வயதானால் அப்படித்தான்..!!

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது.
இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.
மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும்
என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.

ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர்.
சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

“யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க,
பார்க்கலாம்!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ”
என்றேன்.

“எதுக்குப்பா?”

“தொடுங்களேன்!”

சற்று வியப்புடன் தொட்டார்.

“மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!” என்றேன்.
‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று,
விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

“ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு
ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…”

“இது என்னப்பா ட்ரிக்கு?” என்று அப்படியே செய்தார்.

“உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!”
என்றேன்.

அசந்து போய், “கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?”

“ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில்,
இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம்
சொன்னீங்க. மறந்துட் டீங்க!” என்றேன்.
-
===================================
>சுஜாதா
(கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)

இருப்புகள் இருக்கட்டும் – ஒரு பக்க கட்டுரை

-

சேமிப்புக் குணம்; சிக்கனம் ஆகியவை பற்றி நிறையப்
பார்த்துவிட்டோம். ஆனாலும் அவ்வப்போது இந்த
உணர்வைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ந
மக்கு இருக்கிறது.
-
காரணம் செலவழிப்பதிலும், ஆடம்பர வசதிகளிலும் நம்
மனம் அடிக்கடி ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
-
செல்போன் இல்லாதவர்களைக் கண்டு செல்போன்
இருப்பவர்கள் திருப்தி அடைவது இல்லை. லேட்டஸ்ட்
மாடல் தேவை என்றோ, அவரைப்போல் இன்னொன்று
வாங்கி வைத்துக் கொண்டால் அதில் மேலும் பல
செளகரியங்கள் இருக்கின்றன என்றோ எண்ணிக்கொண்டு
நிறைவற்ற மனத்துடன் வலம் வருகிறார்கள்.
-
ஏக்க உணர்வுடன் காலத்தை ஓட்டுகிறார்கள். ஒரு பலவீனமான
கணத்தில் காசுதான் இருக்கிறதே, வாங்கினால் என்ன என்கிற
நினைப்பு உந்தித் தள்ள விளக்கில் விழுந்து மாயும் விட்டில்
பூச்சிகளாகி, சிறப்புச் சிறகுகளை இழந்து ஊர்ந்து செல்லும்
சாதாரணப் பூச்சிகளாகிப் போகிறார்கள்.
-
கஷ்டப்பட்டவர், இன்று நன்றாக இருப்பவர் என்கிற நிலையில்
உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருடன் பேசிப் பாருங்கள்.
பரவாயில்லை. ஆனாலும்… என்று ஒரு பட்டியல் வாசிப்பார்.
-
மனநிறைவு என்பது பொருள்களால் பொருளாதாரத்தால்
மட்டும் நிரப்பிக் கொள்வது அல்ல. மனத்தாலும் நிரப்பிக்கொள்ள
வேண்டும். 50 சதவிகிதத் தேவைகளை அடைந்துவிட்டால்
மீதமிருக்கிற 50 சதவிகிதத்தை வெற்றிடமாக வைத்துக்கொண்டு
ஏங்கித் தவிக்கிறவர்களின் வாழ்க்கை இனிய வாழ்க்கையல்ல.
-
இந்த 50 சதவிகிதத்தை மனத்தால் நிரப்பிப் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், தேவைகள் பூதாகரமாகத் தெரியும்.
பிய்த்துத் தின்னும். அரித்துப் பிடுங்கும். இது தவறுகளைச்
செய்வதற்கே வழிவகுக்கும். இருப்புகளைக் காலி செய்வதிலேயே
நம்மவர்கள் குறியாக இருக்கிறார்கள். எதிர்பாராத தேவைகளுக்கும்,
திடீர்ச் சமாளிப்புகளுக்கும் வருங்காலத்திற்கும் ஏதும் தேவை
என்கிற நினைப்பை அதிகரித்துக் கொண்டால் நாமே வியக்குமளவு
இருப்புகள் வளரும்.
-
ஒன்றை வாங்க மனம் துடித்தால் ஒரு வாரம் வரையிலாவது
இந்த நினைப்பைத் தள்ளிப் பாருங்கள். அடுத்த வாரமும் இதே
அளவு வேகமும் வீரியமும் இருப்பின், அதன் அவசியம் மற்றும்
சாதக பாதகங்களை ஆராயுங்கள். இதை வாங்கியபிறகும் இருப்பு
இருக்குமா பாருங்கள்.
-
செலவினங்கள் இனிப் பலன் தருபவையாக அமையட்டும்.
வேறு வகையில் சொன்னால் – வழித்துத் துடைத்து ஒன்றை
வாங்குவது என்றால் அது முதலீடாகத்தான் இருக்கலாமே தவிர,
செலவினமாக இருக்கக் கூடாது.
-
=================================================
>லேனா தமிழ்வாணன்-

 

காதுல பஞ்சா?

தென்கட்சி கோ.சுவாமிநாதன் எழுதியதிலிருந்து…
——————————

 

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி
சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும்
முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப்
பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக்
கோபம் வந்துவிட்டது.

“இந்தப் பள்ளியில் பத்து வருஷமாப் படிச்சிருக்கே;
ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம்
நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு
அடைச்சுகிட்டிருந்தியா?ன்னு கோபாமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.
இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி.
கொடுத்து அனுப்பி விட்டார்.

அந்தப்ப பையன் தெருவில் இறங்கி நடந்தான்.
“”உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?
என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே
இருந்தது.

உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான்.
அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத்
தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது.

தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து
காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை
வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்

பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்ரவின்றிப் படிக்க
வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை
செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம்
நடந்தது.

அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க
இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி
உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து
கொடுத்தான். கோடீஸ்வரனானான். அவர்தான்
செஸ்டர் கீரின் வுட்.

சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை
சரியான முறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.
நாமும் முயல்வோமே!
-
==================================
- ஆர்.உஷா பாஸ்கரன், கும்பகோணம்
நன்றி: மங்கையர் மலர்

நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை….


ஒரு பட்டுப் புடவைக்காக எத்துணையோ இலட்சம் பட்டுப் பூச்சிகள் வெந்நீரில் வேகவைக்கப்படுகின்றன. இரக்க உணர்வும் பரிதாபப்படும் இயல்பும் உள்ள எத்துணையோ பெண்கள் பட்டுப் புடவை அணியும்போது இந்த உண்மையை எண்ணிப் பார்ப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.

நாடறிந்த நல்ல பேச்சாளரும் எழுத்தாளருமான பழ கருப்பையாவின் மனைவி திருமதி கமலா இந்தக் கோணத்தில் பட்டுப் புடவை அணிவதே இல்லை என்று கேள்விப்பட்டு அதிசயித்துப் போனேன்.

என் மகிழ்ச்சிக்குப் பின்னால் எத்துணையோ உயிர்களின் பலியோ என்று எண்ணுகிற இந்த இரக்க சிந்தனை எனக்குப் பிடித்திருக்கிறது. மற்றவர்களின் துன்பத்தில் நம் இன்பம் என்பது அவசியம் பரிசீலிக்கத்தக்கது.

கைகொட்டிச் சிரிப்பதற்கெனப் பிறரது உள்ளத்தைச் சூட்டுக்கோல் கொண்டு சுடுகிறோம்.

நன்றாகத் தவிக்கட்டும் என்று சாபமிட்டு மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சியில் பொருள் இல்லை.

பல ஆயிரம் பங்கு பெறும் மாரத்தான் போட்டியில் மூவர் மட்டுமே பரிசு பெறுகிறார்கள். மீதமிருப்பவர்களுக்கு மனக்கஷ்டம். வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தாலும் முதல் ராங்க் ஒருவனுக்கே. 39 பேர்களுள் பத்துப் பேர்களாவது சங்கடப்படுவார்கள். இந்த இரு பிரிவினரது வலிகளின் மத்தியில்தான் வென்றவர்களின் மகிழ்ச்சி பெற்றெடுக்கப்படுகிறது. ஆனால் இதற்கும் நாம் மன்னர் விவாதித்ததற்கும் இடையே வேறுபாடு உண்டு.

திறமைக்குக் கிடைக்கும் கூலி இது. இதில் கூலி பெறாதவர்களின் வருத்தங்களுக்குக் கூலி பெற்றவர்கள் ஒருபோதும் பொறுப்பாக மாட்டார்கள்.

நம் மகிழ்ச்சிகள் இத்தகையதாக அமைந்தால் பிரச்சனை இல்லை. நாம் நடக்கும் நடைகளின்போதும் நாம் போடும் குதியாட்டத்தின்போதும் நம் கால்களின் கீழே எவரும் நசுங்கிப் போய் விடக்கூடாது என்கிற அக்கறையும் நமக்கு இருக்கத்தான் வேண்டும்!

நன்றி:

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

 

உறவுகள்: உயர்வுகள் – காணக் கூடாத காட்சி!

-
இந்தக் காலத்துப் பிள்ளைகளோட ஆடம்பரத்துக்குத்
தடை போடுறதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை, அண்ணே.

தாய் தகப்பனோட கஷ்டம் தெரியாமலா அந்தக்
கல்லூரியில் இன்ன சப்ஜெக்ட்தான் வேணும்னு அடம்
பிடிக்கிறாங்க. “டேய்! எட்டு இலட்சம்டா இப்போ!
சும்மா இல்லே! அப்படின்னு சொல்ற அப்பா பேச்சு
எடுபட்டிருக்கா எப்பவாச்சும்? எனக்கு தெரிஞ்சு இ
ல்லேன்னுதான் சொல்லுவேன்.

சீட்டு வாங்க சிபாரிசு பிடிக்க அலையுறதுலேர்ந்து
வாங்கின சீட்டுக்குப் பணம் கட்டுற வரைக்கும் நாயா
பேயா அலையுற பெற்றோர் எவ்வளவு பேர் தெரியுமா?
நான்தான் பார்க்குறேனே வருஷா வருஷம்!’

“படிக்கிறதுக்குப் பண்ற செலவு முதலீடுதானே புரபசர்!’
(தம்பி மீது அவ்வப்போது பாசம் காட்ட சுலபாவின்
அப்பா பயன்படுத்தும் வார்த்தைதான் புரபசர் என்பது.)

“ஒரு வகையில் சரிதான். ஆனா காலேஜ் பிடிக்கலை!
ஹாஸ்டல் பிடிக்கலை; இந்த கோர்சே சுத்தமாப்
பிடிக்கலை. பாக்குலிட்டி (பாடம் நடத்துகிறவர்கள்)
சரியில்லை. கூடப் படிக்கிற பசங்க சரியில்லை; சரியான
கச்சாடா காலேஜ் என்று பாதியில் வெளியில்
வந்துடறவங்க ரொம்பப் பேர்ணே!’

“எனக்குத் தெரிஞ்சு ஒரு பையன். பாதியிலேயே
காலேஜை விட்டுட்டான். ஆனா இவன் படிப்பை
விட்டதுக்குக் காரணம் என்னன்னு கேட்டா ஆச்சரியப்படுவே!’

“சொல்லுங்க!’

“அந்த வயசுல பார்க்கக்கூடாத காட்சி ஒண்ணைப்
பார்த்துட்டான். ஆபாசப் புத்தகமோ, வீடியோவோ,
நெட்லயோ இல்லை. “லைவ்’வா!’

“ஐயோ!’

“ஆமா. அவனுக்கு 18-19 வயசுதான் இருக்கும். கண்ணை
மூடினா திரும்பத் திரும்ப அதே காட்சி. பிளாஷ்பேக்
வந்து வந்து அவனை ஒரு வழி ஆக்கிவிட்டது. யாரிடமும்
பகிர்ந்துக்க முடியாத விஷயமாகிப் போனதால தீர்வும்
கிடைக்கலை. கூடப் படிக்கிற பசங்ககிட்ட சொல்லலாம்னா
சம்பந்தப்பட்டவங்க யாருன்னு கேப்பானுங்களேங்கிற பயம்!’

“யாருங்கிற விஷயத்தை நண்பர்கள்கிட்ட கூடப்
பகிர்ந்துக்க முடியாத நிலைமைன்னா அது ரொம்பப்
பாவம்தான்.’

“பள்ளி இறுதி வரைக்கும் நல்லாப் படிச்சிக்கிட்டிருந்த
பையனோட மார்க் சரசரன்னு சரிய ஆரம்பிச்சிட்டுது.
யாருக்கும் ஒண்ணும் புரியலை.

அத்தை, சித்தப்பான்னு ஆளுக்காளு உள்ளே வந்து
“என்னடா ஆச்சு உனக்கு? நல்லாத்தானே படிச்சிட்டிருந்தேன்’னு
கேட்க ஆரம்பிச்சபோது, சித்தப்பாவுக்கு மட்டும் புரிய
ஆரம்பிச்சுது இது பருவக் கோளாறுன்னு. சித்தப்பாதான்
சொன்னாரு, இவனுக்கு நிச்சயம் சைக்கியாட்ரிக் கௌன்சிலிங்
குடுக்கணும். இப்படியே விட்ட இவன் காலேஜுக்கு
போகமாட்டான். உடனே இவனை கிளினிக்கல்
பேத்தாலஜிஸ்ட்கிட்டே கூட்டிட்டுப் போங்க. அவரு
ஒத்தராலதான் இவனைக் கொஞ்சமாவது நார்மல்சிக்கு
கொண்டுவர முடியும்னார்.’

“அது நடந்ததா?’

“அவ்வளவு சுலபமா நடக்குமா? நான் என்ன மென்டலா?
நான் யார்கிட்டேயும் வரமுடியாதுன்னு வம்பு பண்ண
ஆரம்பிச்சிட்டான்.’

“அப்புறம்?’

“ஒவ்வொரு சாமிக்கும் ஒரு பூசாரி உண்டு தம்பி. இந்தப்
பயலுக்கு சித்தி மேல கூடுதல் பாசம். சித்தி பேசிப் பேசிக்
கரைச்சுக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. கிளினிக்கல்
பேத்தாலஜிஸ்ட் நான்கு சிட்டிங்குல அழகா விஷயத்தைக்
கறந்துட்டார்.’
-
========================================

- லேனா தமிழ்வாணன்
நன்றி: குமுதம்

பார்வைகளின் நான்கு பிரிவுகள்

பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப்
பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல்.
-
ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை
எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டாால்
போகிற பாதை புரியாது என்பார்கள். பழையதை நினைத்துப்
பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம் என்பதே பிடிபடாது.
-
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை
எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப்
போக வேண்டியதுதான். நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக்
காரணமாக இருந்த நான்கு பேர்கள் முதல் பத்துப் பேர்கள்
வரை அவ்வப்போது நினைவுக்கு வரவேண்டும்.

நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல. நம்மால் பிறருக்கு
இப்படி உதவ முடியுமா என்கிற உந்து சக்தியாகவும் இருக்கும்.

அடுத்து முன்னோக்கிப் பார்த்தல், தீர்க்க தரிசனங்களும்
வருங்காலத் திட்டங்களும் இல்லாதவர்களே நம்மில் பலராக
இருக்கிறார்கள். முன்னோர்க்குப் பார்வை இல்லாதது
எண்ணெய் இல்லாத விளக்கிறகுச் சமம். முன்னோக்கிய
பார்வைகளே நம்மை உற்சாகம் குன்றாமல் ஓடியாடி
உழைக்கும் ஊக்க மருந்தாகும்.
-
அடுத்து நம்மைச் சுற்றிய பார்வை நம்மைச் சுற்றி என்ன
நடக்கிறது என்கிற பார்வை இல்லாதவர்கள் தம் சுயங்களை
இழந்து போகிறார்கள். கூடவே ஓடி வருகிறவனின்
வேகத்தைப் பார்த்துதான் ஒருவனது ஓட்டப் பந்தய வேகம்
அதிகரிக்கும். தனியாக ஓடும்போது எப்படி வரும் வேகம்?
சூழ்நிலை அறிதலே நம்மைச் சுற்றிய பார்வையின் நோக்கம்.
-
இறுதியில் முக்கியமாக வருகிறது நமக்குள் பார்க்கவேண்டிய
பார்வை (look within) நாம் யார்? நம் ஆற்றல் என்ன?
நம் பலவீனங்கள் என்ன என்பதைக் கணித்தறியாதவர்கள்
மூடர்களே. know thyself என்பார்கள் ஆங்கிலத்தில்.
கலைகளுள் கடினமான கலை ஒருவன் தன்னைத்தானே
உணர்வதுதான்.

கண்களை மூடியபடி சிந்திக்கச் சிந்திக்க நமக்குள் நாம்
ஆழமாகப் பயணிக்கமுடியும். இந்தப் பயணமே எத்தகைய
சூழலிலும் வாழ்வைச் சுகமாக்க வல்லது!
-
====================================

நன்றி: லேனாவின்  ஒரு பக்கக் கட்டுரைகள்

சரிவின் ஆரம்பம் – லேனா தமிழவாணன்

-
‘‘எனக்கு எல்லாம் இருக்கு; இதுக்கு மேல ஒண்ணும்
தேவையில்லை, அப்புறம் நான் ஏன் அலட்டிக்கணும்?’’
என்று வாழ்வின் மிக உயரிய நிலையைத்
தொட்டவர்கைளப் போல சிலர் கேட்பது எனக்கு
வியப்பைத் தருகிறது.
-
600 கோடி ரூபாய்க்கு வருட வர்த்தகம்  செய்யும்
ஒரு மிகப் பெரிய தமிழகத்  தொழிலதிபைரக்
கேட்டேன். ‘‘என்ன, மன நிைறவுதாேன?’’
‘‘நிச்சயம் நிைறவுதான். ஆனாலும் இதோடு
திருப்தியைடந்துவிட முடியுமா? அடுத்த இலக்ைக
நிர்ணயித்து அதை ேநாக்கி நகர ஆரம்பித்தாயிற்று.’’
-
‘‘இன்னும் வளரேவண்டும்தான். ஆனால் இதற்கு
எல்ைலதான் என்ன?’’
-
‘‘ஒரு ெதாழிலில் திருப்தி அடைந்துவிடுவது என்பது
ேதக்கம் அடைவதற்குச் சமம். ேதக்கம் வந்து
விட்டால் அது சரிவின் ஆரம்பம் என்ேபன்.
-
ெதாடர்ந்து வளர்ந்து ெகாண்ேட இருப்பதில் பல
நன்ைமகள் இருக்கின்றன. அம்பானி சகோதரர்களிடம்
ேகட்டுப்பாருங்கேளன், திருப்திதாேன என்று!
-
இன்னும் வளர்ந்தால் எத்தைனேயா ேபருக்கு ேநரடி
ேவைல வாய்ப்புகளும், மறைமுக ேவைல
வாய்ப்புகளும் தர என் நிறுவனம் காரணமாக இருக்குேம!’’
-
இப்படி அவர் மண்ைடப் ேபாடாகப் ேபாட்ட பிறகு
ஆசைதான் துன்பங்களுக்குக் காரணம் என்கிற
புத்தரின் ேபாதைனையயும், ‘ேபாதும் என்ற மனமே
பொன் ெசய்யும் மருந்து’ என்கிற நம் சான்ேறாரின்
வாக்ைகயும் ைவத்து இவரை வாதத்தில் ெவன்றுவிட
முடியும் என்கிற நம்பிக்ைக எனக்குப் ேபாய்விட்டது.
-
‘உனக்கும் கீேழ உள்ளவர் ேகாடி நிைனத்துப் பார்த்து
நிம்மதி நாடு’ என்கிற பாடல் வரிகள் 60களில் நன்கு
எடுபட்டன. இன்று ‘உனக்கு மேல உள்ளவர் ேகாடி;
நிைனத்துப் பார்த்து நீயூம் உயரு’ என்று புதுக்
கவிைத பாட ேவண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
-
ஒகனேக்கலில் பரிசல்காரர்கள் நீேராட்டத்ைத
எதிர்த்து திறைமயாகப் பரிசைல நகர்த்துகிறார்கள்.
ேவகமான நீேராட்டத்திற்கு எதிராக ஒரு ைகத்
துடுப்பு என்ன பெரிதாகச் ெசய்து விடமுடியும்?
-
ஆனாலும் ெமல்ல, அழகாக முன்ேனறுகிறார்கள்.
இலக்கில் சரியாகக் ெகாண்டுேபாய்ச் ேசர்க்கிறார்கள்.
பிறகுதான் வியர்ைவயைத் துைடக்கிறார்கள்.
இப்படி நீேராட்டத்திற்கு எதிராகத் துடுப்புப்
ேபாடுவைத நிறுத்திவிட்டு சாவகாசமாக வியர்ைவையத்
துைடத்தால் நாம் எங்ேக ெகாண்டு ேபாய்த்
தள்ளப்படுேவாம் என்று சிந்தித்துப் பார்த்ேதன்.
-
வாழ்விலும் இதேதான். ேபாட்டிமயத்தில் எவ்வளவு
முன்னதாகப் ேபானாலும் நூறாவது ஆளாக
ஆகிவிடுகிற நாம், நம் ேபாட்டி உணர்ைவயும்
வளர்ச்சியில் காட்டும் தாகத்ைதயும் திருப்தியைடந்த
நிைலயில் ஒதுக்கிைவத்தால் நாம் எங்ேக ெகாண்டு
ேபாய் நிறுத்தப்படுேவாம் என்று எண்ணிப் பாருங்கள்.
-

வளர்ச்சியில் தாகம் காட்டாத வரை இருக்கிற
இடத்ைதக் காப்பாற்றிக் ெகாள்வதே கடினமாகிவிடும்.
நாளும் படிப்படியான முன்ேனற்றம். அல்லது
அங்குல முன்ேனற்றேமனும், இதுதான் இந்த
நிமிடத்திற்கு ேவண்டிய முக்கியச் சிந்தைன.

பார்வைகளின் நான்கு பிரிவுகள்

பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப் பார்வைகள்

முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல்.

-

ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை எப்போதும்

இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டால் போகிற பாதை புரியாது

என்பார்கள். பழையதை நினைத்துப் பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம்

என்பதே பிடிபடாது.

-

கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப்

பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப் போக வேண்டியதுதான்.

நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர்கள்

முதல் பத்துப் பேர்கள் வரை அவ்வப்போது நினைவுக்கு வரவேண்டும்.

நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல. நம்மால் பிறருக்கு இப்படி உதவ

முடியுமா என்கிற உந்து சக்தியாகவும் இருக்கும்.

-

அடுத்து முன்னோக்கிப் பார்த்தல், தீர்க்க தரிசனங்களும் வருங்காலத்

திட்டங்களும் இல்லாதவர்களே நம்மில் பலராக இருக்கிறார்கள்.

முன்னோர்க்குப் பார்வை இல்லாதது எண்ணெய் இல்லாத விளக்கிறகுச்

சமம். முன்னோக்கிய பார்வைகளே நம்மை உற்சாகம் குன்றாமல்

ஓடியாடி உழைக்கும் ஊக்க மருந்தாகும்.

-

அடுத்து நம்மைச் சுற்றிய பார்வை நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது

என்கிற பார்வை இல்லாதவர்கள் தம் சுயங்களை இழந்து போகிறார்கள்.

கூடவே ஓடி வருகிறவனின் வேகத்தைப் பார்த்துதான் ஒருவனது ஓட்டப்

பந்தய வேகம் அதிகரிக்கும். தனியாக ஓடும்போது எப்படி வரும் வேகம்?

சூழ்நிலை அறிதலே நம்மைச் சுற்றிய பார்வையின் நோக்கம்.

-

இறுதியில் முக்கியமாக வருகிறது நமக்குள் பார்க்கவேண்டிய பார்வை

(look within) நாம் யார்? நம் ஆற்றல் என்ன? நம் பலவீனங்கள்

என்ன என்பதைக் கணித்தறியாதவர்கள் மூடர்களே. know thyself

என்பார்கள் ஆங்கிலத்தில். கலைகளுள் கடினமான கலை ஒருவன்

தன்னைத்தானே உணர்வதுதான்.

-

கண்களை மூடியபடி சிந்திக்கச் சிந்திக்க நமக்குள் நாம் ஆழமாகப்

பயணிக்கமுடியும். இந்தப் பயணமே எத்தகைய சூழலிலும் வாழ்வைச்

சுகமாக்க வல்லது!

==================================================

நன்றி:

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

கலைகளுள் கடினமான கலை..!

ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது

பார்வை எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி

தெரியாவிட்டால் போகிற பாதை புரியாது என்பார்கள்.

-

பழையதை நினைத்துப் பார்க்காவிட்டால் வாழ்வில்

நிதானம் என்பதே பிடிபடாது. கஷ்டப்பட்டு முன்னுக்கு

வந்தவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கா

விட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப் போக வேண்டியதுதான்.

-

நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக் காரணமாக இருந்த

நான்கு பேர்கள் முதல் பத்துப் பேர்கள் வரை அவ்வப்போது

நினைவுக்கு வரவேண்டும். நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல.

நம்மால் பிறருக்கு இப்படி உதவ முடியுமா என்கிற உந்து

சக்தியாகவும் இருக்கும்.

-

அடுத்து முன்னோக்கிப் பார்த்தல், தீர்க்க தரிசனங்களும்

வருங்காலத் திட்டங்களும் இல்லாதவர்களே நம்மில் பலராக

இருக்கிறார்கள். முன்னோர்க்குப் பார்வை இல்லாதது எண்ணெய்

இல்லாத விளக்கிறகுச் சமம். முன்னோக்கிய பார்வைகளே

நம்மை உற்சாகம் குன்றாமல் ஓடியாடி உழைக்கும் ஊக்க

மருந்தாகும்.

-

அடுத்து நம்மைச் சுற்றிய பார்வை நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது

என்கிற பார்வை இல்லாதவர்கள் தம் சுயங்களை இழந்து போகிறார்கள்.

கூடவே ஓடி வருகிறவனின் வேகத்தைப் பார்த்துதான் ஒருவனது

ஓட்டப் பந்தய வேகம் அதிகரிக்கும். தனியாக ஓடும்போது எப்படி வரும்

வேகம்? சூழ்நிலை அறிதலே நம்மைச் சுற்றிய பார்வையின் நோக்கம்.

-

இறுதியில் முக்கியமாக வருகிறது நமக்குள் பார்க்கவேண்டிய

பார்வை (look within) நாம் யார்? நம் ஆற்றல் என்ன?

நம் பலவீனங்கள் என்ன என்பதைக் கணித்தறியாதவர்கள் மூடர்களே.

know thyself என்பார்கள் ஆங்கிலத்தில். கலைகளுள் கடினமான

கலை ஒருவன் தன்னைத்தானே உணர்வதுதான்.

கண்களை மூடியபடி சிந்திக்கச் சிந்திக்க நமக்குள் நாம் ஆழமாகப்

பயணிக்கமுடியும். இந்தப் பயணமே எத்தகைய சூழலிலும் வாழ்வைச்

சுகமாக்க வல்லது!

=============================================

நன்றி:

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

 

 

பார்வைகளின் நான்கு பிரிவுகள்

நன்றி:

லேனாவின்  ஒரு பக்கக் கட்டுரைகள்

http://www.tamilvanan.com/content/2011/03/04/look-at-life/

—————————————————–

பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப் பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல்.

ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டாால் போகிற பாதை புரியாது என்பார்கள். பழையதை நினைத்துப் பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம் என்பதே பிடிபடாது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப் போக வேண்டியதுதான்.

-

நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர்கள் முதல் பத்துப் பேர்கள் வரை அவ்வப்போது நினைவுக்கு வரவேண்டும். நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல. நம்மால் பிறருக்கு இப்படி உதவ முடியுமா என்கிற உந்து சக்தியாகவும் இருக்கும்.

அடுத்து முன்னோக்கிப் பார்த்தல், தீர்க்க தரிசனங்களும் வருங்காலத் திட்டங்களும் இல்லாதவர்களே நம்மில் பலராக இருக்கிறார்கள். முன்னோர்க்குப் பார்வை இல்லாதது எண்ணெய் இல்லாத விளக்கிறகுச் சமம். முன்னோக்கிய பார்வைகளே நம்மை உற்சாகம் குன்றாமல் ஓடியாடி உழைக்கும் ஊக்க மருந்தாகும்.

அடுத்து நம்மைச் சுற்றிய பார்வை நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற பார்வை இல்லாதவர்கள் தம் சுயங்களை இழந்து போகிறார்கள். கூடவே ஓடி வருகிறவனின் வேகத்தைப் பார்த்துதான் ஒருவனது ஓட்டப் பந்தய வேகம் அதிகரிக்கும். தனியாக ஓடும்போது எப்படி வரும் வேகம்? சூழ்நிலை அறிதலே நம்மைச் சுற்றிய பார்வையின் நோக்கம்.

இறுதியில் முக்கியமாக வருகிறது நமக்குள் பார்க்கவேண்டிய பார்வை (look within) நாம் யார்? நம் ஆற்றல் என்ன? நம் பலவீனங்கள் என்ன என்பதைக் கணித்தறியாதவர்கள் மூடர்களே. know thyself என்பார்கள் ஆங்கிலத்தில். கலைகளுள் கடினமான கலை ஒருவன் தன்னைத்தானே உணர்வதுதான்.

கண்களை மூடியபடி சிந்திக்கச் சிந்திக்க நமக்குள் நாம் ஆழமாகப் பயணிக்கமுடியும். இந்தப் பயணமே எத்தகைய சூழலிலும் வாழ்வைச் சுகமாக்க வல்லது!

========================================



« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers