நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா…
என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை
முட்டைதான் போடும்.
————————————————————————————————–
ஒருவர்: இருமல்ன்னு சொல்லிக்கிட்டு டாக்டர்கிட்ட சென்றாயே
அவர் என்ன சொன்னார்?
மற்றவர்: இது இருமல்தான்னு… அவரும் ஒத்துக்கிட்டார்.
—————————————————————————————————
கடைக்காரர்: மளிகை கடையில வேலை பார்த்தவனை மருந்து
கடையில வேலைக்கு வைத்தது ரொம்ப தப்பா போச்சு.
மற்றவர்: ஏன் அப்படி சொல்றீங்க.
கடைக்காரர்: எதை எடுக்கச் சொன்னாலும் எத்தனை கிலோ
வேணும்னு கேட்கிறான்.
——————————————————————————————————
தொண்டர்: நம்ம தலைவர் ஏன் திடீர்னு மருத்துவமனை
கட்டுகிறார்.
மற்றவர்: அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம்…
அதான் தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.
—————————————————————————————————–
“டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!”
“தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும்.
தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க.”
——————————————————————————————————-
Posted by gowtham
http://gowtham-myaim.blogspot.com/2009/05/blog-post_10.html

