சிதறியது முத்துக்கள்
நட்சத்திரமாய்
மழலையின் சிரிப்பு
-
=====================
-
அறுவடை வயலில்
கொஞ்சம் நெல் மணிகள்
நட்சத்திரங்கள்
-
=======================
-
படிக்கும் கனவுகளோடு
சிறுவர்கள்
கந்தக கிடங்கிற்குள்
-
========================
-
அழுதனர் மக்கள்
தலைவரின் மரணம்
பாவம்…சந்தன மரங்கள்
-
===============================
-
இங்கு குழந்தைகள் வேலையில் இல்லை
போர்டை விற்றுக் கொண்டிருந்தான்
சிறுவன்
-
=================================
>சித்ரபாரதி
பாவம்…சந்தன மரங்கள்..!
மே 18, 2012 இல் 6:16 பிற்பகல் (ஹைகூ கவிதை)
தேவையற்றதை நீக்கிட கிடைத்தது சிலை !
மே 16, 2012 இல் 5:11 மு.பகல் (ஹைகூ கவிதை)

-

நல்ல தீனி
ஊடகங்களுக்கு
சாமியார்கள் கூத்து !
———————————————
மெய்ப்பித்தனர்
கடவுள் இல்லை
சாமியார்கள் !
—————————————-
இலவசம் மாற்றம்
சொல் மட்டும்
விலையில்லா !
—————————————-
விமானிகள் வேலை நிறுத்தம்
அமைச்சர் பிடிவாதம்
பயணிகள் துன்பம் !
—————————————-
எந்த ஊரும்
ஈடாகவில்லை
பிறந்த மண்ணிற்கு !
—————————————-
தேவையற்றதை நீக்கிட
கிடைத்தது
சிலை !
————————————–
(படித்ததில் பிடித்தது)
–
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கனவுப் பயணம்..!
மே 15, 2012 இல் 3:59 மு.பகல் (ஹைகூ கவிதை)
-
தண்ணீர் வேண்டி
ஒற்றைக்காலில் தவம்
குடிநீர்க்குழாய்
-
==========================
பார்வை சரியில்லா
பாட்டியின் கடை தேடி
பையில் செல்லாக்காசு!
-
=========================
-
நடு நிசியில் ஒலித்தது
சோக கீதம்
ஊளையிட்டது நாய்
-
========================
-
அம்மா விரதமென்றால்
சும்மா இருந்தது
அரிசிப்பானை!
-
========================
-
காகிதச் சிறகடித்து
கனவுப்பயணம்
படபடக்கும் பரிசுச்சீட்டு!
-
========================
>இளந்தென்றல்
குருதி கொடுத்து வாங்கிய கவிதை..!
மே 2, 2012 இல் 4:52 மு.பகல் (ஹைகூ கவிதை)

-
ஒன்றாக்கும் மழை
குடைக்குள்
இருவர்!
-
==================
-
எச்சரிக்கை
நாம் உதிர்ந்து விடுவோம்
காதோரம் ஆடும் முடி!
-
====================
-
வளைந்தாலும் நெளிந்தாலும்
மேல் நோக்கியே
போகிறது புகை!
-
======================
-
குருதி கொடுத்து
வாங்கினேன் கொசுவிடம்
ஒரு கவிதை!
-
=====================
>அமுதபாரதி
ஆதிகாலத்தின் முதற்கனி..!
மே 2, 2012 இல் 4:49 மு.பகல் (ஹைகூ கவிதை)

=

=

-
இன்னும் இருக்கிறது
ஆதிகாலத்தின் முதற்கனி
ஆப்பிள்!
-
=====================
-
புத்தக அடுக்கு
இடுக்கில் புதிய படைப்பு
அணில் குஞ்சு!
-
====================
-
தூண்டிலில் சிக்கும்
மீனுக்குத் தெரியுமா
புழுவின் வலி!
-
=============
முகம் சுளிப்பதில்லை குப்பைகள் கண்டு..!
மே 2, 2012 இல் 4:45 மு.பகல் (ஹைகூ கவிதை)
பார்வையில்லா பாட்டியும் என் வருகை உணர்வாள்
மே 1, 2012 இல் 8:22 மு.பகல் (ஹைகூ கவிதை)

-
காயங்களோடுதான்
மறுபடி பூக்கும்
வெட்டிய முருங்கை
-
===============
-
அறுவடைப்பாட்டில்
கலந்தே கேட்கிறது
பசித்த குரல்
-
==================
-
விலகிப் போகிற
அவளின் நிழல்
பதுங்கும் நான்
-
==================
-
எழுதிய கடிதத்திற்கு
நாளையும் பதில் வராது
அஞ்சலகம் விடுமுறை
-
=====================
-
பார்வையில்லா பாட்டியும்
என் வருகை உணர்வாள்
காலடிச் சத்தம்
-
=================
>மு.முருகேஷ்
நன்றி: பூவின் நிழல் (கவிதை தொகுப்பு
அனல் மூட்டும் பற்றியெறியாத காதல்..
மே 1, 2012 இல் 7:59 மு.பகல் (ஹைகூ கவிதை)

-
சுவாச சூடு
எனக்குள் அனல் மூட்டும்
பற்றியெறியாத காதல்
-
=====================
-
கருவக்காடு வெயிலில்
நெருப்பில்லாமல் எரியும்
சாராயப் பானை
-
======================
-
சிவந்த கண்களோரம்
உப்பு நீர் துளிர்க்கும்
கொட்டாங்குச்சி டீயில் ஈ
-
=======================
-
விடை பெறுகிறேன்
பிரியும்போதெல்லாம்
முற்றுப் பெறாத பயணம்
-
=========================
-
பச்சைக் கதிர்களில்
நெளியும் புழு
சிதறிய சேற்று நீர்
-===================
>மு.முருகேஷ்
நன்றி: பூவின் நிழல் (கவிதை தொகுப்பு)
சாத்திக் கிடக்கிறது சன்னல்..!
April 28, 2012 இல் 7:28 மு.பகல் (ஹைகூ கவிதை)
-
குருடனின் விழியில்
தெரிந்தது
என் முகம்
-=================
-
இன்று அமாவாசை
சாத்திக் கிடக்கிறது
சன்னல்..!
-
==================
-
அநாதையை
தாலாட்டித் தூங்க வைத்தது
ரெயில் படுக்கை
-
===================
-
இடுகாட்டின் எதிரே
கள்ளச் சாராய விற்பனை
எதிர்பார்ப்போடு வெட்டியான்
-
========================
-
வாசலில் பிச்சைக்காரன்
சோறு வைத்தார்கள்
காகத்திற்கு
-
=======================
>பா.உதயகண்ணன்
மின்னல் வந்த வானம்..
April 28, 2012 இல் 7:23 மு.பகல் (ஹைகூ கவிதை)
-
குளிக்க மனசில்லை
உடைந்து விடும்
நீர்க்குமிழி
-
==================
-
இருட்டில்
அழுதது…
மெழுகுவர்த்தி
-
=================
-
மகளின் திருமணம்
மஞ்சள் கயிற்றோடு…
அம்மா..!
-
================
-
கரடு முரடாய் பாதைகள்
கவலைப்படவில்லை
ஊன்றுகோல் மனிதன்
-
==================
-
கிழிந்த புடவையை
நினைவூட்டும்
மின்னல் வந்த வானம்
-
===================
>பா.உதயகண்ணன்




