கடவுளின் அவதாரங்கள்

மருத்துவர்கள்
கடவுளின் அவதாரங்கள்

ஆம்
சில நேரங்களில்
பிரம்மனாகவும்,

சில நேரங்களில்
எமனாகவும் இருக்கிறார்கள்

‘இனி
கடவுளாலும் காப்பாற்ற முடியாது
சொந்தங்களுக்கு சொல்லி விடுங்கள்
என்று ‘
கைவிடப்பட்டவர்களைக் கூட
காப்பாற்றிய மருத்துவர்களும் உண்டு
-
இடுப்பு வலிக்காரனுக்கு
இதய அறுவை சிகிச்சை செய்து
அவன்
இயக்கதையே
நிறுத்தியவர்களும் உண்டு
-
உணவிற்கு பதிலாக
மாத்திரையை மட்டுமே
கொடுப்பவர்களும் உண்டு
-
உணவையே மருந்தாக
பயன்படுத்தும்
சூட்சுமம்
சொல்லித் தந்தவர்களும் உண்டு
-

பூவில் தேனெடுப்பது போல்
சிசேரியன் செய்பவர்களும் உண்டு
மறதியால்
சிசரை
வயிற்றுக்குள்
வைத்து தையல்
போட்டுவிடுபவர்களும் உண்டு
-
பிணத்தை
பிழைக்க வைப்பவர்களும் உண்டு
பிணத்துக்கே வைத்தியம் பார்த்து
பணம் கேட்பவர்களும் உண்டு

-
நிற்க முடியாதவனை
ஓட  வைத்தவர்களும் உண்டு
ஓடி விளையாடியவனை
உறங்க வைத்தவர்களும் உண்டு
-
மொத்தத்தில்
மருதுவர்கள்
கடவுளின் அவதாரங்களை
-
நாத்திகர்கள் கூட
இதை
நம்பித்தான் ஆக வேண்டும்
-

===================================
>கனேஷ் பாபு
நன்றி: ஹெல்த் & பியூட்டி, மார்ச் 2011

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 51 other followers