-
பிரபல ஆங்கில வைத்தியர் ஒருவரிடம் வந்த நோயாளி,
‘எனக்கு மனது சரியில்லை, தூக்கமே வருவதில்லை,
தற்கொலை பண்ணிக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது’
என்றார்
-
அவரைப் பரிசோதித்த டாக்டர், ‘நீங்கள் ஏதாவது வேடிக்கை
பார்த்தால் நல்லது. க்ரிமால்டி என்ற நகைச்சுவை நடிகர்
எங்காவது நடிக்கப் போகும்போது போய்ப்பாருங்கள்.
அதுதான் நல்லது, வேறு எந்த மருந்து கொடுத்தாலும் கேட்காது’
என்றார்.
-
அதற்கு அந்த ஆசாமி, ‘ஐயோ! நான்தானே ஐயா அந்த
க்ரிமால்டி’ என்றார்..!
-
===================================================

