கோயில்ல, நம்ம காதுல விழறதுல சில‌….

நாம எல்லாம் கோயிலுக்குப் போறோம், போன இடத்துல அதுன்னுவாங்க, இதுன்னுவாங்க. நாமளும் புரிஞ்சா மாதிரி தலைய ஆட்டிட்டு வந்துருவோம். என்ன செய்ய? திருப்பிக் கேட்டாக்க, அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க. சிற்பிக, கோவில்லயே புழங்கறவங்களுக்குத் தெரியும். அப்படி அவிங்ககிட்ட தெரிஞ்சிகிட்டதுல இருந்து தெரிஞ்ச, கிடைச்ச கொஞ்சத்தப் பாக்கலாங்க இப்ப.

1. அங்கணம் – தூணிடைவழி
2. சந்திரசீலா – நிலாப்படி
3. கண்டம் – கழுத்து
4. அதபத்மம் – கீழ்நோக்குத் தாமரை
5. ஊர்த்வ பத்மம் – மேனோக்குத் தாமரை
6. பிரதி – மேற்கம்பு
7. ஸ்தம்பம் – தூண்
8. குத்ய ஸ்தம்பம் – அரைத்தூண்
9. பத்ம பந்தம் – தாமரைக் கட்டு
10. மத்ய பந்தம் – இடைக்கட்டு
11. நாகபந்தம் – பாம்புப் படம்
12. மாலாஸ்தானம் – மாலையிடம்
13. கலசம் – பானை
14. தாடி – மூடி
15. கும்பம் – குடம்
16. தரங்கம் – அலை
17. கோஷ்டம் – மாடம்
18. லலாட பிம்பம் – நெற்றி வடிவம்
19. உத்தரம் – விட்டம்
20. கபோதம் – கூரை நீட்சி
21. ஹம்சமாலா – வாத்துவரி
22. ஹாரம் – மாலை
23. ஹாராந்தரம் – மாலை இடைவெளி
24. அர்பிதம் – ஒட்டிய மாலை
25. அனர்பிதம் – விலகிய மாலை
26. மஹா நாஸிகை – பெருஞ்சாளரம்
27. அல்ப நாஸிகை – சிறு சாளரம்
28. சூத்ர நாஸிகை – குறுஞ் சாளரம்
29. அரமியம் – தளச்சுவர்
30. விமானம் – இறையகம்

 

மேலதிகமா, உஙளுக்குத் தெரிஞ்சதையும் சொல்லுங்க. சேத்துக்குவோம்!
*********************
Thanks:http://maniyinpakkam.blogspot.com/2008/10/blog-post_28.html

 

ஸென் கதைகள்.

Daily A Zen Story – தினம் ஒரு ஸென் கதை கோமாளித்தனமான கதைகள் பல. மண்டையை குடைய வைக்கும் புதிர்க் கோஆன் கதைகள் சில. சா’ன் (சைனா), ஸென்(ஜப்பான்), ஸாசன் (ஜப்பான்), ஜென் (தமிழ் நாடு) எனப் பல பெயர் ஆனாலும் தியானம் என்ற சமஸ்கிரித வார்த்தையின் மறுவிய பெயர்களே இவை.
**********************.

பதிலா உயிரா? –

ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா’ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, “உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்” என்றவர், “கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, ‘மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?’ என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, “எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?” என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.

***********

நதியினைக் குடி –

ஒரு சமயம் பா’ன் யூன் என்ற துறவி, சா’ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, “எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?” என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா’ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.

மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான்.

“நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்” என்ற பதிலே கிடைத்தது.

அதனைக் கேட்ட பா’ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான்.

************

உருவ வழிபாடு

ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா’ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான்.

ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், “உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்” என்று கேட்டான்.

“நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை” என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், “நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்” என்றார்.

கொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், “உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே?” என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.

அவனுடையக் கன்னத்தில் “பளார்” என்று அறைந்தார் ஹுவாங்னியா.

வாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், “ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்?” என்று கோபத்துடன் கேட்டான்.

“ஏன்” என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, “உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது” என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.

************

ஸென் கல்வி

ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, “உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்?” என வினவினார். “என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர்” என்று சீடன் பதிலுரைத்தான்.

“நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன்” என்ற ஜிஸோ, “ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய். உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன், ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய். உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன்; ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய்” என்றார்.

***********

கற்பாலம்

இன்றைய கோஆன் மிகவும் புகழ் பெற்றது. இது சாவோ சாவ் என்ற நகரத்தில் வாழ்ந்த என்பது வயதான சவோ சாவிற்கும் (ஊரின் பெயரே ஸென் குருவின் பெயராகி விட்டது. இந்தியாவில் கூட ஊரின் பெயரே புகழ் பெற்றவர்களின் பெயர் ஆகிவிடுவதுண்டு. நாளடைவில் புகழ் பெற்றவர் ஊர் பெயராலேயே அழைக்கப் படுவது வழக்கம்.) அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவி ஒருவருக்கும் நடந்த உரையாடலாகும்.

குரு சாவோ சாவிடம் வந்த துறவி ஒருவர், “வெகு நாட்களுக்கு முன்பிருந்தே சாவோ சாவிலிருக்கும் புகழ் பெற்ற கற்பாலத்தினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இங்கு வந்த பின்பு நான் பார்ப்பது என்னவோ வெறும் சாதரண மரப்பாலம்தான்” என்றார்.

சவோ “மரப்பாலத்தினை மட்டும் தான் உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால் கற்பாலம் இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை” என்று பதிலுரைத்தார்.

துறவி, “கற்பாலமா என்ன?”

சவோ, “கழுதைகளையும் கடக்க வைக்கிறது, குதிரைகளையும் கடக்க வைக்கிறது”.

**************

கண்ணாடியான செங்கல்

சைனாவின் சூஷுவானில் பிறந்த சா’ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான்.

நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா’னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார்.

ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, “எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா’ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?” என்று கேட்டார்.

“புத்தாவாக மாறுவதற்கு” என்று பதில் வந்தது.

உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார்.

இளம் துறவியான மாசூ, “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

“செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?” என்றான் மாசூ.

“நீ உட்கார்ந்த சா’ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?” என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங்.

கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, “ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்” என்றான்.

“நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்” என்ற ஹுவாய் ஜாங், “அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டவர், பின்பு தொடர்ந்து, “உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?” என்ற கேள்வியினைத் தொடுத்தார்.

மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு “நீ உட்கார்ந்த நிலையில் சா’ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது ‘உட்கார்ந்த புத்தா’வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?” என்று கேட்டார். “நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள் தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா’ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது.” என்றார்.

குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.

***************

நிலவைச் சுட்டிக் காட்டு –

ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும்.

முதலாம் துறவி சா’ன் குரு ஃபாயானிடம் “குருவே, உங்களிடம் நான் ‘சுட்டு’ என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. ‘நிலா’ என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்” என்று கேட்டான்.

” ‘சுட்டு’ என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார் சா’ன் குரு.

அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, “குருவே, உங்களிடம் ‘நிலா’வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. ‘சுட்டு’ என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்” என்று கேட்டான்.

“நிலா” என்பதே பதிலாக கிடைத்தது.

“நான் உங்களை ‘சுட்டு’ என்பதன் பொருளைத் தான் கேட்டேன்” என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், “எதற்காக ‘நிலா’ என்று பதில் அளித்தீர்கள்?”

“ஏனேன்றால் ‘சுட்டு’ என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்” என்றார் குரு.

Source: Pointing at the moon by Alexander Holstein

************

——————————————————————————–

கதைகளை தொகுத்ததும், மொழிபெயர்ப்பும் – கங்கா

முகவரி: SI, New York, United States

Thanks:http://zendaily.blogspot.com/

முருகனைத் துதித்திடு!

முருகனைத் துதித்திடு!

மலைகளில் உறைபவன்

மருந்தாகி நிற்பவன்

மறைகளைத் தந்தவன்

குறைகளைக் களைபவன்!

மயில்மீது வருபவன்

மங்கலங்கள் அருள்பவன்

பழநி மலையில் இருப்பவன்

பக்தர்களைக் காப்பவன்!

வள்ளியை மணந்தவன்

வள்ளலாகத் திகழ்பவன்

வடிவேல் கொண்டு வருபவன்

வலிமையைத் தருபவன்!

சுட்டபழம் தந்தவன்

சுப்ரமண்யன் ஆனவன்

சூரனை வதைத்தவன்

சுகந்தனைத் தருபவன்!

முருகனைத் துதித்திடு

முறுவலை வளர்த்திடு

மக்களை மதித்திடு

மனித நேயம் காத்திடு!

மரியாதை தந்திடு

மகிழ்ச்சியோடு இருந்திடு

மனத்தூய்மை காத்திடு

மற்றவர்க்கு உதவிடு!

************

என்.வி. சுப்பராமன்
Thanks:http://www.mazhalaigal.com/tamil/poems/poems-001/0806nvs_murugan.php

அம்பாஜி

நம் நாட்டி‎ன் நாற்புற திசைகளிலும் நான்கு சக்திகள் நம் எல்லைகளைக் காத்து வருகின்றனர். வடக்கே வைஷ்ணவ தேவி, கிழக்கே மஹாகாளி, தெற்கே கன்யாகுமரி, மேற்கே அம்பாஜி என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். இந்த இடங்களில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் பகலவனைக் கண்ட பனி போல மறைந்து விடுகின்றன.

நாம் இப்போது மேற்கு பக்கம் இருக்கும் அம்பாஜியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இந்த அம்பாஜி குஜராத் மாநிலத்தில் ராஜஸ்தான் எல்லையை ஒட்டி பனஸ்காந்தா மாவட்டத்தில் இருக்கிறாள். இவள் பெயர் ஸ்ரீஆராஸ¤ரி அம்பாஜி என்றாலும் இவளைச் செல்லமாக எல்லோரும் அம்பாஜி என்றே அழைக்கின்றனர். ஆரவல்லி மலைத் தொடர்ச்சியில் ஒரு நெடுங்குன்றம் உள்ளது. அந்தக் குன்றின் உச்சியில் இந்தப் புராதன’அம்பாஜி’ கோயில் உள்ளது.

உயரம் சுமார் ஆயிரம் அடிகள் இருக்கலாம். மலைப்பாறையில் அம்பாஜி நடந்த பாதங்கள் படிந்திருக்கின்றன. இந்தக் கோயில் மேலே ஏற படிக்கட்டுகள் உள்ளன. ஆனால் ஏறுவது மிகச் சிரமமாக இருக்கிறது.

நரசிம்மர் கோயில் சோளிங்கபுரம் படிகள் போல் மிகவும் செங்குத்தாக இருக்கின்றன. வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு ‘ரோப் ட்ராலி’ இருக்கிறது. அதில் ஏறி அமர, அது இரண்டு மலைகளுக்கு நடுவில் இயற்கையின் ஊடே செல்லும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. அப்போது நம்மையுமறியாமல் கடவுள் நாமஸ்மரணையில் ஈடுபடுத் தோ‎‎ன்றுகிறது. சுற்றி மலைகளும், செடிகளும், மரங்களும் சூழ அங்கேயே நாம் தேவியின் தரிசனம் பெற்று விடுகிறோம்!

கோவிலை அடைந்தவுடன் நாம் காண்பது ஒரு சிறு அறை. அந்த இடத்தில் ஐம்பத்தோரு
ஸ்லோகங்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க யந்திரம் ‏இருக்கிறது. அங்கு அம்பாள் சிலையைத் தேடுகிறோம். அங்கு சிலையோ அல்லது படமோ இல்லை. ஆனால் அங்கே தீபஜோதியாக அணையா விளக்காகப் பிரகாசிக்கும் அகல் தீபத்தில் அம்பாளை அருவமாக தரிசிக்கிறோம். யுகயுகங்களாக அணையாமல் எரியும் ஜோதி. குன்றின் மேலிருந்து பார்த்தால் மலைச்சரிவும், பள்ளத்தாக்கும், அடர்ந்த மரங்களைக் கொண்ட காடும்.. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

கீழேயும் இந்த அம்பாள் ஆலயம் உள்ளது. இது நகரின் நடுவில் ஸ்ரீஆராஸ¤ரி என்ற பெயரில்
உள்ளது. இதற்கும் ஒரு கதை சொல்கிறார்கள். ஆதிகாலத்தில் மேலே ஏறும் பக்தர்களுக்கு பாதை சரியாக இல்லாததால் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் நடக்க வேண்டும். சிறிது கால் சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழவேண்டியதுதா‎ன். ‏

இதன் புராணக் கதை என்னவென்றால், ருத்ர தாண்டவத்தி‎ன்போது சதிதேவியின் உடலைச் சுழற்றினாராம் சிவபெருமான். அந்த உடல் பல துண்டுகளாக பூமியில் பல இடங்களில் விழுந்து சிதறியது. இந்த இடத்தில் அவள் மார்பு அல்லது ஸ்தனப்பகுதி விழுந்தததாம். அது விழுந்த இடம் கப்பர் குன்று என்கிறார்கள். அப்போது அந்தக் குன்று இரண்டு பிளவானது. பிற்காலத்தில் ஒரு பகுதிக் குன்றில் அம்பாஜி ஆலயம் வந்ததாம்.

பக்தர்கள் மலையேறக் கஷ்டப்படுவதைப் பார்த்து ஒரு மன்னர் அவர்களுக்கு உதவ வந்தார். சக்தியை மனதில் நினைத்து ஒரு பெரிய தங்கத் திரிசூலம் தயாரித்தார். அதன் நீளம் பத்து அடி இருக்கும். அதைக் கப்பர் குன்றத்தில் பத்து நாட்கள் வைத்துப் பூஜை செய்தார்கள். பின் பெரிய பல்லக்கில் உலாவாக அழைத்து வந்து கீழேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால் பல படையெடுப்புகளினால் அது சூறையாடப்பட்டது. ஆனாலும், மக்கள் அந்தக் காலியான இடத்தை வணங்க ஆரம்பித்தனர். இதனால் சிலர் இங்கு மண்ணால் ஆன அம்பாஜியை செய்து அதற்கு தினமும் விதவிதமான உடைகள் உடுத்தி அலங்காரங்கள் செய்கிறார்கள். பலவிதமான அலங்காரத்தில் அம்பாள் மின்னுகிறாள். பின்பகுதியில் மானசரோவர் என்ற தண்ணீர் பகுதியும் இருக்கிறது. காலங்கள் மாற மாற மலைக்குப் போகவும் படிகள் அமைக்கப் பெற்று, மி‎ன்சார டிராலியும் இயங்க ஆரம்பித்துவிட்டது.

காலை 5 மணியிலிருந்து ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நவராத்திரி சமயம் கூட்டம் அலை மோதும். “ஜய மாதாகி அம்பே கி ஜய்” என்ற கோஷங்கள் நம்மையும் அறியாமல் கண்ணீரை வரவழைத்துவிடும். வினாயக சதுர்த்திக்குப் பின் வரும் பௌர்ணமி நாளை
மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவிற்குப் “பூனம்” என்று பெயர். மக்கள் இடம் போதாமல் தெருவிலேயே உறங்குவார்களாம்.

இந்தக் கோயிலிலிருந்து சுமார் ஏழு கிமீ தூரத்தில் ஒரு சிவன் கோயிலும் உண்டு. இதைக்
கோடேஸ்வர் என்று அழைக்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு அருகில் ஸரஸ்வதி புண்யநதி
கோமுக் வழியாக வந்து கீழே உள்ள நீர்நிலைத் தொட்டியில் நிரம்பி பின் பிரவாகம் போல்
ஓடுகிறது. இந்தக் காட்சியைப் பார்க்கவும் கூட்டம் சேருகிறது.

இங்கு ‘ஏகாவன் சக்தி பீட்’ என்று ஓர் ஆலயம் உள்ளது. ‘ஏகாவன்’ என்றால் ஹிந்தியில் 51 என்று அர்த்தம். இந்த சக்தி பீடத்தில் அன்னை காமாட்சி கொலு வீற்றிருக்கிறாள். ஸரஸ்வதியும் அங்கு ஓடுகிறாள். பெரிய பிரகாரத்தில் தனித்தனியாக சிறு அறைகள் கட்டப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அட்சர தேவியின் சிறப்பான ரூபம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. இது மிகவும் அபூர்வமான படைப்பு. இந்தத் திட்டத்தை உருவாக்கியவர் ஸ்ரீகாஞ்சி மஹா முனிவர் ஸ்ரீசந்திரசேகர ஸரஸ்வதி அவர்கள். ஸ்ரீ காஞ்சி காமகோடி சேவா டிரஸ்டு ஆலயம் கட்டும் பணியை மேற்கொண்டது. 1992ல் சிறப்பாக கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இந்த இடம் அவசியம் பார்த்து அனுபவிக்க வேண்டிய இடம். சென்னை ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்
வழியாகப் பயணித்து ராஜஸ்தானில் அபூ ரோட்டில் இறங்கி அங்கிருந்து சுமார் 23 கிமீ தூரம் சென்றால் அம்பாஜி கோயிலை அடையலாம். டாக்சி, கார் வசதிகளும் உண்டு. அம்பாஜியின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

*************************

—விசாலம்
Thanks:http://www.nilacharal.com/ocms/log/10200811.asp

कबीर के दोहे – Kabir Ke Dohe

चाह मिटी, चिंता मिटी मनवा बेपरवाह ।
जिसको कुछ नहीं चाहिए वह शहनशाह॥

Affection Gone,worry gone

heart is care free

A man who is not having any want

he is the king of kings

माटी कहे कुम्हार से, तु क्या रौंदे मोय ।
एक दिन ऐसा आएगा, मैं रौंदूगी तोय ॥

The earth tells the potter,

Why you are tramping me

A day will come

When, I will tramp you.

माला फेरत जुग भया, फिरा न मन का फेर I
कर का मन का डार दे, मन का मनका फेर ॥

Full life gone, rotating the rosary bead

But it did not change the heart

Renounce the bead in hand

Rotate the bead of heart

तिनका कबहुँ ना निंदये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीर घानेरी होय ॥

Never abuse the straw

Which comes, below the sole

If it flies and falls in eye,

Irritation will be much more

गुरु गोविंद दोनों खड़े, काके लागूं पाँय ।
बलिहारी गुरु आपनो, गोविंद दियो मिलाय ॥

Guru (teacher ) and Govind ( Lord )

both are standing, a dilemma

Whom, I shall prostrate.

The lord said it is your preacher

Whom you should prostrate

सुख मे सुमिरन ना किया, दु:ख में करते याद ।
कह कबीर ता दास की, कौन सुने फरियाद ॥

In prosperity, none remembered

When in sorrow every one remembers

Kabirdas says who will hear his prayers

साईं इतना दीजिये, जा मे कुटुम समाय ।
मैं भी भूखा न रहूँ, साधु ना भूखा जाय ॥

Lord give me enough

In which my family survives

I will be sated

And the sage does not go unfed

धीरे-धीरे रे मना, धीरे सब कुछ होय ।
माली सींचे सौ घड़ा, ॠतु आए फल होय ॥

O heart be slow and steady

Every thing will be normal course

Gardner drenches with 100 earthen pots

Fruit comes only in season

कबीरा ते नर अँध है, गुरु को कहते और ।
हरि रूठे गुरु ठौर है, गुरु रूठे नहीं ठौर ॥

Kabir says that, a man is blind

The one who calls his preacher, who?

If lord is annoyed,

Than, preacher is with you

If preacher is annoyed, there is none

माया मरी न मन मरा, मर-मर गए शरीर ।
आशा तृष्णा न मरी, कह गए दास कबीर ॥

Neither the illusion died nor the heart

Hope and thirst could not die

Thus spoke Kabirdas

रात गंवाई सोय के, दिवस गंवाया खाय ।
हीरा जन्म अमोल था, कोड़ी बदले जाय ॥

You wasted your night, by sleeping

The day wasted by the way of eating

This life was like valuable diamond

But you have changed it into dice

दुःख में सुमिरन सब करे सुख में करै न कोय।
जो सुख में सुमिरन करे दुःख काहे को होय ॥

In sorrow every one remembers lord

In happiness no one remembers

One who remembers him in happiness?

Will not be gloomy any time

बडा हुआ तो क्या हुआ जैसे पेड़ खजूर।
पंथी को छाया नही फल लागे अति दूर ॥

I you are grown up like palm tree

What is the use?

It does not gave shade to pedestrian,

The fruit is at distance

साधु ऐसा चाहिए जैसा सूप सुभाय।
सार-सार को गहि रहै थोथा देई उडाय॥ sage should be like husk separator ( muram in tamil )
Which, should retain the ingredients,

But throw the husk.

साँई इतना दीजिए जामें कुटुंब समाय ।
मैं भी भूखा ना रहूँ साधु न भुखा जाय॥

O lord give me just

Which is sufficient for a family?

I shall be fed and

Sages shall never go hungry from my door

जो तोको काँटा बुवै ताहि बोव तू फूल।
तोहि फूल को फूल है वाको है तिरसुल॥

If anyone sows thorn for you,

You sow flower for him

He is also flower of flower

Whose lord is Trident?

उठा बगुला प्रेम का तिनका चढ़ा अकास।
तिनका तिनके से मिला तिन का तिन के पास॥

Arose, the crane of affection.

Straw arose to the sky

Straw met with straw

Got the things, pertains to whom

Tin तिन (whose in Hindi )

Tinka तिनका( straw in Hindi )

सात समंदर की मसि करौं लेखनि सब बनराइ।
धरती सब कागद करौं हरि गुण लिखा न जाइ॥

Seven seas ink,

A pen of forest,

Earth is made as paper

Even then praise of lord

Cannot be written

साधू गाँठ न बाँधई उदर समाता लेय।
आगे पाछे हरी खड़े जब माँगे तब देय॥

O sage don’t accumulate any thing

You take only what you can digest

The lord is all around you

Will give as and when you want

*********************************
Thanks;
Rajaniyerblogspot.com

நவராத்திரி

துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி எனும் நாயகியர் மூவர்க்கு உரியது நவராத்திரி. இந்த நாட்களில் தினமும் பூஜை செய்ய இயலாவிட்டாலும் சரஸ்வதி பூஜை என்று சொல்லப்படும் தினமான ஒன்பதாவது நாளில் (நவமி திதி தினம்) மட்டுமாவது பூஜை செய்வது அவசியம் என்கின்றன புராணங்கள்.

காரணம், ஒவ்வொருவரின் வாழ்விலும் கலைமகளின் ஆசி மிக மிக முக்கியமானது. அதை விளக்கும் விதமாக, ஆதிசங்கர மகானின் வாழ்க்கை வரலாற்றிலும் ஓர் அற்புத சம்பவம் உண்டு.

மண்டனமிஸ்ரர் எனும் மீமாம்சகரின் மனைவி சரஸவாணியாக, கலைமகளே வந்து சங்கரருடன் வாதப்போர் புரிந்தாள். வாதிடுபவள் வாணியே என அறிந்த ஆதிசங்கரர், வாதத்தில் தான் ஜெயித்தாலும் அன்னை சாரதைக்கு பீடம் அமைத்து வழிபட விரும்பினார்.

திரும்பிப் பார்த்தால் நின்றுவிடுவேன் என்ற நிபந்தனையுடன் தொடர்ந்தாள் சரஸ்வதி. மாகிஷ்மதி நகரத்திலிருந்து புறப்பட்டு துங்கபத்திரை நதிக்கரை நோக்கி வந்தபோது, ஓரிடத்தில் அதிசயக்காட்சி ஒன்றைக் கண்டார், அகிலகுரு. வெயிலில் வாடிய கர்ப்பிணித்தவளை ஒன்றுக்கு, கருநாகம் ஒன்று குடைபோல் தன் படம் விரித்து நின்றிருந்தது.

மனம் கசிந்த சங்கரர், மனம் மறந்து திரும்பி, “அம்மா… அதோ அக்காட்சியைப் பார்த்தாயா?” என்று சாரதையிடம் கேட்டார்.

மறுகணம், சங்கரரைத் தொடர்ந்து வந்த சாரதை, அங்கேயே நின்றாள்… பீடம் கொண்டாள். அவளை, சாரதா புஜங்கம் பாடித் துதித்தார் மகான்.
இதிலிருந்து தெரிவது என்ன… அன்பும், கருணையும் உள்ள இடத்தில் கலைமகள் விரும்பிக் குடிகொள்வாள் என்பதுதானே… அன்பு, பாசம், ஒற்றுமை இதெல்லாம் அலைமகளுக்கும், மலைமகளுக்கும்கூட பிடிக்கும் என்கின்றன புராணங்கள். அன்பே தெய்வம் அல்லவா!

அப்படிப்பட்ட அன்னை சாரதையை இடைவிடாது எப்போதும் துதிப்பது சிறப்பானது. அது இயலாவிட்டால், நவராத்திரி நாட்களில் குறிப்பாக சரஸ்வதி பூஜையன்று மட்டுமாவது மனதார அவளை வழிபடுவது மிகச் சிறப்பான பலன் தரும்.

அப்படி சாரதா தேவியை பூஜித்துத் துதித்திட வசதியாக, ஆதிசங்கர மகான் இயற்றிய ஸ்ரீ சாரதா புஜங்கம் என்ற அபூர்வ துதி, எளிய தமிழ் விளக்கத்துடன் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

எல்லா வெற்றிகளையும் தருபவளும், கல்வி, கலையின் அதிபதியுமான சரஸ்வதியை, இந்தத் துதியைப் பாடித் துதியுங்கள். சாரதாதேவி, சகல நலமும், வளமும், ஞானமும், கல்வியும் குறைவிலாது அளிப்பாள்.

சாரதா புஜங்கம்

ஸுவக்க்ஷோஜகும்பாம் ஸதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதாவலம்பாம் ப்ரபுண்யாவலம்பாம் |
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதா நோஷ்ட பிம்பாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||

அருளமுதம் கொண்ட மார்பினள். அமுத கலசங்களாகிய குடங்களைக் கரங்களில் ஏந்தியவள். கருணை புரிந்து காத்திடும் அம்பிகை. புண்ணியம் செய்தவர்களாலேயே அறியமுடிந்தவள். நிலவைப் போன்ற எழிலுடன் எப்போதும் ஒளிர்பவள். காருண்யமுறுவலையுடைய எனது அன்னை சாரதாம்பாளை இடைவிடாமல் துதிக்கிறேன்.

கடாகே்ஷதயார்த்ராம் கரே ஞானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை : ஸுபத்ராம் |
புரஸ்த்ரிம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||

கடைக்கண் பார்வையாலேயே கருணையை வாரி வழங்குபவள். கரத்திலே ஞானமுத்திரையைக் காட்டுபவள். கலைகளின் இருப்பிடம் அவளே. புனிதமான ஸ்வர்ணமயமான ஆபரணத்தை அணிந்தவள். தெய்வமாய் நின்று விழிமூடாமல் உலகை ரட்சிப்பவள். துங்கபத்ரா நதியின் கரையிலிருந்து அருளும் என் அன்னை சாரதாம்பாளை எப்போதும் துதிக்கிறேன்.

லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வபக்தைக பாலாம் யச: ஸ்ரீகபோலாம் |
கரே த்வக்ஷமாலாம் கனத் ப்ரத்னலோலாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||

ஒளிரும் நெற்றிச்சுட்டியை உடையவள். சங்கீத சேவையால் கவரப்படுபவள். தன்னுடைய பக்தர்களைக் காப்பாற்றுவதில் வல்லவள். கீர்த்தி மிக்கவள். அவளின் கன்னங்கள்கூட புனிதமானவை. கையிலே அக்கமாலையை உடையவள். கண்கவரும் ரத்னமயமான அணிமணிகளினால் எப்போதும் ஒளிர்பவள். அத்தகைய என் அன்னை சாரதையை இடைவிடாமல் வணங்குகிறேன்.

ஸுஸீமந்தவேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத் வஜ்ரபாணீம் |
ஸுதா மந்த்ராஸ்யாம் முதாசிந்த்ய வேணீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||

முன்வகிடு எடுத்துப் பின்னிய கூந்தலில் குஞ்சலங்களை உடையவள். மான்போன்ற மருள் விழிகளையுடையவள். கிளியோடு பேசி விளையாடி மகிழ்பவள். இந்திரனால் வணங்கப்படுபவள். அமுதமயமான புன்னகையுடன் கூடிய வசீகரமும்முடையவள். அலையலையாய்ப் புரளும் கூந்தலையுடையவள். அந்த என் அன்னை சாரதாம்பாளை எப்போதும் பூஜிக்கிறேன்.

ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தேக சாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனஸ்தாம சிந்த்யாம் |
ஸ்ம்ருதாம் தாபனஸ: ஸர்கபூர்வஸ்திதாம் தாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||

காருண்யநாயகி. பேரழகி. விழியோரங்களைத் தொடும் அளக பாரமுடையவள். கொடி போன்ற மேனியளாக ஜொலிப்பவள். நித்தியகல்யாணி. நிர்மலமான நிறைகுணமுடையவள். தவமுனிவர்களும் தொழுது பரவும் பிரபஞ்சத்தின் முதன்மையானவள். அந்த என் அன்னை சாரதாம்பாளை இடையறாது வணங்குகிறேன்.

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோகே்ஷதி ரூடாம் |
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாம ரூபாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் |

நவராத்திரி (மகா நவமி) காலங்களில் மான், அன்னம், சிங்கம், யானை, குதிரை, காளை, கழுகு ஆகிய வாகனங்களில் எழிலுற ஆவிர்பவித்து பக்தர்களுக்கு அருள்பவளும், எப்போதும் அமரிக்கையானவளுமான என் அன்னை சாரதாம்பாளை இடையறாது துதிக்கிறேன்.

ஜ்வலத் காந்தி வஹ்னீம் ஜகன் மோஹனாங்கீம்
பஜே மானஸாம்போஜ ஸுப்ராந்த ப்ருங்கீம் |
நிஜ ஸ்தோத்ர ஸங்கீத ந்ருத்ய ப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||

அனலைப் போல ஜோதி சொரூபமானவள். அனைத்து உலகையும் தன்வசப்படுத்தியவள். அடியவர்களின் இதயத்தாமரைகளில் வண்டினங்களாக ரீங்காரம் செய்து சுழல்பவள். இயற்கையான நாதம், நடனம், தோத்திரங்களில் உள்ளொளியானவள். அந்த என் அன்னை சாரதாம்பாளை இடையறாது பூஜிக்கிறேன்.

பவாம் போஜ நேத்ராப்ஜ ஸம்பூஜ்யமாணாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சிஹ்நாம் |
சலச்சஞ்சலாசாரு தாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||

முக்கண்ணன், மாதவன், அம்போஜ சம்பவன் ஆகியோரால் துதிக்கப்படும் பெருமையுடையவள். ஒளிவீசும் புன் முறுவலுடையவள். அவளுடைய காதுகளிலுள்ள குண்டலங்கள் அசைந்து அசைந்து ஆடி அவளது அழகுக்கு அழகு சேர்க்கும். அத்தகைய என் தாயாகிய சாரதாம்பாளை எப்போதும் முழுமனதோடு வணங்குகிறேன்.

(ஸ்ரீ சாரதா புஜங்கம் நிறைவு பெற்றது)

- ஜி.எஸ். ராஜரத்னம்
Thanks:kumudam.com

பரமஹம்சர் கண்ட பராசக்தி.

பரமஹம்சர் கண்ட பராசக்தி.
***********************************************

காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

“சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!”

இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
ஆடிக்களிப்பவன் யாரோ அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.

“பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
எந்த படித்துறையிலும் இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம் என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
பலவழிகளைக் காட்டுகின்றன “என்கிறார் பரமஹம்சர்.

சக்திசமயத்திலும் பலபடித்துறைகள் உண்டு.

தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.

பாரதியாரின் ஊழிக்கூத்து பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
ஆகாயம் கறுத்து வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில் பராசக்தி இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும் என மேலும் சொல்கிறார்.

தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

பேயைக்கொலையை
பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

என்கிறார் பாரதியார்.

அன்னை !அன்னை! ஆடுங்கூத்தை
நாடச்செய்தாய் என்னை…

சக்திப்பேய்தான் தலையொடுதலைகள்முட்டிச்- சட்டச்
சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
நின் விழியனல்போய் எட்டித்-தானே
எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

தனது மார்க்கம் இறையைத் தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ பாவித்துவணங்கலாம் என்னும்
பரமஹம்சர்” நான் என்னைக் என்னைகுழந்தையாகபாவித்துக்கொண்டேன் “என்கிறார்.
மனம் உள்முகமாகத் திரும்பினால் அதுவாசற்கதவை சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் என்று பலமதங்கள்கூறுவதை ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
நிலையில் உயரலாம்.

யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?

–~–~———~–~—-~————~——-~–~—-~
Thanks:
பதிந்தவர் Shylaja N “தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Piravakam@googlegroups.com

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!

எம். எஸ். பாடின இந்தப் பாட்ட கேட்டுருக்கீங்களா? ரொம்ப உருக்கமான பாட்டு. மூதறிஞர் இராஜாஜி எழுதினது.

கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்’ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் ‘ஏம்மா…எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க…நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே’ன்னு கேட்டதுக்கு, ‘கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்’னு சொன்னாங்களாம்.

இந்தப் பாட்டுல ‘நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல’ அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா…எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா…அதனால் என்ன…நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு…அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர…வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா…நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா…திருமலையில் நிற்கும் என் அப்பா…என்னைக் காப்பவனே கோவிந்தா…

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா…உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்…என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா…நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்…அது போதும் எனக்கு…நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது… அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்… அழகிய சுருள்முடியை உடைய கேஸவா… மலையப்பா…நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை…உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது…நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்…ஆனால் அன்னையோ அப்படி அல்ல…அவள் கருணைக்கடல்…என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்…அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா… மணிவண்ணா… மலையப்பா… கோவிந்தா…கோவிந்தா….
(நன்றி:
குமரன் (Kumaran)
http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html )

இந்த தளத்தில் கேட்கலாம்

http://www.raaga.com/channels/tamil/artist/MS._Subbulakshmi.html

இந்த தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.geocities.com/promiserani2/c1296.html

http://odeo.com/audio/1780963/view

குமரன் அவர்களின் இந்த தளத்தில்
இந்த பாடலை ஆன்லைனிலேயே பார்க்கலாம்.

http://kelpidi.blogspot.com/2006/06/blog-post_17.html

Posted by nagai.s.balamurali at 12:39 AM 0 comments Links to this post
Labels: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
*****************************************
நன்றி;http://keethanjali.blogspot.com/

கணபதி பாடல்கள்.

கணபதி பாடல்கள்.

****************************************************
விக்ன வினாயக மூர்த்திக்கு
விக்ன வினாயக மூர்த்திக்கு மங்களம்
வேழ முகமோடு தவழ்

(விக்ன)

அக்னி வைத்த நெற்றிக் கண்ணனும்
ஆதிபராசக்தி அன்னையும்
என் மகன் என் மகனென்று மடிவைத்து
கொஞ்சி விளையாடும் அஞ்சுகர பாலன்

(விக்ன)

ஒரு பகையில்லாத உத்தம தெய்வம்
ஒன்பர் முனிவர் பணி கணபதி தெய்வம்
விரிசராசராதி மூலமாய் மிளிர்
விதி விஷ்ணு சிவாகாரமாய் ஒளிர்

(விக்ன)
******************************************************************

கணனாதனே குணபோதனே
கணனாதனே குணபோதனே கஜமாமுகா கதி நீ ஐயா

(கணனாதனே)

இணையேயில்லாப் பெருவாழ்வினை இனிதீயுமோர் தனினாயகா

(கணனாதனே)

சதுர்வேதங்கள் ஓம் ஓம் எனத் துதிபாடிடும் பரஞ்சோதியே
பதமாமலர் தொழுதேனய்யா பரிந்தேயருள் செய்வாயய்யா

(கணனாதனே)
*******************************************************************

தருணமிதய்யா நல்ல தருணமிதய்யா
தருணமிதய்யா நல்ல தருணமிதய்யா உரிய தருணமிதய்யா
தயை புரி துதிக்கைய்யா

(தருணமிதய்யா)

சரணமென்றுன் மலரடிபணி தமியெனைத் தவிக்க விடாமல்

(தருணமிதய்யா)

உன் மலரடி உன்னருளல்லதோர் துணை இனி உலகில் இல்லையே
எந்தன் முன்னவனே யானை முகனே முருகனுக்கருள் துதிக்கைய்யனே
முக்கட் பரன்மகனே விக்ன வினாயகனே முக்கனி மோதகப்ரியனே
அபயம் அபயம் விரைந்து வந்தருள்

(தருணமிதய்யா)
***********************************************************************

ஸ்ரீ கணேசா சரணம்
ஸ்ரீ கணேசா சரணம் கஜானனா
தேவர் முனிவர் பனியும் தயாகரா

(ஸ்ரீ கணேசா)

நாகாபரணனே நான்மறை போற்றும்
நாமனே ப்ரணவ ரூபனே ஜய

(ஸ்ரீ கணேசா)

பாதம் நம்பும் ராமதாச வரதனே
மோதகப் ப்ரியனே கௌளரி சுதனே
ஆதிதேவன் உனதின்னருள் இல்லையேல்
வேதனும் மாலும் செய்தொழில் உண்டோ

(ஸ்ரீ கணேசா)

*****************************************************************

கஜவதனா கருணா சதனா
(ஸ்ரீ) கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர

(கஜவதனா)

அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா சரணம் சரணம்

(கஜவதனா)

நீயே மூவுலகிற்காதாரம்
நீயே சிவார்க்கமா மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா ஓம்காரா

(கஜவதனா)

***************************************************************

வினாயகனே வினை தீர்ப்பவனே
வினாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே

(வினாயகனே)

குணானிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

(வினாயகனே)

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கண நாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

(வினாயகனே)

*********************************************************************

Labels: கணபதி பாடல்கள்

Posted by LoVe Me LoNg TiMe1
நன்றி;http://iniyathamizhosai-lyricsgod.blogspot.com/

——————————————————————————–

பிள்ளையார் பிடிக்க.. .

அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்து, கேட்டு இருக்கலாம்.

 அதைத்தான், அதாவது பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், ‘பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள்.

அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள்.

அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

Thanks:http://moderntamilworld.com

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers