மினி ரெசிபி – மாங்காய தொக்கு!

-

இரண்டு, மூன்று மாங்காய்களை தோல் சீவி,
துருவி, அதில் மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து
வெயிலில் நன்றாக காய வைத்து, ஒரு பாட்டிலில்
எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேவைப்படும் போது, இதிலிருந்து சிறிது எடுத்து,
வெந்நீரில் ஊறவைத்து, வழக்கம் போல
நல்லெண்ணெய் தாளித்து, தொக்கு செய்து
கொள்ளலாம்.

-

========================================

நன்றி:

ஹலோ தோழியே(தினமலர்)

 

 

 

கோதுமை இனிப்பு புட்டு

-
தேவையான பொருட்கள்:

-
கோதுமை மாவு – 1 கப்
சர்க்கரை – அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
ஏலக்காய் பொடி
வெந்நீர் (கை பொறுக்கும் சூட்டில்)
உப்பு – சிறிதளவு
-
செய்முறை
-
வெறும் வாணலியில் கோதுமை மாவை போட்டு நன்றாக
வறுத்து, ஆறவைத்து, சலித்துக் கொள்ளவும்.  பின்னர் அதனுடன்
தேவையான அளவு உப்பு, சிறிதளவு வெந்நீர் தெளித்து புரட்டி,
இட்லி பாத்திரத்தின் ஆவியில் வேக விடவும். வேக வைத்த
மாவை கைகளால் நன்கு பிசறி . உதிர்த்து ஏலக்காய்ப் பொடி
சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்ந்நு நன்கு கலந்து
பரிமாறவும்
-===============================================
>தீபா பாலச்சந்தர்

கோதுமை பக்கோடா

தேவையான பொருட்கள்:
-
கோதுமை மாவு – 2 கப்
கடலை மாவு -  1 கப்
அரிசி மாவு – அரை கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது)
பொருங்காய தூள் ,
இஞ்சி துருவல்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது)
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
-

செய்முறை
-
அகலமான பாத்திரம் ஒன்றில் பொடியாக நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயதூள்,
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, இஞ்சி துருவல்
நெய் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
-

பின்னர் அதனுடன் கோதுமை மாவு, கடலை மாவு
அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து,  உதிர்  உதிராக வரும்படி பிசைந்து
அந்த மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் உதிர்த்தாற் போல
போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.
-

===============================================
>தீபா பாலச்சந்தர்

கோதுமை போளி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்

கடலைப்பருப்பு  – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

-

செய்முறை:

-

கடலைப்பருப்பை நன்றாக குழைய வேகவைத்து

தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.

-

அடி கனமான பாத்திரம் ஒன்றில் வேக வைத்த கடலைப்

பருப்பையும், சர்க்கரையும் சேர்த்து கலந்து மிக்ஸியில்

போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுதான் பூரணம்.

-

கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு

நெய் சேர்த்து கெட்டியாக பிசையவும். பிசைந்த மாவை

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கல்லில்

போட்டு வட்டமாக இட்டு, நடுவே தயாரித்து வைத்துள்ள

பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, வட்டமாக தட்டி,

நெய் தடவிய சூடான தவாவில் போட்டு இருபுறமும் நன்றாக

வேக வைத்து எடுக்கவும்

 

====================================================

>தீபா பாலச்சந்தர்

கோதுமை பீட்ரூட் தோசை

தேவையான பொருட்கள்
-
கோதுமை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு குழி கரண்டி
பீட்ரூட் (துருவியது) – அரை கப்
சீரகம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

-
செய்முறை
-
கோதுமை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சீரகம், உப்பு, பீட்ரூட்
துருவல் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

-
சிறிது நேரம் கழித்து தவாவில் தோசைகளாக வார்த்து சூடாக
பரிமாறவும்.

-
விரும்பினால் பீட்ரூட் துருவலுடன் விரும்பிய காய்கறிகளையோ
அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்தோ தோசைகளாக
வார்க்கலாம்.

-
=====================================================
>தீபா பாலச்சந்தர்

கோதுமை குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்
-
கோதுமை மாவு
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை
(கேரட்,உருளைக்கிழங்கு,பட்டாணி)- தலா ஒருகப்
வெங்காயம்,(பொடியாக நறுக்கியது)- ஒரு கப்
பச்சைமிளகாய்(பொடியாக நறுக்கியது)-ஒருகப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

-
செய்முறை
-
கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய
காய்கறி கலவையுடன், வெங்காயம் சேர்த்து வேக வைத்து எடுத்து,
அதனுடன் சிறிதளவு உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை
சேர்த்து ,பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

-
பின்னர் ஒவ்வொரு உருண்டையையும், கோதுமைமாவு கரைசலில்
தோய்த்து எடுத்து, எண்ணெய் தடவிய பணியாரக் கல்லில் போட்டு
வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

-
தீபா பாலச்சந்தர்
=======================================

கோதுமை அதிரசம்

தேவையான பொருட்கள்
-
கோதுமை மாவு – 2 கப்
பொடித்த வெங்காயம் – ஒன்றரை கப்
ஏலக்காய் – 5
நெய், எண்ணெய் – தேவையான அளவு

-
செய்முறை
-
வெல்லத்தை நன்றாகக் கரைத்து வடிகட்டி, அந்த வெல்லத் தண்ணீரை
அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவிடவும்.

-
வெல்லம் நன்றாக கரைந்த்தும் ஏலக்காய் பொடி, கோதுமை மாவு
சேர்த்துக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி அகலமான தாம்பாளத்தில்
கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு நெய்யை
கையில் தொட்டுக் கொண்டு மாவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி வட்டமாக தட்டி, காய்ந்த எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு
பொரித்து எடுக்கவும்.

-
============================================
>தீபா பாலச்சந்தர்

_________________

கோதுமை ஸ்வீட் ரொட்டி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
பொடித்த வெல்லம் – முக்கால் கப்
தேங்காய் துருவல் – கால் கப்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
-

செய்முறை
-

அகலமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு,
அது மூழ்குமளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து
கொதிக்கவிட்டு, வடிகட்டி தனியாக வைக்கவும்.
-
பின்னர் இதனுடன் கோதுமை மாவு, ஏலக்காய் பொடி
தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி ஆற வைக்கவும்.
-
பின்னர் அந்த மாவை எலுமிச்சம்பழ அளவிற்கு உருண்டைகளாக
உருட்டி வட்டமாக தட்டி, எண்ணெய் தடவிய தவாவில் போட்டு
இரு புறமும் நன்றாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்

-
=================================================
>தீபா பாலச்சந்தர்

கோதுமை சேவை

தேவையான பொருட்கள்:
-
கோதுமை மாவு – ஒரு கப்
வெந்நீர், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

-
செய்முறை:

வெறும் வாணலியில் கோதுமை மாவைப்போட்டு நன்றாக
வறுத்து ஆற வைக்கவும்.
மாவு ஆறியதும் சலித்து அதனுடன் தேவையான அளவு
வெந்நீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாகப்
பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, இட்லித் தட்டில்
பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான
சேவை ரெடி.

-
அவரவர் விருப்பப்படி, இந்த சேவையுடன் காரம் அல்லது
இனிப்பு கலந்து சாப்பிடலாம்.

-
===================================================
>தீபா பாலச்சந்தர் (நன்றி: தேவதை – பிப்ரவரி 1-15, 2012

கோதுமை இட்லி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு : ஒரு கிலோ
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
உப்பு: தேவையான அளவு

-
செய்முறை
-
உளுத்தம்பருப்பை நன்றாக ஊறவைத்து , அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு
சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.

-
மறுநாள் எடுத்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து
ஏதாவது ஒரு சைட் – டிஷ் உடன் பரிமாறவும்
-

===================================================
>தீபா பாலச்சந்தர்

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers