மயில் போல… புறா ஒண்ணு…

[Victoria Crowned Pigeon]
சிங்கப்பூரின் ஜூராங் பறவைகள் பூங்கா 380 வகைகளில் 5000 பறவைகளைப் பராமரிக்கிறது என்றால் ஆச்சரியமாய் இருக்கிறதில்லையா? அதுவும் இயற்கையான சூழலிலேயே என்பதுதான் விசேஷம். ஏவியரி எனப்படும் உயர்ந்த மரங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டக் கூண்டுகளில் பறவைகள் வெளியேறியும் விடாமல் அதே நேரம் சுதந்திரமாக இயற்கையின் மழை வெயில் இடி மின்னல் எல்லாவற்றையும் அனுபவித்தபடி வாழுகின்றன.
பூங்காவின் எந்தெந்த இடத்தில் என்னென்ன வகைப் பறவைகள் உள்ளன என்பதற்கான தெளிவான வரைபடம் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் தந்து விடுகிறார்கள்.
# 2. பறவைகள் பலவிதம்

உள்ளே நுழைந்ததும் வரவேற்றது பேரட் பேரடைஸ். காக்கட்டூ, மக்கா, ஸ்கார்லெட், சன் பாரகீட், எலக்டஸ், ஜுவினைல் கிளிகளின் சத்தம் இடத்தையே ரம்மியமாக்கியது. வந்து கவனிக்கிறோமெனக் கையசைத்து விட்டு பனோரெயிலில் ஏறினோம்.
# 3. கிளிகள் கையில் கிளிகள்

மூன்று ஸ்டேஷன்களில் நிறுத்தம் கொண்ட இந்த பனோ ரயில் தொடர்ந்து சுற்றியபடி இருக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி [நடக்க முடிகிற அளவு:)]அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பறவைகளை ரசித்து விட்டு ரயில் அடுத்த ரவுண்ட் வரும் போது ஏறிக் கொள்ளலாம்.
# 4. பனோ ரயில்

முதல் நிறுத்தத்தில் இறங்கிய போது ஆச்சரியப்படுத்தியது அத்தனை வகைப் பறவைகள் நிரம்பிய இடத்தில், உலகில் எத்தனை எத்தனையோ பறவைகள் இருக்கையில் நம்ம தேசியப் பறவைக்கு செய்து வைத்திருந்த மலர் அலங்கார மரியாதை:
# 5. அட நம்ம மயிலு…

# 6. ராணி மகராணி [Victoria Crowned Pigeon]
மாடப்புறா இல்லை. மகுடம் தரித்த புறா. பிரிட்டிஷ் ராணியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை மிகப் பெரிய ‘வாக் இன்’ ஏவியரியில் பராமரிக்கப்படுவதால் நாம் உள்ளேயே சென்று இப்படி ரொம்ப அருகாமையில் இருந்து படம் எடுக்க முடிகிறது.
# 7. மகுடத்தில் வித்தியாசம்
ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதிரித் தோற்றத்திலிருக்குமென சொல்லப்பட்டாலும் கொண்டை அமைப்பில் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது (கவனிக்க # படம் 1: மயில் போல..).
# 8. ஹார்ன் பில்
நாலைந்து மரங்கள் அடங்கிய மாபெரும் கூண்டில் இரண்டே பறவைகள். வலைக்கம்பிக்குள் கேமராவின் லென்ஸ் நுழையவில்லை:(! எடுத்த பலவற்றில் தேறிய ஒன்றே இது.
ராட்சத பருந்து, நீந்தும் அன்னங்கள், பெலிகன்கள், கூட்டமாக ஏரியினுள் வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஃப்ளெமிங்கோ என எண்ணற்ற வகைப் பறவைகள். தூரம், நேரமின்மை காரணமாக அருகில் சென்று பார்க்க இயலாதவையுடன் ஏற்கனவே இறங்கிப் பார்த்தவற்றையும் பறவைப் பார்வையில் பனோரயிலில் இருந்து ரசிக்க முடிகிறது.
அதிலும் கீழ்வரும் முதல் மூன்று (# ) வேகமாய் விரைந்த மோனா ரயிலிலிருந்து எடுத்தவை:
# 9. ஆஸ்திரேலியன் பெலிகன் [உன்னைப் போல் ஒருவன்
?]

# 10 வெள்ளை ஃப்ளெமிங்கோ கூட்டம்

# 11. ஆரஞ்சு வண்ணத்தில்..

# 12. வெள்ளையம்மா
ஒற்றைக்காலில் தவம்
# 13. அழகி (Orange Flemingo)

மடை வாத்து / Wood Duck or Carolina Duck:
வட அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும் வகை இவை.
# 14. அசந்த தூக்கத்தில் ஒன்று

# 15. அரைத் தூக்கத்தில் ஒன்று

# 16. அட்டென்ஷனில் ஒன்று

இவை வேறு வகை. வெள்ளை முகங்கொண்ட பழுப்பு வாத்துகள். தொலைவிலிருந்த குட்டையருகே நின்றிருந்தன. அத்தனை தெளிவில்லா விட்டாலும் பார்வைக்காகப் பதிந்துள்ளேன்:
# 17. பழுப்பு வாத்துக்கள்

ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சிப் பகுதியாக வடிவமைக்கப்பட்ட இடம் வெகு அழகு. இது இரண்டாவது நிறுத்தத்தில் வருகிறது.
# 18. வரவேற்கிறது

செயற்கை நீர்வீழ்ச்சி சுமார் 30 மீட்டர் அதாவது நூறடிக்கும் மேலான உயரத்திலிருந்து விழுகிறது:
# 19. தீம்தனனா தீம்தனனா

‘ச்சோ’ என அருவியின் சத்தம் அமைதியான காட்டில் எதிரொலிக்க அங்கொரு அருமையான இசைக் கச்சேரியே நடந்து கொண்டிருந்தது. மனமின்றியே நகர வேண்டியதாயிற்று.
-
==============================================
நன்றிஇ: http://tamilamudam.blogspot.com/2011/12/6.html