கொஞ்சம் ஓவராத்தான விளையாடிட்டேன் போல…!

 

குற்றப்பத்திரிகையை படிச்சுட்டு தலைவர் என்ன
சொல்றார்?

கொஞ்சம் ஓவராத்தான விளையாடிட்டேன்
போலன்னு ஃபீல் பண்றார்..!

>பர்வீன் யூனூஸ்

—————————–

இங்க அட்மிட் ஆனா, அவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு
அனுப்ப மாட்டாங்க போலிருக்கு…!

எதை வச்சு அப்படி சொல்றே?

நல்ல நாள் பார்த்து வார்டுல வந்து பால்
காய்ச்சிக்குங்கன்னு டாக்டர் சொல்றாரே…!

>எஸ்.எஸ்.பூங்கதிர்

——————————-

எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை
இல்லாம போச்சு!

ஏன்?

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை
வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..!

>சுப.தனபாலன்


———————————
நன்றி: குங்குமம்

1 பின்னூட்டம்

  1. சுப.தனபாலன் said,

    ஒக்ரோபர் 12, 2014 இல் 2:12 பிப

    அட..வந்ததும் தெரியல…


பின்னூட்டமொன்றை இடுக