
-
வட்ட நிலா பார்க்க வா
வான நிலா பார்க்க வா
எட்ட எட்ட ஓடுகின்ற
இரவு நிலா பார்க்க வா
-
மேக நிலா பார்க்க வா
முத்து நிலா பார்க்க வா
மேக மேகக் குதிரை ஏறி
மின்னும் நிலா பார்க்க வா
-
அந்தி நிலா பார்க்க வா
அழகு நிலா பார்க்க வா
முந்தி முந்தி நீரில் வந்து
மூழ்கும் நிலா பார்க்க வா..!
-
==========================
>கவிஞர் தமிழ் ஒளி
பாடு, பாப்பா – சிறுவர் கவிதைகள்
பார்க்க வா..! – சிறுவர் பாடல்
மே 24, 2012 இல் 6:09 மு.பகல் (சிறுவர் பாடல்)
கோட்டை
மே 17, 2012 இல் 8:14 பிற்பகல் (சிறுவர் பாடல்)

-
மலையில் கோட்டை கட்டி வைத்தால்
மலைக்கோட்டை என்கிறார்!
நிலத்தில் கோட்டை கட்டி வைத்தால்
நிலக்கோட்டை என்கிறார்!
மனத்தில் கோட்டை கட்டி வைத்தால்
மனக்கோட்டை என்கிறார்!
எந்தக்கோட்டை நல்ல கோட்டை
எனக்குக் கொஞ்சம் சொல்லுவீர்..!
-
=================================
>வே.இரா.சிவஞானவள்ளல்
நன்றி: சிட்டுக்குருவிப்பாட்டு – தொகுப்பாசிரியர்
பாலசந்திரன் ஜேகப்(சிறுவர் கவிதைகள்)
வால் இல்லா என்னை…
மே 17, 2012 இல் 5:23 பிற்பகல் (சிறுவர் பாடல்)
பாப்பா பாடல்கள்..
மே 16, 2012 இல் 4:18 பிற்பகல் (சிறுவர் பாடல்)
மாம்பழம்
——————–
நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்.
பொன் நிறத்த மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம்
சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்
சுவை மிகுந்த மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம்
குவை குவையாய் மாம்பழம்
காண வாயும் ஊறுமே.
-
=========================
ஆட்டுக்குட்டி
———————–
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
துணிந்து வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவயோ?
பாடம் சொல்லித் தருவையோ?
கள்ளம் இல்லை உன்மனத்தில்
கபடம் இல்லை உன்மனத்தில்
பள்ளம் மேடு எதுவந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி.
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வரும் ஆட்டுக்குட்டி.
-
==========================
-
அசைந்தா டம்மா அசைந்தாடு
ஆசைக் கிளியே அசைந்தாடு
இசையோ டொன்றாய் அசைந்தாடு
ஈரக் குலையே அசைந்தாடு
உதய நிலாவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழிலாய் வந்து அசைந்தாடு
ஏற்றத் தேடு அசைந்தாடு
ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஔவிய மின்றி அசைந்தாடு
-
========================
கண் தானம் விரும்பு… சி.விநாயக மூர்த்தி
மே 15, 2012 இல் 3:39 மு.பகல் (சிறுவர் பாடல்)

கண்கள் தானம் காலம் முழுதும்
காண உதவும் தம்பி!
ஏழை கூட உதவும் வள்ளல்
இரண்டு கண்கள் தந்தால்
வாழும் நாளில் சொல்லி வைத்தால்
மறையும் நாளில் வருவார்!
மருத்துவர்கள் பொருத்துகிறார்
உறுப்பைத் தானம் பெற்று
திருத்த முடன் சோதித் தபின்
கண்கள் தானம் பெறுவர்!
கற்ற கல்வி கண்க ளாகும்
கண்கள் போன்ற கல்வி
மற்ற வர்க்கு கொடுப்ப துபோல்
விழியைக் கொடுக்க முடியும்!
புழுதி விழியில் விழுந்தி டாமல்
புருவ இமைகள் காக்கும்
விழியைப் பிறர்க்கு தானம் செய்தால்
ஒளியைத் தந்து காக்கும்!
சின்ன மகனைக் கண்ணே என்று
அன்னை கொஞ்சு கின்றாள்
கண்ணின் பெருமை உணர்ந்து கொண்டு
காக்க வேண்டும் தம்பி!
வெயில் – சிறுவர் பாடல்
April 29, 2012 இல் 4:48 மு.பகல் (சிறுவர் பாடல்)
குடும்பம் – சிறுவர் பாடல்
April 29, 2012 இல் 4:47 மு.பகல் (சிறுவர் பாடல்)

அப்பா அம்மா அண்ணனுடன்
அக்கா தம்பி சிறு குழந்தை
எல்லோருக்கும் ஒரு வீடு
-
என்றும் உன்னை நேசிக்கும்
தங்கையும் நீயும் அன்போடு
தங்கியிருக்கும் நல்வீடு
அதுவே குடும்பம் ஆகுமடா!
-
அந்தக் குடும்பம் போல நமது
நாட்டை உலகை நேசிப்போம்
நல்லவர் யாவரும் ஒரு குடும்பம்!
-
========================
>கவிஞர் தமிழ்ஒளி
_________________
மாதங்கள் – சிறுவர் பாடல்
April 29, 2012 இல் 4:46 மு.பகல் (சிறுவர் பாடல்)

-
சித்திரை மாதம் ஒன்று
வரும் வைகாசி இரண்டு
ஆனி மாதம் மூன்று
ஆடியோடு நான்கு
ஆவணி வந்தால் அய்ந்து
பார் புரட்டாசி ஆறு
அய்ப்பசி மாதம் ஏழு
அப்புறம் கார்த்திகை எட்டு
மார்கழி ஒன்பது பாராய்
தை வந்தால்தன் பத்து
மாசி வரப் பதினொன்று
பங்குனிதான் பனிரெண்டு..!
-
======================
>கவிஞர் தமிழ்ஒளி
நன்றி: பாடு பாப்பா
முன்னும் பின்னும்..
April 27, 2012 இல் 6:40 மு.பகல் (சிறுவர் பாடல்)
-
பாடம் படியா ஒரு பையன்
பள்ளி செல்லா ஒரு பையன்
மூடன் ஆனான் முன்னாலே
மூட்டை சுமந்தான் பின்னாலே
-
சொல்லைக் கேளா ஒரு பையன்
துள்ளித் திரிந்த ஒரு பையன்
கல்லான் ஆனான் முன்னாலே
கட்டை சுமந்தான் பின்னாலே!
-
சோம்பித் திரிந்த ஒரு பையன்
சுற்றித் திரிந்த ஒரு பையன்
தேம்பித் திரிந்தான் முன்னாலே
தெருவில் நின்றான் பின்னாலே!
-
=============================
>கவிஞர் தமிழ்ஒளி
நன்றி: பாடு, பாப்பா
நகை வேண்டாம் பாப்பா..!
April 27, 2012 இல் 6:26 மு.பகல் (சிறுவர் பாடல்)







