இன்னும் கொஞ்சம் கொஞ்சவா…?

என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு…
-
-
நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கையில்
தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தை என்ன செய்யலாம்..?
அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து
அணைத்து விடட்டுமா
உன்னைப் போலவே..?
-

-
இவ்வளவு இறுக்கமான
அணைக்காதேடா எனக்கு
மூச்சுத்திணறுகிறது எனக்
கொஞ்சலாகச் சொல்கிறாய்…
உனக்காவது பரவாயில்லை
உன் கொஞ்சல் கேட்டாலே
எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி
குட்டிபிசாசே…
-
-
சரியான திருடண்டா நீ
என சொல்கிறாய்
அடிபாவி… உன்னிடம்
திருடிய முத்தங்களை
உன்னிடம் தானே
கொடுக்கிறேன்..
இதற்கே இப்படி திருட்டுப்பட்டம்
கட்டினால் அப்புறம்
கொள்ளைக்காரனாகிவிடுவேன்
ஜாக்கிரதை…
-

-
இரவுகள் எல்லாம் தீர்ந்த
பின்னும் பேசிக்கொள்ள
நமக்கு என்னெல்லாமோ
இருக்கின்றன…
ஆனாலும் சலிப்பதேயில்லை
நிறுத்தவும் மனதேயில்லை
உன் கொஞ்சலான
முத்தங்களைப்போல…
-
காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை…

-
எப்பொழுதும் உன் அணைப்புக்குள்
இருக்கவேண்டும் என்ற
பேராசையெல்லாம்
எனக்குக் கிடையாது…
உன் கழுத்துச் சங்கிலியின்
மையமாக என்னைத்
தூக்கிலிட்டாலே போதும்…
பிழைத்துக் கொள்வேன்…
-
இந்தத் துப்பட்டாவுக்கு வந்த
வாழ்க்கையைப் பாரேன்…
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
எனக்குப் பழிப்பு காட்டுகின்றது..
சொல்லி வை…
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
நான் சும்மா இருக்கமாட்டேனடி…
-
-
அச்சசோ இந்த சுரிதார்
கொஞ்சம் சின்னதாகிடுச்சுடா
என அழகான முகம் சுழித்துச்
சொல்கிறாய்…
இப்படி இருமுனைத் தாக்குதல்
நடத்தினால் என்ன
சொல்வது நான்…
திருட்டுச் சுரிதார்
இவ்வளவு நாளும்
உன்னை
எப்படியெல்லாம்
மறைத்திருக்கிறது பாரேன்…
-
கல்யாணதுக்கு அப்புறமும்
என்னை இதே மாதிரி
காதலிப்பாயாடா என
நீ கேட்டாயல்லவா…?
கண்டிப்பாக இதே மாதிரி
காதலிக்க மாட்டேண்டி..
வேற மாதிரி தான் காதலிப்பேன்
என கண்சிமிட்டிக்கொண்டே
சொன்னபோது மீண்டும் உன்
வெட்கம் திருடிய இன்பம்
அடைந்தேன்…
-
=======================================>காதல் சொல்லி நவீன் ப்ரகாஷ்

நன்றி: http://naveenprakash.blogspot.com/

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers