நாட்டு நடப்பு!

நவம்பர் 25,2009,00:00   IST
Hilarious political cartoon images
நன்றி; தினமலர்

சாக்ரடீஸ்

”The unexamined life is not worth living” – Socrates (470-399 BCE)

பெரிய பெரிய கடைகள் ,நகைகடை ,துணிகடை , டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ,வித விதமான பொருட்கள் நிரம்பிய கடைகள் பார்க்கும் போது ‘ அடடா கையில் காசு இல்லையே . இந்த பொருளை எப்ப வாங்க போறோம் , பாப்போம் போனஸ் வந்தால் ..’இப்படி பலருக்கு மனசு கிடந்தது அடித்துகொள்ளும் !

Sophie’s worldஎன்று ஒரு நாவல் . அதில் ஒரு காட்சி

சாக்ரடீஸ் அப்படி ஒரு கடை முன் நிற்கிறார் .புராதன காலத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முன் : ஒரு பார்வை பார்க்கிறார் .முடிவாக சொல்கிறார் .

“What a lot of things I don’t need!”

……

இடாலோ கால்வினோ தன் Why read the Classics? கட்டுரையில் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிடுகிறார் .

ஹெம்லாக் தயாராகிகொண்டிருக்கிறது .

சாக்ரடீஸ் விஷம் குடிப்பதற்கு முன் புல்லாங்குழல் வாசித்து ஒரு மெட்டு கற்றுகொண்டிருந்தாராம் .

‘இதனால் உமக்கு என்ன பிரயோஜனம் ?’ -கேட்கிறார்கள்

“நான் சாகும்போது அதற்கு முன் புதிதாய் ஒரு புதிய மெட்டு அறிந்து கொண்டு விடுவது சந்தோசம் தானே

————————–

நன்றி

http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_9863.html

photo: from net

கோபத்தை எப்படி அடக்குவது?

கோபத்தை எப்படி அடக்குவது?

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் ஏறியிருந்த பெட்டியில் இரண்டு ஆங்கிலேயரும் ஏறியிருந்தனர்.

இரண்டு பேரும் விவேகானந்தரை வெறுப்போடு பார்த்தார்கள். இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு இளக்காரம், ஏளனம்தான். அதுவும் துறவி என்றால் கேட்கவா வேண்டும். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்து அவரைக்குறித்து அவர் காதுபடவே இழிவாகப் பேசினர்.

விவேகானந்தர் ஒரு வார்த்தையும் பதில் பேசவில்லை. சண்டையிடவில்லை. மௌனமாக அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. விவேகானந்தர் ஸ்டேஷன் மாஸ்டரை அருகில் அழைத்து “குடிப்பதற்கு நல்ல நீர் கிடைக்குமா? என்ற ஆங்கிலத்தில் அழகாகக் கேட்டார்.

அவர் ஆங்கிலம் பேசியதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் திடுக்கிட்டனர்.

“உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?” ஒருவர் வேகமாக விவேகானந்தரிடம் கேட்டார்.

“நன்கு எழுதவும் பேசவும் தெரியம்” ஆங்கிலத்திலேயே பதில் கூறினார் விவேகானந்தர்.

“அப்படியானால் நாங்கள் கடந்த அரைமணி நேரமாக உங்களைத் திட்டிக் கொண்டிருந்தோமே.. நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை?” என்றனர்.

அதற்கு விவேகானந்தர் பொறுமையாக விடை கூறினார். “நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல்முறையல்ல”

புத்திசாலித்தனமான பேச்சு சுவையாக இருக்கும்.

***************************************

கனவில் தோன்றும் காட்சிகள் புகைப்படங்களாக…

கனவில் தோன்றிய காட்சிகளை புகைப்படமாக பதிவுசெய்யும் தொழில்நுட்பம் – ஜப்பானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

http://www.virakesari.lk/news/admin/images/think-200.jpg

ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் “மனதை வாசித்தல் தொழில்நுட்பம்’ உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் திட்ட ஒழுங்கமைப்புக்கு ஏற்ப ஒப்பீடு செய்து புகைப்படமாக மாற்றும் வல்லமை கொண்டதாகும்.

எனினும், தற்போது கறுப்புவெள்ளை புகைப்பட பிரதிமையாக காட்சிப்படுத்தப்படும் இந்தப் புகைப்படங்கள் தொடர்பான துல்லியத் தன்மையை மேம்படுத்த, மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
*********

Thanks:mrishan.blogspot.com

Watermiilion Art

 

 

 

 


Thanks
smilejokes.blogspot.com

Dubai by night

[483321e.jpg]

 

[29ut1qx.jpg]

 

[4fw02eb.jpg]

 

source:http://vijaybalajithecitizen.blogspot.com/search/label/Photos

சக்தியைச்சேமிப்போம்

டிசம்பர் 14  சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day
இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை
சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள்
அனைத்தும் உள்ளன. நீர்மின்சக்தி ,,அணுமின்சக்தி என அனைத்தையும்
உருவாக்கியது  மனித ஆற்றல் என்ற சக்திதான்.
இல்லத்தரசிகள்  கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல்
சேமிக்கலாம் .சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்து
விடுவார்கள், அது கொதித்து பாதி ஆனவுடன்  பின் வந்து அணைப்பார்கள். சிலர்
தோசை வார்க்கும்
தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள் ,சின்ன தவா
வைத்தாலே தேவையான சூடு பரவும் ,
பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,
சில ஆண்கள் ஷேவிங் செய்து கொள்ள  குழாயைத் திறந்து விட்டபடி
தொடருவார்கள் ,அத்துடன்  செல்லிலும் பேசுவார்கள்
தண்ணீர் போனபடி இருக்கும் ,,,,,,,இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து
விட்டபடி வந்து  பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது ஞாபகம்
வந்து மூடுவார்கள்.

 சிலர் மேலே தண்ணீர்  ஏற மோட்டார் போட்டு விட்டு
பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட, பின் முழித்துக்கொள்வார்கள்.
சில தெருவில் பகலிலும் விளக்கு எரியும் ,அதை அணைக்க மறந்து இருக்கலாம்
இதே போல் மனிதர்கள் இல்லாத  அறையிலும் சுழல் காற்றாடி
சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே
இல்லை.

 

மைக்ரோஅவனில்  தேவையான
அளவுடன்  கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் ,
வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால்  மினசாரச் சக்தி
சேமிக்கலாம்.
தில்லியில் பஹுவாய் மந்திர்  கட்டியிருக்கும் விதம் மிக வியப்பைத்
தருகிறது. தாமரை மலர் போன்று  அமைப்பு  ஒரு இடத்திலும்
மின்சாரம் இல்லை  சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம் ,,,,,
உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம்  உள்ளே மிகவும்  சில்லென்று ஏசி
போட்டாற்போல் இருக்கிறது இது நல்ல வெயில்
காலத்திலும் தான் ,,,,,,,,,,எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி

இந்தச் சக்தியைச் சேமிக்கும் போது நம்மிடம் இருக்கும் சக்தியையும்
சேமிக்கலாமே  படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம்  கோபத்தில் சக்தியை
இழக்கிறோம் ,காமத்தில் சக்தி
அதிகமாக போகிறது  ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பல
நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது.

 
ஜே.வி செர்னே சொல்கிறார்
“ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற  வார்த்தைகள்
வாகனங்களாக உள்ளன . “செய்து முடிப்பேன்” என்ற வாகனத்தில்
ஏறிக்கொண்டால்  அடக்கமுடியாத ஆர்வத்துடன்  கூர்ந்து செயல்
வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம்

 வானத்தைத் தொட்டுவிடலாம்  “

சக்தியைச்சேமிப்போம் ,,,,,,,,,

அன்புடன் விசாலம்

–~–~———~–~—-~————~——-~–~—-~

நன்றி;
  “தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Piravakam@googlegroups.com

 

 
படம்
ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மிருகம் கங்காரு, அதை அந்நாட்டுக் காடுகளில் அதிகமாகக் காணலாம். சுமார் 120 வகையான கங்காருகள் இருக்கின்றன. மிகச் சிறியது முயல் அளவாகவும் மிகப் பெரியது இரண்டு மீட்டர் உயரமாகவும் இருக்கும். கங்காரு குட்டிப் போட்டுப் பால் கொடுக்கும். குட்டி பிறக்கும்போது மூன்று சென்டிமீட்டர் நீளமே இருக்கும் ! குட்டி பிறந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பைக்குள் ஊர்ந்துசென்று தங்கிவிடும். அது அங்கு ஆறு மாத காலம் தாய்ப்பாலை உண்டு வளரும்.

படம்
வளர்ந்த குட்டி தாயின் வயிற்றுப் பையிலிருந்து தலையை மட்டும் நீட்டிப் பார்ப்பதைக் காண விந்தையாக இருக்கும். தாய் மேயும் போது குட்டியும் பையிலிருந்து தலையை நீட்டிப் புல்லைக் கடித்துத் தின்னும். ஒரு நாய்க்குட்டி அளவு வளர்ந்தபின் கங்காரு குட்டி , தாய்ப் பையை விட்டு இறங்கிவிடும்.

கங்காருவின் வால் மிகுந்த வலிமையுள்ளது. கங்காரு தன் பின்னங்கால்களையும் வாலையும் மடித்துவைத்து அவற்றின்மேல் முக்காலியில் அமர்வதுபோல் உட்கார்ந்துகொள்ளும். இது மிகவும் பயந்த இயல்புள்ள விலங்கு, ஆனால், பகை – விலங்குகள் தன்னைத் தாக்கும்போது அவற்றுடன் இது கடுமையாகப் போரிடும். இதோ அடுத்த பக்கத்தில் ஒரு தாய் கங்காருவின் தியாகத்தைப் படித்துப் பாருங்கள்.

உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும் ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் பல பகுதிகளில் பல மாதங்களாக மழை பெய்யவில்லை, கடும் வறட்சியினால் ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லா நீர்நிலைகளும் வற்றிவிட்டன. அதன் விளைவால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி நகரங்களை முற்றுகையிட ஆரம்பித்தன.
வறட்சியின் காரணமாக நகர் வாழ் மக்களுக்கும் அவர்கள் வீட்டு மிருகங்களுக்குமே போதிய தண்ணீர் வசதியில்லை. இந்நிலையில் வனவிலங்குகளிடமிருந்து இரவு வேளைகளில் தண்ணீர்த் தொட்டிகளைப் பாதுகாப்பது நகரவாசிகளுக்குப் பெரிய தலைவலியாகிவிட்டது. இரவு முழுவதும் ஒருவர் மாற்றி ஒருவர் துப்பாக்கியும் கையுமாகத் தண்ணீர்த் தொட்டிகளைப் பாதுகாத்து வந்தார்கள்.

நகரின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு வீட்டில் ஒருவர் தனியே வசித்து வந்தார். ஒரு நாள் மாலை மங்கும் வேளையில், தொலைவில் ஒரு மரத்தின் மறைவிலிருந்து ஏதோ ஒரு மிருகம் தன் வீட்டைக் கண்காணிப்பதைக் கண்டார். உடனே அவர் தம் வீட்டின் உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்தார். ஒரு செடியின் மறைவில் ஒளிந்துகொண்டு அந்த மிருகத்தை கண்காணிக்கலானார். கொஞ்ச நேரம் கழித்து, அந்த மிருகம் தயங்கித் தயங்கி மறைவிலிருந்து வெளியாகி அவர் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தது. வீட்டுக்காரர் அதைச் சுட்டு வீழ்த்த ஆயத்தமானார்.

அந்த மிருகம் அருகில் வந்ததும் அது ஒரு கங்காரு என்பதையும் அதன் வயிற்றுப் பையில் ஒரு குட்டி இருப்பதையும் அறிந்தார். குட்டியோடு தாயை எப்படிச் சுடுவது- தாயைச் சுட்டால் குட்டியும் கட்டாயம் சாக நேரிடும்.இந்த எண்ணங்கள் அவரைக் கலங்கச் செய்தன. அருகில் வந்தபோது கங்காரு அவரைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் , அது கொஞ்சமும் தயங்காமல் வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்து தண்ணீர்த் தொட்டியை நோக்கிச் சென்றது. தொட்டியின் அருகில் போனவுடன் அது தன் உடலை வளைத்துக்கொண்டு நின்றது. அதனால், குட்டி நீரை பருக முடிந்தது. குட்டி தண்ணீர் குடித்து முடித்தபோது, தான் ஒரு வாய்த் தண்ணீர்கூடப் பருகாமல் அந்த வீட்டுக்காரரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே காட்டுக்குள் சென்று மறைந்தது. அந்தக் கங்காருவின் தாய் அன்பைக் கண்ட அந்த மனிதனின் கண்கள் குளமாயின.

கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே!
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!!

–~–~———~–~—-~————~——-~–~—-~

Thanks:
  “தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

Show Previous Message Prev  |  Next Show Next Message

 

 

சீனா-ஒலிம்பிக் தொடக்க விழா

கஸ்ட் 8… சீன ஒலிம்பிக்கிற்கு இன்னும் ஒன்பதே நாட்கள்.

தொடக்க விழாவின்போது எந்தத் தடங்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது சீனா. இப்போது சீனாவில்

பருவமழைக் காலம். இரண்டு தினங்களுக்கு முன்புகூட கொட்டிய மழையில், அடித்தக் காற்றி்ல் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். சுமார் 1000 கிராமங்களில் கடல் நீர் புகுந்தது.

ஒலிம்பிக்கி்ற்காக பல தியாகங்களை செய்திருக்கிறது சீனா. பீஜிங்கில் மாசு அளவைக் குறைக்க நகரத்தில் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான தொழிற்சாலை இழுத்து மூடியிருக்கிறது சீனா.

பல்லாயிரம் கோடிகளை கொட்டி விளையாட்டுத் திடல்களை, வீரர், வீராங்கனைகள் தங்கும் இடங்களை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறது.

உலக அளவில் சீனாவை கொண்டுபோய் சேர்க்கும் சங்கதியாய் ஒலிம்பிக்கைக் கருதுகிறது சீன தேசம். அதனால் ஒலிம்பிக் தொடங்கும் இந்த வருடத்தின் 8ஆம் மாதமான ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று இரவு 8 மணி 8 நிமிடத்தின் 8 நொடியில்  இயற்கை எதுவும் சதி செய்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா.

முதலில் வருண பகவானை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது அது.

தொடக்கவிழா நடக்கவிருக்கும் பறவைக் கூடு தேசிய ஸ்டேடியத்துக்கு மேற்கூரை இல்லாததால் மழை வந்து விழாவை மறிக்கக்கூடும் என அஞ்சுகிறார்கள், எனவே தொடக்க விழா நடக்கும் அந்த மூன்றரை மணி நேரம், இந்த ஸ்டேடியம் இருக்கும் பகுதிக்குள்ளேயே நுழையவிடக்கூடாது என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இதற்காக அமெரிக்கா பயன்படுத்தி வரும்கிளவுட் சீடிங்என்ற நவீன மழைத் தடுப்பு முறையை பயன்படுத்தவுள்ளது சீனா. பெய்ஜிங் நகரத்தை நோக்கி திரண்டு வரும் மழை மேகங்களின் மீது சில்வர் அயோடைடு ரசாயனத் துகள்கள் அடங்கிய ராக்கெட்களை ஏவி முன்கூட்டியே மழை பெய்யவைக்க திட்டமிட்டுள்ளனர்.

சில்வர் அயோடைடு துகள்கள் மழை மேகங்களுக்குள் இருக்கும் நீர்த்துளிகளை பனிக்கட்டியாக மாற்றிவிடும். அவை உடனே பனிக்கட்டி மழையாக கொட்டித் தீர்த்துவிடும். இதுதான் ஐடியா!

இந்தப் பணிக்காக பெய்ஜிங் நகரைச் சுற்றி 26 மையங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக, தற்காலிகமாக பணியாற்ற 32 ஆயிரம் பேரை நியமித்துள்ளனர்.

இயற்கையை கொஞ்சம் வெல்ல செயற்கையாக எவ்வளவு செலவு செய்யவேண்டியிருக்கிறது.

மழைக்கு எதிராக மறியல் செய்ய ஒரு நாடே களத்தில் இறங்கியிருப்பது ஆச்சரியம்தான்!

 

சேலத்துக்காரருக்கு காந்திஜியின் தண்டனை

சேலத்துக்காரருக்கு காந்திஜியின் தண்டனை!
 
 
 
தமிழ்நாட்டின் ஒரு மாவட்டச் செயலாளர் சேலத்துக்காரர். தனது ஒரே மகள் திருமணத்தின் போது செலவுக்குப் பணம் போதாமையால் காங்கிரஸ் கட்சி நிதியிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துச் செலவழித்துவிட்டார். (பின்னால் கொடுத்து விடலாம் என்று). காங்கிரஸ் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டது. உடனே அவர் யாரிடமோ கடன் வாங்கி வார்தாவுக்குச் சென்று காந்திஜியிடம் தன்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சினார்.

“மன்னிக்க முடியாது. மன்னிக்க மாட்டேன்” என்று காந்திஜி உரத்த குரலில் சொல்லி விட்டார்.

ஆசிரமத்தைத் தேடி வந்த அந்த விருந்தாளியை யாரும் சாப்பிடக் கூட அழைக்கவில்லை (காந்தி சொன்னால் தான் அழைப்பார்கள்) காந்தியை சாப்பிட அழைத்தார்க்ள. சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டார் அன்று உபவாச தினமும் அல்ல. காந்திஜியுடன் இருந்த சி.எப். ஆண்ட்ரூûஸ சாப்பிடப் போகச் சொன்னார். ஆனால் அவர் போகவில்லை.

“வார்தா வருவதற்கு மட்டும் கடன் வாங்கி வந்தேன்” என்றார் அந்த சேலத்துக்காரர்.

“நடந்தே போ, அதான் உனக்கு தண்டனை” என்றார் காந்திஜி கண்டிப்பாக!

ஆண்ட்ரூஸ் அந்த சேலத்துக்காரரை ஜாடை காட்டி தன்னுடன் வரும்படி அழைத்து தனக்கு எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை அவருக்கு கொடுத்து உண்ணச் சொன்னார். அவரை ரயில் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் சேலத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பினார்.

ஒரு குற்றவாளியைப் போல ஆண்ட்ரூஸ் காந்திஜி முன் நின்றார்.

“பாபுஜி” என்று அழைத்தார். மெல்லிதாக நூல் நூற்பிலிருந்து முகத்தைத் திருப்பாமலேயே “சொல்லு” என்றார்.

“அந்த ஆளுக்கு நான் சாப்பாடு பண்ணி வைத்து சேலத்துக்கும் ரயில் டிக்கெட் என் செலவில் வாங்கித் தந்தேன் பாபு” என்றார் தயங்கித் தயங்கி.

“நமது குழந்தைகள் என்றுமே குழந்தைகளாக இருப்பதில்லை. ஆனால் பெற்றோர்தான் என்றுமே பெற்றோராக இருக்கிறார்கள்!”

“தெரியும் நீ அப்படிச் செய்வாய் என்று” எனச் சொல்ல புன்னகையுடன் பார்த்தார் மகாத்மா.

அன்று இருவரும் சாப்பிடவில்லை!

யாரோ ஒரு சேலத்துக்காரன் செய்த பிழைக்காக இரண்டு மகாத்மாக்கள் தங்களை ஏன் வருத்திக் கொள்ள வேணும்?

 

source:tamil.sify.com

 

« பழைய வரவுகள்