமாக அவரது இச்சை செயல்பட்டது. தனது தோல்விகள் அனைத்திற்கும் காரணம் தந்தைதான் என்னும் காரணம் அவர் வாழ்க்கை முழுவதும் துரத்தியது. அவரும் தந்தையை எதிர்த்து ஓடினார் தோல்வியின் வெவ்வேறு சாத்திய மூலைகளுக்கு.

ஹரிலால் காந்தியின் உறுதிப்பாட்டை நம்ப இயலவில்லை. ஒருவர் தன் குழந்தைகளை விட மற்ற குழந்தைகளை எப்படி நேசிக்க முடியும்? காந்திக்கு முஸ்லிம்கள் மேல் இருந்த நேசத்தை நாதுராம் கோட்சே எப்படிப் புரிந்து கொள்ள முடியவில்லையோ, அதுபோல ஒரு வகையில் நாம் ஹரிலாலையும் கோட்சேயையும் ஒப்பிடாமல் இருக்க முடியாது.

தந்தைக்கும் மகனுக்கும் இரு அடிப்படைகளின் மோதல்தான் தொடர்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும்.

ஹரிலால் மதுவிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். காந்தியோ ராம நாமத்துக்கு. ஹரிலால் சபலங்களுக்கு உட்பட்டார். தந்தையோ பிரம்மச்சரியத்தை வென்றார். மோட்சம் கூட சாத்தியமாகியிருக்கலாம்.

நாம் கவனமாகப் பார்த்தால் இருவருக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கும்.

ஹரிலாலின் கலகத்தன்மை காந்தியின் வைராக்கியத்தை உரமேற்றியிருக்கலாம். தம்மால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்ற உணர்விலிருந்து இது எழுந்திருக்கக் கூடும்.

ஹரிலால் இத்தனை முரண்களுக்கு இடையிலும் தந்தை மீதும், தாயின் மீதும், அளப்பரிய பிரியத்தைக் காண்பித்துள்ளார்.

காந்தியின் வாழ்க்கையில் ஹரிலால் என்பவன் எதற்குள்ளும் அடங்க மறுக்கும் தன் சுமை துறந்த ஒரு விடுதலைத் தேவன்.

அந்த வகையில் ஹரிலால் மேற்கொண்ட சுய அழிவு பரிவுடன் பரிசீலிக்கப்பட வேண்டியது.

ஹரிலால் குறித்த இப்புத்தகத்தை படிக்கும்போது காந்தி, ஹரிலால் என்ற இரு ஆளுமைகளுமே நம் மதிப்பில் உயர்வார்கள்.

காந்தி இந்தியாவை தனது ஆசிரமமாகவே பார்த்துள்ளார். இந்தியாவைத் தனது கருப்பையாகவே அவர் உருவகம் செய்திருக்கக் கூடும

தந்தையின் பெரு நிழலின் கருப்பை விழுங்கித் தீமையும் துரதிர்ஷ்டமுமான பாதையில் சென்ற ஹரிலாலுக்கு வேறு தேர்வு இருந்திருக்க முடியாது. ஏனெனில் நன்மையின் பெரு வெளிச்சமாய்த் தந்தை இருக்கும்போது சாகச உணர்வுள்ள ஒரு ஹரிலாலின் இருத்தல் வேட்கை இப்பாதையிலேயே அவரைச் செலுத்தியிருக்கும்.

இப்புத்தகத்தை படிக்கையில் காந்தி நூற்ற தர்ம ராட்டையின் நூலில் கஸ்தூரிபாயின் குருதியும், ஹரிலாலின் குருதியும் படிந்திருக்கின்றன என்ற எண்ணத்தை அகற்றமுடியவில்லை.

ஹரிலால் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள், துரதிர்ஷ்டம் துரத்த இளைப்பாற இடமில்லாமல் அலைந்து கொண்டிருப்பவனின் காதலும், விரகமும் தகிக்க எழுதப்பட்டவை. ஓர் அளவில் புதுமைப்பித்தனின் ‘கண்மணி கமலாவுக்கு’ – கடிதங்களை ஞாபகமூட்டுபவை. புதுமைப் பித்தனும் தந்தையை மறுதலித்து இருட்டின் புதிர்ப்பாட்டையில் பயணித்தவர்தானே.

ஹரிலா‌லின் முடிவு காந்தி தன் மறதியில் ஒரு இருள் தருணத்தில் வேண்டிக் கொண்ட அந்தரங்கப் பிரார்த்தனையால் கூட விளைந்திருக்கலாம். காந்தியை பறிகொடுத்த துக்கத்தில் தவிக்கும் அன்னையாகக் கற்பனைச் செய்ய ஏதுள்ள கல்பற்றா நாராயணனின் கவிதை இது:

மகன் இறந்த ஓர் அன்னை
யுதிஷ்ட்ரனை அணுகி
ஏனிப்படி எனக்கு நிகழ்ந்தது என்றாள்.
பதிலுக்கு யுதிஷ்ட்ரன் சொன்னான்
உற்றவரின் ஆசையின்படி அன்றி
மண்ணில் ஒரு குழந்தையும் இறப்பதில்லை
எந்தக் கொடுந்துயரும்
நிராகரிக்க முடியாத விண்ணப்பத்தின் விளைவே
நினைக்காதது நடக்குமளவுக்கு
பெரிதல்ல இவ்வுலகம்
நினைத்துப் பார்
எப்போதும் நீயும் உள்ளெரிந்து பிரார்த்தனை செய்திருப்பாய்.

ஆனால் அது…
அவள் நினைவு கூர்ந்து சொன்னாள்
அப்படி நிகழவேண்டும் என்று எண்ணி அல்ல
அடுத்த கணமே என்னை நானே
கிழித்து ரணமாக்கியிருக்கிறேன்

தெய்வமே நான் சொன்னதென்ன என்று
தீயிலிருந்து விரலெடுப்பது போல
அச்சொல்லிலிருந்து என்னை
இழுத்துக் கொண்டிருக்கிறேன்
பெற்ற தாயின் சொல்லல்லவா
பலிக்காதென்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்.
நான் எப்போதும் வேண்டிக்கொண்டிருந்த எதுவும் கேட்கப்படாமல்
இது மட்டுமே கேட்கப்பட்டது என்கிறாயா?
எத்தனை நெருக்கமானவர்களிடமும் கேட்க வழியில்லாத
பிற எவரிடமும் வேண்டிக்கொள்ள முடியாத
கலப்பற்ற அவசரமான
ஒரு வேண்டுகோள்
அதுவும் ஒரு பெற்ற தாயின் விண்ணப்பம்
எப்படிக் கேட்கப்படாது போகும்?
அந்த அன்னை சொல்லாததனால் போலும்
இதுவரை வெளியே தெரியவில்லை இக்கதை.

(தமிழில் : ஜெயமோகன்)

நன்றி: மணல் புத்தகம் 2 சிற்றிதழ்)
tamil.webdunia.com

ஆத்திசூடி

ஒளவையார் நூல்கள்

1.ஆத்திசூடி

1.1 உயிர் வருக்கம்

1.2 உயிர்மெய் வருக்கம்

1.3 ககர வருக்கம்

1.4 சகர வருக்கம்

1.5 தகர வருக்கம்

1.6 நகர வருக்கம்

1.7 நகர வருக்கம்

1.8 மகர வருக்கம்

1.9 வகர வருக்கம்

——————————————————————————–

1.1 உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அ•கம் சுருக்கேல்

——————————————————————————–

1.2 உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செய்யேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செய்யேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்

மேலே செல்ல….

——————————————————————————–

1.3 ககர வருக்கம்

32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கெளவை அகற்று

——————————————————————————–

1.4 சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சோ¢டம் அறிந்து சேர்
52. சையெனத் தி¡¢யேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் தி¡¢யேல்

மேலே செல்ல….

——————————————————————————–

1.5 தகர வருக்கம்

55. தக்கோன் எனத் தி¡¢
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ் 63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

——————————————————————————–

1.6 நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பி¡¢யேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்
——————————————————————————–

1.7 பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்

மேலே செல்ல….

——————————————————————————–

1.8 மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி

——————————————————————————–

1.9 வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

நன்றி; http://tamil.ellamey.com/tamilovium/avvaiyar.html

சூரியனின் தமிழ்ச் சொற்கள்

சூரியன் என்பது வடமொழிச் சொல் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? சூரியனின் தமிழ்ச் சொற்களை இங்கே அளிக்கிறேன்.

பரிதி
ஞாயிறு
ஒள்ளி
சுள்ளான்
ஒளியவன்
திகிரி
இரவி
சுடரோன்
வெய்யோன்
பகலவன்
உதயன்
சுடர்
கிரண்
அருணன்

 

நன்றி; ஒளியவன்

தாலாட்டில் கொஞ்சும் தமிழ்

தாலாட்டில் கொஞ்சும் தமிழ்

 

.

 

.

பிள்ளைத்தமிழ் என்ற சிறு நூல் வகை தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் 10 பருவங்களில் தாலப்பருவமும் ஒன்று. இந்த தாலப்பருவத்திற்கு ஏற்ற பாட்டு தாலாட்டு ஆகும்.
நாட்டுப்புற பாடல் வரிசையில் வழங்கி வந்த தாலாட்டை முதன் முதலில்

இலக்கியமாக்கியவர்கள் ஆழ்வார்கள்தான். அவர்கள் கண்ணனைக் குழந்தையாக கருதித் தாலாட்டினார்கள். கிராமப்புறங்களில் படிப்பறிவில்லாத தாய்மார்களின் தாலாட்டிலும் தமிழின் இனிமையையும், சிறப்பையும் நாம் காணலாம்.

.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பாண்டிய நாட்டு சீமையில் வழங்கப்படும் தாலாட்டு பாட்டில் தமிழின் இனிமை மட்டுமல்லாமல் எதுகை, மோனை உள்ளிட்ட சிறப்புகளும் தென்படும்.

ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணேஎன் கண்மணியே
கடிந்தாரைச் சொல்லி அழு
கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
ஆரும் அடிக்கவில்லை, ஐவிரலும் தீண்டவில்லை
அவனா அழுகின்றான் ஆத்தாள் மடிதேடி
தானா அழுகின்றான் தம்பி துணை வேணுமென்று
இந்த தாலாட்டுப் பாடல் அழுகின்ற குழந்தையை சமாதானப்படுத்தும் வகையில் தாயார் பாடுவது போல அமைந்துள்ளது. மெல்லிய மல்லிகைப்பூ, அல்லிப்பூவால் அடித்தால் கூட கன்றிப்போகும் மென்மையான தேகம் கொண்ட குழந்தை அது என்றும், மலரால் அடித்தவர்களை விலங்கு போட்டுக் கடுமையாகத் தண்டிப்போம் என்று தாயார் சமாதானப்படுத்துகிறாள் என்றும் வெளிப்படும் பாடலின் நயம் வியந்து பாராட்டத்தகுந்ததாம்.
யாரும் அடிக்கவில்லை பசியால்தான் குழந்தை அழுகிறது என்று கூறும் தகப்பன், தனது இச்சையையும் அங்கே நாசூக்காக பதிய வைக்கும் நயத்தையும் இப்பாடலில் காணலாம்.

 

 

Source: http://www.maalaisudar.com/staticpage.php?id=1378&section=25&%20catid=78

சீதையின் சாபம்

சீதையின் சாபம்

கூசி, மணி, பாசி, நரித்தோல், நரிக்கொம்பு (!) விற்று நாடோடிகளாகத் தமிழகம் எங்கும் சுற்றி வரும் நரிக்குறவர்களைத் தமிழகத்தின் பூர்வ குடிகள் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். அவர்களது தாய்மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது அல்ல.

நரிக்குறவர்கள் தம்மைவாக்ரிஎனக் கூறிக் கொள்கின்றனர். அவர்கள் பேசும் மொழியின் பெயர்வாக்ரிபோலி‘. மகாராஷ்டிரம், குஜராத் அல்லது ஆரவல்லி மலைத்தொடரை ஒட்டிய வட இந்தியப் பிரதேசங்கள் நரிக் குறவர்களின் பூர்வீகம்.

மராட்டிய மொழியில்வாக்ரிஎன்றால் புலி எனப் பொருள்படும். தாங்கள் மராட்டிய சிவாஜியின் வம்சத்தில் வந்த புலியினத்தவர்கள் என்று நரிக்குறவர்கள் கூறுகின்றனர். குஜராத்தி மொழியில் வாக்ரி என்பது குருவியைக் குறிக்கும். குருவியை இவர்கள் வேட்டையாடுவதால் அப்பெயர் வந்திருக்கலாம்.

ஒரு பெண்ணின் சாபத்தால் தாங்கள் நாடோடிகளாக ஆனதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆற்றில் சீதை குளிப்பதைப் பார்த்ததால் சபிக்கப்பட்ட மனிதன் என்கின்றனர் அவர்களில் சிலர். மற்றும் சிலர், தங்களது மூதாதையர் சீதையைக் கேலி செய்து பேசியதால் அவள் கோபமுற்று “”நீ பறவைகளைக் கண்டால் வேட்டை க்காரனாவாய், இல்லையெனில் பிச்சைக்காரனாவாய்!” என்ற சாபம் பெற்றார் தம் மூதாதையர் என்கிறார்கள்.

நரிக்குறவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் வாழுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரால் அவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆந்திராவில்நக்கலா எனவும் கேரளாவில்குருவிக்காரர்என்றும் கர்நாடகாவில்ஹக்கிபிக்கிஎன்றும் மகாராஷ்டிராவில்பார்தாஎன்றும் குஜராத் மற்றும் ராஜஸ்தானில்வாக்ரிஎனவும் அழைக்கப்படும் நரிக்குறவர்களுக்கு கல்கத்தாவில் வழங்கும் பெயர் வித்தியாசமானது. கல்கத்தாவாசி நரிக்குறவனுக்கு தந்துள்ள பெயர் சிங்களன்.

 

 source:www.kalaikesari.com/culture

 

தாய்த் தமிழைத் தூய்மை செய்வோம்

தாய்த் மிழைத் தூய்மை செய்வோம்

 

-ம்பார் னிமொழி குப்புசாமி-

 

மொழி -                      மிழ்

 

அதம்செய்தது யானைஅழிவுசெய்தது யானை

அதர்மம் செய்யற்க‌! – தீமை செய்யற்க‌!

அதிசமாய் இருக்கிறதுவியப்பாய் இருக்கிறது

அதிபதியானான்பெருந்தலைவனானான்

அதிபர் ந்தார்லைவர் ந்தார்

அதிர்ஷ்டமாகக் கிடைத்ததுல்வாய்ப்பாகக் கிடைத்தது

அதிரம் வேண்டுமா? – ண்ணியாரம் வேண்டுமா?

அதிருப்தி ந்ததுக்குறை ந்தது

அதோகதி அடைந்தான்கீழ்நிலை அடைந்தான்

அந்தங்கமாகப் பேசினான்முக்கமாகப் பேசினான்

அந்தமில்லாதது அறிவுமுடிவில்லாதது அறிவு

அந்தஸ்தைப் பார்ப்பதில்லைத்தை பார்ப்பதில்லை

அந்தாதிப் பாடல்கள்டைமுதல் பாடல்கள்

அந்திமக் காலம்வரையில்இறுதிக் காலம்வரை

அந்நியனாகஎண்ணாதேவேற்றாளாகஎண்ணாதே

அநாதையாய்த் திரிகிறான்எதிலியாய்த் திரிகிறான்

அநாமதேயஅறிக்கைபெயரற்றஅறிக்கை

அநியாயமாகப் பேசாதே! – நேர்மையின்றிப் பேசாதே!

அநீதி இழைக்காதே! – தீங்கு இழைக்காதே!

அப்பாவி க்கள்குற்றற்றக்கள்

அப்பாவி அவன்வெள்ளைமத்தான் அவன்

அப்பியாசம் செய்தான்யிற்சி செய்தான்

அப்பிராயம் உண்டுஎண்ணம் உண்டு

அப்பிராயம் கூறினான்ருத்துக் கூறினான்

அப்பிராணி இவன்அறியாதன் இவன்

அபரிக்காதே பொருளைறிக்காதே, பொருளை

அபச்சாரமானசெயல்திப்பற்றசெயது

அபத்தமாய்ப் பேசாதேபொய்மொழி பேசாதே

அபம் அளித்தான்ஞ்சளித்தான்

அபராதம் ட்டினான்ண்டம் ட்டினான்

அபரிமிதவிளைச்சல்அளவில்லா விளைச்சல்

அபலைப் பெண்ணள்பேதைப் பெண்ணள்

அபாயத்திற்குரியஇடம்பேரிடர்க்குரியஇடம்

அபாயம் லாம்கேடு லாம்

அபாயத்திற்கு ழியாகும்ஏதத்திற்கு ழியாகும்

அபாயம் ருமா? – இடர் ருமா?

அபாரவெற்றிபெரு (நிலை) வெற்றி

அபாரமானவிளையாட்டுமிகச்சிறப்பானவிளையாட்டு

அபிநத்தோடு ஆடினாள்ளிநத்தோடு ஆடினாள்

அபிப்பிராயம் என்ன‌? – ருத்து என்ன‌?

அபிப்பிராயப்பட்டான்விருப்பப்பட்டான்

அபிப்பிராயம் கேட்டாயா? – ருத்துக் கேட்டாயா?

அபிமானமுண்டு உன்னிடம்திப்புண்டு உன்னிடம்

அபிமானம் உண்டுன்மதிப்புண்டு

அபிமானியானன்ற்றாளனானன்

அபிவிருத்தி ண்டதுர்ச்சி ண்டது

 

ஓலை சுவடியை சமர்ப்பித்தவர்; சதீஷ் குமார்

ஞாயிறு ண்பன் (04.05.2008)              

 

Courtesy:http://olaichuvadi.blogspot.com

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers