
எதிர் வீட்டு மாமிகிட்டே ஒரு மணி நேரம் பேசியதில்
வயிற்றெரிச்சல்தான் மிச்சம்…!
-
ஏன்?
-
நெக்லஸ் புதுசான்னு கடைசிவரை கேட்கவே
மாட்டேன்னுட்டா பாவி..!
-
>ப.விஜயகுமார்
-
====================================================
-
இந்த தொகுதியை விட்டுப் போறதுக்கு தலைவரை
விடே மாட்டேங்கறாங்க…!
-
அவ்ளோ பாசமா?
-
ம்ஹூம்..நிறைய பேர்கிட்டே கடன் வாங்கியிருக்கிறார்..
-
>என்.பர்வதவர்த்தினி
-
======================================================
