————————————————————————————————–
ஆதிமனிதன் பேசத்துவங்கும் முன் அதற்காக செய்த
ஆரம்ப கட்ட முயற்சி உரத்து குரல் எழுப்பியது தான்.
அதைப்போல் எழுதுவதற்காக செய்த முதல் முயற்சிகளில்
அவன் சித்திர ரூபங்களிலே தான் எழுத்துக்கள் எழுத
துவங்கினான். அவை சித்திர எழுத்துக்கள் எனப்பட்டன.
மொழி உருவாவதற்கு முன்பே சித்திர எழுத்துக்கள்
உருவாகிவிட்டன.
எண்ணங்களின் வெளிப்பாடு காலப்போக்கில் பேச்சும்
எழுத்தும்என்று பரிணமித்தன. பேசும் மொழியும் எழுதும்
எழுத்தும் இடம் காலம் வேறுபாடுகளால் மாறுபாடு
கொண்டிருந்தாலும் சித்தரங்களில் ஒரு பொதுமைத்துவம்
பொலிந்ததுண்டு. ஆயினும் எல்லாவித கலைகளைப்போல
அவற்றுக்கும் வகைகளில் வித்தியாசங்கள் இருந்தன.
சுமார் நானூறு ஆண்டுகளுக்குள் உளுவாகியதே தஞ்சாவூர்
ஓவியங்கள். மராட்டிய மன்னர்களின் சாம்ராஜ்யம் தஞ்சாவூர்
வரை வரவியிருந்த காலக்கட்டத்தில், அவர்களது பிரதிநிதியாக
சரபோஜி மன்னரின் ஆட்சியில் படைக்கப்பட்டு வளர்ந்த
ஓவியக்கலை தஞ்சாவூர் ஓவியம் எனப்படலானது.
மராட்டியமும் தமிழும் கலந்த பண்பாட்டு உணர்வில்
உருவாக்கப்பட்டவை. இவை கோயில்கள், அரண்மனைகள்,
ஜமீன்கள் மற்றும் செல்வந்தர்களின் வீடுகளில் மட்டமே
பெரிதும் காட்சியளித்தன.
இயந்திரமயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய
தொன்மைக்கலைகளை பாதுகாக்கும் அமைப்பு (
Rejuventationg the Anvient Arts Of South Indian Art Foundation
- RAASI) தஞ்சாவூர் ஓவியங்கள் மட்டுமின்றி வேறுபல
கலையம்சங்களையும் பாதுகாத்து வளர்த்துவருகிறது.
———————-
நன்றி; மஞ்சரி
http://www.dinamalar.com/piraithalkal/mancharinewsdetail.asp?news_id=64&dt=08-10-09