ஓய்வில்லா கரங்கள்

பிஞ்சு விரல்களைத் தொட்டு -
மெதுவாய் அதனுடன் இணையும்
குழந்தை அழும் சமயம் -
கன்னத்தை மெல்ல வருடும்

-
பிள்ளை விழும் நேரம்
உடனே வந்து பிடிக்கும்
சேய் தூங்கும் இரவு -
தாலாட்டு பாடலாய் மாறும்

-
மகன் பள்ளிசெல்லும்போது -
ஆனந்த கண்ணீரில் வழியனுப்பும்
பின் வீட்டிற்கு வந்தவுடன் -
மகன் வயிற்றுக்கு அன்னமிடும்.

-
அவன் தப்பு செய்த போது -
கன்னத்தில் தண்டனையைக் கொடுக்கும்
மகன் அழுவதைப் பொறுக்கமுடியாமல்
அவன் கணீரைத் துடைக்கும்

-
புதல்வன் வேலைக்குச் செல்லும்போது -
வாழ்க்கையில் வெற்றி பெற ஆசிர்வதிக்கும்
மணப்பெண்ணைத் தேடிய மகனை -
அன்போடு வாழ்த்தி அரவணைக்கும்

-
புதுமண தம்பதிகளை வாழ்த்தி -
மனமாற அரிசியைத் தூவிடும்
மகன் கரை சேர்ந்திட
பின்நோக்கி செல்லும் எண்ணம்

-
கடவுளின் வரத்தை எண்ணி -
கண்களில் பெருகிடும் கண்ணீர்.
அதைத் துடைக்காமல் ஓய்வெடுக்கும்
அத்தாயின் கரங்கள்…
-
===============================
==============
திருமதி லாவண்யா
நன்றி: தமிழ் அமுதம், பொங்கல் புத்தாண்டு மலர், சிங்கப்பூர்
_________________

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers