கண்களால்
என்னை கைது செய்!
உன் இதயச்
சிறையில் அடை!
ஆயுட் கைதியாய்
மட்டமல்ல,
கணவனாகவும்!
====================
>கி.திலகர்
-
மார்ச் 4, 2011 இல் 8:39 பிற்பகல் (புதுக்கவிதை)
கண்களால்
என்னை கைது செய்!
உன் இதயச்
சிறையில் அடை!
ஆயுட் கைதியாய்
மட்டமல்ல,
கணவனாகவும்!
====================
>கி.திலகர்
-
மார்ச் 4, 2011 இல் 8:36 பிற்பகல் (புதுக்கவிதை)
நான் உனக்காகக் காத்திருக்கையில்
நீ என்னை பார்க்காமல்
சென்றாலும்…
நான் பார்த்து ரசிப்பேன்,
உன் பாதச் சுவடுகளை…!
=======================
>எஸ்.ஆல்வின் ஜேக்கப்
மார்ச் 4, 2011 இல் 8:33 பிற்பகல் (புதுக்கவிதை)
-
தீ வைப்பது – நீ என்றால்
தேகம் எரிந்து
இறப்பதில் மகிழ்ச்சிதான்!
மெழுகுவர்த்தி
==========================
>து.மனோகரன்
ஜனவரி 22, 2011 இல் 3:22 பிற்பகல் (புதுக்கவிதை)

–
வேலை
——-
தேங்கிக் கிடக்கும்
கோப்புகளில்
சுறுசுறுப்பாக
வேலை பார்க்கிறது
சிலந்தி
>ப.உமாமகேஸ்வரி
==========================
கனவு
—–
குதிரையும் மாடும்
கனவு கண்டால்
ஒரு வேளை அது
மனிதர்களைக்
கவிழ்த்துப் போட்டு
லாடம் அடிக்கும்
கனவாகத்தான் இருக்கும்!
>கமருதீன்
==========================
கோலம்
————–
அவள் விரல் பட்ட
மயக்கத்தில்
வாசலில்
விழுந்து கிடக்கிறது
கோலம்>
>சி.பி.செந்தில்குமார்
==========================
நன்றி: குங்குமம்
படம்: வெப்துனியா
ஜனவரி 22, 2011 இல் 3:15 பிற்பகல் (புதுக்கவிதை)

=
ஆயத்தம்
———
மழைக்காலத்தில்
கலப்பையை
தயார் செய்கிறார்கள்
கிராமத்தில்
குடையை
ரிப்பேர் செய்கிறார்கள்
நகரத்தில்!
>பெ.பாண்டியன்
=============================
நன்றி: குங்குமம்
ஜனவரி 20, 2011 இல் 5:07 மு.பகல் (புதுக்கவிதை)

=
தூக்க மாத்திரையும்
துணை செய்யவில்லை
உழைக்காதவன் மெத்தையில்!
===========================
கழுத்தில் கட்டிய தாலி
அசைந்தாடியது
பழைய காதலன் ஞாபகத்தில்.!
=============================
>அமீர் அப்பாஸ்
(படித்ததில் பிடித்தது)
December 10, 2010 இல் 4:34 மு.பகல் (புதுக்கவிதை)
-
பெயர் எனப்படுவது
-
எங்கள குடிசையில்
அடுப்பெரிந்து
ஆறு நாட்களாகிறது
இருந்தும்
எங்களின் பெயர் அன்றாடங்காய்ச்சி..!
>திருவைக்குமரன்
=======================================
பின் தொடர்ச்சி
-
எப்போதும்
வெள்ளை உடையில்
அப்பா!
அப்பாவின்
மறைவுக்குப் பின்
அம்மா!
>இரா.கமலக்கண்ணன்
-===================================
பாட்டி
-
அங்கு யார் கட்டியதோ
முதியோர் இல்லத்தை
நிலவில் பாட்டி!
>அதிரை புகாரி
==================================
நன்றி: குங்குமம் 13-12-10
December 9, 2010 இல் 3:06 மு.பகல் (புதுக்கவிதை)

–
அள்ளிச் செல்ல
ஆளில்லை
அவள் சிரித்து விழுந்த முத்துகளை..!
==============================
“ஊரெல்லாம்
உறங்கிய நேரத்தில்
உறங்காமல் தெருவிளக்குகள்..!
===============================
நிற்கும் போதே
பறக்கிறேன்
நினைவில் நீ இருப்பதால்..!
===============================
அங்கும் இங்கும் அலைந்து திரிந்து
எப்படியோ ஒரு கடிகாரம் வாங்கினேன்
நேரம் சரியில்லை என்றார் வீட்டு ஜோசியர்!
========================================
என் உயிரோடு உணர்வோடு
கலந்த அவள்!
கனவோடு இருக்கிறாள்
வடிவம் பெறாத உருவமாய்
======================================
PagesPosted by Ashok
நன்றி: http://ashok-kavithaigal.blogspot.com
நவம்பர் 6, 2010 இல் 7:36 மு.பகல் (புதுக்கவிதை)

=
அவள் ஒரு நிலா…!
பேச மாட்டாள்
நம்மை பேச வைப்பாள்!
>ஈரோடு இறைவன்
————————————————–
(படித்ததில் பிடித்தது)
நவம்பர் 2, 2010 இல் 3:30 மு.பகல் (புதுக்கவிதை)

எத்தனை தடவை கொள்ளையடிப்பது
ஒரே வீட்டில்
உன் கண்கள்
-=============================
ஐந்தில் வளையாத்து
ஐம்பதில் வளைந்தது
முதியோர் கல்வி
-
அறுக்க மாட்டாதவன் இடுப்பில்
ஐம்பத்தெட்டு அரிவாள்
அதிக பட்ச மந்திரிகள்
-===============================
அமாவாசையானது
நிலவு
எதிர்வீட்டு சன்னலில்.
===============================
நன்றி:
Kummacchi.blogspot..com/2010/09/4