வீழும் அவை

-
அமைதியான வங்கியில்
யாரோ ஒருவர்
தவறவிட்ட டோக்கனால்
மற்றெல்லாக் கரங்களும்
மற்றெல்லா டோக்கன்களையும்
மூச்சு முட்ட
இறுக்கிப் பிடிக்கின்றன..

-

>தஞ்சை கமருதீன்

நன்றி: குங்குமம்

1 மறுமொழி

  1. பெப்ரவரி 17, 2012 இல் 3:07 பிற்பகல்

    தனக்கென ஒரு தாய்
    ……………………………..

    அன்னைக்கு ஆயிரம் பெயர் உண்டு
    என்ற போதும் அன்புக்கு
    அன்னைதான் பொருள்….

    தாய் என்பவள்
    சுவாசிக்கக்கற்றுத்தந்தவள்…
    சுமையாக இருந்தாலும்
    சுகமாக நினைத்தவள்….

    பூகம்பத்தை பூமியே
    தாங்காத நிலை
    பிரசவ பூகம்பத்தை
    புன்னகையுடன்
    எதிர் கொண்டவள்….

    தன் உயிர்
    தந்து தன்னை
    ஈன்றவள் தாய்
    தனக்கொரு பிறவியை
    பிரியமுடன் பெற்றவள்….

    பஞ்சணையில்லா உன்
    நெஞ்சனையில் தூங்க
    வைத்தாய்
    உறவுகளை அறிவித்து
    எனக்கு உலகையும்
    கற்பித்தாய்….

    என் மழலை மொழி
    கேட்டு உன் துன்பம்
    தொலைத்திருந்தாய்
    எழுந்து நான் நிற்கையிலே
    என் குழந்தை என்று
    மகிழ்ந்திருந்தாய்….

    நோயோ என்னை வருத்த
    கண்விழித்து பசியிருந்தாய்
    படைத்தவனை கடிந்து
    நீயும் பத்திய உணவு
    புசித்திருந்தாய்….

    என் பசியை நான் மறக்க
    உன் பசியை நீ மறந்தாய்
    பாலகனாம் என்னை
    நினைத்து பகல் கனவு
    கண்டிருந்தாய்….

    ஊருறங்கும் வேளையிலே
    உணவுகளை சமைத்திடுவாள்
    உயிருறங்கும் வேளையிலும்
    சமைத்தவுடன் காத்திருப்பாள்….

    வறட்சியை தான்
    ஏற்றுக்கொண்டு
    வசந்தத்தை எனக்கு
    தருபவள்….

    உலகில் தேடித்தேடி
    அமர்ந்தாலும்
    மீண்டும் அமர முடியாத
    சிம்மாசனம் தாயின்
    கருவறை தான்….

    தாய் வேறு சேய் வேறு
    ஆனாலும் தன் உயிர்
    நாள் எல்லாம்
    நமக்காக சுமையை
    சுமந்திருப்பாள்….

    பட்டினியா இருந்தாலும்
    பிள்ளைக்கு பால்
    கொடுப்பா..
    பால் குடிக்கும்
    பிள்ளை முகம்
    பார்த்து பசி மறப்பா…..

    வாழ்வில் எல்லோரும்
    பாத்திரத்தையும்
    தாயானவலால் நிறப்ப
    முடியும்..
    தாய் என்னும் பாத்திரத்தை
    யாராலும் நிறப்ப
    முடியாது….

    ஆனாலும்…………………….
    தாயானவளை
    தரத்தில் குறைவாக
    நினைப்பவர்கள்
    எத்தனை பேர்……….

    பெண்ணைப்பெற்றால்
    நல்லவள் என்று
    கூறும் அந்த நாவால்
    வளர்ந்ததும் திறட்டித்
    திறட்டித் திட்டும்
    மானிடன்
    இம்மண்ணிலே!
    எத்தனை பேர்,,,,,,,,,,,

    சொல்வர்கள்
    எல்லோரும்,,,,,,,
    வேரின்றி மரமில்லை
    மணமின்றி இடமில்லை
    வில்லின்றி அம்பில்லை
    தனக்கொரு தாரகை
    தாய் அன்பு இன்றி
    எதுக்கு தனிமரம்….

    தாய்மையைப்போற்றுவோம்
    தாய்மையைப் பாரட்டுவோம்
    தாய்மையைப் பரிமாருவோம்…

    இன்ஷா அல்லாஹ்…..
    ****************************

    என்றும் ய…..ஹ்….யா


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers