ஆண் & பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட
பெயர் பட்டியல் இந்த தளத்தில்
உள்ளது.
மேலும் தூய தமிழ்ப் பெயர்களும் உள்ளன
தளத்தின் முகவரி:
http://www.valaitamil.com/childrens-names-subcategory131-116-0.html
மே 24, 2012 இல் 6:34 மு.பகல் (தகவல்)
ஆண் & பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட
பெயர் பட்டியல் இந்த தளத்தில்
உள்ளது.
மேலும் தூய தமிழ்ப் பெயர்களும் உள்ளன
தளத்தின் முகவரி:
http://www.valaitamil.com/childrens-names-subcategory131-116-0.html
மே 17, 2012 இல் 8:20 மு.பகல் (தகவல்)

யார் அந்த உலகம் புகழும் விஞ்ஞான மேதையா?
ஆம் அவரேதான்..!
-
அவர் வாழ்வில் நடந்ததைச் சொல்கிறேன். கவனமாக
கேளுங்கள்.
ஜெர்மானியராக்ப பிறந்த அவர் விஞ்ஞான மேதை
ஐன்ஸ்டீன். நாஜிகளால் நாடு கடத்தப்பட்டவர்.
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்.
-
அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி
சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதன் முறையாக
அந்த ஆராய்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று
சுற்றிக்காட்டி அவருக்குத் திருப்தினா? ஏதும் வசதி
குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள்
கேட்டனர.
-
தயங்க் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார்.
இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு
குறைதான் என்று இழுத்தார்.
என்ன என்று சொல்லுங்கள். உடனே சரி செய்யயப்படும்-
என்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
-
அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைக் சுட்டிக்
காட்டி .’இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே. கொஞ்சம்
பெரிய குப்பைக்கூடை இருந்தால் நல்லது’என்றார்..!
-
===============================================
-
>சுகிசிவம்
மே 13, 2012 இல் 1:49 பிற்பகல் (தகவல்)

ஒரு தனிப்பாடல் சொல்கிறது:-
=
நகை,
அழுகை,
இளிவரல்,
மருட்கை,
அச்சம்,
வெகுளி,
பெருமிதம்,
உவகை,
அமைதி
-
தனிப்பாடல்:
நகைக்கும் உளம் கருவுற உற்றபின்
வலிவந்து துடிக்க பீறிடும் அழுகை
இளிவரல் பேசும் மனம் மரண
அச்சத்தில் மருட்கையோடு தாதியை
வெகுளித் தாமதம் தவிர்க்க,-பிறந்தது
“பிள்ளைக்”கேட்க பெருமிதம் சொல்ல
உவகை கொள்ளும் உறவில் அமைதி.
மே 4, 2012 இல் 9:54 பிற்பகல் (தகவல்)
பதினாறு பேறுகளில் முக்கிய இடத்தை வகிக்கும்
நோயின்மையை அடைவதற்கும், சித்ரா
பௌர்ணமிக்கும் சம்பந்தம் இருப்பதை சித்த
புருஷர்கள் கண்டறிந்து உலகுக்கு நிரூபித்துள்ளனர்.
சித்ரா பௌர்ணமி தினத்தன்று சில இடங்களில்,
நிலவின் ஒளியில் பூமியிலிருந்து ஒருவிதமான உப்பு
வெளிக்கிளம்பி வரும். அதன் பெயர் பூமிநாதம்
எனப்படும்.
அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை
அளிக்கவல்லது என்பதால், மருத்துவத் துறையில்
பயன்படுத்தப்படுகிறது.
இதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்கள். ஆதலால்
முன்காலத்தில் சித்ரா பௌர்ணமி, சித்தர் பௌர்ணமி
என்றே வழங்கப்பட்டது
-
======================================
(படித்ததில் பிடித்தது)
நன்றி: http://www.trisakthi.com/ActionPages/Content.aspx?bid=143&rid=11
மே 4, 2012 இல் 7:53 மு.பகல் (தகவல்)

தமிழகத்தில் கத்திரி வெயில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மே 28-ம் தேதி வரை 25 நாள்களுக்கு இது நீடிக்கும்.
-
டாக்டர்கள் ஆலோசனை:
கத்திரி வெயிலைச் சமாளிக்க அதிக அளவு தண்ணீர்
குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர்,
தரமான குளிர் பானங்களை அருந்தலாம்.
வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் வெயிலில்
செல்வதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்
============================================
மே 4, 2012 இல் 7:14 மு.பகல் (தகவல்)

இது ஒரு கல்லூரிக்காலம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து எந்த
படிப்பைப் படிக்கலாம்? எந்த கல்லூரியில் சேரலாம்?
என்ற கேள்விகளால் குழம்பி இருக்கும் நேரம்.
பெற்றோரும், மற்றவர்களும் ஆளுக்கு ஒரு
யோசனையைக் கூறி மாணவர்களை மேலும்
குழப்பலாம்.
இந்த நிலையில் சரியான படிப்பு எது சரியான
கல்வி நிறுவனம் எது என்று எடுத்துக்கூறி,
மாணவர்களை நெறிப்படுத்தும் புதிய பகுதிதான்
இது.
இந்த பகுதி, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு
சரியான வழிகாட்டியாக இருக்கும் என்று
எதிர்பார்க்கிறோம்.
இந்த புதிய பகுதிக்கு கீழே உள்ள இணையதள
முகவரியைக் கிளிக் செய்யவும்.
—————
http://www.dinamalar.com/Newsmain.asp?cat=3&id=749
கூடுதல் தகவல்களுக்கு:
http://kalvimalar.dinamalar.com/tamil/
============================================
நன்றி: தினமலர்
மே 1, 2012 இல் 10:03 மு.பகல் (தகவல்)

-
வெள்ளித்திரையில் ஜொலித்த நடிகை ரோஜா,
இப்போது சின்னத்திரைக்கு வந்துள்ளார்.
ஜீ தமிழ் டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் லக்கா கிக்கா
என்ற ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில்
இரவு 9.30மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிப்பரபாக
இருக்கிறது.
மே 1, 2012 இல் 7:42 மு.பகல் (தகவல்)
சென்னை கடற்கரையில் உள்ள காலத்தால் அழியாத
தொழிலாளர் சிலையை செய்தது யார் தெரியுமா?
அவரைப் பற்றிய சில செய்திகள்:-
அவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை
சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால்
சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும்
இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர்,
மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத்
தன்மை கொண்டவர்.
4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை
உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால்
உருவாக்கப்பட்டது.
உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய
இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி,
ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை
நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக்
காட்டியிருக்கிறார் ராய்.
தந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம்
எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை)
உருவகப்படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்
பட்டிருக்கிறது.
அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும்,
ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது.
-
==========================================
நன்றி:
http://adhithakarikalan.wordpress.com/2012/04/30
April 30, 2012 இல் 8:51 மு.பகல் (தகவல்)
அர்த்தமுள்ள இந்துமதம் நூலாசிரியர்?
-
கவியரசு கண்ணதாசன்
-
ஜி7 என்று சொல்லப்படுகின்ற உலகின் பணக்கார நாடுகள்:-
-
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி
ஜப்பான், இத்தாலி, மற்றும் கனடா
-
கோடம்பாக்கம் என்று பெயர் வரக்காரணம் என்ன?
-
ஆற்காடு நவாப் குதிரைகளை கட்டும் இடமாக அது
இருந்ததால், ‘கோடா பாக்’ என்று அதற்குப் பெயர்
வைத்தார்.
உருது மொழியில் ‘கோடா’ என்றால் குதிரை என்று
அர்த்தம்
-
ஆசிரியராக இருந்து ஜனாதிபதியானவர்:
