ஊரையே கூட்டி உண்ணும் உத்தமன் பெயர் என்ன?

-
1) ஒரு பக்கம் மூடிய மூங்கிலில் உள்ளம் கவரும் சங்கீதம் -
அது என்ன?
-
2) ஒரு காதைக் கொண்ட மனிதன் இவன், காது போனால்
இவன் பெருமையும் போய்விடும் – இவன் யார்?
-
3) ஒரு நெல் எடுத்துக் குத்தினால் வீடு முழுதும்
பொரி – இது என்ன?
-
4) ஒருவனை மட்டும் அழைக்க மாட்டான், ஊரையே கூட்டி
உண்பான். அந்த உத்தமன் பெயர் என்ன?
-
5) ஒரு சாண் குதிரைதான், உடம்பெல்லாம் பற்கள் –
இது என்ன?
-
==============================

விடைகள்:
-
1) புல்லாங்குழல்
2) ஊசி
3_ விளக்கு
4) காகம்
5) சீப்பு

ஒரு விடுகதை


-

அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் —–நான் யார்?

கூறுங்கள்.

-

விடை:

சதுரங்கம்

-

========================================

நன்றி: http://www.sekalpana.com

கல்யாணந்தான் கட்டிகிட்டு…!

மெயிலில் வந்த படம் தான் இது.

WHAT IS MARRIAGE MEANS……?


-

-

-

-

-

-

-

அது சரி இதுல எனக்கு ஒன்னுமே புரியல.. உங்களுக்கு?

புரிஞ்சா மட்டும் நீங்க ஒத்துக்கப் போறீங்களா என்ன?

-

=============================================

நன்றி: http://sumasen.blogspot.in/2007/03/blog-post.html

 

உங்களுக்குத் தெரிந்த விடுகதை

இ‌தி‌ல் பலவு‌ம் உ‌ங்களு‌க்கு‌ ‌விடை தெ‌ரி‌ந்த ‌விடுகதையாக‌த்தா‌ன்
இரு‌க்கு‌ம்… சிறுவர்களுக்கு சொல்லி மகிழ…

——————————–

1. கொ‌ண்டை‌யி‌ல் ‌சிவப்பு பூ‌ச் சூடியவ‌ள், அத‌ற்கே ‌இ‌வ்வளவு ‌சி‌லி‌ர்‌ப்பு ‌
சி‌லி‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ள், அவள் யார்?
-
2. க‌ல்‌லிலு‌ம் முள்‌ளிலு‌ம் பாதுகா‌ப்பா‌ன், த‌ண்‌‌ணீ‌ரி‌ல் தவ‌றி‌விடுவா‌ன்
அது என்ன?
-
3. பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை.
அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம்
வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன?
-
4. பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த்
தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன?
-
5. வெளிச்சத்திலே பிடி‌ப்பதை இருட்டிலே பார்க்கிறோம்.
அது என்ன?
-
6. பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க் ‌கிட‌ப்பா‌ல் அவ‌ள் யா‌ர்?
-
7. வயிறு இரு‌க்கு‌ம் சாப்பிடாது காது உண்டு கேட்காது.
அது என்ன?
-
============================================
விடைகள்:
-
1. சேவல்
2. செருப்பு
3. தேங்காய்
4. தேயிலைத் தூள்
5. ‌திரைப்படம்
6. தலையணை
7. துணிப்பை
===========================

நன்றி: வெப் துனியா(தமிழ்)

அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருப்பவன் (விடுகதை)

1) பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன்
யார்?

2) அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?

3) சிவப்புப் பெட்டிக்குள்
சிறிய பெரிய செய்திகள் அது என்ன?

4 )ஊரார் கண்ட கோலம்
உடையவன் காணாத கோலம் அது என்ன?

5) பார்க்க அழகு
பாம்புக்கு எதிரி அது என்ன?

6) உடன்வருவான் உதவிக்கு
வரமாட்டான் அவன் யார்?

=============================================

சரியான விடைகள்

1) நாய்

2) சந்திரன்

3)  தபால்பெட்ட

4) விதவைக்கோலம்

5) மயில்

6) நிழல்

யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு…(விடுகதை)

விடை சொல்லுங்கள்:-

1. அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?

2. உணவை எடுத்தாலும் உண்ணமாட்டான் அவன் யார்?

3. கிளை இல்லாத மரம் வெட்ட வெட்ட வளரும் அது என்ன?

4. யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?

5. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?

6. கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?

-

விடைகள்:-

1) நீர்

2) அகப்பை

3) தலைமயிர்

4) கரப்பான் பூச்சி

5) இளநீர்

6) சட்டை

ஜாலி புதிர்…

-

இரவு ஆகிவிட்டது. திடீர் மின்வெட்டு.

அறையில் 3 மெழுகுவர்த்திகள் உள்ளன.

ஒன்று…நீளமான, தடிமனான மெழுகுவர்த்தி.

இரண்டாவது…நீளம் குறைவான தடிமனான மெழுகுவர்த்தி.

மூன்றாவது..நீளமான ஒல்லியான மெழுகுவர்த்தி.

இருப்பதோ ஒரே ஒரு தீக்குச்சிதான்.

நீங்கள் முதலில் எதை பற்ற வைப்பீர்கள்?

-

விடை:

தீக்குச்சியைத்தான்…

அதை ஏற்றிய பிறகுதானே எந்த மெழுகுவர்தியையும்

ஏற்ற முடியும்..!

===============

நன்றி: குங்குமம்

உங்களுக்குத் தெரியுமா? – தென்கச்சி சுவாமிநாதன்

வினா
மூன்றெழுத்தில் ஒரு சொல்லாம் அந்தச் சொல்லின்
முதலிலுள்ள இரண்டெழுத்தை இணைய வைத்தே
ஊன்றியே நோக்கினால் ‘அதிகம்’ ஆகும்.

உள்ள கடைழுத்தோ நம் உறுப்பின் பேராம்
நான் சொன்ன அச்சொல்லின் நடுவெழுத்தை
நீக்கினால் ‘பகை’யாகும் – நன்றே அந்த
மூன்றெழுதுச் சொல் இன்னதென்று சொல்வீர்
முடியாமற் போகாது தேடிப் பார்தால்!

விடை:
பலகை
===============================================
குறிப்பு:
எண்சீர் விருத்தத்தினால் ஆகிய இவ்விடுகதைப் பாடல்
7-7-1959 ‘குயில்’ இதழில் வெளிவந்தது
ஆக்கம்:
தெனகச்சி கோ.சுவாமிநாதன்.
நன்றி:
கென்கச்சி சுவாமிநாதன் கவிதைகள் -
வானதி பதிப்பகம்

குட்டைப் பெண்ணுக்கு…

குட்டைப் பெண்ணுக்குப்
பட்டுப் புடவை
அது என்ன ?

-

 

விடை:

…………….வெங்காயம்

=====================================

ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

விடை:
….தேன்கூடு

விடுகதை..!

 குடிக்க உதவாது, குளத்தில் தங்காது,
கைகளால் தொடாத நீர், கண்களுக்கு
மட்டுமே விருந்தாகும்-
அது என்ன?

குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து
கொண்டே போகும் அது என்ன?

கருப்பாய் இருந்தாலும் சுவையாய்
இருப்பேன்- நான் யார்?

=============================
விடைகள்:

கானல் நீர்
ஊசி நூல்
நாவல் பழம்

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers