நவம்பர் 12, 2009 இல் 5:36 மு.பகல் (அனுபவ மொழிகள்)
ஒரு பக்தன் யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது
இரக்கமே உருவானவனாக இருக்கவேண்டும்
அவன் இறுமாப்பும் தன்னலமற்றவனுமாக
இருக்கவேண்டும்
குளிரையும்,வெப்பத்தையும்,சுகத்தையும்,
துக்கத்தையும் சமமாக கருதவேண்டும்
எப்போதும் மன்னிக்கும் சுபாவம்
உள்ளவனாக இருக்கவேண்டும்
போதுமென்ற மனம் கொண்டவனாக இருக்கவேண்டும்
தான் செய்யும் தீர்மானங்களை உறுதியுடன்
செயல் படுத்துபவனாக இருக்கவேண்டும்
தன்னையே கடவுளிடம் அர்ப்பணம்
செய்தவனாக இருக்கவேண்டும்
அவனால் யாருக்கும் பயம் ஏற்படக்கூடாது
அவனும் எவரையும் கண்டு அஞ்சக்கூடாது
மகிழ்ச்சி,துயரம், பயம் ஆகியவற்றிலிருந்து
அவன் விடுபட்டவனாக இருக்கவேண்டும்
அவன் தூய்மையானவனாகவும் , நற்பணிகளை
செய்யும் திறம் பெற்றவனாகவும்
இருக்கவேண்டும்
அதே சமயம் அப்பணிகளின் மூலம் ஏற்படக்கூடிய
பலாபலன்களை பொருட்படுத்தக்கூடாது. நற்பலனையோ
அல்லது தீயபலனையோ அவன் துறந்துவிடவேண்டும்.
நண்பனையும் விரோதியையும் அவன் சமமாக கருதவேண்டும்
தனக்கு பிறர் மரியாதை செய்தாலும் அவமரியாதை
செய்தாலும் ,தன்னை பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும்
அவன் எல்லாவறையும் சமமாக கருதவேண்டும்.
அவன் மௌனத்தையும், தனிமையையும் விரும்பவேண்டும்
ஒழுங்கான உறுதியான அறிவு படைத்தவனாக இருக்கவேண்டும்
இத்தனை லட்சணங்கள் உள்ளவன்தான் உண்மையான பக்தனாவான்
—————————–
காந்தியின் பொன்மொழிகள்
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 9, 2009 இல் 4:02 மு.பகல் (அனுபவ மொழிகள்)
கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.
படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!
பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!
விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.
அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான்.
அளவுக்கு அதிகமான பணிவை ஒருபோதும் நம்பக் கூடாது!
தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!
எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!
விதை எப்படியோ, பழமும் அப்படியே!
பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 6, 2009 இல் 5:26 மு.பகல் (அனுபவ மொழிகள்)
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன்,
விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
———————————————————————–
நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
>இங்கர்சால்.
============================================
உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும்.
>தோரோ.
===============================================
அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்;
நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.
>போவீ.
===================================================
வயதை எண்ணிக் கவலைப்படுபவனே எளிதில் தோற்றத்தாலும்
மனதாலும் முதியவனாகிவிடுகிறான்.
கவலைகளை பொருட்டாக மதியாதவன் என்றும் இளமையாக உணருவான்.
=====================================================
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 4, 2009 இல் 6:53 மு.பகல் (அனுபவ மொழிகள்)
சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
>டிஸ்ரேலி.
—————————————————————————————
மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை.
>சேத்ரஞ்சர்.
————————————————————————————-
உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
>கார்ல் மார்க்ஸ்.
—————————————————————————————-
ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது.
>ராஜாஜி.
——————————————————————————————
நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும்.
>நார்மன் வின்சென்ட்.
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 3, 2009 இல் 7:59 மு.பகல் (அனுபவ மொழிகள்)
நானும் என் நண்பரும் நீச்சல் தொட்டியின் விளிம்பில்
உட்கார்ந்திருந்தோம். அப்போது நண்பர் உள்ளங்கையில் தண்ணீர் எடுத்து
சொன்னார் ” என் உள்ளங்ககையில் உள்ள தண்ணீரை பார் இது அன்பை குறிக்கிறது
Symbolizes).
உள்ளங்கையை கவனமாக திறந்து வைத்திருக்கும் வரை தண்ணீர் அங்கேயே
இருக்கிறது. விரல்களை மடக்கி அந்த தண்ணீரை பத்திரப்படுத்த முயன்றால்
( try to possess it) தண்ணீர் வழிந்து விடுகிறது.
இந்த தவறை தான் மக்கள், அன்பை சந்திக்கும் பொழுது
செய்கிறார்கள்.தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயல்கிறார்கள்,உரிமை (Demand
it) கொண்டாடுகிறார்கள், எதிர்பார்கிறார்கள். அதனால், தண்ணீர் எப்படி
உள்ளங்கையிலிருந்து வழிந்து போயிற்றோ, அதே மாதிரி அன்பும் போய்விடுகிறது
அன்பு தன்னிச்சையாக இருக்கவேண்டியது.நீ விரும்பும் மக்களை இஷ்டப்படி
இருக்க விடு.
1.கொடு, எதிர்பார்க்காதே
2.அறிவுறை கூறு, ஆனால் உத்திரவு போடாதே
3. கேள், ஆனால் ஒரு காலும் உரிமை கொண்டாடாதே
இது எளிதாக தோன்றலாம் ஆனால் நடைமுறையில் கடைப்பிடிக்க வாழ்நாள் பூராகவும்
பயிற்ச்சி தேவைப்படும். இதுதான் உண்மையான அன்பின் ரகசியம்
——————————————————————————————————
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 1, 2009 இல் 6:47 மு.பகல் (அனுபவ மொழிகள்)
அழகும் கலரும் கண்களை கவரும்.
ஆனால் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்
–.
ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
–
நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,
அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை
–
ஆண்கள் யாருமே இல்லையென்றால்
பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்
–
மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,
ஆனால் நீ எப்போதும் தனித்திரு
–
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால்
பேச்சில் அதன் வாசனை தெரியும்
–
சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு
–
எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத்
தூக்கி எறிந்துவிடமுடியாது
—
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 30, 2009 இல் 6:44 மு.பகல் (அனுபவ மொழிகள்)
எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று
கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத்
தெரிந்து கொண்டு விடலாம்.
- கெதே
—————————————————————————
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய
இருக்கிறது.
- லெனின்
—————————————————————————
“ஆணோ, பெண்ணோ,
ஆணோ, பெண்ணோ,
நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால்
அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச்செய்வோம்.
அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின்
காரணமாக அவர்களின் கூலியை
அவர்களுக்கு வழங்குவோம்.”
- (அல்குர் ஆன் 016:097)
————————————————————————–
அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி.
>அன்னை தெரசா
—————————————————————————
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 29, 2009 இல் 7:41 மு.பகல் (அனுபவ மொழிகள்)
காலை வரை நிச்சயமாகத் தள்ளிப் போடலாம்,
நீங்கள் எப்போதுமே செய்யக் கூடாத காரியங்களை!
>ரோட்மேன்
——————————————————————–
விதி;
நல்லவர்களின் நண்பன்
அறிவாளிகளின் வழிகாட்டி
மூடர்களின் சர்வாதிகாரி
கெட்டவர்களின் விரோதி!
>பெர்னாட்ஷா
—————————————————————————–
உனக்கு எவ்வளவு அதிகமாக உலக விஷயங்கள்
தெரியுமோ
அவ்வளவுக்கு உன் தூக்கம் குறையும்!
>ரஷ்ய பழமொழி
—————————————————————————
முறிந்த கையைக் கொண்டு உழைக்கமுடியும்.
ஆனால் உடைந்த உள்ளத்தைக் கொண்டு
உழைக்கமுடியாது!
>யாரோ
————————————————————————–
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 26, 2009 இல் 6:47 மு.பகல் (அனுபவ மொழிகள்)
பெண்களுக்கு ஆசை தீர்ந்துபோகும் வயதில்தான்
ஆண்களுக்கு ஆசை ஆரம்பமாகிறது!
–
கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்,
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்!
–
ஆடை கட்டிய பெண்ணை இரசிப்பது காதல்,
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை,
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது தத்துவம்!
–
காதலுக்கு கண்ணில்லை என்பது பழமொழி,
வயதில்லை என்பது படமொழி!
–
ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத்தேர்தலில்
ஓட்டுப் போட முடியாமல் போய்விட்டது.
காரணம், ஓட்டுப் போடும் வயது வராததே!
–
>கவிஞர் கண்ணதாசன்
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 14, 2009 இல் 2:37 பிற்பகல் (அனுபவ மொழிகள்)
மரத்தின் பழுத்த கிளையும், மக்களின் வாழ்க்கையும்
ஒன்றுதான்
–காண்டேகர்
——————————————————————-
ஒரு போதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத்
தகுதியற்றவன்.
–டால்ஸ்டாய்.
—————————————————————–
இயற்கை விதியை மீறியதற்கு அளிக்கப்படும்
தண்டனையே நோய்
–சிம்மன்ஸ்
——————————————————————
ஒரு எலும்புக்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை
நாயாக்கிக் கொள்ள மாட்டான்
–கன்பூஷியஸ்
——————————————————————-
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்;செய்ய முடியாதவன்
போதிக்கிறான்.
–பெர்னாட்ஷா.
——————————————————————–
நான் மழையில் நனைவதை விரும்புகிறேன்.
நான் அழுவதை யாருக்கும் தெரியாது என்பதால்
–சார்லி சாப்ளின்
————————————————————————-
கருத்துத் தெரிவிக்கவும்