கனத்துக் கொண்டே போகும் கல் கருடன்!

கும்பகோணத்திலிருந்து ஆறு மைல் தூரத்தில் திருநறையூர் உள்ளது.
திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாஸன், வாஸுதேவன் என்ற பெயர்களுடன் நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம் புரிந்தார். வஞ்சுனவல்லித் தாயாருக்கு நம்பிக்கை நாச்சியார் என்ற பெயர். இங்கு பெருமாளுடைய கல் கருடவாகன சேவை பெயர் பெற்றது.
வருட வாகனத்தை சன்னிதியில் முதலில் நான்கு பேர்களும் கோயில் வாசலின் முடிவில் அறுபத்து நான்கு பேர்களும் எழுந்தருளச் செய்யும்வகையில், கருடவாகனம் சிறுகச் சிறுகக் கனத்துவிடும். இந்த கல் கருடனுக்கு தனி சன்னிதியுண்டு. இந்த ஊரில் நாச்சியாருக்கே முதல் இடம்.
பெருமாள் கல் கரடன் மீதும், தாயார் அன்னவாகனத்திலும், வீதி உலா வருவதுண்டு. இந்தக் கண்கொள்ளாக்காட்சியை அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும். வருடத்தில் இரண்டு முறை கல் கருட சேவை விமரிசையாக நடக்கிறது.
பெருமாளுக்கு நவரத்னக் கவசம் என்ற ஒரு வகை இனிப்பு நிவேதனம் செய்யப்படுகிறது. நம் மனத்தில் எதைப் பிரார்த்தித்துக் கொண்டாலும் கருடன் நடத்தி வைப்பான் என்பது நம்பிக்கை. திருமணத்தடை குழந்தையின்மை, வேலையின்மை இப்படிப் பல பிரச்னைகளைத் தீர்த்து நறையூர் நம்பி துணைபுரிகிறார்.
- கோமளா நாராயணன்

நன்றி;

மங்கையர் மலர்

Why marriages made in heaven, are getting broken these days?

An Extract from Ramayana Upanyasam by Sri Suki Sivam

In every marriage and other auspicious occasions, we are using Akshadhai (rice dipped in turmeric). Let us know the importance of Akshadhai.

As per the sastras, akshadhai has to prepared according to a particular method. Now-a-days, we are using Rice for making akshadhai. This is wrong. Actually, raw paddy grains are to be soaked in clean water on the previous day. The next day, it has to be removed of its outer skin using hand. All precautions are to be taken to ensure that the rice is not broken. The full rice grains are then to be soaked in pure Turmeric. This is how akshadhai is to be prepared. In every stage, it should be ensured that the tip of the rice is not broken.

Now, no care is taken in making this holy rice. Since, there is every chance that rice chosen for preparing this rice today, is broken, the marriages are also getting broken.

The rice thus prepared should be used for blessing only after the elders bless the couple, only after which the bride can take the hand of the bridegroom.

But what is being done now is, we have a grand reception prior to marriage day, in which the bride takes bridegroom’s hand. Which is wrong. This is against the Sastras. If someone wants to host dinner for friends and relatives, it can be done at a later date after marriage.

As heard from the speech of Sollin Selvar “Suki Sivam” at the Sri Rama Navami Festival

——————————————————————–

- Contributed by Sri Ramajayam

Thanks: http://www.manamaalai.com/suki.asp


சிங்கப்பூர் சிவாலயத்தில் அன்னாபிஷேகம்

நவம்பர் 04,2009,10:59  IST

மார்ஷலிங் :

சிங்கப்பூர் சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னாபிஷேக மகோற்சவம் நவம்பர் 2ம் தேதியன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பதினாறு பேறுகளும் பெற. . .


<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><
சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
தனயை மாதேவி! நின்னைச்

சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்

அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம்
அழகு புகழ் பெருமை இளமை

அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ் வளிப்பாய்.

சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!

மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக் கடவூரில் வாழ்

வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!

–அபிராமி பட்டர்.

பொன்னை வைக்கும் இடத்தில்… இறையன்பு

கல்வி என்பது வெறும் நூல்களில் இருந்து மட்டுமே அறியப்படுவது இல்லை.

 

பள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுவதும் இல்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

வெறும் நூல்களால் மட்டுமே அறிவாளிகள் உருவாவது என்றால், வீட்டிலே
(புத்தக அலமாரியில்) குடியிருக்கும் சிலந்திகள் நம்மைவிட ஞானிகளாக இருக்கும்.

பழங்காலத்தில் குருகுல முறை ஒன்றுண்டு. கற்க வேண்டுமென்றால் குருவிடம் சென்றுதான் கற்க வேண்டும்.குருவுடனேயே தங்கி இருக்கவேண்டும். குருவுடனேயே வாழ வேண்டும்.

குரு கற்றுத் தருவனவற்றிற்கும், அவர் வாழ்க்கைக்கும் இடைவெளி இருந்தால் அது சீடனுக்கு வெகு எளிதில் தெரிந்துவிடும்.

அப்படிப்பட்ட குருவை ஒருக்காலும் அவனால் மதித்து மரியாதை செலுத்த முடியாது.

குருவின் வாழ்க்கை அவனுக்குள் மெளனமாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவரின் அன்பு, அவரின் உணர்வு, அவரின் பரிவு ஆகிய ஒவ்வொன்றும் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருவிடம் பணிவிடைகள் செய்யும்போது, அவனுடைய தான் என்கிற எண்ணத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அவன் உதிர்க்க ஆரம்பிக்கின்றான்.

தன்னிடம் ஏற்கனவே நிறைத்து வைத்திருந்தவற்றைக் காலி செய்யக் கற்றுக்கொள்கிறான்.

ஏற்கனவே நிரம்பியதில் எதையும் ஊற்ற முடியாது.அவன் வெறும் பலகை ஆனபிறகு, குரு எழுத ஆரம்பிக்கிறார்.

பைபிளில் ஒரு வாசகம் வருகிறது.

’பன்றிக்கு முன் முத்துக்களைப் போட்டால், அவை அந்த முத்துக்களைக் காலால் நசுக்கிவிட்டு நம்மைத் தாக்க வரும்’ என்று!

இதற்கு பதில் சொல்லும்போது, பன்றிகளைக் குறை கூறுவதுபோல் விளக்கத்தைத் தருவது பலரது வழக்கம்.

ஆனால் சென் துறவி ஒருவர் விளக்குகையில், பன்றியின் முன் முத்துக்களைப் போடக்கூடாது என்று சொல்வது பன்றிகளைக் குறை கூறுவதாகப் பொருள் அல்ல

பன்றிகளுக்கு முன் எதைப் போடவேண்டுமென்று தெரியாமல் இருப்பது
நமது தவறு ஆகும். இதை உணரவேண்டும்.

நமக்கு வேண்டுமானால் முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருக்கலாம்.உண்மையில் முத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த மதிப்பை நாம்தான் அவற்றுக்கு உண்டாக்குகிறோம்.

ஒருவேளை காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் நாம் அவற்றை இன்னும் அதிகமாக நேசித்திருப்போம்.

முத்தும் அபரிமிதமாகக் கிடைத்திருந்தால் அதற்கு நம்மிடம் மரியாதை இருந்திருக்காது.

ஆக, பன்றிகளுக்கு எது தேவையாக உள்ளதோ அதைத்தான் அவற்றிற்கு முன்னால் போடவேண்டும்.பன்றிகளைப் பற்றி நாம் பல தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.

அதைப்போலவே குருவினுடைய பணி, அந்த மாணவனிடம் எந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படுவது.

ஒவ்வொரு சீடனுக்கும் ஒரு அணுகுமுறையைக் குரு வைத்திருக்கிறார்.

அந்த அணுகுமுறை இன்னொருவருக்குப் பயன்படாது.

குருவிற்கும் ஆசிரியருக்கும் இருக்கின்ற வேறுபாடு, அவர்கள் அணுகுமுறையினால் ஏற்படுவது.

ஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.

குரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.

——————————————————————–

 

நன்றி:இறையன்பு ( ஏழாவது அறிவு)

http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_22.html

அருள்வாக்கு

எதெது அவசியம் என்று இருக்கின்றனவோ அவற்றையே ஒவ்வொரு
சமயத்தில் தள்ள வேண்டியதாயிருக்கிறது.

க்ரூஹஸ்தன் பண்ணியே தீரவேண்டுமென்றிருக்கிற அத்தனை வைதிக
கர்மாக்களையுமே ஒரு காலத்தில் தள்ளிவிட்டு சந்நியாஸம் வாங்கிக்
கொள்ளச் சொல்லியிருக்கிறது!

ஜீவிப்பதற்கு வழிசொன்ன சாஸ்திரங்களே ஆகாரத்தைத் தள்ளிவிட்டு
உபவாஸமிருக்க வேண்டிய காலங்களையும் சொல்கிறது.

முழுக்க ஆகாரத்தைத் தள்ளாவிட்டாலும் அதில் இன்னின்ன காலத்தில்
இன்னின்ன பதார்த்தங்களைத் தள்ள வேண்டுமென்று அநேக விதிகளைச்
சொல்கிறது.

இதில் “அலவணம்’ என்று ஒன்று. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்ளக்கூடாது
என்பதே அலவணம். “உப்பில்லாப்பண்டம் குப்பையிலே’ என்று ஒரு பக்கம்
சொல்லிவிட்டு, சில காலத்தில் உப்புகூடாது என்றும் வைத்திருக்கிறது.

உணர்ச்சி வேகத்துக்கு உப்பு காரணம், “மானம், ரோஷம் இல்லே?
நீ உப்புப் போட்டுண்டு தின்றதில்லே?” என்று கேட்கிறோமல்லவா? ரொம்பவும்
ஆத்ம மார்க்கத்தில் போகும்போது இந்த மானம், ரோஷம், மற்ற உணர்ச்சி
வேகமெல்லாம் போகத்தான் வேண்டும்.

அதனால் சந்நியாஸி முதலியவர்கள் அலவணமாகச் சாப்பிடவேண்டும்.
டாக்டர்கள் ஒரு காரணத்துக்காக உப்புகூடாது என்றால், சாஸ்த்ரமும் ஒரு
காரணத்துக்காகத் தள்ளுகிறது.

வருணஜபம் முதலான வேத மந்த்ர ஜபங்களின் போது ஜபிக்கிறவர்கள் உப்பு
சேர்த்துக் கொண்டால் நிச்சயமாகப் பலன் கிடைக்காமலிருப்பதையும் அதுவே
அவர்கள் அலவணமாய் இருந்தால் மழை பெய்கிறதையும் இந்தக் காலத்திலும்
நிதர்சனமாகப் பார்க்கலாம்.

முருகன் சம்பந்தப்பட்ட செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை முதலானவற்றில்
குறிப்பாக அலவண நியமம் அனுஷ்டிக்கப்படுகிறது.
————————————————————————–
- ஜகத்குரு காஞ்சி காமகோடி க்ஷ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்

நன்றி; கல்கி் 27-10-09

http://www.dinamalar.com/Supplementary/kalki_detail.asp?news_id=272&dt=11-02-09

சிவாலய ஓட்டம்

(முன்சிறை திருமலை சூலபாணி ஆலயம்)

திற்பரப்பு மகாதேவர் ஆலயம் ரொம்பப் பழமை மட்டுமில்லாமல் பெருமையும் வாய்ந்தது.
குமரி மாவட்டத்தில் இருக்கும் பனிரெண்டு சிவாலயங்களில் ஒன்னு. தட்சனை வதம்
செஞ்சபிறகும் கோபம் அடங்காமல் உக்கிரமா இருந்த சிவன் இங்கே வந்து இந்த
ஆற்றங்கரையோரம் கோயில் கொண்டார். எப்பவும் சிவன் முகம் நோக்கி உட்கார்ந்துருக்கும்
நந்தி தேவர், கோப முகத்தைப் பார்க்கப் பயந்து வேறு திசை நோக்கி உக்கார்ந்துருக்கார் இங்கே.
அதானே? சாமியா இருந்தாக்கூடக் கோவமா இருக்கும் மூஞ்சியில் யார் முழிப்பாங்க?

மகாசிவராத்திரியன்னிக்கு இந்த பனிரெண்டு கோயில்களையும் ஒரே நாளில் ஓடி ஓடிப்
பார்ப்பாங்களாம். இதுக்கு சிவாலய ஓட்டமுன்னு பெயர். மாரத்தான் ஓட்டமுன்னு வச்சுக்கலாம்.
எப்படி இந்த வழிபாடு ஆரம்பிச்சதுன்னு தெரியலை. ஆனால் வருசாவருசம் ஓடும் மக்கள் தொகை
கூடிக்கிட்டே போய் இந்த வருசம் இருபதாயிரம் பேர் ஓடுனாங்க

பன்னிரண்டு கோயில்கள்

சிவாலய ஓடும் ஆலயங்கள் கீழ்க்கணடவை

திருமலை[ முஞ்சிறை]
திக்குறிச்சி
திற்பரப்பு
திருநந்திக்கரை
பொன்மனைi
பந்நிப்பாகம்
கல்குளம்[பத்மநாபபுரம்]
மேலாங்கோடு[குமாரகோயில்]
திருவிடைக்கோடு[ வில்லுகுறி]
திருவிதாங்கோடு
திருப்பன்றிக்கோடு
திருநட்டாலம்
—————–

இதுக்கு ஒரு கதை இருக்கு.புருஷாமிருகம் என்று ஒன்று இருந்தது. இடுப்புக்கு மேல் மிருகம்,
கீழே மனிதன். மிகுந்த சிவபக்தி கொண்டது,பலசாலியும் கூட. பஞ்ச பாண்டவர்கள் ஒரு யாகம்
செஞ்ச போது அதன் பால் தேவைப்பட்டது.

அர்ஜூன், அதைக்கொண்டு வரும் பலம் எனக்கு மட்டும்தான் உண்டு என்று சொல்லி புறப்பட்டார்.
அப்போது கிருஷ்ணர் அவர் கையில் பன்னிரண்டு சிவலிங்கங்களை கொடுத்து, அந்த மிருகம் தாக்க
வந்தால் சிவலிங்கத்தை அதன் முன் வைத்து உன்னைக் காத்துக்கொள் என்று சொல்லி அனுப்பினார்.

அதன்படி அர்ஜூனும், தவம் செய்துகொண்டிருந்த மிருகத்தை அணுகி பால் கறக்க முற்பட்டபோது,
அது விழித்துக்கொண்டு அவரை துரத்தியது. உடனே அர்ஜூன் ஒரு சிவலிங்கத்தை கீழே வைத்தார்.
லிங்கத்தை கண்டதும் புருஷாமிருகம் மறுபடியும் தவத்தில் ஆழ்ந்தது. அர்ஜூன் மறுபடியும் பால்
கறக்க முயல அது மறுபடியும் துரத்தியது. இப்படியே இரண்டுபேரும் காட்டின் எல்லைக்கே வந்து
விட்டார்கள்.லிங்கங்களும் தீர்ந்து விட்டன்.

புருஷாமிருகம் அவரைப்பிடித்துக்கொண்டது. அர்ஜூன், நான் உன் எல்லையை தாண்டிவிட்டேன்.
என்னை விட்டு விடு என்று வாதாடினார். இருவரும் தர்மரிடம் சென்றார்கள். எல்லைக்கோட்டில் கால்
இருந்ததால் பாதி உடல் மிருகத்துக்கு சொந்தம் என்று தர்மர் தீர்ப்பளித்தார். நியாயமான தீர்ப்பில்
மகிழ்ந்துபோன மிருகம் யாகத்துக்கு வேண்டிய பாலை கொடுத்து உதவியது. அர்ஜூனனின் கர்வமும்
அழிந்தது.
அப்போது சிவலிங்கம் அரியும் அரனும் சேர்ந்த உருவமாக காட்சி அளித்தது.
அதை தரிசித்த மிருகம் அரியை நிந்திப்பதை விட்டது. இவர்கள் ஓடியதை நினைவுபடுத்துவதுதான்
சிவாலய ஓட்டம்.

——————————————————————————————————————————————
நன்றி;

http://thulasidhalam.blogspot.com/2009/06/2009-34.html

photo from: http://jeyamohan.in/?p=1806

புருஷா மிருகம். . .

பீமனை துரத்தும் புருஷாமிருகம்

bhima vs purushamriga darasuram
நன்றி

http://www.poetryinstone.in/lang/ta/2009/04/21/feed-half-of-bhima-to.html

————————————————————–

வெற்றி யாருக்கு?

இந்திரப் பிரஸ்த நகரம். இராஜசூர்ய யாகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

யாகம் முழுமையடைய வேண்டுமானால் இமயமலையில் தவம் செய்யும் புருஷா மிருகம் என்கிற ஒரு விலங்கை அழைத்து வர வேண்டும் என்றார் கண்ணன்.

தருமத்துக்கும் சிவபக்திக்கும் கட்டுப்பட்ட அந்த மிருகத்தை அழைத்து வர சிவபக்தனான பீமனே பொருத்தமானவன் என்று யோசனையும் தெரிவித்தார்.

ஆனால் மனித மாமிசம் அதற்கு விருப்பமானது என்று எச்சரிக்கையும் செய்தார்.

பீமன் இமயமலைக்குப் புறப்பட்டான். புருஷா மிருகத்திடம் கண்ணனின் வேண்டுகோளைச் சொன்னான். புருஷா மிருகமும் ஒப்புக் கொண்டது. கூடவே ஒரு நிபந்தனையும் போட்டது.

பீமன் முன்னால் நடக்க வேண்டும், அரை மைல் தள்ளி அந்த விலங்கு பின் தொடரும். அரை மைலுக்குள் அது வந்து விட்டால் பீமனை அது சாப்பிட்டு விடலாம். பீமனும் இதற்கு சம்மதித்தான்.

நடைப் போட்டி துவங்கியது. பலசாலியான பீமனால் புருஷா மிருகத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் தொட்டு விடும் போலிருந்தது.

புருஷா மிருகம் சிவபக்தி அதிகமுடையது என்பதுடன் சிவலிங்கத்தைப் பார்த்தால் அதற்கு பூஜைகள் செய்து விட்டு அதன் பின்புதான் அதன் வேலையைத் தொடரும் என்பதைக் கேள்விப் பட்டிருந்த பீமன் ஒரு பை நிறைய சிவலிங்கத்தை எடுத்து வந்திருந்தான்.

சிவனை மனதில் தியானித்தபடி ஒரு சிவலிங்கத்தை அங்கு வைத்து  விட்டு ஓடினான்.

வழியில் சிவலிங்கத்தைப் பார்த்த புருஷா மிருகம் சிவபூஜை செய்தது.

இப்படியே மிருகம் தன்னை நெருங்கும் போதெல்லாம். ஒரு சிவலிங்கத்தை அங்கே வைத்தான். மிருகம் சிவபூஜை செய்து முடிப்பதற்குள் வெகுதூரம் போய் விடுவான்.

யாகசாலையினை நெருங்கும் போது கொண்டு வந்திருந்த சிவலிங்கம் தீர்ந்து விட்டது.

ஒரு காலை யாகசாலைக்குள் வைத்து விட்ட பீமனின் இன்னொரு காலை மிருகம் பற்றிக் கொண்டது.

பீமனின் குரல் கேட்டு எல்லோரும் அங்கு கூடி விட்டனர்.

யாகசாலையில் கால் வைத்து விட்டதால் தான் வெற்றி பெற்று விட்டதாக பீமன் கூற, வெளியில் இருந்த காலைப் பிடித்து விட்டதால் வெற்றி தனக்கே என்று அந்த மிருகமும் வாதிட்டது. இதற்கான தீர்ப்பு அளிக்கும் உரிமை தருமரிடம் வந்தது.

தருமர், பீமனின் ஒரு காலை மிருகம் பிடித்து விட்டதால் பீமனின் பாதி உடலை அதற்கு இரையாக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.

தருமரின் நேர்மையான இத்தீர்ப்பைக் கண்டு வியந்த அந்த புருஷா மிருகம் பீமனை விட்டு விட்டது. யாகம் முழுமையடையவும் ஒத்துழைத்தது.

நன்றி’

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai35.htm

பஞ்சபூத தலம்- சிதம்பரம் நடராஜர்

நன்றி; தினமணி

பாண்டிச்சேரியிலிருந்து 75 கி.மீ. தூரத்தில் சிதம்பரம் நகரம் அமைந்துள்ளது. சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.

இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரியிலிருந்து 5 நாட்கள் நாட்டியாஞ்சலி திருவிழா நடைபெறும். இதில், நாடெங்கும் இருந்து பல நாட்டியக் கலைஞர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

சிதம்பரம் அருகே ராமலிங்க அடிகள் வாழ்ந்த வடலூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் அன்னதானம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். தைபூசத் தினம் இங்கு மிகவும் விசேஷமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புகழ்பெற்று சுற்றுலா தலமான பிச்சாவரம் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது.

இந்நகருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை

—————————————————————————-
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 – ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய சிகாகோ சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது.

பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

சுவாமி விவேகானந்தர், இலண்டன், 1896
[தொகு] இராமகிருஷ்ணருடன்
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்னர் இராமகிருஷ்ணருடன் பல வாதங்கள் புரிந்த பின்பும் அவரை பலமுறை பரிசோதித்த பின்பும் அவரையும் அவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டார் விவேகானந்தர். தன் மற்ற சீடர்களிடம் உருவ வழிபாட்டையே முதன்மையாக போதித்த இராமகிருஷ்ணர், விவேகானந்தரிடம் அத்வைதம் எனப்படும் அருவ வழிபாட்டை போதித்தார்

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

மரணம்

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

———————-

தகவல் & படம் இணையத்திலிருந்து

« பழைய வரவுகள்