ஒரு கிணற்றில் ஓரே தவளை! – அது என்ன?

-

1) செய்வதைச் செய்வான்; சொன்னதைச் செய்யான்.
– அவன் யார்?

2) பிறக்கும் போது வால் உண்டு; இறக்கும் போது
வால் இல்லை. – அது என்ன?

3) பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால்
கருப்பு ராஜா – அது என்ன?

4) கையிலே அடங்குவார்; கதை நூறு சொல்லுவார்.
– அது என்ன?

5) ஒரு கிணற்றில் ஓரே தவளை! – அது என்ன?
-
===========================================

விடைகள்:-

http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/01/custard-apple-699.jpg

1) கண்ணாடி

2) தவளை

3) சீத்தாபழம்

4) புத்தகம்

5) வாய்,நாக்கு

ஒரு சாண் கட்டைக்கு அரைச்சாண் மூடி..! – (விடுகதை)

lotus-leaf

1) ஒட்டுத் திண்ணையில் தடுக்குப் போட்டேன், திருப்பி
எடுக்கத்தான் முடியவில்லை – அது என்ன?
-
2) ஒரு கரண்டி மாவே ஊருக்கெல்லாம் தோசை – அது என்ன?
-
3) ஒரு கால், நான்கு கீத்து, ஒரு பந்தல் – இது என்ன?
-
4) ஒரு குளத்தில் ஒரு தட்டு, நனையாமல்கிடக்கிது,
மூழ்கவும் இல்லை – இது என்ன?
-
5) ஒரு சாண் கட்டைக்கு அரைச்சாண் மூடி – அது என்ன?
-

====================

விடைகள்:

1. கோலம்
2. நிலா
3. அரைக் கீரை
4. தாமரை இலை
5. பேனா

ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமிதான் ! – (விடுகதை)

 

-
1) ஒருவரை ஒருவர் இவர்கள் அடித்துக் கொள்வார்கள்,
ஆனாலும் தகராறே கிடையாது, அவ்வளவு
நெருங்கியவர்கள் – இவர்கள் யார்?
-
2) ஒருவரை ஒருவர் துரத்திப் பிடிப்பதில் இவர்களுக்குள்
பெரிய போட்டி, காலக் கணக்கைக் காட்டுவதில்
இவர்கள் மிக வல்லவர்கள் – யார் இவர்கள்?
-
3) ஒரு சிறிய குளம், அதைச் சுற்றிலும் அழகான ஐந்து
வீடுகள் – இது என்ன?
-
4) ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமிதான் ! – இது என்ன?
-
5) ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டைகள், ஒன்று
குறைந்தாலும் அவளுக்கு துன்பம்தான் – இது என்ன?
-

============================================

விடைகள்:
1) கண் இமைகள்
2) கடிகாரத்தின் முட்கள்
3) உள்ளங்கை, ஐந்து விரல்கள்
4) வெள்ளைப் பூண்டு
5) அடுப்பு

 

நடைக்கு உவமை ஆனாள்…(விடுகதைகள்)

-1) காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும்
- அது என்ன?
-
2) ஊரில்லா மாநிலங்கள், தண்ணீர் இல்லா கடல்கள்
-அது என்ன?
-
3) பகலில் உறங்குவான், இரவில் அலறுவான்
-அவன் யார்?
-
4) நடைக்கு உவமை ஆனாள், நளனுக்கு தூது போனாள்
- அவள்யார்?
-
5) பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,
வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்
-அவன் யார்?
-
=====================
===============================
விடைகள்:-

1) புல்லாங்குழல்

2) தேச வரைபடம்

3) ஆந்தை

4) அன்னம்

5) நகம்

 

மாலையிலே சாலையிலே மலரும் பூ…(விடுகதைகள்)

(பலூன் ஆடை)

——————————–

1) மாலையிலே சாலையிலே மலரும் பூ, காலையில்
வெளிச்சம் வந்தால் கண் மூடும் பூ – அது என்ன பூ?
-
2) நாலு குழித்தட்டு இட்லித்தட்டுமல்ல,
நல்ல இரும்புத் தட்டு பணீயாரச் சட்டியுமில்லை
போரிலே வீரனைக் காக்கும் கவசமுமல்ல -அது என்ன?
-
3) சீமையிலே செஞ்ச சின்னதுரை, சின்ன மாளிகைக்ககு
நல்ல காவல்காரனாம் – அவன் யார்?
-
4)  செய்ததைச் செய்யும் குரங்கும் அல்ல
சிங்காரிக்க உதவும் சீப்புமல்ல – அது என்ன?
-
5) வயிறு நிறையச் சாப்பிட்டால், வானத்தில் பறப்பான்
- அவன் யார்?
-
6) பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்
இட்டால் தேன்பந்து – அது என்ன?

===================================================
விடைகள்:

1) தெரு விளக்கு

2) கேடயம்

3) பூட்டு

4) கண்ணாடி

5) பலூன்

6) லட்டு

————————

 

மஞ்சள் புறா மயங்கிக் கிடக்குது..! – (விடுகதைகள்)


-

1) தொப்பை பையனுக்கு ஒரு வாசல், தோழனுக்கு
இரு வாசல் – அவன் யார்?
-
2) மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
-
3) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி
வரும் பந்தும் அல்ல – அது என்ன?
-
4) உழைப்பில் மலரும் பூ, உடனடி உலரும் பூ – அது என்ன?
-
5) காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா
மயங்கிக் கிடக்குது – அது என்ன?
-
=========================================
விடைகள்:

!) சட்டை

2) அணில்

3) கடல்

4) வியர்வை

5) முட்டை

======================
நன்றி: கோகுலம் ,பிப்ரவரி,2012

 

முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து..! (விடுகதைகள்)

-
1) கடித்தால் துவர்ப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு -
அது என்ன?
-
2) கனத்த பெட்டி, கதவைத் திறந்தால் மூட முடியாது -
அது என்ன?
-
3) கொடுக்க முடியும், எடுக்க முடியாது – அது என்ன?
-
4) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து – அது என்ன?
-
5) எலும்பில்லாத மனிதன், கிளையில்லாத மரத்தில்
ஏறுவான் – அது என்ன?
-
=====================================

விடைகள்:

1) நெல்லக்கனி

2) தேங்காய்

3 )கல்வி

4) கண்

5) பேன்

=======================================

நாக்கு இல்லாதவன் நல்லது சொல்வான் – விடுகதைகள்

1) பறிக்க பறிக்கப் பெரிதாகிறது – அது என்ன?
-
2) உமி போல் பூ பூக்கும், சிமிழ் போல் காய்
காக்கும் – அது என்ன?
-
3) பச்சைப்புல்லில்  துவண்டு வரும், பவளம் போல்
உருண்டு வரும் – அது என்ன?
-
4) பால் இல்லாமலே பருக்கிறது, நோய் இல்லாமல்
இளைக்கிறது, அது என்ன?
-
5) நாக்கு இல்லாதவன் நல்லது சொல்வான்- அது என்ன?
-
===========================================
விடைகள்:
1) குழி
2) நெல்லிக்காய்
3) பனித்துளி
4) சந்திரன்
5) புத்தகம்

செவி இல்லாத செவிடன், கால் இல்லாத கபடன்…(விடுகதைகள்)

1) தண்ணீரிலே துள்ளாட்டம், தரையிலே தள்ளாட்டம் -
அது என்ன?
-
2) அந்தரத்தில் பறக்கும் பறவையல்ல
அந்திக்குப் பின் இரைதேடும் ஆந்தையல்ல
தலைகீழாய் நின்றிருக்கும் தவசியுமல்ல
-
அது என்ன?
-
3) செவி இல்லாத செவிடன் செகம் பூராவும் திரிகிறான்.
கால் இல்லாத கபடன் காடும் மேடும் போகிறான் -
அவன் யார்?
-
4) கொண்டையிலே பூ உண்டு, எடுக்க நாதியில்லை
குதிகாலில் முள் உண்டு, பிடுங்க நாதியில்லை – அது என்ன?
-
5) எட்டு கால் ஊன்றி, இரு கால் படமெடுத்து வட்டக்குடை
பிடித்து வருகின்ற அழகினைப் பார் – அது என்ன?
-
6) இருப்பது இரண்டு கால் , ஓடுவது குதிரை வேகம்,
இறக்கை உண்டு பறக்காது – அது என்ன?
-
===========================================

விடைகள்:-
1) மீன்2) வௌவால்

3) பாம்பு

4) சேவல்

5.)நண்டு

6).நெருப்புக் கோழி

சந்தோஷம் மீறி வந்தால் சங்கீதம்தான்…! (விடுகதைகள்)

1)அழுக்கு மூட்டை சுமக்கும், அலங்கார நடை நடக்கும்
சந்தோஷம் மீறி வந்தால், சங்கீதம் உறக்கப் பாடும் – அது என்ன?
-
2)பதுங்கிப் பதுங்கி வருவார், பாய்ந்து எதையும் பிடிப்பார்
வீட்டுக்குள்ளே திரிவார் – அவர் யார்?
-
3) போவான் போய்க்கொண்டே இருப்பான். போகும்
இடங்கள் எல்லாம் கோடிட்டே போவான் – அவன் யார்?
-
-
4) வாய்வழியாய் நூல் எடுப்பான் வித்தைக் காரனல்ல
வலையிலிருந்து உயிர் குடிப்பான் எமனல்ல, அது யார்?
-
5) தண்ணீரில்லாத பொட்டலிலே தாவிச் செல்லும் கப்பல் எது?
-
6) பழகினால் விடமாட்டான், பாசத்திலே நிறைந்திருப்பான்
அவன் யார்?
-

===============================================
விடைகள்:

1) கழுதை

2) பூனை

3) நத்தை

4) சிலந்தி

5) ஒட்டகம்

6) நாய்
-

 

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers