காந்திமண்டபத்தில் காந்தியைப்போல…..

கோயில் கர்ப்பக்கிரகத்திற்கு டியூப் லைட்டை உபயமாக கொடுத்த
வியாபாரி ஒருவர்
கூடவே தன்னுடைய பெயரான
க.உ.பெ.ரா.மா.மானாபெனா(எ)பெரியாத்தூர்
சுப்பிரமணியம் பிள்ளை
என்ற பெயரையும் டியூப் லைட்டில் எழுதிவைத்தார்.

அந்த
சாமி இப்போதும் இருட்டில்தான் நின்றுகொண்டு இருக்கிறது…..

காந்திமண்டபத்தில் காந்தியைப்போல…..

- மு.குருமூர்த்தி
-
=========================
படித்ததில் பிடித்தது

SURPRISE FOR YOU

Hi!

SURPRISE FOR YOU


Click on the below link.  You will get a black page. Click your mouse anywhere (& everywhere) on the page & see what happens!  Better yet, click & drag your mouse over the black page.

Hope you will like it .

 
Click Here

from e mail fwd

மனைவியுடன் இருந்தால்…

என் உறவினர் ஒருவர், திருமணம், சடங்கு,
நல்லது, கெட்டது என எங்கு சென்றாலும்,
தன் மனைவியையும் தவறாமல் அழைத்துச்
செல்வார்.

இதனால், “இழவு வீட்டுக்கு போகும் போது கூட,
பொண்டாட்டி இல்லாமல் போக மாட்டான்ய்யா…’
என்று, பல்வேறு விதத்தில் அவரை உறவுகளும்,
நண்பர்களும் கிண்டல் செய்வதுண்டு.

ஒருநாள், அவரிடம், “ஏன் எங்கு சென்றாலும்,
மனைவி இல்லாமல் செல்வதில்லை…’ எனக்
கேட்டேன்.

அதற்கு அவர், “சம்சாரம் கூட ஒரு இடத்துக்கு
போறதால், பல நன்மைகள் இருக்கு. முதலில்,
நண்பர்கள் கூட்டம் நம்மை தொந்தரவு செய்யாது.

“மனைவியோடு இருக்காண்டா…’ என, ஒதுங்கிக்
கொள்ளும். இதனால், “தண்ணி’, தம், அரட்டை,
அதனால் வம்பு, சண்டை, கெட்டவன் என
பெயரெடுப்பது எல்லாம் தவிர்க்கப்படும்.

“தம்பதியராய் ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதால், குடும்பத்துடன் வந்த சந்தோஷம்
அவ்வீட்டுக்காரர்களுக்கு கிடைக்கும். மேலும்,
மனைவியுடன் இருப்பதால், நாமும் கொஞ்சம்
அடக்கி வாசிப்போம்;

எந்தத் தவறும் நடக்க வாய்ப்பே இல்லை.
நீங்களும் இதை பின்பற்றி வாருங்கள்; அதன்
பலனை அப்போது புரிந்து கொள்வீர்கள்…’
என்று ஒரு போடு போட்டார்.

அவர் சொன்னது உண்மை தான் என புரிந்தது.
அவருக்கு ஒரு சபாஷ் போட்டு, மனைவி
இல்லாமல் இனி எங்கும் செல்வதில்லை என
முடிவும் எடுத்தேன்.

நண்பர்களே… பொது நிகழ்ச்சிகளில் மனைவியுடன்
கலந்து கொள்ளுங்கள்; பல தவறுகளை அது
தவிர்க்க உதவும்.

— உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
நன்றி: தினமலர் – வாரமலர்

தெரசா அன்னை சொல்லும் பாடங்கள் – {வெற்றிக்கு ஒரு புத்தகம்}

-

அன்னை தெரசாவை எல்லோருக்கும் தெரியும்.
கருணை பொங்கும் அந்த முகம், சேவை மனப்பான்மை,
தன்னலமில்லாத அன்பு என ஒவ்வொன்றுமே அவர்
ஓர் உன்னதமான மனிதர் என நமக்குச் சொல்கின்றன.

அதேசமயம் நாம்மைப்போன்ற பொதுமக்கள் அன்னை
தெரசாவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள
வேண்டிய சேவை குணங்களை மட்டுமல்ல
மிகப்பெரிய வெற்றிக்கான எட்டு சூத்திரங்களையும்
அவர் நமக்குச் சொல்லித்தருகிறார். என்கிறது ஒரு
சமீபத்திய புத்தகம்

ருமா போஸ், லௌ ஃபாஸ்ட் என்ற இருவர் இணைந்து
எழுதியிருக்கும் இந்த புத்தகத்தின் பெயர்
“மதர் தெரசா’ சி.ஈ.ஓ’ (Mother Teresa, CEO)
-

அன்னை தெரசா கற்றுத்தரும் அந்த எட்டு சூத்திரங்கள்,
இங்கே சுருக்கமாக:

1) எளிய கனவுகள் போதும் அவற்றை அழுத்தமாகச்
சொல்லிப் பழகுங்கள்

உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ
மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால்
அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
ஆரம்பத்தில் மிக எளிமையான இலக்குகளை நிர்ணயித்துக்
கொள்ளுங்கள் அவற்றை அடைந்தபின் அடுத்த செட்
கனவுகளைக் காணலாம். என்ன அவசரம்?

2) தேவைதைகளோடு வாழ்வதற்குதான் எல்லோருக்கும்
விருப்பம், ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் சில
சாத்தான்களைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

நீங்கள் ஒரு நல்ல லட்சியத்தை நோக்கிச் செல்லும்
வழியில் பல அசௌகர்யங்கள், சங்கடங்கள், தடைகள்
எதிர்ப்படலாம். அவை உங்களுகடைய பயணத்தையே
 கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், எல்லோரையும்
அரவனைத்து அனுசரித்துச் செல்லுங்கள்

3. பொறுமை அவசியம், எல்லாவற்றுக்கும் ஒரு நேரம்
உண்டு

ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது.
பொறுத்திருங்கள் சூழ்நிலை எப்படிபட்டது என்று கவனமாக
யோசித்து உங்களுடைய நேரத்தையும் செயல்பாடுகளையும்
திட்டமிடுங்கள்

4) சந்தேகப்படுங்கள்: சந்தேகம் என்றால் அடுத்தவர்கள்
அல்ல உங்களை நீங்களே!, அன்னை தெரசா தன்னுடைய
எண்ணங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

அதேசமயம் அவரிடம் அசட்டு நம்பிக்கையை கிடையாது
எதிலும் இறங்குவதற்கு முன்னால் தன்னைத்தானே
சந்தேகக் குணத்துடன் கேள்விகளை கேட்டுக்கொள்வார்.
பலவிதமான பரீட்சையில் ஜெயித்துபிறகுதான் முதல்
காலடியே எடுத்துவைப்பார் அதன் பிறகு வெற்றி நிச்சயம்!

5) தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம்

எந்த வேலையும் செய்வதற்கு இரண்டு வழிகள் உண்டு.
நம் இஷ்டப்படி செய்யலாம். அல்லது. இதை இப்படித்தான்
செய்ய வேண்டும் என்று நமக்கு நாமே வரையறுத்துக்
கொண்டு என்று நமக்கு நாமே வரையறுத்துக்கொண்டு
அந்த வரம்புக்குள் ஒழுக்கமாகச் செயல்படலாம்.

அன்னை தெரசா இதில் இரண்டாம் வகை, ஒரு நாளைக்கு
எவ்வளவு நேரம் தூங்கலாம். என்ன சாப்பிடலாம்,
எத்தனை மணிக்கு என்ன வேலை செய்யலாம் என்பதில்
தொடங்கி சகலத்திலும் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை
விதித்துக்கொண்டு அவற்றை விடாமல் பின்பற்றியவர்
அவர் முணுமுணுத்துக்கொண்டு அல்ல,

ஒழுங்குமுறையோடு வாழ்வதில்தான் என்னுடைய
சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லியபடி, சிரித்துக்கொண்டே!

6) எல்லோருக்கும் புரியும் மொழியில் பேசுங்கள்:
அறிவுஜீவிகள் பலர் அடுத்தவர்களுக்கு புரியாதபடி
சிக்கலாகப் பேசினால்தான் பெருமை என்று நினைக்கிறார்கள்,
உண்மை அதுவல்ல

7) மௌனம் பழகுங்கள்:

பல நேரங்களில், மொழிகள்கூட அநாவியம் ஒரு சின்னப்
புன்னகை அன்பான முதுகுதட்டடல் பாசம் பொங்கும்
ஒரு முத்தம் என இடத்துக்கு ஏற்ப உங்களது உடல்
மொழியால் மௌனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்,
உடனடிப் பலன்கள் கிடைக்கும்.

8) யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்: பொதுவாக நாம்
ஒருவரை சந்தோஷப்படுத்த நினைத்தால் இன்னொருவரை
அலட்சியப்படுத்தும்படி நேர்ந்துவிடுகிறது.

இந்த பிரச்னைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி.நமது
செயல்பாடுகள் யாரிடம் என்னவிதமான தாக்கங்கள்
உருவாக்கக்கூடும் என்று பல கோணங்களில் இருந்து
யோசிப்பதான். இதற்காகச் செலவிடும் சில நிமிடங்களை
வீண் என்று நினைக்காதீர்கள், அவைதான் உங்களைப்
பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்.

- என் சொக்கன்
நன்றி: குமுதம்

கங்கை அவள் கண்ணுக்குள்..

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி.
இராமனது வெற்றிச் செய்தியைச் சீதையிடம்
சொல்கிறான் அனுமன்.

ஆனந்தக் கண்ணீர் விடுகிறாள் சீதை. அனுமனோ
“அம்மா… உங்களைக் கொடுமைப்படுத்திய இந்த
அரக்கியரை அழிக்க இதுவே நல்ல தருணம்.
அனுமதியுங்கள்’ என்கிறான்.

அரக்கியர் சீதை பின் ஒளிகிறார்கள். சீதையோ
“இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவன்
சொன்னதைச் செய்தார்கள்? பாவம்… இவர்களை
விட்டு விடு’ என்று கண்ணில் கங்கையைப் பாய
விடுகிறாள்.

கண்ணகி, சீதை என்றில்லை.. இந்திய நாட்டில்
இருக்கும் ஒவ்வொர பெண்ணுமே கண்ணுக்குள்
ஒரு கங்கையைக் கட்டி வைத்துத்தான் வாழ்க்கை
நடத்துகிறாள்.

அந்தக் கங்கைகள் எத்தனையோ ஆண்களின்
பாவங்களைக் கழுவி இருக்கின்றன. அம்மாவாய்,
மனைவியாய், காதலியாய், தோழியாய், எத்தனை
எத்தனையோ ஆண்களின் பாவங்களை கழுவிய
கண்ணீர்க் கங்கைகள் பாய்ந்து கொண்டேதான்
இருக்கின்றன.

ஒட்டு மொத்த ஆண் குலத்தின் சகல பாவங்களையும்
கழுவக்கூடிய கங்கை ஒவ்வொரு பெண்ணின்
கண்ணுக்குள்ளும் இருக்கிறது. எல்லையே இல்லாத
இரக்கம்தான் பாவங்களைக் கழுவும் நிஜமான
அற்புத சக்தி.

அந்தக் கங்கை அவள் கண்ணுக்குள்!

கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்டுக் கொள்கிற
ஆண்கள் பெண்மையின் நிஜமான கங்கை எங்கே
பாய்கிறது என்று தெரிந்து கொள்வது நல்லதல்லவா?

- சுகி. சிவம்

நன்றி: மங்கையர் மலர்

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி அட்டைகள்

உலக நண்பர்கள் தினம்

உலக நண்பர்கள் தினம்

அன்பு நண்பர்கள் அறிவது

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே

இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நண்பனை கொண்ட வாழ்க்கை இனிப்பானது.

கொண்டாடப்படுகின்ற தினங்களில் முதல் இடங்களை பெறும் தினங்களில் ஒன்றாக இன்றைய தினத்தையும் குறிப்பிடலாம்.

-

நன்றி:

http://svpriyan.blogspot.com/2010/08/blog-post.html

தீபாவளி நல்வாழ்த்துகள்

http://rammalar.files.wordpress.com/2010/11/urrntitled.jpg?w=300

=

http://tamilkudumbam.com/images/fbfiles/images/happy_diwali.jpg

திருமண வாழ்க்கை சிறக்க. . .!

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் காரியங்களைத் தீர்மானிக்க வேண்டாம் என டாக்டர் டி. காமராஜ் கூறினார்.

விவாகரத்தைத் தடுப்பது, திருமண வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துவது ஆகியவை குறித்த இலவச கருத்தரங்கு சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாக்டர் டி.காமராஜ் பேசியது:

திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும்.

கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி விட்டுக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் தனது உரிமைகளை ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கும்.

இந்த எண்ணம் வாய்த் தகராறில் தொடங்கி, விவாகரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தம்பதியர் தங்களின் எண்ணங்கள், குண நலன்கள், எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து தங்கள் துணையிடம் சரியான நேரத்தில், கண்ணியமான முறையில் தெரிவித்துவிட வேண்டியது அவசியம்.

திருமணமான ஆரம்ப காலத்திலோ, காதலிக்கும்போதோ பரிசுப் பொருள்களை அதிகமாக வாங்கி கொடுப்பது வழக்கம். நாளாக நாளாக அந்த குணம் குறைந்துவிடும்.

இதனால் சில தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். பரிசுப் பொருள்களின் மீதான ஈடுபாட்டால் அல்ல, தன் மீது உள்ள அன்பு குறைந்துவிட்டது என எண்ணம் தோன்றும் காரணத்தினால்தான் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் தொடங்கும்.

திருமணம் நடப்பது வரை உடல் தோற்றத்தின் மீது அதிக கவனம் கொள்பவர்களில் பலர், திருமணத்துக்குப் பிறகு கவனம் செலுத்துவதில்லை.

இதனால் உடலின் எடை அதிகரித்து, தங்களின் எடுப்பான தோற்றத்தை இழக்க நேரிடுகிறது. இதன் மூலம் தங்கள் துணையின் வெறுப்புக்கு ஆளாக நேரிடலாம். உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக, மிடுக்காக தம்பதியினர் வைத்துக் கொள்வது சிறந்தது.

சிலரிடம் உள்ள வாய் துர்நாற்றம், வியர்வை நாற்றம் உள்ளிட்ட அநாகரிக பழக்கவழக்கங்கள் துணையிடம் வெறுப்பை ஏற்படுத்தும்.

துணையிடம் உண்மையை மறைக்க தொடர்ந்து பலர் முயற்சி செய்வது வழக்கம். இந்த விஷயத்தில் கணவனா அல்லது மனைவியா என்ற வேறுபாடு கிடையாது. தங்களது இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ எனத் தொடர்ந்து பலர் உண்மையை மறைத்து வருவார்கள்.

ஒரு நாள் உண்மை தெரியவரும் நிலையில், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து விவாகரத்து வரை செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகும்.

தம்பதியர் ஒரு வாரத்தில் குறைந்தது 15 மணி நேரம் தனிமையாக இருக்க வேண்டும். தங்களுக்குள் பிரச்னை நிலவினால் 25 மணி நேரம்கூட செலவழிக்கலாம்” என்றார் டாக்டர் டி. காமராஜ்.

posted by விஜி

நன்றி”தமிழ்குறிஞ்சி”

from fwd mail


“தமிழ் பிரவாகம்”

திருமணத்தை ஏன் பதிவு செய்யணும்?

- பாலா நடராஜன்
நன்றி; மங்கையர் மலர்
———————————————

“அண்மையில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.
முகூர்த்தம் முடிந்த சிலமணி நேரத்தில் மணமக்கள்
திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் மணமக்கள்
திருமணப்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார்கள்.

திருமணத்துக்கு வந்திருந்த சிலர் பத்திரிகை அடிச்சு
உற்றார், உறவினர்கள் சூழ திருமணம் நடந்திருக்கும்
போது எதற்காகத் திருமணத்தைப் பதிவு பண்ணணும்?
என்று கேட்டார்கள். திருமணத்தைப் பதிவு செய்வது
இன்றைய கால கட்டத்தில் அவசியம் என்று
அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.

திருமணத்தைப் பதிவு செய்வதன் அவசியத்தைப்
பற்றி பார்ப்போம்.

இந்து மத சம்பிரதாயப்படி நடக்கும் திருமணம்,
கோயில்களில் வைத்து நடக்கும் திருமணம்.
சுயமரியாதைத் திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்
படி நடக்கும் திருமணம். கிறிஸ்தவ, இஸ்லாமிய பார்சி
முறைப்படி நடக்கும் திருமணங்கள் என்று பலவகை
உண்டு.

ஆனால் சமீபகாலமாக, காதலர்கள் வீட்டை விட்டு
ஓடி வந்து காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்து
கொள்ள, அங்கிருக்கும் காவல் அதிகாரியே அவர்களது
திருமணத்தை நடத்தி வைக்கும் சம்பவங்களும்
நடைபெறுகின்றன.

சிலர் சாட்சிகள் யாருமின்றி கோயில்களில் திருமணம்
செய்து கொள்கிறார்கள். இதுபோல இன்னும் சில
சூழ்நிலைகளில் நடக்கும் திருமணங்களில் கணவன் -
மனைவி இருவருக்குள் பின்னால் பிரச்னை என்று
வந்தால், அப்போது திருமணம் நடந்தது என்பதற்கே
சட்டப்பூர்வமான சாட்சிகள் ஏதுமில்லாது போய்விடக்
கூடும்.

இன்னொரு பக்கம் இன்று ஏராளமானவர்கள் அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் என்று பல்வேறு
அயல்நாடுகளுக்கும் பணி நிமித்தம் செல்ல வேண்டி
இருக்கிறது. அதற்காக பாஸ் போர்ட்டுக்கும், விசாவுக்கும்
விண்ணப்பிக்கும்போது, இவர் இன்னாருடைய கணவர்
அல்லது மனைவி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட
வேண்டியது அவசியமாகிறது.

திருமண அழைப்பிதழே இதற்குப் போதுமானது என்றாலும்,
திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து அதற்குரிய பதிவாளர்
வழங்கும் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொண்டால் இன்னும்
பாதுகாப்பு.

விவாகரத்து வழக்குகள் இன்று அதிக அளவில் நீதி
மன்றங்களுக்கு வருகின்றன. அப்போது விவாகரத்து
கோரும் இருவரும் கணவன் – மனைவி என்பதற்காக
சட்டப்பூர்வமான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டப்பூர்வமாக கணவன் = மனைவி இல்லாத இருவர்
எதற்காக விவாகரத்து கோருங்கள் என்று நீங்கள்
நினைக்கலாம்? நான் கேள்விப்பட்ட ஒரு வழக்கில்,
ஒரு கணவன், தன் மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணை
இவள்தான் என் மனைவி என்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி,
விவாகரத்தே வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

இதுபோன்ற ஆள்மாறாட்டக் குற்றங்கள் நடைபெறாமல்
தடுப்பதற்கு கணவன் – மனைவி இருவரது புகைப்படங்களும்
ஒட்டப்பட்ட திருமணச் சான்றிதழ் மிகவும் கைகொடுக்கும்.

திருமணங்கள் இந்து திருமணப்பதிவேட்டில், பதிவு செய்யப்
பட வேண்டும் என்று முன்பு இருந்தது. இப்போது
திருமணங்களைப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று
அரசாங்கமும், உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளன.

திருமணத்தைப் பதிவு� சய்வதன் மூலமாக இன்னார்
இருவரும் திருமணம் செய்து கொண்ட தம்பதி என்பதற்கு
ஆதாரம் கிட்டுகிறது. பிற்காலத்தில் ஏதாவத பிரச்னை
வருமாயின், திருமணமே நடக்கவில்லை என்று யாரும்
மறுக்கமுடியாது. திருமணமான ஒருவர் மேற்படிப்புக்காகவோ,
வேலை நிமித்தமோ, பிற காரணங்களுக்காகவோ, தன்னுடைய
மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்லும் போது,
திருமணத்துக்கான ஆதாரத்தைக் கேட்பார்கள். திருமணம்
பதிவு செய்யப்பட்டிருந்தால் திருமணச் சான்றிதழை அளித்து,
நிரூபிப்பது எளிதாக இருக்கும்.

திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால், பாஸ்
போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, கூடுதலாக ஒரு
அஃ“பிடவிட் தரவேண்டி இருக்கும். அதில் எங்கள்
மதமுறைப்படி நாங்கள், திருமணம் செய்து கொண்ட
போதிலும், எங்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை,
நாங்கள் இருவரும் கணவன் – மனைவி எங்களுக்கு இந்த
இடத்தில் இன்ன தேதியில் திருமணம் நடந்தது என்று அதில்
குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணவன் – மனைவி
இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம், அதிலே
ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

- எழுத்து வடிவம்: எஸ்.சந்திரமௌலி.
====================================================

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers