ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

லண்டன்:

பெண்கள் தங்கள் அழகை சரி செய்து கொள்ள,
ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முறை கண்ணாடி
பார்ப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு அழகுணர்வு அதிகம். இதனால் தான்,
பெண்களின் அலங்காரப் பொருட்களை மையப்படுத்தி
பல்வேறு நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன.

லண்டனைச் சேர்ந்த, “சிம்பிள் ஸ்கின் கேர்’ என்ற
நிறுவனம், 2,000க்கும் அதிகமான பெண்களிடம் ஒரு
ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வின்படி, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
பெண்கள் எட்டு முறை கண்ணாடி முன் நின்று, தங்கள்
அலங்காரத்தை சரி செய்து கொள்கின்றனர். கார்
கண்ணாடி, கடைகளில் வைக்கப்பட்டுள்ள நிலை
ண்ணாடி, குளிர்ச்சி கண்ணாடி என, பல கண்ணாடிகளில்
இவர்கள் தங்கள் அலங்காரங்களை சரி செய்து கொள்வதாக
தெரியவந்துள்ளது.

ஒரு காரை கடந்து செல்லும் போது, அதில் உள்ள க
ண்ணாடியில் குனிந்து பார்த்து தங்கள் அலங்காரத்தை
சரிபார்த்துக் கொள்வதாக 10 பேரில் ஒரு பெண்
ஒப்புக்கொள்கிறார். குளியலறை கண்ணாடியில் தாங்கள்
அழகாகத் தெரிய வேண்டும் என, மூன்றில் ஒரு பெண்கள்
கண்டிப்பாக எதிர்பார்க்கின்றனர் என, இந்த ஆய்வு
தெரிவிக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர்
கிறிஸ்டின் பன்டி குறிப்பிடுகையில், “பெண்கள் என்ன
தான் வேலையாக இருந்தாலும், தன்னுடைய தோற்றப்
பொலிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக
உள்ளனர். தோற்றப் பொலிவு நன்றாக உள்ள பட்சத்தில்
அவர்களுடைய நம்பிக்கையும் அதிகரிக்கிறது’ என்றார்.
-
============================================
நன்றி: தினமலர்

மொபைல்போன் டவர்களில் தஞ்சம் அடையும் காக்கைகள்..!

நன்றி: தினமலர்

Current events

பகத் சிங் உருவத்துடன் ஐந்து ரூபாய் நாணயம்

http://lightink.files.wordpress.com/2008/04/bhagat-singh-ph-24.gif?w=477

 

சென்னை:
பகத் சிங் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என,
ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பகத் சிங் நூற்றாண்டு விழாவையொட்டி, வெளியிடப்பட
உள்ள ஐந்து ரூபாய் நாணயத்தின் ஒருபுறத்தில், பகத் சிங்
உருவமும்; மறுபுறத்தின் வலதுபுறத்தில், “ஷாஹித் பகத் சிங்
நூற்றாண்டு விழா’ என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு
இருக்கும்.

உருவப் படத்தின் கீழே, 1907-2007 என, சர்வதேச எண்ணில்
குறிப்பிடப்படும்.
இந்த நாணயம், இந்திய நாணயச் சட்டம், 1906ன்படி தொடர்ந்து
செல்லத்தக்கது.இவ்வாறு, ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு உள்ளது.
-
===============================================
நன்றி: தினமலர்

பாகிஸ்தானில் குடியிருப்புப்பகுதிக்குள் விமானம் விழுந்து விபத்து: 127 பேர் பலி

 

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு
வந்த போஜா ஏர்லைன்ஸ் விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து
விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 127 பேர் பலியாகியதாக
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போஜா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது முதல் சேவையை கராச்சியிலிருந்து
இஸ்லாமாபாத் நோக்கி செயல்படுத்தியபோது விபத்து நேரிட்டது
குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
================================
நன்றி: தினமலர்

ஜேசுதாசுக்கு “அரிவராசனம்’ விருது



சபரிமலை, ஏப். 16-
-
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஜேசுதாசுக்கு
“அரிவராசனம்’ விருது வழங்கி, திருவிதாங்கூர்
தேவசம்போர்டு கவுரவித்தது.

சபரிமலை அய்யப்பன் பாடல்களில் ஜேசுதாஸ்
பாடல்கள் மிகவும் பிரபலமானவை. காலையில்
இவரது “சுப்ரபாதம்’ பாடல் கேட்டே துயில் எழும்
சபரிமலை,

இரவில் “அரிவராசனம்’ பாடல் கேட்டுத் தான்
துயில் கொள்ளும்.

இதுபோல குருவாயூரப்பன் பற்றியும் பல பாடல்ளை

ஜேசுதாஸ் பாடியுள்ளார். அவரது 50 ஆண்டு கால
இசைத்துறை சேவை நிறைவையொட்டி, அவருக்கு
திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலையில்
பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் அவருக்கு “அரிவராசனம்’ விருதை, கேரள

மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார் வழங்கி
கவுரவித்தார். தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன்
நாயர், சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் ஜெயக்குமார்
உள்ளிட்டோர் விழாவில் கலந்து கலந்து கொண்டனர்.
==========================================

நன்றி: தினமலர்

1,000 ரூபாய் கட்டு ரிசர்வ் வங்கி தகவல்

சென்னை

:இந்திய ரிசர்வ் வங்கியால், வெளியிடப்படும் புது கரன்சி
நோட்டு கட்டுகளில், தொடர்ச்சியான வரிசை எண்கள் இடம்
பெற்றிருப்பது வழக்கம்.

இந்த முறையிலிருந்து மாறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம்,
500 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை, தொடர்ச்சியான
வரிசை எண்களின்றி, ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இதேபோல், 1,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வெளியிட
முடிவு செய்துள்ளது.”இந்த நோட்டு கட்டில், தொடர்ச்சியாக
வரிசை எண்களில்லாத நோட்டுகள் 100 உள்ளன’
என்று, இந்த கட்டுகளின் மீது உள்ள இணைப்பு பட்டியலில்,
வாசகம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு,ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் போரா செய்திக்
குறிப்பில் கூறியுள்ளார்.
-
==================================
நன்றி: தினமலர்

பூமிக்கு அருகில் செவ்வாய்க்கிரகம் – வெறும் கண்ணால் பார்க்கலாம்

சென்னை :
“பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள்
வெறும் கண்ணால் பார்க்கலாம்’ என, தமிழ்நாடு அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர்
அய்யம்பெருமாள் கூறினார்.
-
அவர் கூறியதாவது:சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி
வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு,
பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது.
இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே
வேறுபடும்.
-
26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது,
இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், சிவப்பு நிறத்தில்,
செவ்வாய் கிரகம் தெரியும். இதை பொதுமக்கள் வெறும் கண்ணால்
பார்க்கலாம்.நாளை முதல், 4ம் தேதி வரை, இரவு 7 மணி முதல்,
9 மணி வரை, இந்த நிகழ்வை பொதுமக்கள் தொலை நோக்கியில்
காண, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம்,
சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
-
இதற்கு முன், 2003 ஆக., 27ம் தேதி, செவ்வாய் கிரகம், பூமிக்கு,
5.5 கோடி கி.மீ., தொலைவிலும், 2010 ஜன., 29ம் தேதி, 9.95 கோடி
கி.மீ., தொலைவிலும் வந்தது.இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.
-
===================================================
நன்றி: தினமலர்

நேபாள முதியவர் உலகின் சிறிய மனிதராக தேர்வு

இத்தனை நாட்கள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 59.9 செமீ
உயரமுள்ள பாலாவிங் தான் உலகின் மிக குள்ளமான மனிதர்
என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்.
-
தற்போது அந்த சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது
முதியவரான சந்திர பஹதூர் டாங்கி முறியடித்துள்ளார்.

அவரது உயரம் வெறும் 21.5 இன்ச் தான் அதாவது 54.6 செமீ
-
=====================================================

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்

-

சென்னை, பிப்.20:

பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார்.

அவருக்கு வயது 80.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில்

காலமானார்.

திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில்

உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை

செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

நாட்டியாஞ்சலி..

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி இன்று

துவங்குகிறது.

சிவராத்திரியையொட்டி, இன்று துவங்கும் நாட்டியாஞ்சலி,

24ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது.

விழாவை, தமிழக தேர்வாணையக் குழு தலைவர் நடராஜன்

துவக்கி வைக்கிறார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா,

சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட

பல்வேறு நாடுகளில் இருந்து நாட்டிய கலைஞர்கள்

பங்கேற்கின்றனர்.

முதல் நாள் நிகழ்ச்சி, இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர்

செய்துள்ளனர்.

நன்றி: தினமலர்

==============================================

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers