எலுமிச்சம் பழம் ஜூஸ் போட மட்டுமில்லை

-
குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
ஆறாம்வகுப்பு மாணவன் முஹம்மது ஹம்தான்
எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து
சாதனை படைத்துள்ளார்.

ஹம்தானின் அப்பா காதர்முகைதீன். அம்மா ஷமீமா
இருவருமே இன்ஜினீயர்கள். அன்மையில் ஹம்தான்
நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்து கொண்டு
ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் செப்புக்
கம்பியை செருகினான். பின்னர் செப்பு கம்பியை தனி
ஒயரிலும், இரும்பு ஆணியை தனி ஒயரிலும் இணைத்து
2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினைஎரிய வைத்து
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

=====================================
நன்றி: கல்கி , 8-4-12

 

அழியப் போகிறதா உலகம்?


கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.

யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு, துவரம்பருப்பு விலை உயர்வு, தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, எண்கவுண்டர், ஈழம், அல்குவைதா, அமெரிக்கா, கியூபா, எதிர்வீட்டு பிகர், பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, தெருமுனை பிள்ளையார் கோயில், 23சி பஸ், லேடீஸ் காலேஜ், பார்க், பீச், இத்யாதி.. இத்யாதி பிரச்சினைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லா கருமத்தையும், கந்தாயத்தையும் மறந்துடுங்க. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.

ஏனெனில், உங்களுக்கு இன்னமும் இருப்பது இரண்டேகால் வருடம் மட்டுமே. 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது. இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.

மாயா என்றால் நமீதா நடிக்கும் கிளுகிளு படம் மட்டுமல்ல. மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

மாயர்களைப் போலவே உலகில் வாழ்ந்த பல இனத்தவர்களுக்கும் பிரத்யேக காலண்டர்கள் இருக்கிறது. அந்த காலண்டர்களும் கூட உலகம் அழியப்போவதாகவே பயமுறுத்துகிறது. என்ன ஆண்டுதான் கொஞ்சம் முன்னே, பின்னே 2011, 2013 என்று மாறியிருக்கிறது.

உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது?

எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

உலகம் தோன்றியதிலிருந்தே உலகின் கடைசிநாளான ஜட்ஜ்மெண்ட் டே பற்றி பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள். உண்மையில் இன்று நம் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்). மனிதர்களுக்கு மூளை வீங்கிப்போய் அறிவியலில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, எக்குத்தப்பாக கண்டுபிடித்து தொலைத்த கண்டுபிடிப்புகள், நவீன வசதிகள் தான் (குறிப்பாக வாயுமண்டலம் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலைகள், ஏசி இயந்திரங்கள்) மனிதகுலத்துக்கு வினையாக தோன்றியிருக்கிறது.

நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும்.

2012 டிசம்பர் மாதம் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிவடையும் என்று ஒக்கேனக்கல் செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் முடிவடைந்தாலும் சரி, முடிவடையா விட்டாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்த புலனாய்வுக் கட்டுரை ஒன்றினை 2013 ஜனவரி மாத குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்களும், நானும் படித்துக் கொண்டிருக்கப்போவது மட்டும் உறுதி.

(குமுதம் ரிப்போர்ட்டர், 08-08-2009)

எழுதியவர்

http://www.luckylookonline.com/2009/08/blog-post.html

எறும்பு பற்றிய தகவல்

வரு‌ங்கால‌த்‌தி‌ற்காக இ‌ப்போதே சே‌ர்‌த்து வை‌க்கு‌ம்
மன‌ப்பா‌ன்மை ம‌ற்ற அனை‌த்து உ‌யி‌ரின‌ங்களையு‌ம் ‌விட
எறு‌ம்‌பிட‌ம் அ‌திகமாக உ‌ள்ளது.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் எ‌ன்ன ‌நிகழ‌ப் போ‌‌கிறது எ‌ன்று ந‌ன்கு
அ‌றி‌ந்து அத‌ற்கே‌ற்ற வகை‌யி‌ல் த‌ங்களது வா‌ழ்‌‌க்கை முறையை
மா‌ற்‌றி‌க் கொ‌ள்வதா‌ல்தா‌ன்,
இ‌வ்வளவு புய‌ல், வெ‌ள்ள‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ம் இதுவரை எறு‌ம்‌பு எ‌ன்ற
உ‌யி‌ரின‌ம் வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது.

ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக்கும் .
அதே வேளையில் ராணி இல்லாது எறும்பு இருப்பது இல்லை .

எறு‌ம்புக‌ளி‌ன் தலை‌ப்பகு‌தி‌யி‌ல் ஆ‌‌ன்டெனா எ‌ன்ற உறு‌ப்பு உ‌ள்ளது.
இத‌ன் மூல‌ம் ஒ‌லி, சுவை, வாசனை ம‌ற்று‌ம் தொடு உண‌ர்வு
ஆ‌கியவ‌ற்றை அ‌றி‌கி‌ன்றன.

எறு‌ம்புகளு‌க்கு க‌ண்க‌ள் ‌மிக‌த் து‌ல்‌லியமாக‌த் தெ‌ரியு‌ம்.

எறும்பு பற்றிய கற்றல் ( ஆராய்ச்சி ) MYRMECOLOGY என அழைக்கபடுகிறது .

விந்தை கணக்கு..!

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

And look at this symmetry:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

ஆச்சரியமான விஷயங்கள்

நெருப்புப் பெட்டிக்கு முன்பே லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
=
ஆங்கில எழுத்துக்களில், வார்த்தைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்து  E
-
உடலில் அதிக வலுவான தசை நாக்குதானாம்
-
ஆணை விட பெண் இரண்டு மடங்காக கண் சிமிட்டுகிறாள்
-
மூச்சை அடக்கி ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயன்றால் அது முடியாது
-
விலங்குகளில் குதிக்கத் தெரியாத அல்லது முடியாத விலங்கு யானை மட்டுமே
-
பன்றிகளால் வானத்து அண்ணாந்து பார்க்க முடியாது.
-
பூனைகள் நூற்றுக்கணக்கான ஓசைகளை எழுப்பும். ஆனால் நாய்களால்
பத்து வகையான ஓசைகளையே எழுப்ப முடியும்
-
மின்சார நாற்காலியைக் கண்டு பிடித்தவர் ஒரு டாக்டர்
-
நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் உறங்கக் கூடியது
.
வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கால்களினாலேயை
வாசனையை உணருகின்றன
-
======================================================
நன்றி: மங்கையர் யுகம், ஜனவரி 2012

வீடுகளின் ஒளிஅமைப்பு

வீடுகளின் ஒளிஅமைப்பு
தேவையில்லாத சமயங்களில் விளக்குகளை அணைத்துவிடுங்கள்

  • குழாய் மின் விளக்குள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும் அவை பொருத்தும்
    பொருள்களிலும் சேரும் தூசுக்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்
  • ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின்சார சாதனங்களையும், கருவிகளையுமே பயன்
    படுத்துங்கள்
  • குழாய் விளக்குகளையும், பல்புகளையும் அதன் வெளிச்சம் தடைபடாத இடத்தில்
    பொருத்துங்கள்
  • சி.ஃஎப்.எல். களையே பயன்படுத்துங்கள்

எதனால் சிஃஎப்எல் களையே
பயன்படுத்தவேண்டும்?

-
இன்கான்டசென்ட் (ஒளி இழைகள் சூடாவதால் வெளிச்சம் தருகிற) விளக்குகளான
பல்புகளை விட ‘காம்பாக்ட் புளூரசண்ட்’ பல்பு மூன்றில் ஒரு பங்கு குறைவாக
மின்சக்தியை, எடுத்துக் கொள்கின்றன. வெளியிடும் வெளிச்சமும் குறைவதில்லை.
காம்பாக்ட் புளூரசண்ட் பல்புகள், இன்கான்டசென்ட் பல்புகள் அளிக்கும்
வெளிச்சத்தைப் போலவே இதமாக இருக்கும். அதே சமயத்தில் 75% குறைவான
மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.
-
சி.எஃப்.எல்.-கள் சற்றே விலை கூடுதலானவையாக இருந்தாலும், அவற்றுக்கான
முதலீடு பயனுள்ளது. அவை அளவில் சிறியவை. சிக்கனமானவை, அதிக வெளிச்சமும்
கூடுதல் வண்ணத்தையும் தருபவை. சரியாகச் சொன்னால் 23 வாட் சக்தியுள்ள
காம்பாக்ட் புளோரசென்ட் பல்பை 90 அல்லது 100 வாட் சக்தியுள்ள
இன்கான்சென்ட் பல்பிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.[/b]
-
ஒரு நாளைக்கு 4 மணிநேரங்களுக்கு மேலாக எரியும் விளக்குகள் உள்ள இடங்களில்
காம்பாக்ட் புளோரசண்ட் பல்புகளை உபயோகியுங்கள். 75 வாட் சக்தியுள்ள இரண்டு
பல்புகளுக்கு பதிலாக இரண்டு 15 வாட் புளோரசண்ட் பல்புகளைப்
பயன்படுத்தினால் ஒரு வருடத்திற்கு 18 கிலோ வாட் மணிநேர சக்தியை மிச்சம்
பிடிக்கலாம்.

-
எரிசக்தி குறைவு,
அதிக வெளிச்சம்

http://www.indg.in/

தெரிந்து கொள்வோம்

பஞ்ச வர்ணம் என்பன:-

கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை

======================================

பஞ்சலோகம் என்பன:-

பொன், வெள்ளி, செம்பு, ஈயம்,இரும்பு

======================================
-
ஒரு மில்லியன் என்பது = பத்து லட்சம்
ஒரு பில்லியன் என்பது = நூறு கோடி
ஒரு ட்ரில்லியன் என்பது= லட்சம் கோடி
-

===========================================
நன்றி: வளரும் அறிவியல்

கொலவெறிடி – இந்த ஆண்டில் உலகின் சிறந்த பாடலாக தேர்வு..!

Kolaveri-thanush

-

தனுஷின் ‘கொலவெறிடி’ பாடலின் வெறி இன்னும் அடங்கியதாகத் தெரியவில்லை. நாள்தோறும் இணையத்தில் அந்தப் பாடலைக் கண்டும் கேட்டும் தாகம் தணியாத ரசிகர்கள், பிறமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனுடைய பிரதியாக பல பதிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

-
இதற்கெல்லாம் மேலாக இன்னுமொரு உயரிய கௌரவம் அந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. உலகின் பிரபல செய்தி நிறுவனமான ‘சிஎன்என்’, கொலவெறிடி பாடலை இந்த ஆண்டில் உலகின் சிறந்த பாடலாக அறிவித்துள்ளது

வானவில்..

http://kovaikkavi.files.wordpress.com/2011/11/hawaii_rainbow.jpg?w=477

 

வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன:-

அவற்றை (VIBGYOR ) என ஞாபகப் படுத்திக்
கொள்வர்.

ஏழு நிறங்கள்
———–
violet

indigo

blue

green

yellow

orange

red
-
====================================

வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி

வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…ஆள் பற்றாக்குறைக்கு அருமையானத் தீர்வு…!

விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட சூழ்நிலையில், பயறு, உளுந்து போல… கடலை விவசாயத்தையும் பல்வேறு சிரமங்களுக்கிடையே விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க புதுச்சேரியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அந்தோணி, தீவிரமாக முயற்சி எடுத்து, செடியில் இருந்து கடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“நானும் ஒரு காலத்துல விவசாயிதான். ஆனா, ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு,  அதையெல்லாம் விட்டாச்சு. என்கூட வேலை பார்க்கிற ஆசிரியர் ஒருத்தர், அவரோட தோட்டத்துல கடலை அறுவடை பண்றப்பெல்லாம் மூட்டைக் கணக்குல பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து எல்லா வாத்தியார்களுக்கும் பிரிச்சுக் கொடுப்பார். ஆனா… ரெண்டு, மூணு வருஷமா அவர் கடலை கொண்டு வரலை. காரணம் கேட்டப்போ… ‘வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னு சோகமா சொன்னார். அந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு. ‘ இதுக்கு ஏதாவது ஒரு வகையில நாம தீர்வைக் கண்டுபிடிச்சாகணும்’னு அப்பவே உள்ளுக்குள்ள ஒரு தீர்மானம் போட்டேன்.
எங்கள் வீட்டில் விவசாயம் செய்த காலத்தில் கடலைக் கொடியில் இருந்து கடலையைப் பிரித்து எடுப்பதற்காக ஒரு சின்னக் குழியை வெட்டி அதில் கடலைக் கொடிகளைப் போட்டு, நடுவில் ஒரு குச்சியை வைத்து அடிப்போம். கடலைக் காயெல்லாம் தனியாக வந்துவிடும். அதை வைத்தே கடலைப் பிரிக்கறதுக்கான கடலையை வடிவமைத்தேன்.

சொந்த ஊர், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அழகாபுரம் ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு, குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தேன். ஆசிரியர் பணி கிடைக்கவே விவசாயத்துக்கு விடைகொடுத்தேன். இருந்தாலும் அப்போதிருந்தே விவசாயக் கருவிகளின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக அவை பற்றிய விவரங்களைச் சேகரித்து வந்தேன்.
முக்கால் அங்குலத்தில் ‘எல் ஆங்கில்’ பட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல நான்கு புறமும் சட்டம் அமைத்து, கீழ்பகுதியில் கால்கள், மோட்டார் பொருத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். அதன் நீளவாக்கில் இருபுறமும் அரை வட்டத்தில்  சட்டத்தை இணைத்து, மேல்புறம் திறந்திருப்பது போல முன், பின் பக்கங்களில் தகடை இணைக்க வேண்டும். கருவியின் கீழ் மோட்டார் பொருத்தி, மேல்புறம் இரண்டு பக்கமும் ஒவ்வொரு பேரிங் அமைத்து, அதன் நடுவே, ‘புல்லி’யுடன் கூடிய உருளையை தயார் செய்து கொள்ள வேண்டும். உருளையின நான்கு பக்கங்களிலும் செவ்வக வடிவில் தயார் செய்யப்பட்ட இரும்புப் பட்டையைப் பொருத்தி, பேரிங் மற்றும் மோட்டாருடன் பெல்ட் மூலம் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதியில் சரியாக சல்லடைத் தகடைப் பொருத்தி, பின்புறம் மற்றும் இடப்பக்கம் ஆகிய பகுதிகளை பலகையால் அடைத்துக் கொள்ள  வேண்டும். மேற்புறமிருந்து கடலைக் கொடியை உள்ளே காட்டக் காட்ட, பட்டைகள் சுழன்று கொடியிலிருந்து ‘தட்தட்’ டென்று கடலைகள் தனித்தனியே பிரித்து வந்து விழுந்தன.

கையில் ஆயும் போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையை ஆய்வதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒரு மூட்டைக்கு ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம் ரூபாய்தான் செலவாகும். பட்டை, மோட்டார்னு சொல்லும் போதுதான் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கும். ஒரு தடவை நேர்ல பார்த்துட்டா… சுலபமா புரிஞ்சுடும். பெரிய தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும் சொல்லித் தர்றதுக்கு தயாரா இருக்கிறேன் என்று கூறுகிறார்.

தொடர்புக்கு
தலைமை ஆசிரியர் அந்தோணி
புதுச்சேரி
அலைபேசி : 90035-30695

-

ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடுகள்

http://agritech.tnau.ac.in/ta/success_stories/sucessstories_farmers%20innovation_ta.html

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers